#1
"ஒட்டு மொத்த வாழ்க்கையும்
புதிய சவால்களை எதிர்கொள்வதிலேயே உள்ளது."
(செம்மீசைச் சின்னான்)
#2
"ஒவ்வொருவருக்கும் மாபெரும் பிரச்சனையாக இருப்பது
அடுத்தவரது விவகாரங்களைப் பற்றிக் கவலைப்படுவது."
(குண்டுக் கரிச்சான்)
#3
“உங்கள் உண்மையான தகுதியை நீங்கள் அறிவீர்களானால், அதை உறுதிப்படுத்த வேறெவரும் உங்களுக்குத் தேவையில்லை.”
_Alan Cohen
(செங்குதச் சின்னான்)
#4
“உங்கள் இதயத்தைத் தொடருங்கள்,
அதே நேரம் உங்கள் மூளையையும்
உடன் எடுத்துச் செல்லுங்கள்.”
_ Alfred Adler
(வெண் கன்னக் குக்குறுவான்)
#5
“உங்களைப் பற்றிய
உங்களது சொந்த அபிப்பிராயமே
வாழ்க்கையில் அதிமுக்கியமான ஒன்று.”
_ Osho
(இந்திய சாம்பல் இருவாச்சி)
#6
“நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்து, நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அங்கு உங்களைச் செல்ல விடாமல் தடுப்பது, உங்களது செளகரியமான சூழலே.”
_Dhaval Gaudier
(அக்காக் குயில்)
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 187
பறவை பார்ப்போம்.. - பாகம்: 109
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
அக்காக் குயில், குண்டு கரிச்சான் அழகு.எல்லா பறவைகளும் அழகு.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குவரிகளில் முதலாவது நிதர்சனம். இரண்டாவது புன்னகைக்க வைத்தது! மூன்றாவது அடிக்கடி சந்தேகத்துக்குள்ளாவது! இதயமும் மூளையும் ஒன்று சேரும் நேரம் அபூர்வம்! நம்மைப்பற்றிய சொந்த அபிப்ராயங்களை மறந்தே போகிறோம் - அடுத்தவர்களையே கவனிப்பதால்!
பதிலளிநீக்குஇரண்டு சின்னான்களும் வெட்டி ஒட்டியது போல துல்லியம்.
கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபறவைகளும் வாழ்வியலும் அழகு.
பதிலளிநீக்குகக்குறுவான் ,அக்காகுயில், சின்னான் வண்ணத்தில் கலக்குகிறார்கள்.
நன்றி மாதேவி.
நீக்கு