#1
"உங்களை உங்களுக்கு நிரூபியுங்கள்,
மற்றவர்களுக்கு அல்ல."
(இரட்டைவால் குருவி)
#2
"பொழுது விடிந்ததும் விட்டு விடுவதற்கு அல்ல கனவுகள். அவை உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நிரப்பும்
மூலப்பொருட்கள்."
_ David Cuschieri.
(மணிப்புறா)
#3
"உங்கள் சிந்தனையில் கவனம் செலுத்தினால்,
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனம் கொள்ளத் தேவையில்லை."
_ Bill Johnson
(சாதா கதிர்க்குருவி)
"சில நேரங்களில் உங்களுக்கு தேவையானதெல்லாம்
உங்களுக்கே உங்களுக்கான சில மணித்துளிகள்."
(செம்மீசைச் சின்னான்)
#5
"உங்கள் குரல் முக்கியமானது."
(இந்திய மைனா)
#6
"கடினமான சவால்களே
உயர்ந்த வெகுமதிகளைப் பெற்றுத் தரும்."
_ Matt Fo
(இந்திய மைனா)
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 182
பறவை பார்ப்போம்.. - பாகம்: 107
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
மைனா கோவத்தில் உடல் சிலிர்த்து இருக்கிறதோ? அல்லது மழையில் நனைந்து இருக்கிறதோ ?
பதிலளிநீக்குஅனைத்து பறவைகளும், அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
அன்று மழை நாள் அல்ல. அருகில் எங்கேயோ குளித்து விட்டு வந்த ஜோடி மைனாக்களில் ஒன்று :)!
நீக்குநன்றி கோமதிம்மா.
மற்றவர்களுக்கு நிரூபிப்பதும் சமயங்களில் அவசியமாகத்தான் இருக்கிறது!
பதிலளிநீக்குதூங்கும்போது அல்ல விழித்திருக்கும் காண்பதே கனவு என்பதை நினைவுபடுத்துகிறது இரண்டாவது பொன்மொழி.
இந்தப் பறவைகளை இங்கு சாதாரணமாக காண முடிவதில்லை.
/மற்றவர்களுக்கு நிரூபிப்பதும்../ அதென்னவோ உண்மைதான்.
நீக்குஇங்கு ஒரு நாளைக்கு 10 வகைப் பறவைகளாவது வருகின்றன. என் ஃபோட்டோகிராஃபி தங்கு தடையின்றித் தொடர இந்தத் தோட்டமும் ஒரு காரணம்.
நன்றி ஸ்ரீராம்.
பொன்மொழிகளோடு படங்களும் அழகு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅனைத்துப்பறவைகளும் அழகு! சிந்தனைத்தொகுப்பும் அருமை!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குகடைசில மைனா மழைல நனைந்து உடலைச் சிலிர்த்துக் கொள்கிறது போல..வித்தியாசமாக இருக்கு.
பதிலளிநீக்குமணிப்புறா ரொம்பத் தெளிவாக இருக்கிறது. எல்லாப் படங்களுமேதான். செம்மீசைச் சின்னான் பின் பகுதியைக் காட்டும் படம் செம.
இரவில் நாம் காணும் கனவுகளுக்கும், பகலில் நாம் விழித்திருக்கும் போது காணும் கனவிற்கும் வித்தியாசம் உண்டில்லையா? இரவுத் தூக்கத்தில் கனவுகள் கன்னாபின்னா என்று வரும். ஆனால் விழித்திருக்கும் போது காண்பது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது இல்லையா?
கீதா
குளித்து விட்டு சிலிர்த்து நிற்கும் மைனா அது :).
நீக்குஆம், இரு வகைக் கனவுக்கும் வித்தியாசம் உள்ளது.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.