2023 குறிப்பேட்டினைப் புரட்டிப் பார்க்கும் நேரம்:)!
தினமொரு படமெனத் தொடரும் எனது ஃப்ளிக்கர் பயணத்தில் 365 நாளும் என்பது எளிதல்ல என்பதை வருடாந்திர ஆல்பம் தொகுக்கத் தொடங்கியக் கடந்த இரு வருடங்கள் எனக்குப் புரிய வைத்தன. கடந்த இரு வருடங்களிலும் எண்ணிக்கை 262 மற்றும் 251 ஆக இருக்க, இவ்வருடத்தில் 300_யை தாண்ட வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆயினும் அதற்காகப் பிரத்தியேகமாக மெனக்கிடவில்லை. ஆனால் இன்று சரியாக எண்ணிக்கை 300-யைத் தொட்டிருப்பது இனிய ஆச்சரியம் :).
இயற்கையின் ஆசிர்வாதத்தில் பறவைகள், பூக்கள் மற்றும் மனிதர்கள், குழந்தைகள், டேபிள் டாப் படங்கள் (கொலு மற்றும் கார்த்திகை தீப series அடங்கிய 2023 ஆல்பத்தின் இணைப்பு: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720305009769/ .
இந்த ஓராண்டில் மட்டும் எனது Flickr Photostream பக்கப் பார்வைகள் 4,65,000 + என்பதுவும் தொடர்ந்து இயங்க உத்வேகத்தைத் தருகிறது. [சென்ற வருடப் புள்ளிவிவரம் இங்கே..]
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடனான வாரந்திரப் படத் தொகுப்புகள் தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இல்லாவிட்டாலும், பதிவுலகப் பொற்காலம் எப்பொழுதோ முடிந்து விட்டிருந்தாலும், 15 ஆண்டுகளைத் தாண்டிய ‘முத்துச்சரம்’ இந்த வருடத்தில் 10 லட்சம் பக்கப் பார்வைகளைத் தாண்டி (10,14,000 +) இன்னும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வகையிலும் மகிழ்ச்சியே.
எழுத்தைப் பொறுத்த மட்டில் சொல்வனம் இணைய இதழ், உதிரிகள் சிற்றிதழ் ஆகியவற்றில் 21 தமிழாக்கக் கவிதைகள் மற்றும் நவீன விருட்சம், புன்னகை சிற்றிதழ்கள், கீற்று, திண்ணை இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகின.
“முடிவுறுபவற்றைக் கொண்டாடுவோம் - அவை புதிய தொடங்கங்களுக்கு முன்னோடியாக இருப்பதால்.”
இயன்றதைச் செய்து மன உற்சாகத்துடன் இருப்பதை இலக்காகக் கொண்டு 2014-குள் நுழைகிறேன்:).
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***
ஃப்ளிக்கரில் இந்த வருடம் படங்களின் எண்ணிக்கை 350 ஐத் தாண்ட வாழ்த்துகிறேன். சென்ற வருட 300 க்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குபதிவுகள் இன்னும் கொஞ்சம் முனைந்து வெளியிடவும் வேண்டுகிறேன்.
நன்றி ஸ்ரீராம். ஆம், நேரமின்மையைத் தாண்டி பதிவுகள் முனைந்து வெளியிட வேண்டும்தான். முயன்றிடுகிறேன்.
நீக்குஇந்த வருடம் எங்கள் தளத்துக்கு கொஞ்சம் சமையலோ, கதையோ அவ்வப்போது அனுப்பவும் அன்புடனும் நட்புடனும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்!
பதிலளிநீக்குஒரு கதை உங்கள் தளத்துக்குத் தர வேண்டியுள்ளது. இந்த வருடமாவது அதை நிறைவேற்ற வேண்டும்.
நீக்குவாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குசாதனைகளுக்கு இனிய பாராட்டுக்கள்!! இவற்றுக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் உயிர்ப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் என்றும் தொடர்ந்து மேன்மேலும் சாதனைகள் புரிய அன்பு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்றைக்கு ஆரம்பித்திருக்கும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்வையும் நிறைவையும் கொடுக்கும் வருடமாக அமைய வாழ்த்துக்கள்!!
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மனோம்மா.
நீக்கு