வியாழன், 16 பிப்ரவரி, 2023

‘வகவம்’ இலங்கை காலாண்டிதழ் ; என் ஃப்ளிக்கர் ஆண்டு 2022 - தூறல்: 44

 லங்கையில் வசிக்கும் எழுத்தாளரும் கவிஞருமான மேமன் கவி (அவர் குறித்து இங்கே அறியலாம்: விக்கிப்பீடியா) சென்ற ஆண்டு தொடங்கியுள்ள புதிய காலாண்டிதழ் வகவம். 

பாப்லோ நெருடா பற்றி நான் எழுதி சொல்வனத்தில் வெளியான கட்டுரை மற்றும் கவிதைகளின் தமிழாக்கத்தை வாசித்து விட்டு,

சொல்வனம் ஆசிரியர் மூலமாகத் தொடர்பு கொண்டு என் அனுமதி பெற்று அவற்றில் இரண்டு கவிதைகளை வகவம் இரண்டாம் இதழில் இடம் பெறச் செய்துள்ளார்:

#


#


#

வகவம் இதழுக்கும் ஆசிரியருக்கும் நன்றி!

**

என் ஃப்ளிக்கர் ஆண்டு:

சென்ற தூறல் பதிவில் ஏற்கனவே நான் பகிர்ந்த புள்ளி விவரங்கள்தாம் என்றாலும், அதை ஃப்ளிக்கர் இன்று அனுப்பியிருந்த மடல் மூலமாக மீண்டும் பார்வையிட நேர்ந்த போது மனதில் பூத்தது சிறு மகிழ்ச்சி. உற்சாகம். உங்களுடன் பகிர்வதுடன் எனது சேமிப்புக்காகவும் இங்கே பதிந்து வைக்கிறேன்:

#

#


சென்ற ஆண்டில் அதிக விருப்பங்களையும், கருத்துகளையும் பெற்ற படம். ஒளிப்படக் கலையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் என்னை போன்ற ஒரு அணிலார்:)!


#

கை கொடுத்து வரும் நிகான் ஒளிப்படக் கருவிகளும், 
கை விடாது படங்களை அள்ளி வழங்கி வரும் 
வீட்டுத் தோட்டமும்.. :)!


படத்துளி:

மகிழ்வலை
“யாரெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ 
அவர்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துகிறார்கள்.”

_ Anne Frank

**

12 கருத்துகள்:

 1. வாழ்த்துகளும், பாராட்டுகளும். அதென்ன வகவம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அதன் பொருளை அறிந்திட முயன்றேன். இயலவில்லை. 1987-இல் இதே பெயரில் இலங்கையில் ஓர் இலக்கிய இதழ் சில காலம் வெளி வந்ததாகத் தெரிகிறது.

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. வாழ்த்துக்கள், பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
  அணில் போல ஒளிப்படக்கலையை விடாமல் தொடர்ந்து கொண்டு இருங்கள். "மகிழ்வித்து மகிழ் "என்பது நினைவுக்கு வருகிறது. கடைசி வரியை படித்தவுடன்.

  பதிலளிநீக்கு
 3. மனமார்ந்த பாராட்டுகள் ராமலக்ஷ்மி! வாழ்த்துகளும்! மேலும் மேலும் பல புகைப்படங்கள் எடுத்து கடைசி வரி!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஆமாம் அணில் படம் நீங்கள் பகிர்ந்திருந்த போது அதை மிகவும் ரசித்தேன்....இப்போதும் ரசித்தேன் நிறையப்பேர் இதை ரசித்தது மகிழ்ச்சி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நீங்கள் ரசித்து கருத்து அளித்தது நினைவில் உள்ளது 🙂 .

   நீக்கு
 5. வகவம் இதழில் உங்கள் கவிதைகள் இடம்பெற்றமைக்கும் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin