திங்கள், 25 டிசம்பர், 2023

வானம் எல்லையன்று

 #1

“தாங்கள் செய்யும் செயல் மேல் 
அர்ப்பணிப்பும் அதீத ஆர்வமும் இருக்குமானால், 
ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளைத் தாண்டி 
மேலுழுந்து வர இயலும்.” 
_ Nelson Mandela.


#2
“மேகங்கள் உச்சியிலிருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. 
எந்த சுமையையும் தம்மோடு எடுத்துச் செல்ல மறுப்பதாலேயே 
அவை மிக உயரத்தில் மிதக்கின்றன.” 
_ Jasleen Kaur Gumber


#3
“சிக்கிக் கொண்டதாக உணரும் தருணத்தில் 
வானத்தை நோக்குங்கள். எல்லாமே மாறும் என்பதை 
மேகங்கள் நமக்கு நினைவூட்டும்.”


#4
“கவலை வேண்டாம்.. 
இருள் விரைவில் விலகும்.. 
அதுவரையிலும் அழகிய நிலவை ரசித்திருப்போம்.”


#5
“கட்டிடக்கலையின் எந்த விதிமுறைகளும் 
மேகங்கள் எழுப்பும் கோட்டைக்குப் பொருந்தாது.”
Gilbert K. Chesterton

#6
“வான் வரை பறந்து பூமியைக் காண்பது அழகு; 
பூமிக்கு இறங்கி வானத்தைக் காண்பது 
அதனினும் அழகு.”
_ Mehmet Murat ildan.

#7
“மறந்து விடாதீர்கள்: 
அழகிய அஸ்தமனங்களுக்கு அவசியமானது 
மேகமூட்டமான வானங்கள்.”
_  Paulo Coelho

#8
“வானம் எல்லையன்று, 
அது ஒரு தொடக்கமே.”

#9
“வெகு அழகு, 
கட்டுப்படுத்த இயலாத ஏரியின் தனிமை.” 
-Edgar Allan Poe

**
ஞாயிறு படத் தொகுப்பு, திங்களன்று.. :), 
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..
***

8 கருத்துகள்:

  1. சில சமயங்களில் பணியில் சோர்வு வரும் நேரம் இந்த முதல் படத்துக்கான வாசகம் போல இருக்கும் உவமைகள் நினைவுக்கு வந்து மனதைத் தேற்றிக் கொள்வதுண்டு.  இந்தச் சுமையும் இல்லாமல் வானத்தில் இருக்கும் மேகம்தான் மழையைப் பொழிகிறது!  இருள் விளக்கம்தான்.  விலகவேண்டும்.  பிழைப்பு நடக்கணுமே..  ஆனால் வெயிலின் வெண்மையை விட பயமுறுத்தும் இருளாக இல்லாமல் இருளின் தண்மை இனிமை.  

    வானத்தின் காட்சிகள் எப்போதும் புகைப்படமெடுக்க தூண்டுபவை.  எடுக்கப்பட்ட காட்சிகள் யாவும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. மிக அழகான படங்கள்! அதோடு பொருத்தமாக இணையும் அருமையான வாசகங்கள்!!

    பதிலளிநீக்கு
  3. வானில் பறக்கும் போது கீழே தெரியும் மேகக் கூட்டத்தின் மற்றும் பூமியின் அழகு அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. ரொம்ப அழகா இருக்கும் உங்கள் படங்கள் செம. நிலவின் படம் கொள்ளை அழகு நீங்க எடுத்த விதமும்.

    அழகிய அஸ்தமனத்துக்கு மேக மூட்டமான வானம் - இது நாம் வழக்கமாகச் சொல்லும் குட்டையைக் கலக்கித் தெளிவுன்னு சொல்வது போல இருக்கோ?!

    வாசகங்கள் எல்லாமே அருமை அதிலும் முதல் வாசகம் ரொம்பப் பிடித்தது.

    கீதா



    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் கவிதையாக மிளிர்கிறது. அருமையான நீலவானம், வெண்மேகம். நிலவை ரசிக்கும் போது இருள் விலக வேண்டும் என்று நினைப்பு கூட இருக்காது. அழகான நிலவை பார்த்து கொண்டே இருக்கலாம் தென்னம் கீற்றும், மரமும் மேகத்து நடுவே நிலவும் எப்போதும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
  5. /நிலவை ரசிக்கும் போது/ உண்மைதான். மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin