சொற்கள்
முழுதாக என்னைச் சுற்றிலும் சொற்கள்,
மற்றும் சொற்கள் மற்றும் சொற்கள்,
இலைகளைப் போல் என் மீது வளருகின்றன,
அவை உள்ளிருந்து மெதுவாக வளர்வதை
நிறுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை... ஆனால்
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்,
சொற்கள் தொல்லையானவை,
அவற்றிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்,
ஓடும் கால்களைக் குறுக்கிடும் பெரும் பிளவாக,
பார்ப்பதற்கு, அலைகள் முடக்கப்பட்ட கடலாக,
வெடித்துச் சிதறும் எரிகிற காற்றாக அல்லது,
உங்கள் ஆத்ம நண்பரின்
குரல்வளையை வெட்டத் துடிக்கும் கத்தியாக...
சொற்கள் தொல்லையானவை, ஆனால்.
அவை மரத்தின் மீது வளரும் இலைகளைப் போல்
என் மீது வளருகின்றன,
தம் வருகையை அவை நிறுத்துவதாகத் தெரியவில்லை,
நிசப்தத்திலிருந்து, எங்கோ ஆழத்திலிருந்து ...
*
மூலம்:
'WORDS'
by Kamala Das
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
***
சொற்கள் சொல்லி விடுகின்றன சொல்பவரின் மனவோட்டத்தை. சொல்லாத சொல்தான் புரிபடாமல் படுத்துகிறது!
பதிலளிநீக்குஉண்மை. நன்றி ஸ்ரீராம்.
நீக்குகமலாதாஸ் அவர்களின் வரிகளில் அவரது வாழ்க்கை அனுபவங்கள் சோகம் தெரிகிறது. சொற்கள் அவரை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கின்றன என்பது. இதையும் தாண்டி மனதுள் எவ்வளவு இருந்திருக்கும்!
பதிலளிநீக்குகீதா
ஆம். தங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
நீக்குமரங்களின் மேல் வளரும் கொடியின் இலை போல . மரத்தில் படர்ந்த இலைகளை அகற்றுவது கடினம் அதுபோல அவர் மேல் வீசப்பட்ட சொற்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
பதிலளிநீக்குமொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
தங்கள் கருத்துக்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு//உள்ளிருந்து மெதுவாக வளர்வதை
பதிலளிநீக்குநிறுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை//
//நிசப்தத்திலிருந்து, எங்கோ ஆழத்திலிருந்து...
நிறுத்துவதாகத் தெரியவில்லை//
எழுதுவதற்குச் சொற்களைத் தேடி அது உருவாக ஆசைப்படும் ஒரு காலம் இருந்தால், அதை நிறுத்துவதற்கும் ஆசைப்படும் ஒரு காலம் இருக்கிறது போலும். படைப்பாளிக்குச் சொற்கள் உதிக்கும் மனதைப் பாதுகாப்பாக வைப்பது எத்தனை முக்கியம்.
உண்மைதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு