#1
அனாடிடாய் (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை இனம் வாத்து. உருவத்தில் சிறிய அளவிலான வாத்துகள் ducks எனவும் அளவில் பெரியதாக நீண்ட கழுத்துடன் காணப்படுபவை Geese (பன்மை) எனவும் விளிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெண் வாத்து goose எனவும் ஆண் வாத்து gander எனவும் குறிப்பிடப்படுகின்றன.
இதே அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினராக இருக்கும் அன்னப் பறவைகள் geese வகை வாத்துகளை விடவும் பெரிதாக வளைந்த கழுத்துகளுடன் காணப்படும்.
#2
Geese வகை வாத்துகளில் 3 விதமான பிரிவுகள் உள்ளன. அன்செர் (Anser) பேரினத்தைச் சேர்ந்த சாம்பல் வாத்துகள், பிரன்டா (Branta) பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் (Chen) பேரினத்தைச் சேர்ந்த வெள்ளை வாத்துகள்.
இவை gregarious எனப்படும், கூட்டமாக வாழும் வழக்கம் கொண்டவை. இணை சேருதல் போன்றன தாண்டி நட்புறவுடன் ஒரு குடும்பமாக மந்தையாக வசிக்கும்.
#3
தமது இணைக்கு ஆயுட்காலம் முழுவதும் விசுவாசமாக இருக்கும். இணையையோ அல்லது தமது குஞ்சுகள் அல்லது முட்டைகளையோ இழக்க நேரிட்டால் சோகமாக துக்கம் அனுசரிக்கும்.
#5
இவை 12 முதல் 15 முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.
#6
அகன்ற, தட்டையான மூக்கினைக் கொண்டவை.
#7
#8
இவற்றின் உடம்பிலிருந்து சுரக்கும் ஒரு வித எண்ணெய் ஆனது இறக்கைகள் மேல் படர்ந்து நீரிலே மிதக்க உதவுவதுடன், சிறகுகளையும் நனைந்திடாமலும் பாதுகாக்கிறது.
#9
நீந்துவதற்கு ஏற்றதாக இவற்றின் கால்கள் வலைப் பின்னல் போல அமைந்திருக்கும்.
#10
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயருகையில் வானில் V வடிவத்தில் பறக்கும். முதலாவதாகப் பறக்கும் வாத்து களைப்புறுகையில் மற்றொரு வாத்து அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும்.
ஏரிகள், நதிகள், குளங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் காணப்படும். நீரில் இருப்பதைக் காட்டிலும் கரையோரங்களில் நிலப்பகுதிகளிலே அதிக நேரம் வாழும்.
#11
நீரிலுள்ள சிறு உயிரிகள், தாவரங்கள், தானியங்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றை உண்ணும்.
#12
வாத்துகள் அவற்றின் முட்டைகளுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுவது பரவலாக வழக்கத்தில் உள்ளது.
இவற்றின் ஆயுட்காலம் காடுகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலும். பராமரிப்புடன் வளர்க்கப்படுபவை 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழும்.
**
வெள்ளை வாத்துகள் (படங்கள் 1,6,7,9) வீட்டுக்கு அருகாமையிலுள்ள கண்ணமங்களா ஏரிப் பகுதியில் எடுத்தவை. மற்றவை மைசூரில் தங்கியிருந்த (Wind Flower Resort) விடுதியில் சுற்றி வந்த வளர்ப்பு வாத்துகள்.
பதிவுக்குத் தொடர்புடையதாக 2016-17_ல் மல்லேஸ்வரம் சாங்கி ஏரி மற்றும் இலங்கை விகரமகாதேவி பூங்காவில் எடுத்த சாம்பல் வாத்துகளும் கருப்பு வாத்துகளும்:
#A
**
பறவை பார்ப்போம் - பாகம்: 120
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக