கனவுகள்
கனவுகள்..
அழகானவை
ஆயின்
அனுபவிக்க வாய்க்காதவை
அச்சுறுத்துபவை
ஆயின்
ஆபத்தற்றவை
ஆயின்
வலிக்காதவை
ஆறுதல் அளிப்பவை
ஆயின்
மாயமாக மறைந்து போகின்றவை
அர்த்தமுள்ளவை
ஆயின்
புரிந்து கொள்ள இயலாதவை
காட்சிகளாக விரிகின்றவை
ஆயின்
விழிகள் காணாதவை
நினைவுகளின் நினைவுகளாக வாழ்பவை
ஆயின்
எதிர்காலம் அற்றவை
ஆழ் மனதில் குடியிருப்பவை
ஆயின்
சாட்சிகள் அற்றவை
கனவுகள்..
துயிலாத உணர்வுகளின் நீட்சியாக
துயிலும் பொழுதுகளில் துரத்துபவை
ஆயின்
மீளாத் துயிலில் ஆழ்கையில்
அமைதியை ஆசிர்வதித்து
விடை பெறுபவை!
**
ஆகஸ்ட் 2023, நவீன விருட்சம் இதழில்..
நன்றி நவீன விருட்சம்!
***
கனவுகளை நன்கு காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். நம் கதை முடிவதோடு நம் கனவுகளும் நின்று போகின்றன. தொடர்ந்தாலும் உணர நாம் இல்லையே!
பதிலளிநீக்குஆம். நன்றி ஸ்ரீராம்.
நீக்குநாம் இருக்கும் வரை கனவு தொடர் கதை.
பதிலளிநீக்குகனவுகள் கவிதை நன்றாக இருக்கிறது.
/கனவு தொடர் கதை/ ஆம். நன்றி கோமதிம்மா.
நீக்குகனவுகள் பற்றிய உங்கள் கவிதை அருமை. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசில கனவுகளை ரசித்து சிரித்து அர்த்தமே இல்லையே என்று கடந்து சென்றுவிடலாம்... யோசிக்க வைக்கும் கனவுகளும் உண்டு என்றாலும் விடியற்காலை கனவு பலிக்கும் என்று சிலர் அச்சுறுத்திவிடுகிறார்கள். அந்தக் கனவு வருத்தம் அளிப்பதாக இருந்தால்...
கீதா
வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி கீதா.
நீக்குசீன தத்துவ தாவோயிஸ்ட் சிந்தனையாளர் Zhuangzi, ஒரு நாள் தூங்குகையில் தன்னை ஒரு பட்டாம்பூச்சியாகக் கனவு கண்டார். கண் விழித்ததும் தான் நிஜமாகவே பட்டாம்பூச்சியாகக் கனவு கண்ட மனிதனா அல்லது இப்போது மனிதனாகக் கனவு காணும் வண்ணத்துப் பூச்சியா? எனத் தெரியவில்லை என எழுதியுள்ளார். கனவு குறித்து வாசிக்கும் போதெல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வரும்.
பதிலளிநீக்குகவிதையில் கனவு – நினைவு; அனுபவித்தலில் நிகழும் நேரெதிர் உணர்வுநிலைகளை வரிசைப்படுத்துவதில் உள்ள நுட்பம் அபாரம்.
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
நீக்கு