ஞாயிறு, 18 அக்டோபர், 2026

காலம் கனியும்

 

#1
'ஒவ்வொரு அரும்பும் 
நாளைய மலர்ச்சிக்கான 
அமைதியான வாக்குறுதியைத் 
தாங்கி நிற்கிறது.'

#2
'நம்பிக்கையுடன் விதைக்கப்படுவது 
காலம் கனிகையில் 
மலர்கிறது.'

#3
'ஒரு தோட்டத்தில் இடம்பெற, 
அந்தத் தோட்டத்தின் இயல்புக்கு ஏற்ப 
உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.'

#4
'அமைதியாகத் தொடங்குவது 
உறுதியான ஒன்றாக வளரக்கூடும்.'

#5
'நம்பிக்கை 
முடிவடைய மறுக்கும் இடத்திலேயே 
எதிர்காலம் தொடங்குகிறது.'

*

[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...] 
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 244
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin