ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

உலகம் உங்களுடன்..

 #1

'எதிர்காலத்தை உருவாக்கக் 
கனவைப் போல் ஆகச் சிறந்தது 
வேறெதுவுமில்லை.' 
_ Victor Hugo

#2 
‘ஒவ்வொரு மலரும் 
அதற்குரிய நேரத்தில் மலரும்.’
_Ken Petti
பிரம்மக் கமலம்
[18 ஆகஸ்ட் நடுஇரவில் மலர்ந்தவை.  அதே நாளில் பல்வேறு இடங்களில் மலர்ந்திருந்ததைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள். மகா மொக்கு.. மதிய நேரத்தில் படமாக்கியது.]


#3
'நீங்கள் உங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதால் 
தனித்து விடப்படுவதில்லை, 
ஏனெனில் உலகமே உங்களுடன் இருக்கிறது.' 
_ Ken Poirot

#4 
'நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைத்து விடாது. 
நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ 
அதுவே கிடைக்கும்.'


#5
“ஆன்மாவுக்கு எப்போதும் தெரியும் 
தன்னை எப்படி ஆற்றுப் படுத்திக் கொள்வதென. 
மனதை எப்படி அமைதிப் படுத்துவதென்பதே 
சவால்.” 
_ Caroline Myss

#6
"சிலநேரங்களில் விழிகளுக்குப் புலப்படாதவற்றை 
இதயம் கண்டு கொள்கிறது."
 _ H. Jackson Brown

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 181

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***


8 கருத்துகள்:

 1. பிரம்ம கமலத்தின் படம் அற்புதம்.  குறிப்பாக அந்த மகா மொக்கு.  படங்கள் யாவுமே அழகு.  வரிகளும் சுவை.

  பதிலளிநீக்கு
 2. எல்லா படங்களும் அருமை.
  பிரம்ம கமலத்தின் படம் அழகு.
  தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

  பதிலளிநீக்கு
 3. எல்லாப் படங்களும் வழக்கம் போல் பிரமாதம். பிரம்ம கமலம் அருமை. அதுவும் அந்த மொட்டு செம ஷாட். கடைசிப் படமும்.....கூடவே வரும் பொன்மொழிகளும் நல்லாருக்கு.

  முதல் பொன்மொழியை வாசித்ததும் - உண்மைதான் கலாம் அவர்களும் அதைத்தான் சொல்லி வந்தார். கனவோடு நிறுத்தாமல் அதற்கு உரிய முயற்சிகளும் எடுக்க வேண்டுமே. அங்குதான் பல சமயங்களில் கட் ஆக்கிவிடுது! ஆனால் கனவு என்பது நிச்சயமாக driving force to live.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா.

   ஆம், இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பது உண்மை.

   நீக்கு
 4. பிரம்ம கமலத்தின் மொட்டும் மலர்ந்த பின் அதன் அழகும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin