திங்கள், 3 நவம்பர், 2008

'ஊக்கமது கைவிடேல்' [அய்யனுக்கு அர்ப்பணம்-25ஆம் பதிவு]

எனது இருபத்தைந்தாவது பதிவு. இலக்கு எதுவுமின்றி தொடங்கிய பயணம் இனிதாகவே போகிறது. சரியாக இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த அரை ஆண்டில் அவ்வப்போது அறிவுரை ஆலோசனைகள் வழங்கி வழிநடத்திய மூத்த பதிவர்களுக்கும், பாராட்டிப் பக்க பலமாக இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும், தொடர்ந்து உற்சாகம் ஊக்கம் அளித்து வரும் சகோதர சகோதரிகள் யாவருக்கும் என் நன்றிகள்.




புதுகைத் தென்றல் பேரன்ட்ஸ் கிளப் வலைப்பூவில் 'தந்தையின் கடமை' என்று, குறளைக் கொண்டு கதை வடிக்கும் தொடரைத் தொடங்கி வைத்தார்.

அப்பதிவின் முடிவில் அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த வரிகள்:
"இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்."


அப்படி தான் சொன்ன கருத்துக்களாலே மகானாகி விட்ட மாமனிதர் திருவள்ளுவர்.


தென்றல் தொடங்கி வைத்த குறள் ஜோதி ஓட்டத்தில் இயலும் போது இணைவதாக நான் கொடுத்த வாக்கு, அய்யனுக்கு அர்ப்பணமாக இதோ..




ஊக்கமது கைவிடேல்

நரேனுக்கு அந்த மின்மடலை வாசித்ததும் வியர்த்து விறுவிறுத்து விட்டது. இதை எப்படித் தன் மேலதிகாரியிடம் சொல்லப் போகிறோம் என்கிற பதட்டத்தில உடல் கூட லேசாக நடுங்கியது.

அவன் அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகிறது. ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவத்தில் அதைத் தொடங்கிய ரவிசங்கர் இன்று பலரும் போற்றும் அளவுக்கு அதை பெரிய இடத்துக்கு கொண்டு வந்துள்ளதைக் கொண்டாடாத பத்திரிகைகள் இல்லையெனலாம்.

அப்படிப் பட்ட நிறுவனத்தில் அதுவும் எம்டியிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் பதவியில் தான் இருப்பதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதமே. பொறுப்புக்களைச் சரிவரச் செய்ய வேண்டுமென்கிற அக்கறையோடு ஒரு பதட்டமும் எப்போதும் தன்னோடு ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை நரேனுக்கு.

அவனது மேற்பார்வையில் இருந்த ப்ராஜக்ட் முடிவடையத் தாமதமானதில் அதிருப்தி கொண்ட அந்த வெளிநாட்டுக் கஸ்டமர் அடுத்து கொடுக்கவிருந்த சுமார் ஒரு கோடிக்கான ப்ராஜக்ட் ஆர்டரை ரத்து செய்வதாக மெயிலின் வாசகங்கள் கூறின. ஒருவாறாக சுதாகரித்துக் கொண்டு அடுத்த அறையிலிருந்த ரவிசங்கருக்கு அதை ஃபார்வர்ட் செய்தான். பின் வியர்வையை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.

"வாங்க நரேன் வாங்க. இப்பதான் உங்க மெயிலைப் பார்த்தேன்."

கூலாகப் பேசும் ரவிசங்கரை பிரமிப்புடன் பார்த்தான்.

"என்ன பாக்குறீங்க. எப்படி இந்த மாதிரி டென்ஷனில்லாம இருக்கிறேன்னா" லேசாகச் சிரித்த ரவிசங்கர், "முதல்ல உட்காருங்க" என்றார்.

"ஆடிப் போயிட்டா மாதிரி தெரியுது. தண்ணியைக் குடிங்க முதல்ல"

நொந்து வந்த தன்னை ரிலாக்ஸ் செய்ய உதவும் மேலதிகாரி இன்னும் இன்னும் உயர்வாகத் தெரிந்தார்.

"பாருங்க நரேன். இதெல்லாம் நாம சமாளிக்க வேண்டிய சவால்கள். ஒவ்வொரு முனையிலிருந்தும் கத்தி போல பிரச்சனைகள் பாய்ந்து வந்த படிதான் இருக்கும் கேடயத்தை தயாராப் பிடிச்சிருந்தும் கூட. சரி, இந்த ப்ராஜக்ட் முடிய இன்னும் எத்தனை நாள் ஆகும்? தாமதத்துக்கான காரணங்களை சரியா அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி எடுத்துச் சொன்னீர்களா இல்லையா?"

"சொன்னேன் ரவி." முதலாளியானாலும் அதிகாரியானாலும் யாவரும் யாவரையும் பெயர் சொல்லி அழைப்பதே அங்கு வழக்கம். அந்தக் அலுவலகத்தில் நரேனைக் கவர்ந்த பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரியான காரணங்களை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதை நரேன் சொல்லச் சொல்ல முகத்தில் எந்த மாறுதலுமின்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரவிசங்கர்.

"இது போன்ற நல்ல கஸ்டமர்களை நாம் இழக்க நேரிட்டால் அது பெரிய நட்டம்தான். முடிந்த வரை ப்ராஜக்டைத் துரிதப் படுத்தி தற்போது வாய்தா வாங்கியிருக்கும் தேதிக்கு முன்னதாகவாவது அனுப்பப் பாருங்கள். அடுத்த ஆர்டரைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டாம். அவர்களது கோபம் தணியட்டும்.அப்புறமாக முயற்சிக்கலாம். ஏன் நீங்களே நேரில் கூட போய் பேசிக்கலாம்.""

"அதெப்படி ரவி,அதற்குள் நம்ம போட்டிக் கம்பெனிகளில் யாராவது முந்திக் கொண்டால்.. ஒரு கோடி... பரவாயில்லையா?"

"பொருள் வரும் போகும், பரவாயில்லை.நாம் ஊக்கத்துடன் உழைத்து மறுபடி ஈட்டிட இயலும். ஆனால் பெயர்.." எனச் சொல்லும் போதே தொலைபேசி ஒலிக்க அதை ஒரு கையால் எடுத்து "ஹலோ" என்றவர் அவரது மேசையில் அவரைப் பார்க்க இருந்த புகைப்படச் சட்டம் ஒன்றை அவனைப் பார்க்கத் திருப்பி வைத்தார். ஆள்காட்டி விரலால் தட்டி கண்களாலேயே பேசினார் அதைப் பார்க்குமாறு. அதில் கைப்பட எழுதப் பட்ட சில குறள்கள். அவர் விரல் சுட்டிய இடத்தில்:
"உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடமை
நில்லாது நீங்கி விடும்."


தொலைபேசி உரையாடல் நீண்டு செல்ல அதைத் தவிர்க்க இயலாத ரவிசங்கர் 'நீங்கள் சென்று உங்கள் வேலையைத் தொடரலாம்' என்பது போலத் தலையசைத்து விடை கொடுக்க நரேன் மறக்காமல் குறள் இருந்த சட்டத்தை அவரை நோக்கித் திருப்பி வைத்தான். திரும்பி நடக்கையில் கூடவே அவனுக்கு நினைவுக்கு வந்தது:
"வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு."

*** *** *** *** ***




புதுகைத் தென்றலைத் தொடர்ந்து கடந்த மாதம் குறள் கதை படைத்தவர்கள்: ஜீவ்ஸ், முத்துலெட்சுமி கயல்விழி,செல்விஷங்கர், சதங்கா,சுடர்மணி,தமிழ் பிரியன் மற்றும் சிலர். [இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா.]

தொடர் பதிவுக்கென அன்றி சில மாதங்களுக்கு முன்னர் கவிநயா எழுதிய 'இடுக்கண் வருங்கால்...', 'இன்னா செய்தாரை...' ஆகிய கதைகளையும் இங்கே இணைத்துக் கொள்கிறேன்.

திருக்குறள்..என்றும் அணையா ஜோதி. பிரகாசமாக ஒளிர்ந்து அதைப் பின்பற்றுவோர் வாழ்வையும் அதன் மூலம் அவரைச் சுற்றி இருப்போர் உலகையும் ஜோதி மயமாக்குகிறது. இந்த ஜோதியில் ஐக்கியமாக விரும்புவோர் இதோ இங்கிருந்து கையிலேந்தித் தொடரலாம்.



88 கருத்துகள்:

  1. /பொருள் வரும் போகும், பரவாயில்லை.நாம் ஊக்கத்துடன் உழைத்து மறுபடி ஈட்டிட இயலும்./

    அருமை

    /அய்யனுக்கு அர்ப்பணம்
    -25ஆம் பதிவு/

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. 25 ஆம் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அதுவும் தங்களின் 25ஆவதுபதிவு திருக்குறள் கதையாக மலர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா.

    நானும் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ///அய்யனுக்கு அர்ப்பணம்
    -25ஆம் பதிவு/

    வாழ்த்துகள்//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்

    இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன் :))

    பதிலளிநீக்கு
  5. அக்கா! 25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. ///புதுகைத் தென்றல் said...

    அதுவும் தங்களின் 25ஆவதுபதிவு திருக்குறள் கதையாக மலர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது.
    இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா.

    நானும் வழிமொழிகிறேன்.///

    இதை எல்லாம் கன்னாபின்னாவென்று வழி மொழிகிறென்.. நானும் ஒரு பொம்மைக் கதை போட்டேன். ஆனால் அது குறள் சிறுகதையில் வராது போல இருக்கு.. :)

    பதிலளிநீக்கு
  7. சிறுகதை சிம்பிளா இருந்தாலும் நல்ல அறிவுரைகளை சொல்கின்றது. வாழ்த்துக்கள் அக்கா!

    பதிலளிநீக்கு
  8. அலுவலகத்தில் இடையறாத பணிகளுக்கு இடையில் (நம்புங்க ஃப்ளீஸ்!)

    25வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மட்டும் இப்ப சொல்லிக்கிறேன் பிறகு வந்து விரிவாக வாசிக்கிறேன் அக்கா நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //எனது இருபத்தைந்தாவது பதிவு. எட்டாயிரம் ப்ளஸ் ஹிட்ஸ் தாண்டிப் பயணிக்கிறேன். இலக்கு எதுவுமின்றி தொடங்கிய பயணம் இனிதாகவே போகிறது. சரியாக இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.//

    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  10. ஆஹா....ஆஹா......
    கலக்கல் 'கால் சதம்'.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ஊக்க 'மது' கை விடேல்!

    பதிலளிநீக்கு
  11. இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்!,

    பதிலளிநீக்கு
  12. 25-க்கு வாழ்த்துக்கள்!
    நல்ல விஷயங்களை நல்லாவே சொல்லியிருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  13. அக்கா, ரொம்ப நல்லா இருந்தது. அப்புறம் ஒரு கதையிலேயே இரண்டு குறள்கள் அருமை....

    பதிலளிநீக்கு
  14. 25
    50
    100
    200
    500
    1000.........

    என்னோட வாழ்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்!!!!

    பதிலளிநீக்கு
  15. திகழ்மிளிர் said...
    //பொருள் வரும் போகும், பரவாயில்லை.நாம் ஊக்கத்துடன் உழைத்து மறுபடி ஈட்டிட இயலும்./

    அருமை

    /அய்யனுக்கு அர்ப்பணம்
    -25ஆம் பதிவு/

    வாழ்த்துகள்//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  16. புதுகைத் தென்றல் said...
    //25 ஆம் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி தென்றல்.

    //அதுவும் தங்களின் 25ஆவதுபதிவு திருக்குறள் கதையாக மலர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது.//

    எனக்கும் மிகுந்த மன நிறைவைத் தருகிறது. அதற்குக் காரணமாக இருந்த உங்களுக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  17. புதுகைத் தென்றல் said...
    //இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா./

    நானும் வழிமொழிகிறேன்.//

    நன்றி தென்றல். நம்புவோம் 'சிலர் பலர் ஆவர்' என்று.

    பதிலளிநீக்கு
  18. சதங்கா (Sathanga) said...
    ///அய்யனுக்கு அர்ப்பணம்
    -25ஆம் பதிவு/

    வாழ்த்துகள்//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்//

    நன்றி சதங்கா:)!

    //இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன் :))//

    ஆகட்டும். கதையைப் பற்றிய தங்கள் மேலான கருத்துக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் பிரியன் said...
    //அக்கா! 25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//

    நன்றி நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  20. 25 பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்.. எட்டாயிரம் ஹிட்களுக்கு பாராட்டுக்களும். கதை அருமை, ஒரே கதையில் இரண்டு குறள்களையும் விளக்கியது நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  21. தமிழ் பிரியன் said...// நானும் ஒரு பொம்மைக் கதை போட்டேன்.//

    பொம்மைக் கதை அல்ல, பொம்மைப் படம் (கார்ட்டூன்) காட்டி அருமையா மூன்று குறள் கொடுத்திருந்தீர்களே.

    //ஆனால் அது குறள் சிறுகதையில் வராது போல இருக்கு.. :)//

    கண்டிப்பாக வர வேண்டியது. தனித் தலைப்புடன் இல்லாததால் விட்டுப் போயிற்று, மன்னிக்கவும். உடனேயே சேர்த்து விட்டேன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  22. தமிழ் பிரியன் said...
    //சிறுகதை சிம்பிளா இருந்தாலும் நல்ல அறிவுரைகளை சொல்கின்றது.//

    குறளை வாழ்விலே பின்பற்றினால் இக்கட்டான சிக்கல்கள் கூட சிம்பிளாக சால்வ் ஆகிவிடுகின்றன, இல்லையா தமிழ் பிரியன்.

    //வாழ்த்துக்கள் அக்கா!//

    கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஆயில்யன் said...
    //அலுவலகத்தில் இடையறாத பணிகளுக்கு இடையில்
    (நம்புங்க ஃப்ளீஸ்!)//

    செய்யும் தொழிலே தெய்வம். நல்ல பிள்ளை நீங்கள்.

    //25வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மட்டும் இப்ப சொல்லிக்கிறேன்//

    நன்றி ஆயில்யன்.

    //பிறகு வந்து விரிவாக வாசிக்கிறேன்//

    வாசித்து.. கதையைப் பற்றிய உங்கள் மேலான கருத்தைக் கூறுங்கள். நன்றி:)!

    பதிலளிநீக்கு
  24. கோவி.கண்ணன் said...

    //வாழ்த்துகள் !//

    நல்வரவு கோவி.கண்ணன். எனது வலைப்பூவுக்கு இது உங்கள் முதல் வரவு. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. துளசி கோபால் said...
    //ஆஹா....ஆஹா......
    கலக்கல் 'கால் சதம்'.//

    கலக்கலான ஆசிர்வாதம்.

    //இனிய வாழ்த்து(க்)கள்.//

    வணங்கி ஏற்கிறேன்.

    //ஊக்க 'மது' கை விடேல்!//

    சொல்லி விட்டீர்களல்லவா. விடவே மாட்டேன்:)! மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  26. ஷைலஜா said...
    //இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்!//

    நன்றி ஷைலஜா.இந்த வார தமிழ் மண நட்சத்திரம் நீங்கள். ஜொலி ஜொலித்திட மறுபடி இங்கும் வாழ்த்திக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. சந்தனமுல்லை said...
    //25-க்கு வாழ்த்துக்கள்!
    நல்ல விஷயங்களை நல்லாவே சொல்லியிருக்கிறீர்கள்!!//

    முன்னோர்கள் சொல்லிச் சென்றதுதான். நாம் இப்படி அடிக்கடி எழுதி அதை ஞாபகத்தில் இருத்திக் கொள்வோம்.

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சந்தனமுல்லை.

    பதிலளிநீக்கு
  28. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
    //அக்கா, ரொம்ப நல்லா இருந்தது.//

    நன்றி சுடர்மணி.

    //அப்புறம் ஒரு கதையிலேயே இரண்டு குறள்கள் அருமை....//

    நன்றி. தமிழ் பிரியன் ஒரு கதையில் மூன்று குறள்கள் என ஹாட்ரிக் அடித்திருந்தார்:)!

    பதிலளிநீக்கு
  29. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
    //25
    50
    100
    200
    500
    1000.........

    என்னோட வாழ்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்!!!!//

    இந்த அன்புக்கு ஆயிரம் நன்றிகள்:))!

    பதிலளிநீக்கு
  30. SurveySan said...
    //வாழ்த்துக்கள்! :)//

    மிக்க நன்றி சர்வேசன்:)!

    பதிலளிநீக்கு
  31. வெண்பூ said...
    //25 பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்.. எட்டாயிரம் ஹிட்களுக்கு பாராட்டுக்களும்.//

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வெண்பூ.

    //கதை அருமை, ஒரே கதையில் இரண்டு குறள்களையும் விளக்கியது நன்றாக இருந்தது.//

    கதை என்றாலே அதைப் பற்றிய தங்கள் கருத்து என்னவாகயிருக்கும் என்கிற ஆவல் இப்போது எல்லோருக்கும் தவிர்க்க முடியாததாகி விட்டது. நன்றி வெண்பூ.

    பதிலளிநீக்கு
  32. //எனது இருபத்தைந்தாவது பதிவு. எட்டாயிரம் ப்ளஸ் ஹிட்ஸ் தாண்டிப் பயணிக்கிறேன்//

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

    குறைந்த பதிவுகளே கொடுத்து இருந்தாலும் நிறைவான பதிவுகள் உங்களுடையது. எட்டாயிரம் ப்ளஸ் என்பது சாதாரண எண்ணிக்கை இல்லை, காரணம் நீங்கள் எழுதுவது கதை மற்றும் கட்டுரைகள் பெரும்பாலும். பரபரப்பு தலைப்பு வைத்து, வேண்டும் என்றே பிரச்சனை தலைப்புகளை வைத்து ஹிட் எண்ணிக்கையை உயர்த்தும் பலரிடையே நியாயமான நேர்மையான எண்ணிக்கை உங்களுடையது,

    //தொலைபேசி உரையாடல் நீண்டு செல்ல அதைத் தவிர்க்க இயலாத ரவிசங்கர் 'நீங்கள் சென்று உங்கள் வேலையைத் தொடரலாம்' என்பது போலத் தலையசைத்து விடை கொடுக்க//

    இயல்பான நடையாக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  33. கிரி said...
    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)//

    மிக்க நன்றி கிரி.

    //குறைந்த பதிவுகளே கொடுத்து இருந்தாலும் நிறைவான பதிவுகள் உங்களுடையது. எட்டாயிரம் ப்ளஸ் என்பது சாதாரண எண்ணிக்கை இல்லை//

    இந்த எண்ணிக்கை நான் எதிர்பாராத ஒன்று. கடந்து வந்த பாதையை நின்று ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்கையில் மனதுக்கு நிறைவாக இருப்பதென்னவோ உண்மை.

    //இயல்பான நடையாக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.//

    தொடர் ஊக்கத்துக்கும் எழுத்து நடையை எடுத்துக் காட்டி ரசித்தமைக்கும் நன்றி:)!.

    பதிலளிநீக்கு
  34. ஜூப்பர்.

    //இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா.//


    ஊக்கமது கைவிடேல்!!

    :))

    பதிலளிநீக்கு
  35. Jeeves said...
    //ஜூப்பர்.//

    நன்றி ஜீவ்ஸ்.

    ///இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா.//

    ஊக்கமது கைவிடேல்!!/

    அதானே, கைவிடாதிருப்போம்:)!

    பதிலளிநீக்கு
  36. ஒரு மேனஜருக்கு இருக்க வேண்டிய எல்லா மேனரிசமும், நீங்க தெளிவா சொல்லியிருக்கீங்க. இதப்போல நானும் என்னோட மேனஜர பாத்து உணர்ந்திருக்கேன்.

    25வது பதிப்புக்கு வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்க. படிக்க ஆவலா இருக்கேன்

    பதிலளிநீக்கு
  37. அய்யனுக்கு அர்ப்பணம் செய்த 25-வது பதிவும், அதன் கதையும் அருமை ராமலக்ஷ்மி. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    அன்புடன் நினைவு கூர்ந்து என் "இன்னா செய்தாரை" கதையைச் சேர்த்திருப்பது குறித்து மனம் நெகிழ்ந்தேன். மிக்க நன்றி. அத்துடன் அதற்கு முன்பாக இடுக்கண் வருங்கால்... என்று ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன் என்று இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. Truth said...
    //ஒரு மேனஜருக்கு இருக்க வேண்டிய எல்லா மேனரிசமும், நீங்க தெளிவா சொல்லியிருக்கீங்க. இதப்போல நானும் என்னோட மேனஜர பாத்து உணர்ந்திருக்கேன்.//

    பாராட்டுக்கு நன்றி ட்ரூத். நம்மைச் சுற்றி நடப்பவற்றையும் நாம் கேள்வி படுபவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து உள் வாங்கி வந்தால் நுட்பமாக விவரித்திட இயலும். இது சதங்காவிடம் நான் கற்றுக் கொண்டது. நேரம் வாய்க்கையில் அவரது கதைகளைப் படித்துப் பாருங்களேன்.

    //25வது பதிப்புக்கு வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்க. படிக்க ஆவலா இருக்கேன்//

    செய்கிறேன்:). வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  39. கவிநயா said...
    //அய்யனுக்கு அர்ப்பணம் செய்த 25-வது பதிவும், அதன் கதையும் அருமை ராமலக்ஷ்மி. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! //

    நன்றி:).

    // இடுக்கண் வருங்கால்... என்று ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன்//

    சுட்டிக்கு மிக்க நன்றி கவிநயா. அதையும் இணைத்து விட்டேன். இரண்டுமே அருமையான கதைகள். குறளைக் கொண்டு மேலும் பல கதைகள் புனையவும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  40. இருபத்தைந்தாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  41. இருபத்தைந்தாவது பதிவு என்று நம்ப முடியவில்லை. நிறைய எழுத்துக்களைப் படித்த இனிமை மனதில் வருகிறது.
    ராமலக்ஷ்மி குறள் கதை அருமையாக அமைந்துவிட்டது.
    சுலபமாக கருத்து புரியும் வகையில் நிங்கள் கதைக்கரு அமைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

    நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. Ms. Ramalakshmi!

    Dedicated to ayyan?

    ayyan=thiruvaLLuvar!

    That is a beautiful idea! :)

    Yes, there are so many factors which cant be controlled by us. However we should not panic when something terrible happens which can hardly be controlled by us. We have our own limitations. We can only do our best and we should be able to live with a failures as well.

    There is a saying,

    "When one door closes, another opens up!"

    When something fails, it is not end of the world! So, Naren should forget about the closed door and look for the newly opened door and make use of that to achieve something better.

    I apologize for typing in English!I promise I will express myself in thamizh soon.

    By the way what is right word for Ukkam in English?

    Sincere effort?

    பதிலளிநீக்கு
  43. தாமதத்திற்கு முதற்கண் மன்னிக்கவும். வேலைப் பளு :((

    கதையை வாசித்துக் கொண்டே வரும்போது

    //அவரது மேசையில் அவரைப் பார்க்க இருந்த புகைப்படச் சட்டம் ஒன்றை அவனைப் பார்க்கத் திருப்பி வைத்தார். ஆள்காட்டி விரலால் தட்டி கண்களாலேயே பேசினார் அதைப் பார்க்குமாறு. அதில் கைப்பட எழுதப் பட்ட சில குறள்கள். அவர் விரல் சுட்டிய இடத்தில்://

    ஒரு டச் ஏற்படுத்திய வரிகள்.

    நீங்க உசத்தி சொல்லியிருக்கும் அளவிற்கு நான் இன்னும் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. Learning Continues ... :)

    பதிலளிநீக்கு
  44. 25வது பதிவிற்கு வாழ்த்துக்கள் லக்ஷ்மியக்கா.. :)

    உங்கள் கைவண்ணத்தில் எடுத்த ஒரு புகைபடமும் போட்டிருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்.

    விரைவில் 100 அடிக்க வாழ்த்துக்கள்..

    //ஊக்க ”மது” கைவிடேல்//
    விட்டா டம்ப்ளர் உடைஞ்சிடுமே..ஹிஹி.. ச்சாரி :))

    பதிலளிநீக்கு
  45. என்ன இப்பத்தான் 25 வது பதிவா..நிறைய உங்க பதிவுகள் படிச்சாப்ல இல்ல இருக்கு எனக்கு..
    வாழ்த்துக்கள்..
    கதை நன்றாக இருக்கிறது.. என்ன மிடுக்கான ஆபீசர்.

    பதிலளிநீக்கு
  46. cheena (சீனா) said...
    //இருபத்தைந்தாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

    தங்கள் நல்வாழ்த்துக்களை நல்லாசிகளாக வணங்கி ஏற்கிறேன். மிக்க நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு
  47. வல்லிசிம்ஹன் said...
    //இருபத்தைந்தாவது பதிவு என்று நம்ப முடியவில்லை. நிறைய எழுத்துக்களைப் படித்த இனிமை மனதில் வருகிறது.//

    எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்.

    //ராமலக்ஷ்மி குறள் கதை அருமையாக அமைந்துவிட்டது.
    சுலபமாக கருத்து புரியும் வகையில் நிங்கள் கதைக்கரு அமைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

    நல் வாழ்த்துகள். //

    பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  48. அகில் said...
    //Dedicated to ayyan?

    ayyan=thiruvaLLuvar!

    That is a beautiful idea! :)//

    நன்றி. குறள் கதையே 25ஆவது பதிவாக இருக்க வேண்டுமென ஒரு மாதம் விரும்பிக் காத்திருந்து, வலைப்பூவுக்கு 6 மாதம் நிறைவுற்ற நாளில் வலையேற்றினேன். மனதுக்கும் நிறைவாயிற்று.

    //Yes, there are so many factors which cant be controlled by us. However we should not panic when something terrible happens which can hardly be controlled by us. We have our own limitations. We can only do our best and we should be able to live with a failures as well.

    There is a saying,

    "When one door closes, another opens up!"

    When something fails, it is not end of the world! So, Naren should forget about the closed door and look for the newly opened door and make use of that to achieve something better.//

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    //I apologize for typing in English!I promise I will express myself in thamizh soon.//

    Waiting:)!

    //By the way what is right word for Ukkam in English?

    Sincere effort? //

    Enthusiasm?

    முதல் வருகைக்கும் விரிவான விமர்சனத்துக்கும் மிக்க நன்றி அகில்.

    பதிலளிநீக்கு
  49. சதங்கா (Sathanga) said...

    //கதையை வாசித்துக் கொண்டே வரும்போது

    //அவரது மேசையில் அவரைப் பார்க்க இருந்த புகைப்படச் சட்டம் ஒன்றை அவனைப் பார்க்கத் திருப்பி வைத்தார். ஆள்காட்டி விரலால் தட்டி கண்களாலேயே பேசினார் அதைப் பார்க்குமாறு. அதில் கைப்பட எழுதப் பட்ட சில குறள்கள். அவர் விரல் சுட்டிய இடத்தில்://

    ஒரு டச் ஏற்படுத்திய வரிகள்.//

    ரசித்ததை எடுத்துக் காட்டி பாராட்டியிருப்பதற்கு நன்றி சதங்கா.

    //நீங்க உசத்தி சொல்லியிருக்கும் அளவிற்கு நான் இன்னும் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. Learning Continues ... :) //

    For Everybody...:)

    பதிலளிநீக்கு
  50. அருமையான கதை முடிவு.

    /அய்யனுக்கு அர்ப்பணம்
    -25ஆம் பதிவு/
    நற்செயல்

    வாழ்த்துக்கள் 25ஆவது பதிவிற்கு.

    குறள் சொல்லியே கதை முடித்தவிதம் மிக நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  51. பொடியன்-|-SanJai said...
    //25வது பதிவிற்கு வாழ்த்துக்கள் லக்ஷ்மியக்கா.. :)//

    மிக்க நன்றி சஞ்சய்.

    ////ஊக்க ”மது” கைவிடேல்//
    விட்டா டம்ப்ளர் உடைஞ்சிடுமே..ஹிஹி.. ச்சாரி :))//

    சரிதான் :))! எப்பவும் எதுவும் எனக்கு கொஞ்சம் லேட்டாதான் புரியும். துளசி மேடம் சொன்னப்போ புரியாதது இப்போ புரிஞ்சிடுச்சு:))!


    //உங்கள் கைவண்ணத்தில் எடுத்த ஒரு புகைபடமும் போட்டிருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்.//

    உங்கள் நல்ல யோசனையை ஏற்று உடனே செயல் படுத்தி விட்டேன். மிக்க நன்றி. [என் கை வண்ணத்தில் எடுத்ததே].

    கவனித்தீர்களா பதிவில் கோடிட முன்னர் நீங்கள் எனக்களித்த யோசனையை எப்படிப் பின்பற்றுகிறேன் என, அதற்கும் நன்றி.

    //விரைவில் 100 அடிக்க வாழ்த்துக்கள்..//

    முயற்சிக்கிறேன். எல்லாம் உங்கள் போன்றோர் தரும் ஊக்கம்.

    பதிலளிநீக்கு
  52. முத்துலெட்சுமி-கயல்விழி said...
    //என்ன இப்பத்தான் 25 வது பதிவா..நிறைய உங்க பதிவுகள் படிச்சாப்ல இல்ல இருக்கு எனக்கு..//

    வல்லிம்மாவும் இதையேதான் சொன்னார்கள்:)!

    //வாழ்த்துக்கள்..//

    நன்றி முத்துலெட்சுமி.

    //கதை நன்றாக இருக்கிறது.. என்ன மிடுக்கான ஆபீசர்.//

    ஆபிசரை பலருக்கும் பிடித்துப் போய் விட்டது:)!

    பதிலளிநீக்கு
  53. அமிர்தவர்ஷினி அம்மா said...
    //அருமையான கதை முடிவு.

    /அய்யனுக்கு அர்ப்பணம்
    -25ஆம் பதிவு/
    நற்செயல்

    வாழ்த்துக்கள் 25ஆவது பதிவிற்கு.//


    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.


    //குறள் சொல்லியே கதை முடித்தவிதம் மிக நன்றாக இருந்தது.//


    அதைக் குறிப்பாகக் கவனித்து ரசித்தமைக்கும் நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

    பதிலளிநீக்கு
  54. ஆஹா.. பொருத்தமான படம்.. கலக்கல்.. இப்படித் தான் வாசகர்களுக்கு மரியாதை தரனும்.. :))

    பதிலளிநீக்கு
  55. கதைக்கும் 25க்கும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  56. பொடியன்-|-SanJai said...

    //ஆஹா.. பொருத்தமான படம்.. கலக்கல்.. //

    நன்றி:)!

    //இப்படித் தான் வாசகர்களுக்கு மரியாதை தரனும்.. :)) //

    அக்கறையுடன் வழங்கப்படும் ஆலோசனைகளை மதித்து ஏற்பதுதானே முறை:)!

    பதிலளிநீக்கு
  57. பாச மலர் said...
    //கதைக்கும் 25க்கும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  58. 25 வது பதிவுக்கும் குறள் கதைக்கும் வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  59. தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  60. தமிழன்...(கறுப்பி...) said...
    //25 வது பதிவுக்கும் குறள் கதைக்கும் வாழ்த்துக்கள்...!//

    //தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தமிழன்!

    பதிலளிநீக்கு
  61. 25-வது பதிவிற்கு வாழ்த்துக்கள். கதையை அழகாகக் கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  62. துள்சி சொன்னது:
    //ஊக்க 'மது' கை விடேல்!//
    நீங்க சொன்னது:
    //சொல்லி விட்டீர்களல்லவா. விடவே மாட்டேன்:)! மிக்க நன்றி//
    என்ன..என்ன...? ராமலகஷ்மி!!

    குறள் கதை நல்லாருந்துது. கரு, ரங்ஸ் சொன்னதா? ஒரு தலைமை எப்படியிருக்க வேண்டும் என்று நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    படிக்க..படிக்க நானும் இதில் இணைய ஆசை வருகிறது. பாப்போம்.

    பதிலளிநீக்கு
  63. வெள்ளி விழா பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  64. ஆத்தித்சூடி வரிகளோடு 25வது பதிவு அருமையாக இருந்தது!!!

    பதிலளிநீக்கு
  65. @ அமுதா

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  66. நானானி said...
    //துள்சி சொன்னது:
    //ஊக்க 'மது' கை விடேல்!//
    நீங்க சொன்னது:
    //சொல்லி விட்டீர்களல்லவா. விடவே மாட்டேன்:)! மிக்க நன்றி//
    என்ன..என்ன...? ராமலகஷ்மி!!//

    ஹிஹி. சஞ்சய்க்கு நான் சொன்ன பதிலை நீங்க பார்க்கல போலிருக்கு.

    //குறள் கதை நல்லாருந்துது. //

    நன்றி.

    //கரு, ரங்ஸ் சொன்னதா? //

    நல்லாயிருக்கே கத..! 'கரு எனதே எனதே' என தருமி மாதிரி புலம்ப விட்டு விடாதீர்கள்:))! அவருக்கு வலைப்பூ பக்கம் வரவோ கருத்து கரு சொல்லவோ எல்லாம் நேரமிருப்பதில்லை. பொதுவாக அலுவலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நானே.. உருவாக்கிய கதைதான்:)!

    //படிக்க..படிக்க நானும் இதில் இணைய ஆசை வருகிறது. பாப்போம். //

    பாப்போம் எல்லாம் இல்லை. கண்டிப்பாக எழுதுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  67. நானானி said...
    //வெள்ளி விழா பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!!!//

    உங்கள் வாழ்த்துக்களுக்காகவே காத்திருந்தேன். நான் வலையுலகம் வந்ததற்கு இன்ஸ்பிரேஷனே நீங்கள்தானே! அதற்கும் சேர்த்து நன்றி நன்றி நன்றி:))!

    பதிலளிநீக்கு
  68. இசக்கிமுத்து
    //ஆத்தித்சூடி வரிகளோடு 25வது பதிவு அருமையாக இருந்தது!!! //

    ஆமாம், அய்யனோடு இப்பதிவு அவ்வைக்கும் அர்ப்பணம்:)!

    பாராட்டுக்கு மிக்க நன்றி இசக்கி முத்து.

    பதிலளிநீக்கு
  69. ரெம்ப லேட்டா வந்துட்டேன் போல. நல்லா இருக்கு கதை. :)

    அந்த மேனேஜரை எங்க ஆபிசுக்கு அனுப்பி வைங்க பா. :p

    பதிலளிநீக்கு
  70. ambi said...
    // நல்லா இருக்கு கதை. :)//

    நன்றி அம்பி:)!

    //அந்த மேனேஜரை எங்க ஆபிசுக்கு அனுப்பி வைங்க பா. :p//

    ஆஹா, இந்த மேனஜருக்கு டிமான்ட் கூடிக்கிட்டே வருகிறதே:)!

    பதிலளிநீக்கு
  71. உங்கள் 1330வது பதிவை அய்யனுக்கு சமர்ப்பணம் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  72. சகாதேவன் said...
    //உங்கள் 1330வது பதிவை அய்யனுக்கு சமர்ப்பணம் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன்.//

    ஆ..., அத்தனை பதிவுகளா? சரி முயற்சிக்கிறேன். 'ஊக்கமது கைவிடேல்' என கதை படைத்து விட்டு மலைக்கக் கூடாதல்லவா?
    ['குறளுக்கு ஒரு கதை என எழுதி விடு' என நீங்கள் சொல்வதும் கேட்கிறது:)]

    தங்கள் நல்லாசிகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  73. இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  74. N Suresh said...
    //இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்!//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  75. வாழ்த்துக்கள் இருபத்தி ஐந்துக்கு!

    பதிலளிநீக்கு
  76. 25 ஆம் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  77. ஜீவன் said...
    //வாழ்த்துக்கள் இருபத்தி ஐந்துக்கு!//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜீவன்.

    பதிலளிநீக்கு
  78. கடையம் ஆனந்த் said...
    //25 ஆம் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    வாருங்கள் ஆனந்த். ஊருக்குச் செல்லும் முன் அட்வான்ஸாக வாழ்த்திச் சென்றவராயிற்றே நீங்கள்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் பவள விழா பதிவுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  79. me the 80th

    வாழ்த்துக்கள்..

    கலக்குங்க.

    வேறென்ன வேறென்ன வேண்டும்.

    பதிலளிநீக்கு
  80. ஊக்க 'மது' கைவிடேல் - என்றால் பிராந்தி விஸ்கி ரம் ஆகிய உற்சாக பாணங்களை கைவிடுங்கள் என்று சொல்வீர்கள் என்று உற்சாகமாக ஓடி வந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள். இது எனது மன பிராந்திதான்.

    :)

    நல்ல கதை !

    பதிலளிநீக்கு
  81. Sharepoint the Great said...
    //me the 80th//

    yes you are the 80th. முதல் வருகைக்கு நன்றி.

    //வாழ்த்துக்கள்..
    கலக்குங்க.
    வேறென்ன வேறென்ன வேண்டும். //

    வேறெதுவும் வேண்டாம்தான், இத்தனை பேர் தரும் ஊக்கமும் வாழ்த்துக்களும் என்னுடனே வரும் போது:)!

    பதிலளிநீக்கு
  82. கோவி.கண்ணன் said...
    //ஊக்க 'மது' கைவிடேல் - என்றால் பிராந்தி விஸ்கி ரம் ஆகிய உற்சாக பாணங்களை கைவிடுங்கள் என்று சொல்வீர்கள் என்று உற்சாகமாக ஓடி வந்தேன்.//

    சரிதான், 25ஆம் பதிவு எனப் பார்த்தவுடன் ஓடி வந்து வாழ்த்திய நீங்கள், கதையின் தலைப்பை இப்போதுதான் 'உள் வாங்கி' மறுபடி ஓடி வந்திருக்கிறீர்கள்:)))!

    //ஏமாற்றிவிட்டீர்கள்.//

    போன மாதம்தான் 'புகையை விடுங்கள்' எனப் பதிவிட்டேன். அடுத்து மதுவுக்கும் போட்டிடலாமா:)?

    //நல்ல கதை ! //

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  83. //"உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடமை
    நில்லாது நீங்கி விடும்."//

    உண்மை. இன்னும் ஏதேதோ ஆழமாக புரிகிறது. நல்ல நோக்கம்.

    பதிலளிநீக்கு
  84. Vidhya said...
    ////"உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடமை
    நில்லாது நீங்கி விடும்."//

    உண்மை. இன்னும் ஏதேதோ ஆழமாக புரிகிறது.////

    ஆமாம் வித்யா. எல்லாக் குறள்களுக்குமே ஆழமான அர்த்தங்கள் ஒன்றல்ல பலவுண்டு.

    //நல்ல நோக்கம்.//

    தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  85. ////இதெல்லாம் நாம சமாளிக்க வேண்டிய சவால்கள். ஒவ்வொரு முனையிலிருந்தும் கத்தி போல பிரச்சனைகள் பாய்ந்து வந்த படிதான் இருக்கும் ///

    அருமையான கதை..


    ///எனது இருபத்தைந்தாவது பதிவு. எட்டாயிரம் ப்ளஸ் ஹிட்ஸ் தாண்டிப் பயணிக்கிறேன்.///

    வாழ்த்துக்கள் 25ஆவது பதிவிற்கு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin