திங்கள், 23 அக்டோபர், 2023

ஆயுத பூஜை வாழ்த்துகள்! - நவராத்திரி பொம்மைக் கொலு 2023- (பாகம் 2)

நான் பார்த்த கொலுக்கள் நான்கின் தொகுப்பு:

தங்கை வீட்டுக் கொலு

#1


#2
குடும்ப அமைதியின் அடையாளமாகத் தம்பதியர் அணிவகுப்பு:

#3 இந்த வருடப் புதுவரவாக,
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஆண்டாள்

மேலும் சில மகாபாரதக் கதாபாத்திரங்கள்:

#4 
பரந்தாமன்


#5 
பார்த்திபன்

#6 
கடோத்கஜன்

அண்ணன் (பெரியம்மா மகன்) வீட்டுக் கொலு:
#7

#8 
சிப்பிக்குள் பிள்ளையார்

#9 
தாமரைக் குளத்தில் கனகவேல்


தம்பி (பெரியம்மா மகன்) வீட்டுக் கொலு:
#10


#11 
இந்த வருடப் புதுவரவாக.. 
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை

எங்கள் குடியிருப்பிலுள்ள தோழி வீட்டுக் கொலு:
#12

#13 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் படைக்கப்பட்ட பிள்ளையார்

#14
என்னைக் கவர்ந்த, 
ஊஞ்சலாடும் திருவாரூர் கமலாம்பிகை


எங்கள் இல்லத்தில்..
ஏடு அடுக்கி ஆயுத பூஜை

#15

#16
வாசலில் சரஸ்வதியை வரவேற்ற கோலம்:

#17
ஆயுத பூஜை - விஜய தசமி வாழ்த்துகள்!

***

பாகம் 1: இங்கே.

7 கருத்துகள்:

  1. சிப்பிக்குள் பிள்ளையார் முதலிடம்.  இரண்டாவது இடத்தையும் அந்த இன்னொரு பிள்ளையாரே பிடித்துக் கொள்கிறார்.  மூன்றாவது ஊஞ்சலாடும் மீனாட்சியும், உங்கள் வீட்டு அம்மனும்.  ஏடு அடுக்கி?  கண்ணில் படவில்லையே?

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வருடமும் ஏடு அடுக்கி அதன் மேல் வஸ்திரம் அணிவித்து சரஸ்வதியை எழுப்புவோம். ஏட்டின் மேலிருந்து அருள்பாலிக்கிறார் அன்னை சரஸ்வதி:). விஜயதசமி பூஜையை முடித்ததும் ஏட்டினைப் பிரித்து வாசிப்பது வழக்கம்.

    உங்கள் மனம் கவர்ந்தவற்றின் வரிசையைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது, தங்கை வீட்டின் இந்த வருடப் புதுவரவாக என் மனம் கவர்ந்த ஆண்டாளை சேர்க்க மறந்து விட்டதை:). இப்போது பதிவில் சேர்த்து விட்டேன்.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்து கொலு படங்களும் அருமை.

    முதல் பகுதி பார்த்தேன். கருத்து போடவந்தேன், அதற்குள் இரண்டாம் பகுதி வந்து விட்டது.
    எல்லா பொம்மைகளும் மிக அழகு..

    நானும் மகன் வீட்டு கொலு பதிவு போட்டு இருக்கிறேன். போன வருடம் நவராத்திரி 9 நாளும் பதிவு போட்டேன். இந்த வருடம் இரண்டு நாள் கோவிலுக்கு போனேன், மூன்று கொலு பார்த்தேன். இன்னும் ஒன்று பகிரவில்லை.

    உங்கள் வீட்டு அம்மன் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மகன் வீட்டுக் கொலு மிக அழகு. நேரமிருக்கையில் மற்றமொரு கொலுவின் படங்களையும் பகிர்ந்திடுங்கள். நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin