ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கோயில் யானைகள்; முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம் - தூறல் : 46

 முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்:

எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக இடம் பெற்றுள்ளது நான் எடுத்த இந்த ஒளிப்படம்.

இத்துடன் பத்தாவது முறையாக பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில்  இடம் பெறுகிறது நான் எடுத்த ஒளிப்படம்.

2014_ஆம் ஆண்டில் எடுத்த இந்தப் படத்தின் ஃப்ளிக்கர் பதிவுஇங்கே”.

நூலில் அங்கீகாரம்:

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், குடும்பம், உணவு, சமூகம், கால நிலை மாற்றம் எனும் ஏழு தலைப்புகளின் கீழ் இடம் பெற்றுள்ள 32 கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்த இந்நூல் சமகாலப் பிரச்சனைகளை ஆழமாக அலசுகின்றது.

*

இவரது மற்றுமோர் நூலாகிய “பெண் என்னும் பெருமிதம்” கட்டுரைத் தொகுப்பின் இரு கட்டுரைகளுக்கு, 2012, 2015_ஆம் ஆண்டுகளில் எடுத்த எனது கீழ் வரும் படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, நூலின் ‘என்னுரை’யில் அதைக் குறிப்பிட்டும் உள்ளார் ஆசிரியர்.

#

#

#

*
ப்போதோ எடுத்த படங்கள் பல இப்படிப் பயனாவதில் திருப்தி. இவற்றை முறையாகத் தொகுத்து வைக்கும் வசதி ஃப்ளிக்கரில் உள்ளபடியால், வேண்டும் பொழுதில் எளிதாகத் தேடி எடுத்துக் கொள்ள முடிகிறது. 

தீதம் மின்னிதழில் பல கவிதைகள் எழுதிய வகையில் பரிச்சயமான எழுத்தாளர் இராஜலக்ஷ்மி மகராஜன் இரு வருடங்களுக்கு முன், தனது முதல் கதைத் தொகுப்பான “கதை பாயுதே” நூலில் ஒவ்வொரு கதைக்கும் நான் எடுத்த படங்களைப் பயன்படுத்தியிருந்தார். அந்த நூல் குறித்த பார்வையுடன் அது பற்றி பகிர்ந்திட எண்ணியிருந்தேன். முயன்றிடுகிறேன்.

**

கோயில் யானைகள்:

னங்களில் வாழ வேண்டிய, வலிமை மிக்க விலங்குகளான யானைகளைப் புனிதப் படுத்தி கோயில் யானைகளாகப் பராமரிப்பரிப்பது இந்தியா மற்றும் இலங்கை, தாய்லாந்து, மியாமர் போன்ற சில நாடுகளில் உள்ளன. தெய்வமெனப் போற்றி பெயரிட்டு பாதுகாத்தாலும் மக்களால் அன்பு செலுத்துப்பட்டாலும், அவற்றைப் பொறுத்த வரையில் சுதந்திரமற்ற அடிமை வாழ்வையே அவை வாழ்கின்றன. சிறிய தளங்களுக்குள் இயங்க வேண்டிய கட்டாயம், தனிமை போன்றவற்றால் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றன. இதனால் அவை மனிதர்களைத் தாக்குவது பல நேரங்களில் நிகழ்கின்றது. 

சென்ற நவம்பர் மாதம் திருச்செந்தூர் யானை தெய்வானை பல ஆண்டுகளாகத் தன்னைப் பராமரித்து வந்த பாகன் உதயக்குமாரையும் அவரது உறவினரையும் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். உறவினர் யானையுடன் பல செல்ஃபிகள் எடுத்துக் கொண்டதில் அது எரிச்சலுற்றதாகத் தெரிகிறது. அது குறித்த புதிய தலைமுறை மற்றும் இன்டியன் எக்ஸ்ப்ரஸ் செய்திக் குறிப்புகளின் இணைப்பு: . “இங்கே” மற்றும் “இங்கே”. தன்னைச் சீராட்டிய பாகனையே கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வில் யானை வருந்தியதும் சாப்பிடாமல் இருந்ததும் உருக்கம். 

இந்த சம்பவத்திற்குப் பின்னர் தமிழக அரசு கோயில் யானைகளிடம் நெருங்கிப் போய் ஆசிர்வாதம் வாங்கும் வழக்கத்திற்குத் தடை கொண்டு வந்ததாக செய்திகள் வந்தன.

2015-ஆம் ஆண்டு தெய்வானையை நான் எடுத்த படம். வெகு தொலைவிலிருந்து ஜும் உபயோகித்த எடுத்த படம் ஆயினும் யானை அந்தக் கூட்டத்திலும் எப்படி உன்னிப்பாகக் கேமராவைக் கவனிக்கிறது பாருங்கள்:
#


#
வலது ஓரத்தில் பாகன் உதயக்குமார்
*
சென்ற நவம்பர் மாதம் மைசூர் தசரா சமயத்தில் அரண்மனை முன்னே ஒரு யானை ஆவேசமாகி அங்குமிங்கும் அலைபாய்ந்த வீடியோ ஒன்று பரவலாகப் பகிரப் பட்டது. 

ரு தினங்களுக்கு முன் கேரளா - பாலக்காடு குட்டநாடு கோயில் திருவிழாவிற்காக வரவழைக்கப்பட யானை ஒன்று கூட்டத்தில் திடீரென மிரண்டு தாக்கியதில் யானைப் பாகன் உயிரிழந்த சம்பவத்தின் காணொலியை ஃபேஸ்புக்கில் பதிவர் உண்மைத் தமிழன் பகிர்ந்திருந்தார். பதற வைப்பதாக இருந்தது பாகனை யானை பந்தாடும் காட்சி.
*

திருநெல்வேலி மக்களின் பேரன்பைப் பெற்ற, 40 ஆண்டு காலங்கள் பக்தர்களுக்கு சேவை புரிந்த காந்திமதி யானை தனது 55_ஆவது வயதில் சென்ற ஜனவரி 12_ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானது. அதன் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கண்ணீருடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

2010_ஆண்டு அழகி காந்திமதியை நான் எடுத்த படங்கள்: 

#

இப்போது உள்ள கோயில் யானைகளை மீண்டும் வனத்தில் கொண்டு விடுவது சாத்தியமில்லை. திடீரென வன வாழ்வுக்கு அவை மாறுவதில் பல சிரமங்கள் இருக்கக் கூடும்.

ஆனால் பாதுகாப்பான சரணாலயம் அமைத்து அதிகாரிகள், பராமரிப்பாளர்கள் கண்காணிப்பில் சுதந்திரமாக அங்கே உலவ விடலாம், அரசு மனம் வைத்தால். மற்றும் இனி வரும் காலங்களில் புதிதாகக் கோயில்களுக்கு யானைகளைக் கொண்டு வருவதையும் தடை செய்யப் பரிசீலிக்க வேண்டும்.

*
தி இந்து, காமதேனு இதழில், யானைகள் குறித்து நான் எழுதிய கவிதை: மனிதர்களற்ற வெளியில்... [இணைப்பு: “இங்கே..”]

**
ஞாயிறு பதிவுகளாக பகிர்ந்து வந்த வாழ்வியல் சிந்தனைகளுக்கு இடைவெளி கொடுக்க உள்ளேன். நேரமின்மை காரணமாக சமீபமாகப் படங்களுக்கு சிறு தலைப்புகள் கொடுத்து ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்து விடுகிறேன். அவ்வப்போது அந்தத் தலைப்புகளுடனேயே படத் தொகுப்புகளை இங்கே பகிர எண்ணியுள்ளேன். பல ஆண்டுகளாகத் தமிழாக்கம் செய்து பகிர்ந்த சிந்தனைத் துளிகளை, நேரம் அனுமதிக்கையில் தொகுத்து மின்னூலாக மாற்றும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.

*
படத்துளி:
“மரங்களானது வானின் மேல் பூமி எழுதும் கவிதைகள்.” 
- கலீல் ஜிப்ரான்
***



12 கருத்துகள்:

  1. உங்கள் படம் திருமலை அவர்களின் புத்தக அட்டையில் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.

    போன மாதம் தம்பியின் மணிவிழாவிற்கு போன போது யானையை படம் எடுக்க தடை வித்தித்தார் பாகன்.
    கஜபூஜை சமயம் போட்டோ, வீடியோ எடுத்த போது தடை செய்யவில்லை, நாம் செல்போனை வைத்து எடுக்கும் போது வேண்டாம் என்றார்.

    காந்திமதி செய்தி வருத்தம், திருச்செந்தூர்யானை யின் வருத்தம் மனதுக்கு கஷ்டம்.

    காட்டில் சுதந்தரமாக சுற்றி கொண்டு இருந்ததை கொண்டு வந்து தன் இஷ்ப்படி ஆட்டி படைக்கும் மனிதர்களை என்ன சொல்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி கோமதிம்மா. செல்ஃபோனில் எடுக்கத் தடை விதித்ததற்கு திருச்செந்தூர் சம்பவமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
  2. புத்தக அட்டையிலும், புத்தகத்திலும் உங்கள் படங்கள் இடம் பெற்றதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் படங்கள் என்பதை 'நீங்கள் எடுத்த படங்கள்' என்று திருத்தி வாசிக்கவும்!

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம். நானும் கவனமாக ‘நான் எடுத்த’ எனக் குறிப்பிடப் பழகிக் கொண்டேன் :)).

      நீக்கு
  3. யானை பற்றிய படங்களும், சிந்தனைகளும் அருமை.  அவ்வளவு தூரத்திலிருந்து நம்மை ஒருவர் கேமிரா கண்கொண்டு பார்க்கிறார் என்பதை அது கவனிக்கும் திறமை வியக்க வைக்கிறது.
     
    ஸ்ரீரங்கத்தில் அதிகாலை உள்பிரகாரத்தில் குறுகிய இடத்தில் வரிசையில் நான் நின்றிருந்தபோது ஆண்டாள் உள்ளே வந்து திரும்பிச் செல்லும்போது அதன் பார்வை என்னையும் கவனித்துச் சென்றது நினைக்கவும் வருகிறது. 

    கம்பித் தடுப்புக்குள் நானும் பாஸும்.  அந்த பிரம்மாண்ட உருவம் அங்கிருக்கும் குறுகிய வாயில் வழியே வந்து திரும்பும் இடத்தில் நாங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 20 வருடங்களுக்கு முன் மதுரை கூடலழகர் கோயில் யானை இதே போன்று வெகு அருகாமையில் கடந்து செல்ல பயத்தில் வெலவெலத்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. காந்திமதி யானையை விட ஒன்றரை பங்கு பெரிதாக பிரமாண்டமாக இருந்தது.

      நீக்கு
  4. பிரம்மாண்டமான ஜீவன்.  பாவம் தன் பலத்தை மறந்து, நம்மிடம் வாங்கிய அடிகளால் மட்டும் பயந்து நமக்கு அடிமையாக இருக்கிறது.  அப்புறம் பாகன் மேல் பாசம் வைப்பதெல்லாம் வேறு கதை.

    பதிலளிநீக்கு
  5. தெய்வானையின் இரண்டு க்ளோசப் ஷாட்களும் அருமை.  அடுத்த முறை யானையைப் பார்க்கும்போது நானும் இப்படி முயற்சிப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனம். மிக அருகில் சென்று விட வேண்டாம்.

      அனைத்து கருத்துகளுக்கும் மீண்டும் நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு.

    நீங்கள் எடுத்த படம் நூலின் அட்டைப்படமாக... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin