கைபிடித்துக் கதைபேசி நடந்த நாட்களும்
பாசத்தால் நனைந்த நிகழ்வுகளும்
நெஞ்சோடு இருந்தாலும்
நிழற்படங்களாலேயே
நினைவில் பொருத்திப் பார்த்தத்
தந்தையின் முகத்தைக்
கண்டேன் கனவில் நேற்று.
கம்பீரத் தோற்றம்
அதே கணீர் சிரிப்பு.
தேடுகின்றன அவர் கண்கள்
தான் விட்டுச் சென்ற
எட்டு வயதுச் சிறுமியை.
ஏற்றுக்கொள்ள இயலவில்லை
மகளென்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நரையோடும் சிகையோடு
அவரினும்
அதிக வயதாகி நின்றிருந்த என்னை..
மறையாத சூரியனின் வெளிச்சத்தில்
தேயாத முழுநிலவைக் காண முடிகிற
தான் வாழும் உலகில்
வாடாத மலர்களையும்
பழுக்காத இலைகளையுமே
பார்த்துப் பழகிவிட்டவருக்கு.
***
படம் நன்றி: இணையம்
18 ஆகஸ்ட் 2012, ‘மலைகள்’ எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்!
அப்பா....
பதிலளிநீக்குமறையாத நிலவு.சூரியன்.நித்தியவாழ்வில் அப்பா.
தேய்ந்து வளரும் வாழ்வில் நாம்.
அப்பாவுக்கு வணக்கம் ராமலக்ஷ்மி.
நெகிழ வைத்த கவிதை..
பதிலளிநீக்குNo words but few drops of tears rolled on comment box
எட்டில் விட்டுச் சென்ற அப்பா-மகளின் மனக் கட்டிலில் உறங்குகிறார்!அப்பப்பா!!அருமை!
பதிலளிநீக்குஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை...
பதிலளிநீக்குமனம் கனத்தது...
tm3
உணர்வுபூர்வமான கவிதை..
பதிலளிநீக்குஆழகிய கவிதை
பதிலளிநீக்குஅருமையான உணர்வுகளுடன்.
பராட்டுக்கள்.
இறந்த அப்பாவின் நினைவு ?
பதிலளிநீக்குமனப் பிம்பங்களுக்கு வயதாவதில்லை! அருமையான கனவு, கவிதை.
பதிலளிநீக்குமனதை நெகிழவைக்கின்றது.
பதிலளிநீக்குஅருமையான கவிதை நல்லா இருக்கு
பதிலளிநீக்குஅப்பாக்களின் உலகில் பிள்ளைகளுக்கு என்றுமே வயதாவதில்லை. உங்கள் கற்பனை அருமை.
பதிலளிநீக்குஇந்த கவிதையை படித்ததும் எனக்கு அப்பா ஞாபகம் வந்துவிட்டது..நெகிழ்வாக இருக்கு....
பதிலளிநீக்கு@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குஆம், நன்றி வல்லிம்மா.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
@goma,
பதிலளிநீக்குநீங்காத நினைவுகள்.
@புலவர் சா இராமாநுசம்,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@T.N.Elangovan,
பதிலளிநீக்குமிக்க நன்றி இளங்கோவன்.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி vgk sir.
@kaviyazhi.blogspot.com,
பதிலளிநீக்குசரியே. நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஉண்மை. நன்றி ஸ்ரீராம்.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@Lakshmi,
பதிலளிநீக்குநன்றி லஷ்மிம்மா.
@ezhil,
பதிலளிநீக்குஅழகாகச் சொல்லிவிட்டீர்கள் எழில். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@S.Menaga,
பதிலளிநீக்குஇயல்பே. உங்கள் அப்பாவுக்கு என் வணக்கங்கள்.
நன்றி மேனகா.
எனக்குள்ளும் ஏதோ நினைவு வர அழுதேவிட்டே அக்கா !
பதிலளிநீக்குமறையாத சூரியனின் வெளிச்சத்தில்
பதிலளிநீக்குதேயாத முழுநிலவைக் காண முடிகிற
தந்தையின் கம்பீரத் தோற்றம்
தனயளின் நினைவோட்டம் கனக்கிறது..
@ஹேமா,
பதிலளிநீக்குதங்கள் உணர்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஹேமா.
@இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
அப்பாவைப் பற்றிய கவிதை மனதை நெகிழவைத்து விட்டது.
பதிலளிநீக்குகவிதை அருமை.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
Very touching.
பதிலளிநீக்குYou have a great skill in expressing thoughts and emotions in words. Hats off !