இடைவிடாது ஒன்றில் குறையாத ஆர்வத்துடன் ஈடுபடுவதும், அதைத் தொடர முடிவதும் கொடுப்பினை. நாலாயிரம் என்பது ஒரு இலக்கம், அவ்வளவே. நிச்சயமாக எண்ணிக்கை என்றும் இலக்கு அல்ல. 2008_ஆம் ஆண்டு ஆரம்பித்த ஃப்ளிக்கர் கணக்கின் ஒளிப்பட ஓடையில் 51,75,000++ பக்கப் பார்வைகளைப் பெற்று 4000 படங்களைப் பதிந்து முடித்துக் கடந்து கொண்டிருக்கிறேன். சுற்றியுள்ள உலகம் பெரும் சோர்வைத் தந்திருக்கும் இவ்வேளையில் மனதிற்கு சிறு வெளிச்சம் தருகின்றது கடந்து வந்த இப்பாதை.
நாலாயிரமாவது படமாகப் பதிந்த சூரிய ஒளிவட்டம். நேற்று முன் தினம் 24 மே அன்று,
பெங்களூர்வாசிகளுக்கு காலை 11 மணி முதல் 12.30 வரையிலுமாகக் காட்சி அளித்த சூரியன்:ஒளி வட்டம் வானவில் வண்ணத்தில்தான் இருந்தது முதலில். மொபைலில் படமெடுத்த பலருக்கு வண்ணங்கள் தெளிவாக வந்திருந்தன. ஜூம் லென்ஸில் சூரியனைப் படமாக்குகையில் கண்களில் பாதிப்பு ஏற்படாதிருக்க ND filter உபயோகிப்பது நல்லது. எனது புதிய லென்சுகளில் அளவுக்கு ஃபில்டர் இன்னும் வாங்கவில்லை. மொபைலைத் தவிர்த்து கேமராவில் முயன்ற படம். இணையத்தில் தேடினால் வானவில் வட்டத்துடனான படம் கிடைக்கும்:). அதிசய நிகழ்வாக மக்கள் கொண்டாடி. ‘நம்பிக்கை வட்டம்’ என மகிழ்ந்து படங்கள் எடுத்துப் பகிர்ந்திருந்தார்கள்.
**
வல்லமை மின்னிதழில் 300_வது வாரத்துடன் முடிவுற்ற படக் கவிதைப் போட்டியில் 298_வது வாரத்திற்கு, 27_வது முறையாகத் தேர்வாகியிருந்த எனது ஒளிப்படம்:
போட்டி அறிவிப்பு இங்கே. போட்டி முடிவு இங்கே.
**
**
இங்கே, ஃபேஸ்புக் பகிர்வில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி. (என் சேமிப்பிற்காக இணைப்பு இங்கும்..).
***
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநம்பிக்கை வட்டம் அழகு. நம்பிக்கை அளிக்கும் படம்.
நாலாயிரம் !
வாழ்க வளமுடன்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஆர்வம் குறையாது தொடர்ந்து சிறப்பாகச் செய்வதெல்லாம் வேற லெவல்...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி ரமணி sir :).
நீக்குவாழ்த்துகள் பாராட்டுகள்! சகோதரி.
பதிலளிநீக்குதுளசிதரன்
முதலில் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!
பங்களூரில் இருந்தும் பார்த்தும் படம் எடுக்க முடியவில்லை. உங்கள் படம் மிக அழகு.
//குறையாத ஆர்வத்துடன் ஈடுபடுவதும், அதைத் தொடர முடிவதும் ஒரு கொடுப்பினை//
அதே அதே.....நான் அடிக்கடி நினைக்கும் ஒன்று எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்று!! ஆர்வம் இருந்தாலும் தொடர முடியாமல், தவிர்க்க முடியாத முட்டுக்கட்டைகள்.
கீதா
இரண்டு மணி நேரங்களே இந்தக் காட்சி காணக் கிடைத்தது. படம் எடுக்கா விட்டால் என்ன, ஒளிவட்டத்தை நீங்கள் நேரில் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி, கீதா.
நீக்குஇருவருக்கும் நன்றி!
மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்கள் சாதனைகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு