ஹைதராபாத் நகரில், முஸி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செளமஹல்லா மாளிகை 1951ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டு, இந்தியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
#1
வெவ்வேறு கூடங்களில் அரசர்களைப் பற்றிய விவரங்கள், அரசர், அரசி மற்றும் இளவரசர்களின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
#2
#3
#5
#6
#7
#8
#12
உணவு மேசையில் அரசர்கள் விருந்து உண்ணும் அரிய புகைப்படமும் பெரிதாக்கப்பட்டு காட்சிக்கு இருந்தது:
#15
ஓவியங்கள், சிற்பங்கள், நாணயங்கள், கைவினைப்பொருட்கள், மரச்சிற்பங்கள் மற்றும் பழங்கால மரச்சாமான்கள் ஆகியனவும் காட்சிக்கு இருந்தன.
படை வீரர்கள் உபயோகித்த விதம் விதமான ஆயுதங்கள் உயரமான கூரை கொண்ட ஓர் கூடத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
#16
#17
#19
மன்னர்களின் படைக்கலங்களைப் பற்றிய தகவல்கள்:
#24
தளபதிகளும் படை வீரர்களும்:
#25
அரண்மனையின் தாழ்வாரமும் அங்கிருந்த ஆதிகாலத்தைய மர அலமாரிகளும்:
#27
மன்னர்கள் பயன்படுத்திய குதிரை வண்டிகள் மற்றும் அந்நாளைய வாகனங்கள் (கார்கள்) ஆகியனவும் உள்ளன. கார்கள் இருந்த பகுதிக்கு செல்ல நேரம் இருக்கவில்லை. குதிரை வண்டி உங்கள் பார்வைக்கு:
#30
தர்பார் அரங்கு மற்றுமோர் கோணத்தில்..
#31
அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த சேகரிப்புகள் நிஜாம்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதோடு வரலாற்றையும் பண்பாட்டையும் நமக்கு அறியத் தருகின்றன. அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு இருந்த திறமை, புலமை மற்றும் செல்வாக்கை வெளிப்படுத்துகின்றன. சுற்றுலா, கல்வி, ஆய்வு ஆகியவற்றை ஊக்குவித்து, கலாச்சார பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன.
#32
மிக அருமையான படங்கள்.
பதிலளிநீக்குவரலாறை சொல்லும் படங்கள்.
நிஜாம்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது படங்களின் வாயிலாக.தர்பார் அரங்கம் அழகு.