வியாழன், 6 ஜூலை, 2023

சாதா கதிர்க்குருவி (Plain Prinia) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Plain Prinia)
உயிரியல் பெயர்: Prinia inornata

சாதா கதிர்க்குருவி சுமார் ஐந்து அங்குல உயரத்திலான, கிளைகளைப் பற்றி அமரும் பாசரைன் (Passerine) வகை சிறு பறவை. நல்லத் தெளிவாகக் குரலெழுப்பிப் பாடும். பழக்க வழக்கங்களைக் கொண்டு  பாடும் குருவி, வெண்புருவப் பாடும் குருவி போன்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகின்றன. 

#2

 வேறு பெயர்கள்: 
சாதா பாடும் குருவி (plain wren-warbler)
வெண்புருவப் பாடும் குருவி (white-browed wren-warbler)

சற்று தைரியமான பறவை. அடிக்கடி புதர்களுக்குள் மறைந்து கொள்ளக் கூடியது ஆயினும், பாடும் போது திறந்தவெளி மரக்கிளைகளில் அமர்ந்தே பாடும்.

பாட்டின் ஒலி  மிகத் துல்லியமாக ட்லீஈஈ-ட்லீஈஈ எனத் தொடர்ந்து ஒலிக்கும். அதுமட்டுமன்றி இறக்கைகளைப் படபடவென அடித்து சத்தம் எழுப்பும். 

#3

[இளம் பறவை]

சாதா கதிர்க்குருவிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும், தென் சைனாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலும் பரவலாகக் காணப் படுகின்றன. இவை வலசை வாரா, ஒரே பகுதியில் தங்கி இனப்பெருக்கம் செய்யும் வகையினம்.  

செம்பட்டைக்கால் கதிர்க்குருவி என்று இது தவறாக எண்ணப்பட்டதுண்டு. பின்னர் அது தென் சகாரா பாலைவனத்தில் மட்டும் காணக் கிடைக்கும் தனி இனம் என பிரிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட்டது.

#3

கதிர்க்குருவி ஐந்து முதல் ஐந்தரை அங்குல நீளம் வரை வளரக் கூடியவை. சிறகுகள் வட்ட வடிவிலும், வால் நீண்டும், கருமை நிறத்தில் குட்டையான அலகும் கொண்டவை. அகன்ற புருவங்களையும், பலம் பொருந்திய கால்களைக் கொண்டவை. உடலின் அடிப்பாகம் இளஞ்சாம்பல் வண்ணத்திலும், மேற்பாகம் கருஞ்சாம்பல் வண்ணத்திலும் இருக்கும். இருபாலினமும் ஒரே மாதிரியான  தோற்றம் கொண்டவை.

மற்றபிற சிறுகுருவிகள் போன்று  சாதா கதிர்க்குருவி ஒரு பூச்சியுண்ணி. உயர்ந்த கோரைப் புற்கள் பெருகிய பகுதிகள், நீர்நிலைகள் அருகே விரும்பி வாழும். புல்வெளிகள், வயல்வெளிகள், ஆற்றங்கரைகள், குளக்கரைகள், சதுப்பு நிலங்கள், திறந்த காட்டுவெளிகள் என எங்கெங்கு பூச்சிகள் கிடைக்குமோ, அங்கெல்லாம் இவை பல்கிப் பெருகுகின்றன.

#5

புதர்கள் அல்லது நன்கு உயர்ந்து வளர்ந்த கோரைப்புற்களில் தன் கூடுகளை அமைக்கும். பஞ்சு, சிறு நார்கள், கோரைப்புல்லின் பஞ்சு போன்ற பகுதிகளைக் கொண்டு கூடு கட்டும். மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். குஞ்சுகளுக்கும் பூச்சிகளையே உணவாக அளிக்கின்றன.

*

*விக்கிப்பீடியா ஆங்கிலத் தளம் உட்பட இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (167)
பறவை பார்ப்போம் - பாகம்: (99)

***

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  அவை குரலெழுப்பிப் பாடும் என்பது இன்னும் சுவாரஸ்யம்.  காணொலி இணைத்திருக்கலாமோ...  இறக்கைகளை படபடவென அடித்துக்கொள்வது பின்னணி இசையோ...! அழகாக படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னணி இசை.. அழகிய கற்பனை! இருக்கலாம் :). ஒரு சில பறவைகள்கள் தவிர்த்து மற்றன நிற்கும் நேரமே குறைவென்பதால் ஒளிப்படங்கள் எடுப்பதிலேயே கவனம் செல்கிறது. காணொளிகள் முயன்றிட வேண்டும். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சாதா கதிர்க்குருவி படங்கள் மிக அழகு. அவற்றை பற்றிய செய்திகள் அருமை.
    இங்கும் வருகிறது காலையில் இனிமையாக பாடுகிறது. படம் எடுக்க வசதி இல்லா இடத்தில் நிற்கிறது. ஒரு நாள் எடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /வசதி இல்லா இடத்தில்/ பல சமயங்களில் இப்படி நேருவதுண்டு. கிளைகளுக்குள்ளே இலைகளுக்குள்ளே இருக்கும் போது படம் எடுக்க முடிவதில்லை. விரைவில் நீங்கள் சாதா கதிர்க்குருவியைப் படம் எடுக்க வாழ்த்துகள். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. படங்கள் மிக அழகாகவும் துல்லியமாகவும் இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோம்மா.

      நீக்கு
  4. படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் குருவிதான் கதிர்க்குருவியா....படங்கள் செம அழகு.

    இங்கு ஏரிப்பக்கங்களில் பார்த்திருக்கிறேன் ஆனால் கிளைகள் மரங்கள் இலைகளுக்கிடையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் பாடுவதையும் கேட்டுருக்கிறேன் படம் வீடியோ எடுக்க முனைந்த போது முடியவில்லை. சரியாக வரவில்லை. அப்போது பெயர் தெரியாது படம் எடுத்தால் அதை கூகுள் படங்கள் தேடுதலில் போட்டு தேடி என்ன பறவை என்று தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.

    இப்ப உங்க பதிவிலிருந்து என்ன குருவி என்று தெரிந்துவிட்டது. தகவல்களும் தெரிந்துகொண்டேன்.

    மிக்க நன்றி ராமலஷ்மி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா. கதிர்க்குருவிகளில் பல வகைகள் உண்டு. மேலும் ஓரிரு வகையினை விரைவில் பகிர்ந்திடுகிறேன்.

      நீக்கு
  6. கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்க்கும் படம் செம ஷாட்! அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin