திங்கள், 23 ஏப்ரல், 2012

சூதாட்டம் - சொல்வனத்தில்..


கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
மனிதர்கள்

சிப்பாயாக
குதிரை வீரனாக
மதகுருவாக
யானை மேல் தளபதியாக
உயர்வு தாழ்வுகள்
வசதி வாய்ப்புகளுக்கேற்ப.

அதிக சக்தி கொண்டவர்
ஆளும் அரசியாக
அரியணைக் குடும்பமே
கட்டிக் காக்கப்பட வேண்டிய
ராஜாதி ராஜவாக.

விதியை எதிர்த்து
விதிமுறைக்கு உட்பட்டே
நகர வேண்டிய களத்தில்
சீறவும் சீவவும்
தாராளமாக அனுமதி.

பயந்து பதுங்கவும்
ஒதுங்கி வழிவிடவும்
உண்டு அனுமதி என்றாலும்
பலவீனங்கள் பலங்களால்
பந்தாடப்படும்
பலகைக்கு உள்ளேயேதான்
போராட்டம்.

கொய்து
எல்லைக்கு அப்பால் எறியப்படும்
நொடி வரையிலும்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
காலம்.
***

17 ஏப்ரல் 2012 சொல்வனத்தில்.., நன்றி சொல்வனம்!

படம்: கவிதையுடன் வெளியானது..

42 கருத்துகள்:

  1. செஸ் போர்டை வைத்து இப்படி ஒரு கவிதையா .., வியக்கிறேன் ..!

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் செஸ் விளையாடும்போது காய்களை வெட்டணுமா ன்னு யோசனை வரும். நீயா நானா என்ற போட்டி வரும்போது சீவவும் சீறவும்தான் வேண்டி இருக்கிறது.
    நல்லவேளை நாமரசியலில் இல்லை:)
    அற்புதமான சொல்லாடல் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. //பயந்து பதுங்கவும்
    ஒதுங்கி வழிவிடவும்
    உண்டு அனுமதி என்றாலும்
    பலவீனங்கள் பலங்களால்
    பந்தாடப்படும்//

    இளைச்சவனைக் கண்டா வலுத்தவனுக்குக் கொண்டாட்டம்.. செஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? :-))

    பதிலளிநீக்கு
  4. //அதிக சக்தி கொண்டவர்
    ஆளும் அரசியாக
    அரியணைக் குடும்பமே
    கட்டிக் காக்கப்பட வேண்டிய
    ராஜாதி ராஜவாக.//

    அசத்தலான வரிகள். வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. //பயந்து பதுங்கவும்
    ஒதுங்கி வழிவிடவும்
    உண்டு அனுமதி என்றாலும்
    பலவீனங்கள் பலங்களால்
    பந்தாடப்படும்
    பலகைக்கு உள்ளேயேதான்
    போராட்டம்.//

    /உள்ளேயே தான் போராட்டம்./

    அழகிய அர்த்தம் பொதிந்த அற்புதமான வரிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இது நிச்சயமாக செஸ் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சொல்லும் கவிதையில்லை. மறைபொருளாய் பற்பல அர்த்தங்கள், எல்லா காலங்களிலும் புதிது புதிதாய்.. காலங்கடந்து நிற்கவிருக்கும் ஒரு கவிதை, செஸ் ஆட்டம் போல..

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கைக் கட்டங்கள்.... கவிப் பார்வையில் எதுவும் தப்புவதில்லை!

    பதிலளிநீக்கு
  8. எல்லா வரிகளும் அருமை...கடைசி வரிகள்..மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  10. //பயந்து பதுங்கவும்
    ஒதுங்கி வழிவிடவும்
    உண்டு அனுமதி என்றாலும்
    பலவீனங்கள் பலங்களால்
    பந்தாடப்படும்
    பலகைக்கு உள்ளேயேதான்
    போராட்டம்//

    அருமை அக்கா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. சதுரங்க விளையாட்டைப் பற்றிய அழகிய கவிதை வாழ்க்கைச் சதுரங்கத்திற்கும் பொருந்தியிருப்பதை வியந்து ரசித்தேன். அருமையான சொல்லாடல் உங்களுடையது. மிக ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  12. அற்புதம் ராமலக்ஷ்மி .உலகின் சதுரங்கத்தில்
    நாம் யார்...

    பதிலளிநீக்கு
  13. சதுரங்க விளையாட்டும் வாழ்வும் ஒன்றுதானென நான் எப்போதும் நினைப்பதுண்டு.எழுதி வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் அக்கா.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  14. இங்கேயும்
    பவர் இல்லாத ராஜாவை
    காக்க 15 பேர்....

    i mean raja can move only one step at a time, at least low power soldier can move 2 steps when starts...

    பதிலளிநீக்கு
  15. செஸ் போர்டு கவிதை...
    நல்ல கவிதை.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. செஸ் போர்டை வைத்தே செதுக்கி விட்டீர்கள் கவிதையை.

    பதிலளிநீக்கு
  17. கொய்து
    எல்லைக்கு அப்பால் எறியப்படும்
    நொடி வரையிலும்
    துரத்திக் கொண்டேயிருக்கிறது
    காலம்.//

    இறைவனின் சதுரங்க பலகையில் நாம் எல்லாம் விளையாட்டு காய்கள் தானே.!
    காலகணக்கு அவன் கையில் அல்லவா!

    நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. சதுரங்க ஆட்டத்தில் கவிதை. அருமையாய் இருந்ததுங்க.

    பதிலளிநீக்கு
  19. சதுரங்கம் கவிதை சொன்ன விதம் அழகு

    பதிலளிநீக்கு
  20. பயந்து பதுங்கவும்
    ஒதுங்கி வழிவிடவும்
    உண்டு அனுமதி என்றாலும்
    பலவீனங்கள் பலங்களால்
    பந்தாடப்படும்
    பலகைக்கு உள்ளேயேதான்
    போராட்டம் //

    அருமை அருமை
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. வரலாற்று சுவடுகள் said...
    //செஸ் போர்டை வைத்து இப்படி ஒரு கவிதையா .., வியக்கிறேன் ..!//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. Lakshmi said...
    /வாழ்த்துகள் . பதிவு நல்லா இருக்கு./

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  23. வல்லிசிம்ஹன் said...
    /நீயா நானா என்ற போட்டி வரும்போது சீவவும் சீறவும்தான் வேண்டி இருக்கிறது.
    நல்லவேளை நாமரசியலில் இல்லை:)
    அற்புதமான சொல்லாடல் ராமலக்ஷ்மி./

    நன்றி வல்லிம்மா:)!

    பதிலளிநீக்கு
  24. அமைதிச்சாரல் said...
    /இளைச்சவனைக் கண்டா வலுத்தவனுக்குக் கொண்டாட்டம்.. செஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? :-))/

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  25. புவனேஸ்வரி ராமநாதன் said...
    /அசத்தலான வரிகள். வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி./

    நன்றி புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  26. வை.கோபாலகிருஷ்ணன் said...
    /அழகிய அர்த்தம் பொதிந்த அற்புதமான வரிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்./

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. T.N.Elangovan said...
    / மறைபொருளாய் பற்பல அர்த்தங்கள், எல்லா காலங்களிலும் புதிது புதிதாய்.. காலங்கடந்து நிற்கவிருக்கும் ஒரு கவிதை, செஸ் ஆட்டம் போல../

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம். said...
    /வாழ்க்கைக் கட்டங்கள்.... கவிப் பார்வையில் எதுவும் தப்புவதில்லை!/

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  29. பாச மலர் / Paasa Malar said...
    /எல்லா வரிகளும் அருமை...கடைசி வரிகள்..மிகவும் அருமை./

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  30. நாடி நாராயணன் (Nadi Narayanan) said...
    /வாழ்த்துகள் அருமையான கவிதை/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. சே. குமார் said...
    /அருமை அக்கா.
    வாழ்த்துக்கள்./

    நன்றி.

    பதிலளிநீக்கு
  32. கணேஷ் said...
    /சதுரங்க விளையாட்டைப் பற்றிய அழகிய கவிதை வாழ்க்கைச் சதுரங்கத்திற்கும் பொருந்தியிருப்பதை வியந்து ரசித்தேன்./

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  33. சக்தி said...
    /அற்புதம் ராமலக்ஷ்மி .உலகின் சதுரங்கத்தில்
    நாம் யார்.../

    நன்றி சக்தி.

    பதிலளிநீக்கு
  34. ஹேமா said...
    /சதுரங்க விளையாட்டும் வாழ்வும் ஒன்றுதானென நான் எப்போதும் நினைப்பதுண்டு.எழுதி வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் அக்கா.வாழ்த்துகள் !/

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  35. babu said...
    /இங்கேயும்
    பவர் இல்லாத ராஜாவை
    காக்க 15 பேர்..../

    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  36. வெங்கட் நாகராஜ் said...
    /செஸ் போர்டு கவிதை...
    நல்ல கவிதை.

    வாழ்த்துகள்./

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  37. ஸாதிகா said...
    /செஸ் போர்டை வைத்தே செதுக்கி விட்டீர்கள் கவிதையை./

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  38. கோமதி அரசு said...
    /நல்ல கவிதை ராமலக்ஷ்மி./

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  39. கோவை2தில்லி said...
    /சதுரங்க ஆட்டத்தில் கவிதை. அருமையாய் இருந்ததுங்க./

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  40. மனசாட்சி™ said...
    /சதுரங்கம் கவிதை சொன்ன விதம் அழகு/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. Ramani said...
    /மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin