சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக, அலங்காரக் கப்பல்..

 #4

**

பெங்களூர், இறக்கைகளுக்கு கீழே..

#5

#6 
கோடுகளாக சாலைகளும்.. வீடுகளாக மக்கள் வாழ்வும்..

பெங்களூர் கெம்பகெளடா சர்வதேச விமான நிலையத்தில்..: 

#7 
அவளது மனஉறுதி ஒரு நதி. அமைதியானது, ஆழமானது, தடுக்க முடியாதது.

#8 
பிரபஞ்சத்தின் காவலரும் ஆழ்வார்களும்..

**

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு திருமண நிகழ்வுக்காகச்  சென்றிருந்த போது மாலை கிடைத்த நேரத்தில் மாமல்லபுரம் சென்று வரத் தீர்மானித்தோம். 15 வருடங்களுக்கு முன் சென்றது. மீண்டும் அங்கே சிற்பங்களைப் படமாக்கலாம் என dslr கேமராவை எடுத்துச் சென்றிருந்தேன். விடுதியிலிருந்து கிளம்பும் போது நீலமாக இருந்த வானம் போகப் போக கருமேகங்கள் சூழ்ந்து கனத்த மழைக்கான அறிகுறியைக் காட்டிக் கொண்டிருந்தது. அங்கே போய் இறங்கியதும் மழை வருமெனத் தெரிந்தும், வண்டியில் எப்போது வைத்திருக்கும் குடைகளை எடுத்துக் கொண்டு, முடிந்த வரை சில சிற்பங்களையாவது படம் எடுத்து விடலாம் எனக் கடற்கரைக் கோயிலை நோக்கி நடந்தோம். ஆனால் அதன் அருகே செல்லும் முன்னரே பெரும் இடி தொடர்ந்து முழுங்க, பறவைகள் படபடத்துப் பறக்க, மிக அருகே சுமார் இருபதடி தூரத்தில் இருந்த மரத்தின் மேல் இடி மின்னலாக வெட்டி இறங்கியதைக் காணும், ஒரு கணம் அச்சத்தில் உறைந்திடும் அனுபவம் கிட்டியது. 

#9


#10

கோயிலை ஒரு சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

#11


#12

திரும்பி வந்து இடியும் மழையும் சற்றே குறையட்டுமென மரத்தடியில் நின்றிருக்கையில், மழையின் ஊடாகத் தெரிந்த கோயிலின் காட்சி.

#13


**

மைசூர் விடுதி ஒன்றில்..

#14 
சட்டத்துக்குள் சட்டம் (ஒளிப்படக்கலையில் கோணம் அமைப்பதில் கையாளப்படும் ஒரு அழகிய உத்தி):


#15  
சிறு நம்பிக்கை நெடுந்தூரம் அழைத்துச் செல்லும்.”

[மலர்சூடிய சக்கரங்கள் காத்திருக்கின்றன இளவரசர்களுக்காகவும் இளவரசிகளுக்காகவும். இதற்கு முந்தைய படத்தில் ‘யார் முதலில் சவாரி செல்வது?’ எனப் பேசிக் கொண்டிருக்கும் சிறாரைக் கண்டு பிடியுங்கள்.]


#16 
அமைதியான பாதை, அமைதியாகும் மனம்.

#17 
வன தெய்வம்

#18 
"ஓடும் உலகை அவள் துரத்தவில்லை; அது கடந்து செல்ல அமைதியாக அனுமதிக்கிறாள், அதன் சத்தத்தைக் கண்டு புன்னகைக்கிறாள்."

#19 
"ஒரு கணம் காக்கும் பொறுமை, பேரிடரைத் தடுக்கக் கூடும். ஒரு கணம் காட்டும் அவசரம், வாழ்க்கையையே அழிக்கக் கூடும்."

**

பெங்களூர் நகர் உலாவில்..:

#20 
பிரபல UB City.. வாகனத்திலிருந்து ஒரு பார்வை..


#21  
பழைய சென்னை சாலையில்.. கட்டிடக் கலை அமைப்பால்.. சிறப்பால்.., கடந்து செல்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கோபாலன் மால்..

#22 
புத்தகக் கடைகள் அருகி வரும் காலத்தில், வொயிட்ஃபீல்ட் நெக்ஸஸ் நேபர்ஹூட் மாலில் பல காலமாக இயங்கி வரும் க்ராஸ் வொர்ட் புத்தக நிலையம்..
"புத்தகக் கடையில்லாத ஊர், ஊரே இல்லை." 
_ Neil Gaiman


**

படத்துளிகள்:

#23
ஒரு பார்வையில் அனைத்தையும் சொல்லும் கண்கள்

#24
அமைதியான அழகன்
(தங்கையின் செல்லம் மைலோ)
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin