ஞாயிறு, 17 டிசம்பர், 2023

செல்வத்துள் செல்வம்

  #1

“பலகீனமானவர்களால் எப்போதுமே மன்னிக்க இயலாது. 
மன்னிப்பு என்பது வல்லமை வாய்ந்தோரின் பண்பு.”
_ Mahatma Gandhi


#2
“அடிப்படை விதி: 
எவ்வளவுக்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கப் பழகுகிறீர்களோ
அவ்வளவுக்கு அவ்வளவு நன்றி தெரிவிக்க வேண்டியவை 
அதிகரித்தபடி இருக்கும்.
_ Norman Vincent Peale

#3
“மனநிறைவு ஒன்றே 
உண்மையான செல்வம்.”
 - Alfred Nobel

#4
“பணிவடக்கம் பலகீனமானவர்களது இயல்பன்று, 
தைரியமானவர்களின் இயல்பு.”
_ Walt Disney

#5
 “அதிகமாக உங்களை நேசிப்பீர்களேயானால், 
குறைவாக மற்றவர்களைப் பிரதிபலித்து, 
தனித்துவமானவராக உருவாகுவீர்கள்.”


#6
“மலர்கள் ஒருபோதும் எப்படி மலரப் போகிறோம் எனக் 
கவலை கொள்வதில்லை. 
அவை தம் இயல்பில் விரிந்து, ஒளியை நோக்கித் திரும்புவதே 
அவற்றை அழகாக்குகின்றன.” 
– Jim Carrey.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 188

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. மலர்களின் படங்கள் அழகு.  ஜிம் கேரியின் வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
  2. மலர்களின் படங்களும் வாசகங்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. மலர்களின் படங்கள் மனதை கவர்கிறது.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin