நம்மைச் சுற்றி உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்மைச் சுற்றி உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூன், 2026

தூறல்: 50 - உங்களுக்கே உரிய வேகம்

 ஓவியமான ஒளிப்படம்; 'பண்புடன்' போட்டி; பெங்களூர் நகர் உலா 

எனது ஒளிப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஓவியர் சண்முகநாதன் கருப்பையா (சதங்கா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வந்தவர்) உருவாக்கிய கலைப்படைப்பு:

எனது படம்:

எனது கேமரா பதிந்த காட்சியை, அவரது திறமை மறக்க முடியாத ஒன்றாக மனதில் நிறுத்தி விட்டது. அவருக்கு எனது அன்பும் நன்றியும்! 

நினைவுகளின் மீட்டலாக,

இதற்கு முன்னர் 2015_ஆம் ஆண்டு சதங்கா வரைந்து பரிசளித்த திருநாகேஸ்வரம் புஷ்கரணி படம் “இங்கே”: 

இதே போல் ஓவியர் யோகேஷ் காண்ட் நான் எடுத்த பூக்களின் படத்தை வாட்டர் கலர் ஓவியமாக்கிய பகிர்வு (2022) “இங்கே”.

*

பண்புடன் மின்னிதழ் தனது முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறிவித்திருக்கும் போட்டியைப் பற்றி உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருக்கக் கூடும். எனினும் தவறவிட்டவர்களுக்குப் பயனாகும் என அறிவிப்பை இங்கே பகிருகிறேன்:

#


படைப்புகளை வேர்ட் ஃபைலாக யூனிகோட் எழுத்துருவில் அனுப்ப வேண்டும். 

*

நகர் உலா

எம்.ஜி. ரோட் 

 மெட்ரோ ஸ்டேஷன்:

“ஒவ்வொரு ரயில் நிலையமும் முன்னோக்கி நகரும் கலையை கற்றுத் தருகிறது.”

# 1

சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக,

ஞாயிறு, 13 ஜூலை, 2025

மெளனத்தின் கனம்

உருவப் படங்களும், தன்னியல்புப் படங்களும் (portraits and candids) மனிதர்களின் உணர்வுகளையும் கதைகளையும் சொல்லும் சாளரங்கள்.  காலத்தைப் பதிவு செய்யும் அத்தகு சாட்சியங்களின் மற்றுமோர் தொகுப்பு.. படங்கள் ஒன்பதுடன்..


#1
மெளனத்தின் கனம்


#2 
பயணியின் கதைகள்: 
வரைபடங்கள், சேமிக்கும் நினைவுகள் மற்றும் 
அலைபேசித் திரைகள்

#3 
தேடுபவரின் அமைதி

சனி, 1 மே, 2021

மே தினம் 2021 - பாதுகாப்பு.. ஆரோக்கியம்..

 #1

1 மே, சர்வதேச உழைப்பாளர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் தம் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தினம் உதவி வருகிறது. சென்ற வருடம் நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன், பல இலட்சம் உழைக்கும் மக்களைக் கால்நடையாக தம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வைத்தது. இந்த வருடம் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை அவர்களை மேலும் கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆண்டு மே தினத்தின்பேசு பொருளாக உழைக்கும் மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று, லாக் டவுன், வேலையின்மை பிரச்சனைகளிலிருந்து உலகம் மீண்டு வரப் பிரார்த்திப்போம். இரவும் பகலுமாக கொரானா நோயாளிகளுக்காக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களைப் போற்றுவோம்.

உழைப்பாளர்களைப் போற்றும் விதமாகச் சில படங்கள்:

#2


#3

வெள்ளி, 1 மே, 2020

மே தினம் - கொரோனா


உலகமே கொரனாவால் ஸ்தம்பித்து நிற்கிறது.  இந்தியாவில், பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் வசித்து வந்த உழைப்பாளிகள் ஊரடங்கு உத்திரவு வந்ததும் உணவுக்கு வழியில்லாத நிலையில் சொந்த ஊர்களை நோக்கி இன்னமும் கால்நடையாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி. இந்தப் பயணத்தை எதிர் கொள்ள இயலாமல் பெண்களும், குழந்தைகளும் இறந்து போகும் செய்திகளும் வருகின்றன. தற்போது அரசு அவர்களுக்காக இரயில்களை இயக்க ஆரம்பித்திருப்பது ஆறுதல்.

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது முதன்மையானதாக இருக்கும் இந்தச் சூழலில்,  பலதரப்பட்ட துறைகளும் முடங்கியதால் அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் உட்பட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் ஏராளம். விரைவில் அனைத்துக்கும் தீர்வு வரட்டுமாக!

கொரானா நோயாளிகளுக்காக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவுத் தொளிலாளர்களை வாழ்த்துவோம்.

மே தின வாழ்த்துகள்!

கடந்த ஒரு வருடத்தில் ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த, உழைப்பாளர்களின் படங்கள்... தொகுப்பாக.. இங்கே..

#2

#3

புதன், 1 மே, 2019

மே தினம் - இவர்கள் இல்லையேல்..

உழைப்பென்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. கனவு மெய்ப்படவும்,  வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தைத் தேடவும் அதில் மனநிறைவு கொள்ளவும் கொடுக்கிற விலை. அர்ப்பணிப்புடன் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கும் பாட்டாளி மக்கள் தம் உழைப்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.


சிறு வியாபாரிகள்

#1
குழந்தைகளைக் குதூகலப்படுத்த
பெங்களூர் லால்பாக் தோட்டத்தில்..

#2
கோடைத் தாகம் தணிக்க
பெங்களூரு உயர்நீதி மன்ற வளாகத்தில்..

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)

#1
 “முடிவில் நான் கற்றுக் கொண்டதெல்லாம் 
தனிமையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டுமென்பதையே”

#2
“நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. 
பெரிய மனிதர்களையே வளர்க்கிறோம்.”

#3
“குழந்தை சொல்லாததையும் புரிந்து கொள்பவள் தாய்”

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

எளிய மனிதர்களும்.. எழுதப்படாத கதைகளும்..

#1
‘எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ..
அதுவரை நாமும் சென்றிடுவோம்..’
@ டாடா நகர்
#2
‘ரெண்டு பத்து ரூவா.. நாலு பதினஞ்சே ரூவா..’
@ நெல்லை

#3
சலவை
# முக்கூடல்

#4
நாளைய பாரதம்

ஞாயிறு, 1 மே, 2016

மே தினம் : “பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே..”

உண்ணும் உணவிலிருந்து பயணிக்கும் பாதை, அணியும் ஆடை என அனுபவிக்கும் அத்தனை பொருட்களுக்குப் பின்னாலும் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது! கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படமாக்கிய உழைப்பாளர்களின் படங்கள்:

டாடா நகர் இரயில் நிலையத்தில்...
#1

#2
#3

#4

கொல்கத்தாவில்..

சனி, 14 நவம்பர், 2015

நேருவின் ரோஜாக்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்!

“குழந்தைகள் தோட்டத்து மொக்குகளைப் போன்றவர்கள். அன்பாகவும், கவனமாகவும் பேணி வளர்க்கப்பட வேண்டியவர்கள். நாளைய குடிமக்களான அவர்களே நம் நாட்டின் எதிர்காலம்” - நேருஜி

கிளாஸிக் கருப்பு வெள்ளைப் படங்கள் ஒன்பதில் நெஞ்சை அள்ளும் குழந்தைகள்... நேருவின் ரோஜாக்கள்..

#1

#2

#3
#4

ஞாயிறு, 1 நவம்பர், 2015

தேவதைகள் வாழும் பூமி

#1  2015 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்:

நீட்சியாக மேலும் சில குட்டித் தேவதைகள்:


#2 அன்னக்கிளி மடியில் செல்லக்கிளி


# மகிழ்வலை

#3 பூவினும் மெல்லிய பூங்கொடி

ஞாயிறு, 31 மே, 2015

வாய் பேசிடும் புல்லாங்குழல்..

# மழலை இன்பம் மங்காத செல்வம்

#1. துங்கக் கரிமுகத்துத் தூமணியே..


#2.  நிலாக் காய்கிறது.. நேரம் தேய்கிறது..
       யாரும் ரசிக்கவில்லையே..
       இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்


#3. மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..

வெள்ளி, 1 மே, 2015

மே தினம் - சிறு வியாபாரிகள்

நம்மைச் சுற்றி நமக்காக உழைப்பவர்கள் அத்தனை பேருக்கும் நமது

மே தின வாழ்த்துகள்!  

அவர்களில் சிலர் தத்தமது தொழிலில் மும்முரமாக இருந்த தருணங்கள்.., சிறு வியாபாரிகள் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்த தருணங்கள்..
10 படங்களாக இங்கே...

#1

#2

#3


#4

திங்கள், 2 மார்ச், 2015

தளராத நம்பிக்கை.. இவர்தம் தாரக மந்திரம்..

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாமான்ய மனிதர்கள் பத்துப் பேரைப் பார்க்கலாமா? ஒவ்வொரு புது நாளிலும் புதுப்புது சவால்களை எதிர்பார்த்தே விடிகிறது வாழ்வு இவர்களுக்கு. புன்னகையுடன், நம்பிக்கையுடன் வாழ்வில் நகருகிறார்கள் இம்மக்கள். குறிப்பாக முதியவர்களிடம் தென்படுகிற மன உறுதி அசாத்தியமானதாக இருக்கிறது. தோலின் சுருக்கம் இவர்களின் தன்னம்பிக்கையை எள்ளளவும் சுருக்கி விடவில்லை.

#1 சவாலே சமாளி..

#2 எளிமையின் அழகு

#3 ‘எல்லாம் விற்று விடும்..’

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்..

#1 அப்பாவின் அரவணைப்பில்..

#2 அம்மாவின் நிழலில்..

#3 அக்காவின் அன்பில்..

#4 ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்..’ - கற்றுத் தரும் அன்னை

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சிறு பூவென்பேன்..

பூந்தளிர்கள். குட்டித் தேவதைகள்.

Flickr தளத்தில் பகிர்ந்த படங்கள் பத்தின் தொகுப்பு:

#1
சிறு பூவென்பேன்..

#2
அழகிய கொடியே.. ஆடடி

#3
பகல் நிலவு

#4
‘ஒரு தெய்வம் தந்த பூவே..
கண்ணில் தேடல் என்ன தாயே..’

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கோகுலாஷ்டமியும் குட்டிக் கண்ணன்களும்..

#1 பாலக் கிருஷ்ணன்

#2 முகுந்தா முகுந்தா..

#3 வரம் தா வரம் தா

கேமராவில் நான் சிறைபிடித்தச் சின்னக் கண்ணன்கள் :)

#4 மாயவனோ தூயவனோ

ஞாயிறு, 2 மார்ச், 2014

ரெண்டு ரூவாய்க்கு.. - நம்மைச் சுற்றி உலகம்

#1 சிற்றருவியின் சங்கீதம்

#2 எந்தப் பூவிலும் வாசமுண்டு

#3 பூப் போலே உன் புன்னகையில்..

 #4 பூவும் தளிரும்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin