தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

பாலைவனப் பாடகன்.. பூமியின் உயிர்த்துடிப்பு.. - மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் - பாகம்: 2

பிரதான சிற்பங்களின் படங்கள் அடங்கிய பாகம் 1 இங்கே.

குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் கருப்பொருட்கள், வன விலங்குகளையும் பிற கடல்வாழ் உயிரினங்களையும் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமான சிற்பங்கள் ஆகியவனவும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

#1 மழலைகளின் மாய உலகம்.. - டிஸ்னி லேன்ட்

#2 பூமியின் உயிர்த்துடிப்பு.. 

#3 வனவிலங்குகள்..


#4 இவை நம்முடையவை அல்ல, இந்தப் பூமியை நம்மோடு பகிர்ந்திட வந்தவை.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

கீதையின் பாதை, சாண்டா க்ளாஸ், பள்ளிவாசல் - மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் - பாகம் 1

 #1 மகா கணபதி


மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம், இந்தியாவின் முதலாவது மட்டுமின்றி ஒரே ஒரு மணல் சிற்ப அருங்காட்சியகமும் கூட. சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் சுமார் 13500 சதுர அடி நிலப்பரப்பில், மைசூரின் கலாச்சாரப் பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மும்மதம் போன்ற 16 கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, 150-க்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

சிற்பங்கள் ஒவ்வொன்றும் மணல் கலைஞர் எம்.என். கௌரி என்பவரால் உருவாக்கப்பட்டவை. அவருக்கு இதில் எப்படி நாட்டம் வந்தது என்பது சுவாரஸ்யமானது. பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டில் அப்படிப்பைத் தொடராமல் வெளியேறியவர், கணினி அறிவியலில்  பயிற்சி எடுத்தார். அப்போது 3d max எனும் மென்பொருளின் உதவி கொண்டு முப்பரிமாண சிற்ப மாதிரிகளை உருவாக்கினார். கணினியில் உருவாக்கிய தன் சிற்பங்களுக்கு "உயிரோட்ட உணர்வு" இல்லாததை உணர்ந்தவர்,  2011_ஆம் ஆண்டு முதன் முறையாக மணல் சிற்பங்களை உருவாக்க முயற்சித்தார். அவரது முயற்சிக்குப் பாராட்டு கிடைத்ததும், 20 இலட்சம் ரூபாய் கடன் பெற்று இந்த மணல் சிற்ப அருங்காட்சியகத்தைத் தொடங்கினார். 150 சிற்பங்களையும் வடிவமைக்க 115_க்கும் மேற்பட்ட லாரி மணல் தேவைப்பட்டிருக்கிறது. 2014_ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

நுழைவாயிலில் 15 அடி உயரமான விநாயகர் சிலை பார்வையாளர்களை வரவேற்கிறது. சாமுண்டீஸ்வரி, மைசூர் தசரா, மகாபாரதக் காட்சி, சிரிக்கும் புத்தர், சாண்டா கிளாஸ் போன்ற பெரிய சிற்பங்கள் ஈர்க்கின்றன.

#2 கீதையின் பாதை

வெள்ளி, 15 மே, 2026

புனித ஃபிலோமினா தேவாலயம் - மைசூர்

ஆசியாவின் மிக உயரமான மற்றும் பெரிய தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மைசூரிலுள்ள புனித ஃபிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral). 1936-ல், ஜெர்மனியில் உள்ள 'கொலோன்' தேவாலயத்தின்  'நியோ கோதிக்' எனும் கட்டிடக்கலை பாணியைத் தழுவிக் கட்டப்பட்டது.

இதன் முழுப் பெயர், புனித ஜோசப் மற்றும் புனித ஃபிலோமினா தேவாலயம். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அறியப்படுகிறது. 

#2
புனித ஜோசஃப் குழந்தை ஏசுவுடன்:

#3


#4
புனித ஃபிலோமினா

புனித ஃபிலோமினா 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க இளவரசி. 

புதன், 7 ஜனவரி, 2026

தர்பார் மண்டபங்கள்; கூரை ஓவியங்கள் - மைசூர் அம்பா விலாஸ் அரண்மனை

 

மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.

முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன். 

#2


#3


அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.

#4

அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே.. 

அரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.  

கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம். 

தனிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

#5

இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

புதன், 29 அக்டோபர், 2025

அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2

 

புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த தகவல்கள் மற்றும் 18 படங்களுடன்  பகிர்ந்த பாகம் 1 இங்கே. 

#2

இக்கோயில் ஹொய்சாளப் பேரரசு மன்னர்களால், அவர்களது ஆட்சியின் கீழிருந்த பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1500 கோயில்களில் ஒன்று. அவர்களது கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வளர்ச்சியாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல வழிகளில் தனித்துவமாக விளங்குகிறது.

செவ்வாய், 7 அக்டோபர், 2025

சென்னகேசவா கோயில் - சோமநாதபுரம், மைசூர் - பாகம் 1

 #1

சென்னகேசவர் கோயில் மைசூரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள சோமநாதபுரத்தில், காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. வைணவ இந்து கோயிலாகிய இது, சென்னகேஷவா கோயில் மற்றும் கேசவா கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சென்னகேசவ என்ற சொல் "அழகான கேசவன்" என்று பொருள்படும். இதுவே ஹொய்சாள அரசர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். ஹொய்சாள கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றும் ஆகும்.

#2


#3


#4

புதன், 17 செப்டம்பர், 2025

கோபுர தரிசனம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்

 #1

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 6_ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வைணவக் கோவில் பார்த்தசாரதி வடிவிலான விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. ' பார்த்தசாரதி ' என்ற பெயருக்கு ' அர்ஜுனனின் தேரோட்டி' என்று பொருள்படும். 

மூலவரான பார்த்தசாரதி பெருமாள் சுமார் ஒன்பது அடி உயர சிலையாக மீசையுடன் தனித்துவமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

திங்கள், 8 செப்டம்பர், 2025

கல்வாழை [ Canna Lily ]

 

கல்வாழை அல்லது மணிவாழை எனத் தமிழில் அழைக்கப்படுகிறது (canna lily) கன்னா லில்லி. தாவரவியல் பெயர்: Canna Indica. ஆங்கிலத்தில் Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றன. கன்னாசியே (Cannaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாழை இனத்தில் சுமார் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

#2


இந்த வகைச் செடிகள் கண்களைக் கவரும் அழகிய இலைகளைக் கொண்டவை ஆகையால் தோட்டக் கலைஞர்கள் இவற்றை அலங்காரத் தாவரங்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

#3


இவற்றின் அனைத்து வகை இனங்களுக்கும் பூர்வீகம்

சனி, 30 ஆகஸ்ட், 2025

கோபுர தரிசனம் - வடபழநி ஆண்டவர் கோயில்

#1

#2

#3

வடபழனி முருகர் கோயில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒன்றாகும். முருகரின் சிலை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பழனி கோயிலில் உள்ள சிலையைப் போலவே இருப்பதால், இது வடபழனி கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.

#4 தல வரலாறு:

புதன், 15 மே, 2019

அட்டர கச்சேரி, KGID, GPO - பெங்களூர்.. சில Landmarks.. (2)

கர்நாடக உயர் நீதி மன்றம்:

#1

கர்நாடகாவின் சட்ட சபை இயங்கி வரும் விதான செளதாவுக்கு நேர் எதிரே உள்ளது கர்நாடக உயர் நீதி மன்றம். ஒரு காலத்தில் மைசூர் உயர் நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. இக் கட்டிடத்திற்கு ‘அட்டர கச்சேரி’ (பதினெட்டு அலுவலகங்கள்) என்ற பெயரும் உண்டு.  கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டு, முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது. ராவ் பகதூர் ஆர்காட் நாராயணசாமி முதலியார் என்பவரின் மேற்பார்வையில் கிரேக்க மற்றும் ரோம கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி 1868_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘பழைய பொது அலுவலகங்கள்’ என அழைக்கப்பட்டது. 

#2


திப்பு சுல்தானின் கோடைக் கால அரண்மனையிலிருந்து இடமின்மையால் மைசூர் அரசாங்கம் 18 பொதுத்துறை அலுவலகங்களை இந்தக் கட்டிடத்திற்கு மாற்றிய போது ‘அட்டர கச்சேரி’ என்ற பெயர் வந்திருக்கிறது.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலிக் கூட்டம்

அஞ்சலிகள்!
எழுத்தாளரும் கலை, இலக்கிய விமர்சகருமான திரு வெங்கட் சாமிநாதன் கடந்த புதன் கிழமை, 21 அக்டோபர் 2015 அன்று அதிகாலையில் காலமானார். அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமான ஓர் அஞ்சலி நிகழ்ச்சியை எழுத்தாளர் பாவண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தெரிஞ்சுக்கலாம் வாங்க.. - ஒட்டகச் சிவிங்கி

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச் சிவிங்கி. மைசூர் விலங்கியல் பூங்காவினுள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது இவைதாம்.

#1

ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் பாலூட்டிகளான இவை, வனத்தில் வாழ்வது போலவே சுதந்திரமாக உலாவர மிகப் பெரிய பரப்பளவிலான இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.

#2

நான் எடுத்த படங்களுடன், ஒட்டகச்சிவிங்கி பற்றி நாம் அறிந்த.. அறியாத.. ஆச்சரியம் தரும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

[படங்கள் திறப்பதற்கு நேரம் எடுத்தால் ஏதேனும் ஒன்றின் மேல் க்ளிக் செய்து light box_ல் வரிசையாகக் காணலாம்.]

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா - இன்று சென்னையில்..



நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியா படிக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் சென்னையில் ஒன்றுகூட இருக்கிறார்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமாக மனித அறிவு முழுமையடைய எந்த இலாப நோக்கமுமின்றி கூட்டு முயற்சியில் இயங்கி வரும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பத்தாண்டு நிறைவுவிழா இன்று காலை 09.00 மணி முதல் 05.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், டாக் (TAG) அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிறைவுவிழாஅறிக்கையிலிருந்து மேலும் சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு:

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

வாசிப்பில் உயிர்த்திருக்க.. “அகநாழிகை புத்தக உலகம்”

அவசர உலகின் அழுத்தங்களிலிருந்து ஆசுவாசமாகவும், உலகையும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவும், அறிவைச் செதுக்கிக் கொள்ளவும், மனதைப் பண்படுத்திக் கொள்ளவும் உற்ற நண்பனாக என்றும் உடன் வருபவை புத்தகங்களே. நேரம் கிடைக்கையில் வாசிப்பவர்.. வாசிக்கவென நேரத்தை ஏற்படுத்திக் கொள்பவர்.. இவர்களுக்கு மத்தியில்,

புதன், 7 ஆகஸ்ட், 2013

பூவின் மொழி நிறமா.. மணமா..? - ( Bangalore Lalbagh Flower Show )

மீண்டும் மீண்டும் பூக்களா?

மீண்டு வர முடியாதபடி இயற்கை விரித்த வலையில் மாட்டிக் கொண்டதில்
வருத்தமில்லை. மகிழ்ச்சிதான்.

இங்கே பத்தாவது படத்தில் வைத்த கேள்விக்கு சாட்சியாக முதல் ஒன்பது படங்கள்.

கூடவே பெங்களூர் லால்பாக் சுதந்திரதினக் கண்காட்சி 2013 குறித்த தகவல்கள்..

#1 Canna Flower

பின் வரும் மூன்றும்.. PINK ALAMANDA

#2 மலரக் காத்திருக்கும் மொட்டுக்கள்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin