புதன், 20 மார்ச், 2013

அங்கீகாரம் - ‘தென்றல்’ அமெரிக்க தமிழ் மாதாந்திரப் பத்திரிகையில்..


எழுத்தையும் ஒளிபடப் பயணத்தையும் முன் நிறுத்தியதொரு அங்கீகாரம்..  ‘தென்றல்’அமெரிக்க தமிழ் மாதாந்திரப் பத்திரிகையின் ‘மகளிர் சிறப்பிதழ்’ அட்டையிலும், ‘சாதனைப் பெண்கள்’ கட்டுரையிலும்.

தென்றல் பேசுகிறது..(தலையங்கம்)

“இந்த இதழின் அட்டையைப் பார்த்தாலே மகளிரில் எத்தனை வகைச் சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரலாம்.
மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளிகளைக் கொண்டிருந்தபோதும் மிகக் குறைந்த ஊதியமே பெறும் அமெரிக்க உணவகத் தொழிலாளிகளின் உயர்வுக்கு வெற்றிகரமாகப் போராடும் சாரு ஜெயராமன்; வாரியார் வழியில் ஹரிகதை கூறும் தேச. மங்கையர்க்கரசி; மோட்டர்பைக் வீராங்கனை சித்ரா ப்ரியா; ஆட்டோ ஓட்டுபவருக்கு மகளாகப் பிறந்து, இந்திய அளவில் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் தேர்வில் முதலாவதாக வந்த பிரேமா; புகைப்பட உலகில் சாதிக்கும் ராமலக்ஷ்மி என சாதனைப் பெண்களின் அணிவகுப்பு ஒன்று இந்த இதழில் உள்ளது. டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டிகளில் மிக அதிகத் திருக்குறள்களைப் பொருளோடு கூறி முதலாவதாக வந்த சீதாவை நினைத்தும் தென்றல் பெருமிதம் அடைகிறது. பெண்மை வாழ்கென்று கூத்திடும் கதை, கவிதை, கட்டுரைகளோடு இந்த நேர்த்தியான இதழை உங்கள் கையில் பணிவோடு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறோம்.

வாசகர்களுக்கு மகா சிவராத்திரி, புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

மார்ச் 2013”


நன்றி தென்றல்! 

அச்சில் மட்டுமின்றி இணையத்திலும் வெளியாகிற தென்றலின் தளத்தை முழுமையாக வாசிக்க நமது பெயர், மின்னஞ்சல் ஆகியவற்றைப் பதிவு செய்து நுழைய வேண்டும். அங்கே கட்டுரையை ஒலிவடிவிலும் கேட்டிட இயலும்.

மார்ச். 04, 2013

 


கட்டுரையைத் தயாரித்து வழங்கியிருக்கும் பா.சு.ரமணன் அவர்களுக்கும், ஒலிவடிவில் வழங்கியிருப்பவருக்கும் நன்றி!

மகளிர் தின மாதத்தில் ஹாட்ரிக் போல தினகரன், குமுதம் மகளிர் சிறப்பிதழ்களைத் தொடர்ந்து தென்றலிலும்! குமுதத்தில் நேர்காணல் தவிர்த்து மற்ற இரண்டும் எதிர்பாராதது. தென்றல் கட்டுரை குறித்த செய்தியை எனக்கு அறியத் தந்து வாழ்த்திய நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நன்றி:)! கடந்து வந்த பாதை சாதனை எனும் வரையறைக்குள் வருமா எனும் சங்கடம் எழுந்தாலும் இன்னொரு ஊக்கமாகக் கருதி ஏற்றுக் கொண்டு, உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
***

50 கருத்துகள்:


 1. இவ்வளவு பெயரும் புகழும் பெற்ற உங்களைப் பற்றி என் மகளிர் தின நினைவுகள் பதிவில் எழுதவில்லையே என்று ஆதங்கம் எழுகிறது. என்ன செய்ய. ? ஒருவரை ஒருவர் அறிய உதவிய சந்திப்பு அண்மையில்தானே நிகழ்ந்தது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. கேமரா ராணி - ‌வெகு பொருத்தமான பட்டம்! இன்னும் பல சிறப்புகளையும் மகிழ்வையும் நீங்கள் பெற மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. கடல் கடந்த அங்கீகாரம். உலக அளவில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.. ஹாட்ரிக்தான்..:) !

  பதிலளிநீக்கு
 5. ராமலக்ஷ்மி, மகளிர்தின மாதத்தில் ஹாட்ரிக் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
  மேலும், மேலும் சாதனை தொடர வாழ்த்துக்கள்.
  உலகப்புகழ் சாதனைக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி

  பதிலளிநீக்கு
 7. தென்றலை பார்த்தவுடனேயே வாழ்த்தவேண்டும் என நினைத்தேன்.. இதோ.. பிடியுங்கள்.. வாழ்த்துக்களை..

  பதிலளிநீக்கு
 8. மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  சாதனைகள் தொடரட்டும். ;)

  பதிலளிநீக்கு
 9. மென் மேலும் உயர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 11. @G.M Balasubramaniam,

  உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி GMB sir!

  பதிலளிநீக்கு
 12. ராமலக்ஷ்மி, ஹாட்ரிக் சாதனைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா....
  வாழ்த்துக்கள் அக்கா...
  உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் அக்கா...

  பதிலளிநீக்கு
 14. அப்படியா?! இந்த தென்றல் இதழ் இன்னும் பார்க்கவில்லை!

  வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 15. வாவ்... வாழ்த்துகள் மீண்டும்!

  பதிலளிநீக்கு
 16. @வருண்,

  அங்கிருக்கிறவர்கள் பார்த்துதான் எனக்கு சொன்னார்கள்:)! நன்றி வருண்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin