புதன், 1 ஜனவரி, 2020

2019 கணக்கு வழக்கு + புத்தாண்டு வாழ்த்துகள் - தூறல்: 38

பிறந்து விட்டது 2020. வழக்கம் போலவே சென்ற ஆண்டைச் சற்றேத் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்:).

முத்துச்சரத்தில் சராசரியாக மாதம் ஆறு பதிவுகள்! 

மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளதோ இல்லையோ ஃப்ளிக்கரில் பதியும் படங்களை இங்கும் பகிரும் எண்ணத்துடன் வழங்கும் புகைப்படத் தொகுப்புகளான, தமிழாக்கத்துடன் கூடிய வாழ்வியல் சிந்தனைகள்  (17 பதிவுகள்); பறவை பார்ப்போம் கட்டுரைகள் (11 பதிவுகள்), இவ்விரண்டு தொகுப்புகளும் உள்ளடங்கிய ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ (19 பதிவுகள்);

இயற்கையோடு பயணிப்பதாக அமைந்த ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தொகுப்புகள் என் மனதுக்கு நிறைவானவை. விதம் விதமான கோணங்களில் பல வகைப் பறவைகளைப் படமாக்கிய பின் அவற்றோடு பதிவதற்காகச் சேகரித்த தகவல்கள் சுவாரஸ்யத்தையும் வியப்பையும் அளித்தன. 

த்திரிகை வெளியீடுகளாக,

கல்கி தீபாவளி மலரில், 

தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக எனது ஒளிப்படம்.. இந்த முறை முழுப்பக்க அளவில் :)கல்கி தீபம் இதழில் மூன்று கட்டுரைகள் நான் எடுத்த படங்களோடு:


&


&


டெகன் ஹெரால்ட் ஞாயிறு பதிப்புகளில் இருமுறைகள்:

&

சென்ற வருடம் போல அல்லாமல் கவிதைகளைப் பொருத்தவரையில் திருப்தி அளித்த வருடம். ஏனெனில் வருட ஆரம்பத்தில் தமிழாக்கமும் சேர்த்து மாதம் ஒன்றேனும் எழுத வேண்டும் என நினைத்ததை ஓரளவு செயல்படுத்தியிருக்கிறேன்.

கல்கியில்..

தி இந்துவின் காமதேனு வாரயிதழில்..


&


அமெரிக்க மாத இதழான தென்றலில், இரண்டு கவிதைகள்:


மல்லிகை மகளில்,


‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..


வளரி இதழில்..

மொழிபெயர்ப்பு இலக்கியங்களாக தமிழாக்கம் செய்த கவிதைகள்:

பதாகை மின்னிதழில்.. சார்ல்ஸ் காஸ்லே கவிதைகள்.. இரண்டு

சொல்வனம் மின்னிதழில்.. சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி கவிதை.. ஒன்று

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.. இரண்டு

மற்றும்
தாகூர் கவிதை.. ஒன்று


சென்ற வருடத்தில் எந்தக் கவிதைகளும் தமிழாக்கம் செய்திருக்கவில்லை. ஆனால் சென்ற ஜனவரி ஒன்றில் நான் எடுத்தப் புத்தாண்டு தீர்மானம் கவிதைகளில் கவனம் செலுத்த வைத்தது:).

கவிதைகளுக்கான அங்கீகாரமாக, FB வாசகசாலை கவிதை இரவில்.. என் கவிதைகள் வாசிக்கப்பட்டன..
நூல் மதிப்புரை:

கீற்று மின்னிதழில்..
சிறுகதைகள்:

ஒன்று கூட எழுதவில்லை :(. ஸ்ரீராம், மன்னிக்கவும். அவருடைய எங்கள் ப்ளாக் வலைப்பூவுக்குத் தருவதாகச் சொன்ன கதையை இன்னும் தரவில்லை. ஆனால் அவருக்கு நான் கீழ் வரும் செய்திக்காக என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். 

2018_ல் ‘சீதை ராமனை மன்னித்தாள்.’  எனும் கருவுக்காக அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ சிறுகதை,  எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியரான முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்து, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ‘உடைபடும் மெளனங்கள்’ நூலில் இடம் பெறுகிறது.

எழுத்தாளர் ஆர். சூடாமணியில் ஆரம்பித்து இந்நாளைய எழுத்தாளர்கள் வரை 30 பெண் எழுத்தாளர்கள் எழுதிய பெண் மையக் கதைகளைக் கொண்டது இத்தொகுப்பு, பாரதி புத்தகாலயம் வெளியீடு.

நன்றி எங்கள் ப்ளாக்! நன்றி ஸ்ரீராம்:)!
முனைவர் இரா. பிரேமா அவர்களுக்கும் என் நன்றி. 


யணத் தொடர்களாக..

ஜம்ஜெட்பூர் - பதிவுகள் (4)

பேகல் மற்றும் அனந்தபுரம் கோயில்.. கேரளம் - பதிவுகள் (5)

முக்கூடல் ஆனித்திருவிழா - பதிவுகள் (2)

பசவனகுடி, ஹொஸ்கொட்டே ஏரி மற்றும் திப்பு சுல்தான் அரண்மனை, பெங்களூர் - பதிவுகள் (3)

ளிப்படங்களுக்கான அங்கீகாரமாக..,

கல்கி தீபாவளி மலர், டெகன் ஹெரால்ட் வெளியீடுகளுடன்..,

வல்லமை மின்னிதழில் படக் கவிதைப் போட்டிக்காக ஒன்பது மற்றும் பத்தாவது முறையாக இரு படங்கள் தேர்வாகியிருந்தன சென்ற ஆண்டில்:
&

ஃப்ளிக்கர் பக்கத்தில் பெரிய இடைவெளிகள் இன்றி, தங்கு தடையற்று தினமொரு படம் பதிந்து வந்திருக்கிறேன் :)! இரசித்து இரசித்துப் படமாக்கியவற்றில் அதிகம் பிடித்தவை எவை எனக் கேட்டால் பட்டியல் சற்றே நீண்டு போவதால் ஃப்ளிக்கரின் “எக்ஸ்ப்ளோர்” பக்கத்தில் சென்ற வருடம் தேர்வான 5 படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதில் நடராஜர் சிலையின் படம் ஒரு இலட்சத்திற்கும் மேலான பக்கப் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.நண்பர்கள் அனைவருக்கும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***

18 கருத்துகள்:

 1. தொகுத்துக் கொடுத்தவிதம் அருமை...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வழக்கம்போல் சிறப்பாகவே கடந்த ஆண்டு முழுவதும் பதிவுகள் கொடுத்திருக்கிறீர்கள். இந்த ஆண்டு மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. கணக்கு, வழக்கு மிக அருமை.
  சாதனைகள் தொடரட்டும்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. எங்களுக்கும் சுவாரஸ்யம்தான்.   புகைப்படங்களின் துல்லியத்தை ரசிப்பதோடு, உடன் வரும் வாசகங்களும் கவரும்.

  "அவளும் நோக்கி"  "உடைபட்ட மௌனத்து"க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி.

   கதையின் தலைப்பையும் முடிவையும் பாராட்டுகளாக்கிய விதத்தை ரசித்தேன்:).

   வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. சிறப்பான வருடமாக 2019 அமைந்ததில் மகிழ்ச்சி சகோ. வரும் வருடம் மேலும் சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துகளும்....

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin