#1 ராஜ கம்பீரம்
கானகத்துக்குள் சென்று சந்தித்திராத, சித்திரங்களிலும் படங்களிலும் மட்டுமே அறிமுகமாகி இருந்த, உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த பல விலங்குகளை மக்கள் நேருக்கு நேர் காணும் தனித்துவமான வாய்ப்பை வழங்குபவை உயிரியல் பூங்காக்கள்.
#2
அவற்றுள் 157 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, 168_க்கும் மேற்பட்ட இனங்களைப் பராமரித்து வருகிற மைசூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப் பழமையான, ஏன் உலகிலேயே மிகப் பழமையான உயிரியல் பூங்காக்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
#3 வனத்தின் கழுத்து
மைசூருக்குப் பலமுறைகள் சென்றிருக்கிறேன். 2012_ஆம் ஆண்டு இந்த மிருகக் காட்சி சாலையில் எடுத்தப் படங்களைப் பல பதிவுகளாக “தெரிஞ்சுக்கலாம் வாங்க” பகுப்பின் கீழ் ஒவ்வொரு விலங்கை பற்றியும் விரிவான தகவல்களுடன் முத்துச்சரத்தில் கோத்திருக்கிறேன். இந்தப் பதிவில் கடந்த நவம்பரில் சென்ற போது எடுத்த படங்கள் அணிவகுக்கின்றன.
#3 உள்ளத்தில் சாது, உருவத்தில் பூதம்
சுதந்திரமாக வனத்தில் உலவ வேண்டிய விலங்குகளைப் பிடித்து வந்து காட்சிப் படுத்துவது சரியற்றது எனும் தார்மீக உண்மை ஒருபக்கம் இருப்பினும் அதை மனதில் இருத்தி தற்கால உயிரியல் பூங்காக்கள் விலங்குகளின் வாழ்விடத்தை ஒத்த பரந்த அடைப்புகளை உருவாக்கி அவற்றை உலவ விடுவதிலும், அக்கறையுடன் கவனிப்பதிலும் அதீத கவனம் செலுத்துகின்றன.
#4 ராஜ நடை
#5 கொம்பன்
#6 நேர்த்தியான புள்ளிகள்
#7 சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது..
#8 பொடி நடை
பருவநிலை மாற்றங்களாலும், மனிதர்களால் காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டு வருவதாலும் பல விலங்கினங்கள் முற்றிலுமாக அழிந்து விடுமோ எனும் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் அவற்றுக்குப் புகலிடமாக, அந்த இனங்களைப் பாதுகாப்பவையாக உள்ளன இப்பூங்காக்கள். குறிப்பாகப் புலிகள், வெள்ளைப் புலிகள்..
#9 ஓய்வில் பெரிய பூனை
#10 தந்த வண்ண வேட்டையன்
இந்தியாவிலும் பல வனங்களில் சஃபாரி வசதி உள்ளன என்றாலும் சாமான்ய மனிதர்களுக்கு வனவிலங்குகளைக் கண்டு வியந்து போற்றும் வாய்ப்பு இத்தகைய பூங்காக்களினால் மட்டுமே கிடைக்கின்றது. வியக்க வைக்கும் விலங்கு வகைகளைக் காண்கின்ற வருங்கால சந்ததியருக்கு இயற்கையை மதித்து வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்கிற உந்துதலையும் விழிப்புணர்வையும் கூட இவை தரக் கூடும்.
#11 இயற்கையின் நீண்ட நெட்டிமுறித்தல்
[உயிரியல் பூங்கா பதிவுகள் மேலும் சில பாகங்கள் வரும்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக