பெரிய பச்சைக்கிளி:
#2
'பெரிய பச்சைக்கிளி' எனக் குறிப்பிடப்படும் 'அலெக்ஸாண்ட்ரியா கிளி' (Psittacula eupatria) இனம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
#3
மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவில் பஞ்சாபிலிருந்து ஐரோப்பா வரைக்கும்
மத்திய தரைக் கடல் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்து அறிமுகப்படுத்திய பறவைகளில் இதுவும் ஒன்று ஆகையால் அவர் பெயரைக் கொண்டு "அலெக்ஸாண்ட்ரியா கிளி" என அழைக்கப்படுகிறது.#4
தோப்புகள், காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நகர்ப்புற பூங்காக்களில் அதிகமாகத் தென்படும். கூட்டமாக வாழும். உரத்த சத்தத்துடன் பறக்கும். விதைகள், பழங்கள், பூக்கள், மொட்டுகள் மற்றும் சில வகைப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழும். மூன்று முதல் நான்கு முட்டைகள் இடும்.
#5
தலை உச்சியிலிருந்து வால் முனை வரை 23-25 அங்குலம் வரையிலான நீளமும், 200-300 கிராம் வரையிலான எடையும் கொண்டவை. நீண்ட கூரான வாலின் நீளம் மட்டுமே 11-14 அங்குலம் வரை இருக்கும்.
#6
ஆண் கிளிகளின் கழுத்தில் வளைய வடிவில் கருப்பு மற்றும் சிகப்பு நிறக் கோடுகள் இருக்கும். செந்நிற அலகுகள் கொண்டவை. பெண்கிளிகளை விடவும் ஆண் கிளிகளின் அலகுகள் பெரிதாக இருக்கும்.
#7
இருபாலின கிளிகளுக்கும் கழுத்துக்குக் கீழே பக்கவாட்டில் இறகில் திட்டாகக் காணப்படும் சிகப்பு நிறமும், உருவத்தில் பெரிய அளவும் இவற்றை செந்தூர்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக் கிளி எனப்படும் rose-ringed parakeets ஆகிய சாதாரண பச்சைக் கிளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
#8
இவை மிகச் சிறந்த பேச்சுத் திறனைக் கொண்டவை. இளம் பருவத்திலிருந்தே வீட்டில் வளர்த்தால் மனித குரல்களை மிகத் தெளிவாக உள்வாங்கிப் பேசும். வளர்பவர்களிடம் மிகுந்த பிரியத்துடன் பழகும். அதனாலேயே வளர்ப்பு கிளிகளாக இவை பல நூற்றாண்டுகளாகப் பிரபலமானவை. மேலும் ஒரு காலத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இக் கிளிகள் உயர்தரமானவை என்றும் அரச முக்கியத்துவம் பெற்றவை என்றும் விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
#9
வனங்கள் அழிப்பு மற்றும் வளர்ப்புப் பறவை வணிகத்திற்காக அதிகமாக பிடிக்கப் படுவதால் பல இடங்களில் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகு குறைந்து வருகிறது. அழிய வாய்ப்புள்ள அரிய இனமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிகப்பு பட்டியலில் ‘Least Concern’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இவற்றை வளர்ப்பதோ அல்லது விற்பதோ தற்போது சட்டப்படி குற்றமாகிறது.
#10
*
இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.
*
படங்கள் மைசூர் காராஞ்சி ஏரி இயற்கைப் பூங்காவில் எடுக்கப்பட்டவை.
*
பறவை பார்ப்போம் - பாகம்: 124
*
அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான விவரங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகான பறவை. காராஞ்சி பூங்காவில் எடுத்த மாவீரர் அலெக்ஸாண்டர் அனுப்பிய பறவை பல்கி பெருகி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்.
பதிலளிநீக்குஇங்கும் கிளிகள் சத்தம் கொடுத்து கொண்டு பறக்கும் வீட்டை சுற்றி
நமக்கு எப்போதாவதுதான் படம் எடுக்க அனுமதி கிடைக்கும் அவைகளிடமிருந்து. ராஜவளைய கிளி பற்றி நிறைய செய்திகள் அறிந்து கொண்டேன். நன்றி.
வழக்கமாக நாம் பார்க்கும் செந்தூர்ப் பைங்கிளிகளில் இருந்து வித்தியாசமாகத் தெரிந்தது. படங்கள் எடுத்த பிறகு இணையத்தில் தேடியே இதன் பெயர் மற்றும் விவரங்களை அறிந்து கொண்டேன். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு