ஞாயிறு, 5 நவம்பர், 2023

கனவு நனவாகும்

 #1

“எவரும் தமது அப்பாவித்தனத்தை இழப்பதில்லை. 
ஒன்று, 
அது எடுத்துக் கொள்ளப் படுகிறது 
அல்லது 
விரும்பிக் கொடுக்கப்பட்டு விடுகிறது.”
[தேன் சிட்டு]

#2
“மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலாததால்  
உங்கள் மதிப்பு ஒருபோதும் குறைந்து விடுவதில்லை.”
[இந்திய சாம்பல் இருவாச்சி]

#3
“ஒவ்வொன்றிலும் ஆச்சரியம் உள்ளது, 
இருட்டிலும் மெளனத்திலும் கூட, 
நான் கற்று கொள்கிறேன், 
எந்தவொரு நிலையில் 
நானிருப்பினும், 
மனநிறைவுடன் இருக்க.” 
_ Helen Keller
[அக்காக் குயில்]

#4
“வாழ்க்கை சிரமமாகத் தெரிகிறது.. 
நமக்கு எளிதாகக் கிடைப்பவற்றைக் 
கொண்டாடத் தெரியாததால்.”
 _ Seohyun
[மணிப்புறா]

#5
“எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்து தொடங்குங்கள், 
என்ன இருக்கிறதோ அதனை வைத்து.”
_ Jim Rohn.
[செந்தூர்ப் பைங்கிளி]

#6
“உங்கள் கனவு உயிர்ப்புடன் இருக்குமாயின், 
ஒரு நாள் அது நனவாகும்.”
[காட்டுச் சிலம்பன்]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 185
பறவை பார்ப்போம்.. - பாகம்: 108
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

10 கருத்துகள்:

  1. பறவைகள் படங்களும் வரிகளும் அருமை. கிளி கிளிக்ஸ் செம

    கீதா

    பதிலளிநீக்கு
  2. //வாழ்க்கை சிரமமாகத் தெரிகிறது, சுலபமாக கிடைப்பவற்றை கொண்டாடத் தெரியாததால்// 200% உண்மை. பறவைகள் படங்கள் அழகு!

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் எல்லாம் அழகு. பறவைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அழகு.சிந்தனைகள் சிறப்பு.

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin