ஞாயிறு, 7 ஜூலை, 2013

சிங்கம் 2 - ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாம்ல..

சிங்கத்தின் ஒரு கர்ஜனை, ஒரு உறுமல் எப்படி சுற்றியிருக்கிற அத்தனை பேரையும் கதிகலங்க வைத்து விடுகிறது என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. காட்டுல உலாத்தினாலும் நாட்டுல வசிச்சாலும் சிங்கம் சிங்கம்தான்.


#1) சிங்கம் இரண்டு
*தமிழில் ஆண்சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண்சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

மைசூர் மிருகக் காட்சி சாலை ரொம்பவே மாறி விட்டது. பத்து வருடங்களுக்கு முன் இங்கே சிங்கங்கள் சின்னக் கூண்டிலே பரிதாபமாக காட்சி அளித்தது நினைவுக்கு வந்து போனது. இப்போது ஒவ்வொரு வகை மிருகங்களுக்கும் வனச்சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக தாராளமான பரப்பளவில் தனித்தனியாக இடம் ஒதுக்கிப் பராமரித்து வரும் விதம் பாராட்டுக்குரியதாக உள்ளது. சிங்கங்களுக்கு அகழி அமைத்து அழகாக உலவ விட்டிருக்கிறார்கள்.

#2 சிங்க நடை (போட்டு சிகரத்தில் ஏறு..)

*பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

 #3 ‘ஏனிந்த மெளனம்?’
 *சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது.


#4 ‘எங்கே கிளம்பிட்டே..’
 *1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள். 

[இப்போது அதை விடக் குறைவாகி இருக்கலாம்.]

#5 ‘அட, பதிலே சொல்லாம நடையக் கட்டினா என்ன அர்த்தம்..’
 * உடற்கூற்றின் படி இரு பாலினங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும் ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய மான் போன்ற உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. வலிமை இழந்த சிங்கம் மிகவும் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்களில் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது. 

 [அதே நேரம் இது போன்ற மிருகக் காட்சி சாலைகளில் வைத்துப் பராமரிக்கப்படுகையில் ஆண்சிங்கங்கள் 20 ஆண்டுகள் வரையிலும் கூட வாழுகின்றன.]

#6 ‘இரு, நானும் வாரேன்..’
* பொதுவாக சிங்கத்தை காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர், எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது, அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தை கொன்றுவிட்டது, இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது.  தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்பட்டாலும் நிஜம் வேறாக இருக்கிறது. ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஒரு இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்படுகிற போது தனித்து விடப் படுகிறது. கிழப் பருவத்தை எட்டி, வேட்டையாடும் திறனும் குறைந்து போன நிலையில் வேறு விலங்குகள் வேட்டையாடிப் தின்றது போக மீதமான உணவை உட்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகிறது ஆண் சிங்கம். 

[இதனால்தான் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்கிறார்களோ?]

 #7 ‘பாவம். வேட்டையாடிய களைப்பு..’
* ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும். (பெண்சிங்கங்களே அதிகம் வேட்டையாடி குடும்பத்துக்கு உணவைக் கொண்டு வருகின்றன). சிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஒரு அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.  

 காலை நேரங்களைப் பெரும்பாலும் சிங்கங்கள் தூங்கியே கழிக்கின்றன.
                          

படக்கதை எப்படி:)?

இப்போது ஆரம்ப வரிகளுக்கு வருகிறேன். இப்படிப் பம்மிப் பதுங்கி பெண்சிங்கம் சொன்ன பேச்சைக் கேட்டுப் பின்னாலேயே சென்று கொண்டிருந்த ஆண் சிங்கத்தைப் பார்த்து திடீரெனப் பெண் சிங்கம் பெரிதாக ஒரு கர்ஜனை செய்ய அதிர்ந்தது வனமும் வானமும்! அகழியின் சுற்றுச் சுவர் மேல் சாய்ந்தபடி இரசித்துக் கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் வெலவெலத்துப் போய் சொல்லி வைத்த மாதிரி 10 அடி பின் வாங்கினார்கள், பாய்ந்து அது வெளியே வர முடியாது என்பதை அறிந்திருந்தும். பலரும் நெஞ்சில் கை வைத்து சுதாகரித்து, பிறகு ஒருவரையொருவர் பார்த்து சிரிந்தபடியே கலைந்து சென்றார்கள். இருக்காதா பின்னே பயம்.., ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாம்ல..:)!
***

படங்களுக்குக் கீழே வண்ணத்திலான குறிப்புகள் இணையத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை. 

60 கருத்துகள்:

 1. ஹா... ஹா...
  சிங்கம்-2 அருமையோ அருமை.

  பதிலளிநீக்கு
 2. படங்களும் அதனைத் தொடர்ந்த கமெண்டுகளும்
  சிங்கம் குறித்த தகவல்களைத் தந்த விதமும்
  \மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. மேடம் நீங்களும் கேட்சியா தலைப்பு வைக்க ஆரம்பிச்சிடீங்களா? ரைட்டு !

  பதிலளிநீக்கு
 4. நான்கூட நீங்க என்னவோ "புதுமையா" சிங்கம்-2 விமர்சனம்தான் எழுதியிருக்கீங்கணு "ஓடோடி" வந்தேன்.

  இங்கே வந்தால்.. நிச்சயம் ஏமாற்றமல்ல! நல்ல விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு!!! :)

  ***ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய மான் போன்ற உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. வலிமை இழந்த சிங்கம் மிகவும் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்களில் கொல்லப்படுகின்றன. ****

  வாழ்க்கைபற்றி, "நிலையாமை" பற்றியெல்லாம் புரிந்துகொள்ள இதுபோல் உண்மைகள் அங்கங்கே இருக்கத்தான் செய்யுது. அதை எத்தனை பேரு, கவனித்துப், புரிந்துகொண்டு வாழ்க்கையில் "நிதானமாக" வாழ்றாங்க?

  ***ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.****

  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். அந்தக்கோடில இதுவும் ஒண்ணு போல! :)

  பதிலளிநீக்கு
 5. படமும் பதிவும் சுவாரஸ்யம். சிங்கங்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் அதிகம். 'சிங்ஙம்' என்று சின்ன வயதில் இதை எழுதி டீச்சரிடம் (பெயர் தெய்வசிகாமணி) திட்டு வாங்கியிருக்கிறேன்! இதைச் சிங்கத்திடம் சொல்லி விடாதீர்கள்! :)))

  பதிலளிநீக்கு
 6. சிங்கம் 2 படம் புதுசு, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாமல என்கிற வசனம் பழைய சிங்கம் சொல்லும் வசனம் என நினைக்கிறேன்.

  இரண்டையும் சேர்ந்த்து அழகான படக்கதை சொல்லி விட்டீர்கள்.

  வயதாகி விட்டால் சிங்கத்தால் வேட்டையாட முடியாது என்றவுடன் சிங்கம், முயல் கதை நினைவுக்கு வந்து விட்டது.

  வயதான சிங்கம் வனவிலங்கு பூங்காவில் இருந்தால் இன்னும் அதிகமாய் உயிர் வாழும் என்று கேள்வி படும் போது வயதான சிங்கங்களே வனவிலங்கு பூங்காவிற்கு வந்து விடுங்கள் கூண்டுக்கு வெளியே உங்களை வேடிக்கைபார்க்கும் எங்களைப் பார்த்துக் கொண்டு நீடுழி வாழ்க !என்று சொல்லத் தோன்றுகிறது.
  வயதானலும் அது கர்ஜிக்கும் போது நமக்கு கிலிதான்.
  இரண்டு சிங்கங்கள் படங்கள், அவை அசைவுகளுக்கு ஏற்ப கதை . (சிங்கம் பற்றிய தகவல்கள்)அருமை.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 7. நானும் விமர்சனம் என்று நினைத்தேன்... படங்களுடன் சிங்கம் பற்றிய தகவல்களுக்கு நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
 8. சிங்கம் பற்றிய சிறப்பான பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. பல் போன சண்டை போடா முடியாத சிங்கங்தை அடிக்கும் hyena என்னும் கழுதைப் புலி. lion King படத்தில் பார்த்திருப்பீர்கள். பல் இருக்கும் சிங்கங்கத்தையும் கூட்டமாக சேர்ந்து கொல்லும் திறமை கழுதைப் புலிகளுக்கு உண்டு. என்ன பத்து கழுத்தைப் புலிகள் சேர்ந்து சண்டை போட்டால்,மூன்று நான்கு இறந்தாலும்---ஒத்தை சிங்கமோ புலியோ இறப்பது உறுதி. நாலு பசு ஒரு சிங்கம் கதையும் அப்படியே.

  Mass behavior - க்கு ஒரு எடுத்துக்காட்டு...hyena என்னும் கழுதைப் புலி.

  100 தேனீக்கள் ஒரே சமயத்தில் கொட்டினால் மனிதனும் இறக்க வாய்ப்புண்டு..!

  பதிலளிநீக்கு
 10. சிங்கம்-2 பற்றிய விமர்சனம் தானோ என படிக்காது விட நினைத்தேன்... நல்லவேளை இங்கே வந்தேன். சிங்கங்களையும் அவை பற்றிய குறிப்புகளையும் ரசித்தேன்....

  பதிலளிநீக்கு
 11. ஹி.. ஹி.. நீங்களே சினிமா விமர்சனம் எழுதிட்டீங்களான்னு நானும் ஆவலா ஓடிவந்தேன்... இப்படி ’அல்வா’ கொடுத்துட்டீங்களே!! :-))))

  ஆங்.. சொல்ல மறந்துட்டனே... சினிமா விமர்சனத்தைவிட சுவாரசியமாகவே இருக்குது பதிவு!!

  பதிலளிநீக்கு
 12. ஆஹா.இப்படி ஒரு சிங்கக் கதையை விட்டு விட்டு என்னவெல்லாமோ படம் எடுக்கிறாங்களே.
  சிங்கத்தின் கர்ஜனையை ஒலிக்காட்சியாகக் கேட்க மிகவுமாசை.

  படங்களும் அதன் கதையும் சூப்பர்.போறாளே பொன்னுத்தாயினு பின்னாடி ஒரு சோக கீதம் ஒலித்தது.:)

  பதிலளிநீக்கு
 13. இப்பிடித்தான் தலைப்பு வைத்து அலறவைக்கணும் ஹா ஹா ஹா ஹா அருமை, படங்களும் சூப்பர்...!

  டைமிங் தலைப்பு, சூர்யா இங்கே படிக்க வந்தால் நொந்து போயிருப்பார் ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 14. படங்களும் அவற்றுக்கேற்ற கமெண்டுகளும் அருமை என்றால் தலைப்பு அதைவிடவும் அருமை. சிங்கம் பற்றிய பல தகவல்களையும் திரட்டி அறியச் செய்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 15. ஹிஹிஹி, சிங்கம் பட விமரிசனமோனு நினைச்சுட்டேன். பார்த்தால் நிஜ சிங்கம்.

  @ஸ்ரீராம், இம்பொசிஷன் எழுதலைனா சிங்கத்துக் கிட்டே சொல்லிடப் போறேனே! :)))

  உங்கள் கட்டுரையின் கடைசிப் பத்தியில் சொல்லி இருக்கும் சிங்க கர்ஜனையை மும்பை போரிவிலி மிருகங்களின் பூங்காவில் நேரில் கேட்ட அனுபவம் எங்களுக்கும் உண்டு. இத்தனைக்கும் நாங்க வண்டியில் இருந்தோம். சிங்கம் வெளியே இருந்தது. வண்டிக்கு முன்னாடி நீட்டி நெடுகப் படுத்துக் கொண்டு எழுந்திருக்கவே இல்லை. அது அங்கிருந்து கிளம்பும்வரை வண்டியும் கிளம்பலை. ஜன்னல் கதவை எல்லாம் அடைச்சுட்டாங்க. என்றாலும் பயம்மாவே இருந்தது.

  பதிலளிநீக்கு
 16. சிங்கம் 2 படமும்இ கருத்தும் கலக்கல்...

  பதிலளிநீக்கு
 17. எதோ பட விமர்சனம்ன்னு நம்பி வந்துட்டேனே!!

  பதிலளிநீக்கு
 18. சிங்கங்களை எங்கே புடிச்சீங்க ராமலக்ஷ்மி... மைசூரிலா.... கதை சூப்பரோ சூப்பரு. தேர்ந்த கதையாளினி ஆயிட்டீங்க:)

  நாம எல்லாம் சிங்கி வகையா ( அதான் சிங்கத்துக்கு பெண்பால் )

  பதிலளிநீக்கு
 19. பூனைக் குடும்பமுன்னா சும்மா இல்லையாக்கும்!!!!

  படங்களும் அவை பேசும் விதமும் அழகு!

  பதிலளிநீக்கு
 20. சிங்கம் 2 தெரிந்துதான் உள்ளே வந்தேன். அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 21. அடடா... ரொம்ப லேட்டா கவனிச்சு வந்திருக்கேன் நான். தலைப்பைப் பாத்து எல்லாரையும் போல நானும் சிங்கம் விமர்சனம் எழுதிருககீங்களோன்னு ஆச்சரியமாதான் வந்தேன். அழகழகான அரிய படங்களைப் பார்த்ததும் ஆச்சரியம் ஆனந்தமா மாறிடுச்சு! சூப்பர்ப்!

  பதிலளிநீக்கு
 22. ஆஹா ! அந்த சிங்கம் 2 வைவிட இந்த சிங்கம் 2 மிக அருமை.

  பதிலளிநீக்கு
 23. எல்லாரையும் போலவே பட விமர்சனம் என நினைத்தேன். நல்லவேளை...:)

  அருமையான படங்களுடன், சிங்கத்தை பற்றிய தகவல்களும் கூடிய நல்லதோர் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 24. @மோகன் குமார்,

  ஒரு மாறுதலுக்கு:)! நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 25. @வருண்,

  பதிவுக்கெனத் தேடிய போது பல தகவல்கள் எனக்கும் புதிதாக இருந்தன. உண்மைதான். வாழ்வியலின் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன அவற்றின் வாழ்க்கை முறையில். நன்றி வருண்:)!

  பதிலளிநீக்கு
 26. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம். கீதா மேடம் உங்களுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறார் பாருங்கள்:)!

  அன்றைய தமிழாசிரியர்களுக்கு நாம் நிறையவே கடமைப் பட்டிருக்கிறோம், இல்லையா?

  பதிலளிநீக்கு
 27. நானும் சிங்கம்-2 பார்த்துட்டேனே.. உங்க தளத்துலதான்:-))))

  ஜூப்பரு.

  பதிலளிநீக்கு
 28. @கோமதி அரசு,

  வசனம் எந்த பாகத்தில் என்பது தெரியவில்லை. விளம்பரத்தில் பார்த்தது:)!

  பல உயிரனங்கள் முற்றிலுமாக அழிந்து வருகிற நிலையில் இது போல இயற்கை சூழலில் விலங்குகளைப் பாதுகாப்பதும் அவசியம்தானோ எனத் தோன்றுகிறது.

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 29. @நம்பள்கி,

  ஆம். லயன் கிங் பார்த்திருக்கிறேன். தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. @வெங்கட் நாகராஜ்,

  /படிக்காது விட / இப்படி யோசிக்கவில்லையே நான்:)!

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 31. @வல்லிசிம்ஹன்,

  பொருத்தமான சோக கீதமாய் இருக்கிறதே. ஃப்ளிக்கரில் ஆறாம் படத்தைப் பகிரும் போது தலைப்பாக வைத்து விடுகிறேன்:)! நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 32. @geethasmbsvm6,

  கோணம் பார்ப்பதிலேயே குறியாக இருந்ததால் எனக்கு அந்தக் கணத்தில் எதுவும் தோன்றவில்லை. எல்லோரும் அலறி பின் வாங்கியதைப் பார்த்ததுமே பயம் வந்தது:)! நன்றி கீதாம்மா.

  பதிலளிநீக்கு
 33. @ராஜி,

  இந்தப் படங்கள்+தகவல்கள் ஏமாற்றாது என்றொரு ஒரு நம்பிக்கை:)! வருகைக்கு நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 34. @துளசி கோபால்,

  சிங்கக் கதையிலும் பாராட்டு பூனைக்குதானா:))?

  நன்றி.

  பதிலளிநீக்கு
 35. @Asiya Omar,

  அப்படிச் சொல்லுங்க:)! நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 36. முகநூலில் என் எதிர்படம் பார்க்க ...

  பதிலளிநீக்கு
 37. @NKR R,

  இதே சிங்கங்கள்! அருமையான படம். பெண் சிங்கம் என் கேமராவுக்கு முகத்தைக் காட்டவேயில்லை:(! பகிர்வுக்கு நன்றி. நல்ல ஜோடி:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin