Monday, March 4, 2013

புன்னகை 71வது இதழ் - எனது கவிதைகளின் சிறப்பிதழாக..


கேட்பினும் பெரிதுகேள், ‘புன்னகை’ சிற்றிதழின் எழுபத்தியோராவது இதழ் எனது கவிதைகளின் சிறப்பிதழாக வெளியாகியிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

முப்பத்தியொரு பக்கங்கள் கொண்ட இதழில் பனிரெண்டு பக்கங்கள் ஒதுக்கி, என்னைப் பற்றிய சிறுகுறிப்புடன் 11 கவிதைகளை, பொருத்தமான படங்களுடன் சிறப்பாக வெளியிட்டிருக்கும் புன்னகைக்கு நன்றி!


ஏதேனும் ஒரு படத்தின் மேல் click செய்தால் Light Box-ல் பக்கங்களை வரிசையாகப் பெரிதாகக் காண இயலும். (தேவைப்பட்டால் ctrl மற்றும் +, keys ஒருசேர அழுத்தி இன்னும் பெரிதாக்கிடலாம்.)

இணையத்தில் மட்டும் வெளியாகி முத்துச்சரத்தில் பகிர்ந்த கவிதைகளான இருப்பு, சூதாட்டம், வண்ணக் குடைகள் விற்பனைக்கு, யுத்தம், அவர்களின் கதைகள், அவள், இறக்கைகள், நட்சத்திரங்கள், கூட்டல் கழித்தல், உண்மை, இலைகள் பழுக்காத உலகம்:
 


***

கவிதைகள் குறித்து ஒவ்வொரு இதழிலும் ஆசிரியர் திரு. க.அம்சப்ரியா அவர்கள் எழுதி வரும் முதல் பக்கம் நான் விரும்பி வாசிக்கிற ஒன்றாகும். அன்றாடம் நம் உடன் வரும் சொற்கள் எப்படி உணர்வாய் கவிதையாய் வாழ்வை நமக்கு நெருக்கமாக்குகின்றன என்பதை அற்புதமாய்ச் சொல்லியிருக்கிறார் இந்த இதழில்:

“விடிந்து விடிவதற்குள் ஒரு கொத்துப் பூக்களை ஏதியபடி அழைப்பு மணியை அழுத்திய சொற்கள், சட்டென்று முகம் திருப்பிக் கொண்டு போகிறபோது ஏதோ ஒரு இதயம் சட்டென்று விசும்பத் துவங்கி விடுகிறது.

காலையுணவில் விக்கிக்கொண்டபோது ஒரு கோப்பை தன்ணீரோடு அக்கறையாய் உச்சந்தலையை வருடிய சொற்கள் காரணமற்றுப் புறக்கணித்துப் போகிற போது, ஒரு மரணத்திற்கான தேதி நிச்சயப்படுகிறது.

அதிகாரத்தின் நெருப்பு சுட்டெரிக்கும் போது தோள்தட்டி ஆறுதலாய் கண்ணீரை சுண்டியெறிந்த சொற்கள், அடையாளம் தெரியாதது போல் ஒளிந்து கொள்கிறபோது, ஒரு யுகத்தின் நம்பிக்கையில் தீப்பற்றிக் கொள்கிறது. 

எல்லாக்கரங்களுக்கும் நான் பொருத்தமான துணையென்று கைகோர்க்கிற ஒரு சொல் அன்பில்கசிந்து கவிதையாகி விடுகிறது.

அனைத்து உரிமை மீறல்களின் போதும், எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணை வரும் ஒரு சொல், தோழமையான கவிதையாகி விடுகிறது.

புறக்கணிக்கப்பட்டவர்களின் ஆயுதமேந்தும் ஒரு சொல் கவிதையாகி விடுகிறது.

கவிதையைப் புரிகிறபோது வாழ்க்கையும் நெருக்கமாகிறது. வாழ்க்கை நெருக்கமாகிறபோது கவிதை உணர்வாகி விடுகிறது.

உணர்வாய்... கவிதையாய்... அமையட்டும் வாழ்வு!
***


இரு மாதங்களுக்கொரு முறை வெளியாகும் புன்னகை இதழின் ஆண்டுச் சந்தா ரூ.75.
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை,
ஆனை மலை- 642104
தொலைபேசி:04253-283017 (செ.ரமேஷ் குமார்)
மின்னஞ்சல்:punnagaikavi@gmail.com
*****42 comments:

 1. அத்தனையும் அருமை.வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

  ReplyDelete
 2. வாழ்த்துகள். கருப்பு வெள்ளையில் எழுத்துகள் பெரிதாக்கினாலும் சரியாகப் புலப்படவில்லை என்றாலும் சுட்டி தொட்டு ஆங்காங்கே சென்று படித்த கவிதைகள்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டேன்!

  ReplyDelete
 3. பாராட்டுக்கள்.
  பத்திரிகை பற்றி அறியாதிருப்பதற்கு வருந்துகிறேன். கவிதைகளுக்கென்றே ஒரு சிற்றிதழா? very nice.

  ReplyDelete
 4. ஆஹா.. அசத்தல். முத்துச்சரத்தில் மேலும் பல விலைமதிப்பற்ற முத்துகள் வந்து சேர வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. அனைத்தும் அருமை...

  உணர்வாய்... கவிதையாய்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. உங்களின் அருமையான கவிதைகளை சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். பார்க்கவே சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய நிறைய வெற்றிகள் உஞ்களை அடைய என் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. உண்ர்வாய், கவிதையாய் வாழட்டும் வாழ்வு//
  அருமை , வாழ்த்துக்கள்.

  புன்னகை 71வது இதழில் சிறப்பிதழாக உங்கள் கவிதைகள் சிறப்பாக இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  மேலும், மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.


  ReplyDelete
 8. பலவித கருப்பொருள்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் மிகச்சிறப்பாக இருக்கின்றன.

  இரவுக்காவலன், மன்னிப்பை யாசிப்பிடாதவள்... என வாசிப்பாளரை வசியப்படுத்துகின்றன.

  வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள் மா ராமலக்ஷ்மி.
  எனக்குக் கவிதைகள் வாசிப்பதுச் சற்று முயன்ற பிறகு முடிந்ததூ.
  கடைசி வரிகள் புன்னகை ஆசிரியை எழுதியதா. இல்லை உங்கள் கவிதையா.

  மிகவும் அருமை.அருமை.
  சொல்லின் அருமை, கவிதைவடிவில் உள்ளத்திலிருந்து வரும்போதுதான் எத்தனை ஏற்றம் பெறுகிறது.!

  ReplyDelete
 10. புன்னகை இதழுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. புன்னகையுடன் நான் அளிக்கும் வாழ்த்துகளையும் ஏற்கவும்!

  ReplyDelete
 12. அருமையான் கவிதைகள் புறகணிக்க பட்டவர்களின் ஒரு சொல் ஆயுதமாவது கவிதை என்பது அருமை

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்.அருமையாக உள்ளது.

  ReplyDelete
 14. பொன்னகையாய் ஆன புன்னகை சிறப்பு இதழ்! வாழ்த்துக்கள்! Profile பார்த்தேன். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில் பட்டம் பெற்ற தாங்கள், மொழிபெயர்ப்பு துறையில் சில நூல்களை தமிழாக்கம் செய்வதில் ஈடுபடலாமே? இது தமிழுக்கு ஒரு தொண்டாகும்.

  ReplyDelete
 15. புன்னகை இதழ் பார்த்தேன்

  அருமையான கவிதைகளை வெளியிட்டு இருக்கிறீர்கள்

  சகோதரி ராமலக்ஷ்மி அவர்களின் கவிதைகளையும் படித்தேன்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  ReplyDelete
 16. வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் கவிதை மழை.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

  அருமையாக இருக்கு.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்..அருமையா இருக்கு

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.. அருமை..:)

  ReplyDelete
 20. இன்னும் ஓர் சிறகு!! வாழ்த்துகள்.

  முன்பொருவர் (ஆசிரியர்??) தங்களின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியதும் நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
 21. @ஸ்ரீராம்.,

  படத்தை சுட்டிய பிறகும் வாசிப்பதில் சிரமம் இருப்பதாக நீங்கள் சொன்னதன் பேரில் அடைப்புக்குள் இன்னொரு குறிப்பும் சேர்த்து விட்டேன்: /தேவைப்பட்டால் ctrl மற்றும் +, keys ஒருசேர அழுத்தி இன்னும் பெரிதாக்கிடலாம்./

  ஆம், அனைத்துமே நீங்கள் முன்னர் வாசித்திருக்க வாய்ப்புள்ளது. நன்றி ஸ்ரீராம்:).  ReplyDelete
 22. @அப்பாதுரை,

  நன்றி:)! ஆம். கவிதைகளுக்கு மட்டுமேயான சிற்றிதழ். அறுபது கவிஞர்களின் படைப்புகளோடு வெளிவந்த புன்னகையின் அறுபதாவது இதழிலும் என் கவிதை இடம் பெற்றிருந்தது.

  ReplyDelete
 23. @கோமதி அரசு,

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 24. @சத்ரியன்,

  வருகைக்கும், வாசித்துப் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா. எனது கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து ஊக்கம் தருபவர்களில் நீங்களும் முக்கியமானவர் ஆயிற்றே.

  கடைசி வரி ஆசிரியர் (ஆசிரியை அல்ல) எழுதியதே. குழப்பம் தவிர்க்க திரு. அம்சப்பிரியா என திருத்தம் செய்து விட்டேன். ஒவ்வொரு இதழிலும் கவிதைகள் குறித்து முதல்பக்கத்தில் மிக அருமையாக எழுதி வருகிறார்.

  ReplyDelete
 26. @வல்லிசிம்ஹன்,

  புன்னகை ஆசிரியரிடம் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்:).

  ReplyDelete
 27. @malar balan,

  கருத்துக்கு நன்றி மலர் பாலன்.

  ReplyDelete
 28. @தி.தமிழ் இளங்கோ,

  நூல் தமிழாக்கத்திற்கு நிறைய நேரம் தேவைப்படும். பார்க்கலாம். தற்சமயம் அதீதம் இணைய இதழுக்காகக் கவிதைகளை தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். வாழ்த்துகளுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 29. @Krishnamachary Rangaswamy,

  புன்னகை இதழிலிலேயே வாசித்தது அறிந்து மகிழ்ச்சி:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 30. @ஹுஸைனம்மா,

  ஆம், பேராசிரியர். திருவாரூர் கல்லூரியில் என் வலைப்பூவை வைத்து இணையத்தில் இலக்கியம் எனும் தலைப்பில் உரையாற்றியது போல, சமீபத்தில் இன்னொரு கல்லூரியிலும் உரையாற்றியதாகத் தெரிவித்தார். நன்றி ஹுஸைனம்மா:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin