சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கோயில் யானைகள்; முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம் - தூறல் : 46

 முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்:

எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக இடம் பெற்றுள்ளது நான் எடுத்த இந்த ஒளிப்படம்.

இத்துடன் பத்தாவது முறையாக பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில்  இடம் பெறுகிறது நான் எடுத்த ஒளிப்படம்.

சனி, 1 மே, 2021

மே தினம் 2021 - பாதுகாப்பு.. ஆரோக்கியம்..

 #1

1 மே, சர்வதேச உழைப்பாளர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் தம் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தினம் உதவி வருகிறது. சென்ற வருடம் நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன், பல இலட்சம் உழைக்கும் மக்களைக் கால்நடையாக தம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வைத்தது. இந்த வருடம் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை அவர்களை மேலும் கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆண்டு மே தினத்தின்பேசு பொருளாக உழைக்கும் மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று, லாக் டவுன், வேலையின்மை பிரச்சனைகளிலிருந்து உலகம் மீண்டு வரப் பிரார்த்திப்போம். இரவும் பகலுமாக கொரானா நோயாளிகளுக்காக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களைப் போற்றுவோம்.

உழைப்பாளர்களைப் போற்றும் விதமாகச் சில படங்கள்:

#2


#3

வியாழன், 28 மே, 2020

இது எங்கள் தேசம்!? - 'கீற்று’ மின்னிதழில்..

இது எங்கள் தேசம்!?


வீட்டை மறந்து
ஊரைத் துறந்து
உறவைப் பிரிந்து
மாநிலங்கள் தாண்டி
வாழ்வாதாரம் வேண்டி
துணிந்து இடம் பெயர்ந்தோம்
என்ன இடர் வரினும் காக்கும்
எங்கள் தேசம் என.

வானுயர்ந்த
கட்டிடங்களுக்காகவும்
வளைந்து நீண்ட
பாலங்களுக்காகவும்
மொழி அறியா ஊர்களில்

புதன், 26 ஏப்ரல், 2017

கிருஷ்ணராஜபுர ஏரியும்.. பெங்களூர் நீர் நிலைகளும்..

#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA,  “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.

#2

ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

#3

சனி, 25 மார்ச், 2017

புன்னகையால் புரிய வைப்போம்! - பெண் சக்தி

ங்கள் சக்தி, அறிவு, திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த பெண்களில் சிலருக்கு அங்கீகாரங்களும் மரியாதைகளும் தேடி வர, சிலருக்கு அவை மறுக்கப்படுகின்றன. இன்னும் பலருக்கோ அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமலே போகின்றன. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் வழியில் பல போராட்டங்களைச் சமாளித்து, தோல்விகளில் கற்று, வெற்றிகளில் களித்து நின்றிடாமல் இயல்பாகக் கடந்து, மேலும் வேகத்தோடு முயன்று, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் மார்ச் மாதத்தில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அப்படியான பல அசாதாரணப் பெண்மணிகளின் படங்களை ஃப்ளிக்கரில் பகிர்ந்து பின்னர் இங்கே தொகுப்பாக்கி வருகிறேன், கடந்த சில வருடங்களாக.  இந்த வருடத் தொகுப்பாக.. கருப்பு வெள்ளைப் படங்கள் பத்து.. பொன்மொழிகளுடன்..

#1
‘நம்மால் இதற்கு மேல் முடியாது என நினைத்து, ஆனாலும் தொடர்ந்து பயணிக்கையில் அதிகரிக்கிறது பலம்’
__Karen Salmansohn
#2
‘வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் நம்பிக்கை இருப்பதை
புன்னகை மூலமாகப் புரிய வையுங்கள் உலகுக்கு’


#3
‘தன்னம்பிக்கை என்பது மற்ற எவரும் உங்களை நம்பாத போது, உங்களை நீங்களே நம்புவது’

புதன், 8 மார்ச், 2017

மாறி வரும் பணி உலகில் மகளிர் - பெண்கள் தின வாழ்த்துகள்!

#1

சர்வதேச மகளிர் தினத்தின் இந்த வருடக் கரு: 

Be Bold for Change
#2
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பாகங்களிலும் ஒன்றாக இந்நாளை மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான வித்தாக இருந்தது..

சனி, 1 அக்டோபர், 2016

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு.. - அனைத்துலக முதியோர் தினம்

#1
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாகக் காணப்படுகிறது:

#2
கண்ணில் தெரிவது பாதி..
  ‘நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி..
உள்ளம் என்பது ஆமை’

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.

புதன், 21 செப்டம்பர், 2016

உலக அமைதி தினம் 2016

# ‘நமக்குள் இருந்து வருகிறது அமைதி..’
-புத்தர்

# அமைதி என்றும் அழகு..
_ Walt Whitman

#அமைதிக்காக எவ்வளவு உரத்து குரல் கொடுத்தாலும், எங்கு சகோதரத்துவம் இல்லையோ அங்கு அமைதி கிடைக்காது. 
Max Lerner

வியாழன், 1 செப்டம்பர், 2016

சாதீயம் - நவீன விருட்சத்தில்..

வ்வொரு வேட்டைக்குப் பிறகும்
விருந்துகள் நிகழ்கின்றன.
வேலி தாண்டி வந்து விட்டதாக
அறைந்து இழுத்து செல்லப்பட்ட
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை

புதன், 27 ஜூலை, 2016

வெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் (பாகம் 2)

டாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது பொன்மொழிகள் சிலவற்றின் தமிழாக்கம், எடுத்த படங்களுடன்..

1. வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதீர்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு செய்தி மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை வாசியுங்கள். வெற்றி பெற சில யோசனைகள் உதிக்கும்.  



2. ஒருவரை தோற்கடிப்பது மிக எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகக் கடினமானது.

ஞாயிறு, 1 மே, 2016

மே தினம் : “பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே..”

உண்ணும் உணவிலிருந்து பயணிக்கும் பாதை, அணியும் ஆடை என அனுபவிக்கும் அத்தனை பொருட்களுக்குப் பின்னாலும் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது! கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படமாக்கிய உழைப்பாளர்களின் படங்கள்:

டாடா நகர் இரயில் நிலையத்தில்...
#1

#2
#3

#4

கொல்கத்தாவில்..

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஞானத்தின் ஆரம்பம் - சாக்ரடீஸ் பொன் மொழிகள் 10

#1
அறிவாளிகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சராசரியானவர்கள் ஊர் உலக நடப்புகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்கள் அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

#2
மெய்யறிவு எதுவெனில், உனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதே.

#3
மாற்றத்திற்கான இரகசியம், உங்கள் சக்தி அனைத்தையும் குவித்துப் பழையவற்றோடு போராடிக் கொண்டிருப்பதில் இல்லை, புதியவற்றைக் கட்டமைப்பதில் இருக்கிறது.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உயிரோட்டம்

#1  குறுநகை
மாற்றங்கள் வரவேற்புக்குரியவை. காலத்திற்கேற்ப ‘PiT - தமிழில் புகைப்படக் கலை’ தளத்தின் அடுத்தக் கட்ட நகர்வு:

புகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது PiT தமிழில் புகைப்படக்கலை தளம் என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த Facebook https://www.facebook.com/groups/488597597986621/  குழுவின் மூலமாக தொடர முடிவாகி, இம்மாதப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#2 வெள்ளந்திச் சிரிப்பு

ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். இணையம் பயன்படுத்தும் யாவரும் பதிவுலகில் இருப்பதில்லை. ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் அபூர்வமே. போட்டி ஆல்பத்தில் படங்களைச் சேர்ப்பதை எளிமைப் படுத்தவே பிட் ஃபேஸ்புக் நோக்கி நகர்ந்து, இம்மாதம் இப்புதிய குழுவை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 300+ பேர்கள் ஆர்வத்துடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால் முன்னரே பிட் தளத்தில் பகிரப் படும் பதிவுகளை உடனுக்குடன் அறிந்திட https://www.facebook.com/photography.in.tamil/ எனும் ஃபேஸ்புக் பக்கம் இரு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு அதை 3300+ வாசகர்கள் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இப்பக்கத்தை ‘லைக்’ செய்து பதிவுகளைத் தொடரலாம்.

#3 புன்முறுவல்
Living things - உயிருள்ளவை ” என்பதே 2016 பிப்ரவரி போட்டிக்கு நடுவர் நவ்ஃபல் அறிவித்திருக்கும்  தலைப்பு. மனிதர்களாகவோ பிறஜீவராசிகளாகவோ இருக்கலாம். உயிரோட்டத்துடன் படங்கள் இருக்கவேண்டும் என்பது அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டிய விதி. மற்ற பொது விதிமுறைகள் இங்கே.  இப்போது சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#4 யாரை நம்பி நான் பொறந்தேன்..

புதன், 13 ஜனவரி, 2016

செல்ஃபி சூழ் உலகு - குறும்படம்


ன்னை முன் நிறுத்த வழி தேடிக் கொண்டேயிருக்கிறது மனது. அப்படிச் செய்யாது போனால் காணாது போய்விடுவோமோ எனப் பதறுகிறது. நாளின் நகர்வை, பெருமை பேசும் மணித்துளிகளை, பரவச நொடிகளை சோஷியல் மீடியாக்களில் பகிர்வது ஒருவகை உற்சாகத்தை அளிப்பதாக நம்புகிறது. சுய விளம்பரங்களில் தவறில்லை என்கிறது. நல்லது செய்வதை நான்கு பேர் அறியச் செய்வது மேலும் பலரைச் சிந்திக்க வைக்குமல்லவா என்று சமாதானம் சொல்கிறது. அது உண்மையாவும் இருக்கலாம். ஆனால் இவற்றைத் தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கிறது என்பதை அருமையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் உழவன் (நவநீத்) இந்தக் குறும்படத்தில்.
#

சனி, 12 டிசம்பர், 2015

அவசர காலத்தில்..

மாமழையில் சிக்கிக் கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கற்க நேர்ந்த பாடங்களென வந்த ‘வாட்ஸ் அப்’ பகிர்வுகள் இன்னும் சில. மீண்டும் இப்படியொரு நிலை  வேண்டாவே வேண்டாம் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. அதே போல உணர்ந்து கொள்ளவும் சில உண்மைகள்..

இன்வெர்டரிலிருந்து நேரடியாக மொபைலுக்கு சார்ஜ்:

மின் தடையின் காரணமாக மொபைலில் சார்ஜ் இல்லாமல் முற்றிலுமாக நான்கு நாட்களுக்கு வெளியுலகோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு மாட்டிக் கொண்டவர்கள் பலபேர். அவர்கள் நிலைமை என்னாயிற்றோ என உறவினர் நண்பர்களின் பதட்டம் ஒரு புறம்.

புதன், 9 டிசம்பர், 2015

மழைக்குப் பின்.. சுகாதாரம்.. சில குறிப்புகள்..

வெள்ள நீர் வடிந்தாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் சாலைகள் சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,.மாசடைந்த சூழலில் மக்கள் பயந்துபடியே இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி தேவையான மருந்துகள் கிடைக்காமல், இன்னும் மின்சாரம் திரும்பாமல், BSNL, Airtel சரியாகாமல் எங்கும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் பலர் சிரமத்தில் இருக்கிறார்கள். இவ்வேளையில் மக்கள் தங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளவும், நீரினால் பரவக் கூடிய நோய்களைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். சுகாதாரத்தில் காட்ட வேண்டிய அக்கறை பற்றி வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் பகிரப் பட்ட குறிப்புகளைத் தமிழாக்கம் செய்து இங்கு அளித்திருக்கிறேன். இவற்றில் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து தரப்பட்டவை.
முதலில் மும்பையைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் பகிர்ந்ததைப் பார்க்கலாம்:

திங்கள், 7 டிசம்பர், 2015

வெள்ளமும் உதவும் உள்ளங்களும்..

பெய்து முடித்த பெருமழை மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது. உறவுகள், நட்புகள் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும், செய்திகள் மூலம் அறியவரும் மக்கள் படும் இன்னல்களும் கலவரத்தை அளிப்பதாக உள்ளன. அரசோ, ராணுவமோ யார் என்ன செய்கிறார்கள் எனப் பாராது நம்மால் என்ன முடியும் என ஓடி ஓடி உதவிக் கொண்டிருக்கிறார்கள் தன்னார்வலர்கள். பிற ஊர்கள், மாநிலங்களிலிருந்தும் உதவிப் பொருட்களோடு விரைந்து கொண்டிருக்கிறார்கள். நேரில் சென்றோ அல்லது நம்பகமான குழுவினர் மூலமோ பாதிப்படைந்தவர்களுக்கு சரியாகச் சென்று சேர்வதில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள். பெங்களூரிலும் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் நண்பர் குழுக்கள் பொருட்கள், மற்றும் உடைகளை வீடு வந்து வாங்கிச் செல்கிறார்கள். உதவிக் கொண்டிருக்கும் அனைவரும், சிரமத்தில் இருப்பவர்களின் பலதரப்பட்ட தேவைகளையும் மனதில் கொண்டு கவனத்துடன் செயலாற்றி வருகிறார்கள். மனிதமும், சகோதரத்துவமும் மரித்துவிடவில்லை என்பது இப்பேரிடர் காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய ஆறுதல்.

உதவி வரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

வர்களில் சிலரோடு கைகோர்க்க விருப்பமா?

புதன், 2 டிசம்பர், 2015

சென்னை மழை - மீட்புப் பணி - பிரார்த்தனைகள்!

#1

சென்னையிலும், தமிழ்நாட்டின் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் மாட்டிக் கொண்டு மக்கள் படுகிற அவதி மனதைப் பதைக்க வைப்பதாக இருக்கிறது. இருப்பிடம், உணவு, மின்சாரம், உடல்நலம், பாதுகாப்பு என எல்லாமே கேள்விக் குறியாகி விட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மனித நேயத்துடன் களம் இறங்கி, உதவி வருகிற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள்.

உரிய நேரத்தில் உதவி பல இடங்களுக்கு கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்தபடி இருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் பின்வரும் படங்களை தன் மொபைலில் எடுத்து அனுப்பியிருந்த நண்பர்.

#2

புதன், 14 அக்டோபர், 2015

மனிதம்.. அன்பு.. அமைதி.. - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் 10

#1 எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயிர்த்திருக்கிறது.

#2 என் வாழ்க்கையே எனது அறிவுரை.

#3 அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.


#4 கண்ணுக்கு கண் எனும் கொள்கை,

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி


ரு வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிறு மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் சாங்கி ஏரிக்கு சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் அந்த ஏரியைக் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை செய்தித்தாளில் படிக்க நேர்ந்ததும் செல்லும் ஆவல் எழுந்ததற்கு ஒரு காரணம்.

#2

பசுமை சுருங்கிக் கொண்டே வருகிற இந்தத் தோட்ட நகரில் பல வித உயிர்களுக்கும் மரங்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin