புதன், 27 ஜனவரி, 2010

பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010 - ( Bangalore Lalbagh Flower Show )

பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் வருடம் தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் மலர் கண்காட்சி பரபரப்பானது. இவ்வருடமும் 20ஆம்தேதி ஆரம்பித்து, கடந்த ஒருவாரமாக எட்டு லட்சம் பார்வையாளர்களை எதிர்கொண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த வருடத்தின் சிறப்பாக பலவண்ண ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட சுமார் 25 அடி உயர காவேரி மாதாவும், 40 அடிக்கு எழும்பி நின்ற குதுப்மினாரும், எண்ணத்தில் தேச ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அத்தனை சமயத்தினரின் பண்டிகைகளையும் சித்தரிக்கும் மலர் காட்சிகளும் அமைந்திருந்தன.

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் ப்ரெளசரில் 'view' க்ளிக் செய்து அதில் zoom-zoom in செய்து காணக் கேட்டுக் கொள்கிறேன்.]


அன்னை காவேரி

வளம் பெருக வரம் தரும் தாயே
நீ வரும்வழி பார்த்துக் காத்திருக்கும்..

எங்களையும் திரும்பிப் பார்த்திடுவாயே!
***

குதுப்மினார்
லட்சத்து இருபதாயிரம் ரோஜாக்களால் கோபுரத்தை வடிவமைத்த பூ அலங்கார வல்லுநர் காளிதாஸுக்கு பாராட்டுக்கள். [இன்னும் அருகாமையில் ரசிக்க விரும்பினால் படத்தைச் சுட்டுங்கள்!]
***

ஒவ்வொரு தூணிலும் மெகா பூப்பந்து

***‘மிலே சுர் மேரா துமாரா’

உன் சுரமும் என் சுரமும் சேர்ந்தால் நம் சுரமாகுமே
‘மிலே சுர் மேரா துமாரா’அனைவரும் அறிந்த தேசிய ஒருமைப்பாட்டு பாடல். நேற்று ஜூம் டிவியில் அவர்களும் டைம்ஸ் க்ரூப்பும் சேர்ந்து தயாரித்த இதன் புதிய ரீமிக்ஸினை அடிக்கடி ஒளிபரப்பினார்கள். பாடல் காட்சியைக் காண விரும்புவோருக்கு சர்வேசனின் பகிர்வு இங்கே!


“இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்!
திசைவேறானாலும்..
ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல்..
இசை..நம் இசை”


இசை மட்டும்தானா


இசைந்தால் பண்டிகைகளும்.. அன்பைக் கூடிப் பகிர்வதால் கொண்டாட்டங்களும்.. கூட நமதாகும்!


கிறுஸ்துமஸ்
***

ரம்ஜான்
***

புத்த பூர்ணிமா
***

தசரா
***

ஹோலி
***

வரலெட்சுமி
***
பூப்பூவா பூத்திருக்கு

மெத்து மெத்து மலர்கள் மொத்த மொத்தமாய்..


எண்ணம் நிறைக்கும் வண்ணங்களில்..


கண்ணைப் பறிக்கும் நிறங்களில்..


அழகாய் அணிவகுத்து..


க்ளாஸ் ஹவுஸ்
கண்டு களித்தோரும் காணச் செல்வோரும்..
குடியரசு தினத்தன்றே சென்றிருந்தேன். கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா? கோணம் பார்த்து வாகாய் பிடித்து க்ளிக்கிடப் போகையில் கையைத் தட்டி விடும் நெரிசல், காட்சிக்கு குறுக்கே வரும் நபர்கள், நகரச் சொல்லி அவசரப் படுத்தும் காவலர்கள் கெடுபிடி இவற்றிற்கிடையே இவ்வளவுதாங்க முடிந்தது.

அனைத்துப் படங்களும் க்ளாஸ் ஹவுஸ் உள்ளே மட்டுமே எடுக்கப் பட்டவை. தவிரவும் தோட்டம் எங்கிலும் காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த பல்வேறுரக பூச்செடிகள் மிதமான வெயிலிலும் இதமான காற்றிலும் வருகிறவர்களைப் பார்த்து சளைக்காமல் மலர்ச்சியுடன் தலையசைத்துக் கொண்டேயிருந்தன. அவற்றைப் பின் ஒரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

*** *** ***நன்றி விகடன்!


 • இப்பதிவின் தொடர்ச்சியாக, பாகம் இரண்டாக நான் பதிந்த ‘மலரோடு மலராக!

118 கருத்துகள்:

 1. பதிவை இனிமே தான்படிக்கணும்

  :))

  பதிலளிநீக்கு
 2. அன்னை காவேரியும், மற்ற அத்தனை படங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ரொம்பரொம்ப அழகு ராமலக்ஷ்மியக்கா.

  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. போட்டோஸ் எல்லாமே ஒரு சந்தோசம் தர்ற ஃபீல் பாக்கவே அழகாவும் சந்தோசமாவும் இருக்கும் மேடம் இவ்ளோ கூட்ட நெரிசல்லயும் அழகா படம்பிடிச்சுருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 4. பகிர்வுக்கு நன்றி! எப்படி தான் பொறுமையா செய்றாங்களோன்னு தோணுது!

  பதிலளிநீக்கு
 5. கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு அலங்காரமும் மதநல்லிணக்கத்தை காட்டுது...

  குதுப்மினார் படம் ரொம்ப அழகா இருக்கு....

  பதிலளிநீக்கு
 6. அருமை

  ஊருக்கு வந்த மாதிரி இருக்கிறது

  பதிலளிநீக்கு
 7. "கோணம் பார்த்து வாகாய் பிடித்து க்ளிக்கிடப் போகையில் கையைத் தட்டி விடும் நெரிசல், காட்சிக்கு குறுக்கே வரும் நபர்கள், நகரச் சொல்லி அவசரப் படுத்தும் காவலர்கள் கெடுபிடி"

  இவ்வளவு தொந்தரவுகளுக்கும் இடையே அழகாக படம் பிடித்து எங்களையும் பெங்களூர் லால்பாக் தோட்டத்திற்கு அழைத்து சென்றுவிட்டீர்கள் மேடம்.

  'வளம் பெருக வரம் தரும் தாயே
  நீ வரும்வழி பார்த்துக் காத்திருக்கும்..'

  காத்திருப்பது மட்டுமே தொடராமல் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் கலக்கலா இருக்கு!

  அந்த தசரா ல மேல கொஞ்சம் கட் ஆகிடுச்சு போல இருக்கு :-)

  பதிலளிநீக்கு
 9. அனைத்தும் அருமை.
  "எண்ணம் நிறைக்கும் வண்ணங்களில்". "கண்ணைப் பறிக்கும் நிறங்களில்" "குதுப்மினார்" ரொம்பப்பிடித்தது.

  பதிலளிநீக்கு
 10. மலர் கண்காட்சிக்கும் ஒரு பூங்கொத்து!

  பதிலளிநீக்கு
 11. கண்ணைப்பறிக்குது ,
  கருத்தை கவருது பூக்கள்.
  கட்டம் கட்டி எடுத்திருக்கீங்க சூப்பர்..

  பதிலளிநீக்கு
 12. கண் கொள்ளா காட்சிகள்.. வண்ணமயமாய் எண்ணங்களிலும் அழகு சேர்த்து விட்டது..

  பதிலளிநீக்கு
 13. இதைப் பார்த்தவுடன் என்னுள்ளே ஒரு
  கவிதை பூத்தது:

  இயற்கை எனும் இளைய கன்னி,
  வரும் மானுடனைப் பார்த்து,
  இதழ் விரித்து சிரிக்க..
  ஆங்கே
  மலர்கள் அனைத்தும்,
  பூத்தன மகிழ்வாக....!!!

  பதிலளிநீக்கு
 14. நல்ல‌ பகிர்வு. படங்கள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் அருமை மேடம்.

  நல்ல கூட்டம்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அழகு...அழகு... அழகு... கொள்ளை அழகு. தெரிந்திருந்தால் வந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கின்றன தங்கள் புகைப்படங்கள். படங்களிலாவது காணக் கிடைத்ததே என்று நன்றி சொல்லத் தோன்றுகிறது. நன்றி

  பதிலளிநீக்கு
 17. நெருக்கமா அதிக வண்ணங்கள் பார்க்கும்போது எனக்கு படம் எடுக்கவே ஒரு மாதிரி இருக்கும் மேடம்:))

  ஆனா உங்க படம் எல்லாம் அற்புதம். ரொம்ப தெளிவு, வண்ணங்கள் மாறாம அசத்திட்டீங்க...::))

  ---

  அட உங்க பக்கம் வந்த பின்னாடிதான் தெரிந்தது என் கவிதையும் பிரசுரமாயிருக்கு..:))

  குட் ப்ளாக் - you deserve it..:))

  பதிலளிநீக்கு
 18. படம் ஒவ்வொன்னும் கண்ணில் வந்து ஒட்டிக் கொள்ற மாதிரி.. தெளிவும், நிறமான நிறமுமாய்...நேரில் பார்த்தல் கூட இந்த அழகு உரைத்திருக்காது..

  பதிலளிநீக்கு
 19. நல்லா அருமையான படங்கள்

  கூட்டம் நிறையவா ..

  நேரில் பார்த்தது போன்றே உள்ளது .

  பதிலளிநீக்கு
 20. அருமையான ஒளிப்பதிவுகள் ... போக வேண்டும் என நினைத்துப் போக முடியாமல் போனது ...

  பதிலளிநீக்கு
 21. நீங்க என்ன இவ்ளோ நல்லா படம்லாம் எடுக்குறீங்க!!!!

  நான்லாம் இனிமேல் கேமராவை தொடுறாப்பிலே இல்லை- உங்க படத்தின் தரத்தைப் பார்த்த பிறகு!
  :)))

  சரிங்க, அந்த பூப்பூவா பூத்திருக்கு ஃபோட்டோல ஒரு பச்சைக்லர் போர்ட்ல கன்னடத்தில் ஏதோ எழுதி இருக்கே, அது என்னனு நீங்களா வாசிச்சு சொல்லுங்க!

  பதிலளிநீக்கு
 22. கண்கொள்ளாக்காட்சியா இருக்கு. குளிர்ச்சி.

  பதிலளிநீக்கு
 23. பகிர்வுக்கு நன்றிங்க..அருமையா இருக்கு படங்கள்

  பதிலளிநீக்கு
 24. அருமையான படங்கள் நன்றிங்கோ..(உடம்பு இப்போ தேவலையா மேடம்? )

  பதிலளிநீக்கு
 25. நல்ல படங்கள்.

  ///இசைவேறானாலும்..
  ஆழிசேர் ஆறுகள் முகிலாய்///

  இசைவேறானாலும் = திசைவேறானாலும்?

  பதிலளிநீக்கு
 26. ஆகா.... படங்களும் பகிர்வும் மிக அருமை... நன்றிங்க

  பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  பதிலளிநீக்கு
 27. எல்லா படங்களும் அருமையாக இருக்கு. எங்கள் பார்வைக்கு வைத்த உங்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. மலர் கண்காட்சியை நேரில் நாங்களும்
  ரசித்த உணர்வை தந்த உங்களுக்கு நன்றி.

  படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 29. புதுகைத் தென்றல் said...

  // me the first.//

  நீங்களேதான்:)!

  //பதிவை இனிமே தான்படிக்கணும்:))//

  படமாவது பார்த்தீங்களா:))?

  பதிலளிநீக்கு
 30. சுந்தரா said...

  //அன்னை காவேரியும், மற்ற அத்தனை படங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ரொம்பரொம்ப அழகு ராமலக்ஷ்மியக்கா.

  பகிர்வுக்கு நன்றி!//

  ரசித்ததற்கு நன்றி சுந்தரா!

  பதிலளிநீக்கு
 31. goma said...

  //அத்தனையும் அருமை//

  மிக்க நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 32. பிரியமுடன்...வசந்த் said...

  //போட்டோஸ் எல்லாமே ஒரு சந்தோசம் தர்ற ஃபீல் பாக்கவே அழகாவும் சந்தோசமாவும் இருக்கும் மேடம் இவ்ளோ கூட்ட நெரிசல்லயும் அழகா படம்பிடிச்சுருக்கீங்க...//

  உங்களை மகிழ்விக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி வசந்த்!

  பதிலளிநீக்கு
 33. சந்தனமுல்லை said...

  // பகிர்வுக்கு நன்றி! எப்படி தான் பொறுமையா செய்றாங்களோன்னு தோணுது!//

  ஆமாம் முல்லை. அசாத்திய பொறுமை தேவை இப்படி வடிவமைக்க.

  பதிலளிநீக்கு
 34. Sangkavi said...

  //படங்கள் அனைத்தும் அருமை...//

  மிக்க நன்றி சங்கவி.

  பதிலளிநீக்கு
 35. பிரியமுடன்...வசந்த் said...

  //கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு அலங்காரமும் மதநல்லிணக்கத்தை காட்டுது...//

  அதையே ஒரு தீம் ஆக எடுத்து செய்திருக்கிறார்கள். பாராட்டுவோம்.

  //குதுப்மினார் படம் ரொம்ப அழகா இருக்கு....//

  நன்றி. நேரம் கிடைத்தால் படத்தை ஒருமுறை சுட்டி ரசியுங்கள்.

  பதிலளிநீக்கு
 36. திகழ் said...

  //அருமை

  ஊருக்கு வந்த மாதிரி இருக்கிறது//

  நன்றி திகழ்.

  உங்களைப் போலவே இன்னும் சிலரும் சொல்லியிருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 37. aambalsamkannan said...

  //இவ்வளவு தொந்தரவுகளுக்கும் இடையே அழகாக படம் பிடித்து எங்களையும் பெங்களூர் லால்பாக் தோட்டத்திற்கு அழைத்து சென்றுவிட்டீர்கள் மேடம்.//

  மிக்க நன்றி:)!

  // 'வளம் பெருக வரம் தரும் தாயே
  நீ வரும்வழி பார்த்துக் காத்திருக்கும்..'

  காத்திருப்பது மட்டுமே தொடராமல் இருக்க வேண்டும்.//

  உண்மைதான், சரியாகச் சொன்னீர்கள்! அன்னை காவேரி காக்க வைக்காமல் அருள் பாலிக்கட்டும் எல்லோருக்கும்!

  பதிலளிநீக்கு
 38. ஜெரி ஈசானந்தா. said...

  //colourful.//

  நன்றி ஜெரி ஈசானந்தா!

  பதிலளிநீக்கு
 39. தமிழ் பிரியன் said...

  //Good pictures.
  Colorful post.... :)//

  பாராட்டுக்கு நன்றி தமிழ் பிரியன்:)!

  பதிலளிநீக்கு
 40. கிரி said...

  //படங்கள் கலக்கலா இருக்கு!//

  நன்றி. முதலில் பாராட்டு. அப்புறம் வருகிறது ஒரு குட்டு:))!

  //அந்த தசரா ல மேல கொஞ்சம் கட் ஆகிடுச்சு போல இருக்கு :-)//

  ஆமாம், கொஞ்சமல்ல ரொம்பவே. இரண்டு அதி உயரக் குடைகளை கவர் செய்யப் பார்த்தால் கீழே உள்ள காட்சிகள் கட் ஆகி விடுகின்றன.

  இரண்டு பக்கமும் நின்றிருந்த யானையெல்லாமும் ஃப்ரேமுக்குள் வர வைக்க நேரமில்லை நகரும் வரிசையில்.

  ஆகையாலேதான் ரிபிடிஷனாகத் தெரிந்தாலும் பரவாயில்லை என வைத்தேன் 5ஆவது படத்தை{மிலே சுர் மேரா துமாரா]. அதை சுட்டிப் பார்த்தால் தசரா குடைகள் யானைகள் எல்லாம் தெரியும்:)!

  பதிலளிநீக்கு
 41. மாதேவி said...

  //அனைத்தும் அருமை.
  "எண்ணம் நிறைக்கும் வண்ணங்களில்". "கண்ணைப் பறிக்கும் நிறங்களில்" "குதுப்மினார்" ரொம்பப்பிடித்தது.//

  பிடித்ததையும் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு ரொம்ப நன்றி மாதேவி. 'எண்ணம் நிறைக்கும் வண்ணமே' எனக்கு எல்லாவற்றிலும் ரொம்பப் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 42. ரொம்ப அழகாருக்கு; நேரில் பார்த்த திருப்தி.

  பதிலளிநீக்கு
 43. Mrs.Menagasathia said...

  // படங்கள் சூப்பர்ர்ர்...//

  நன்றி மேனகாசத்யா:)!

  பதிலளிநீக்கு
 44. அன்புடன் அருணா said...

  //மலர் கண்காட்சிக்கும் ஒரு பூங்கொத்து!//

  மலர்களுக்கு பூங்கொத்து. நன்றாக இருக்கிறது அருணா:)! நன்றி!

  பதிலளிநீக்கு
 45. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //கண்ணைப்பறிக்குது ,
  கருத்தை கவருது பூக்கள்.
  கட்டம் கட்டி எடுத்திருக்கீங்க சூப்பர்..//

  நன்றி முத்துலெட்சுமி. பார்வைக்கு வைக்கும் கவனத்துடனேயே கட்டம் கட்டினேன்:)!

  பதிலளிநீக்கு
 46. ரிஷபன் said...

  //கண் கொள்ளா காட்சிகள்.. வண்ணமயமாய் எண்ணங்களிலும் அழகு சேர்த்து விட்டது..//

  ரசித்தமைக்கு நன்றி ரிஷபன்.

  பதிலளிநீக்கு
 47. ஜெஸ்வந்தி said...

  //அருமையான படங்கள் தோழி.//

  பாராட்டுக்கு நன்றி ஜெஸ்வந்தி!

  பதிலளிநீக்கு
 48. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  //இதைப் பார்த்தவுடன் என்னுள்ளே ஒரு
  கவிதை பூத்தது:

  இயற்கை எனும் இளைய கன்னி,
  வரும் மானுடனைப் பார்த்து,
  இதழ் விரித்து சிரிக்க..
  ஆங்கே
  மலர்கள் அனைத்தும்,
  பூத்தன மகிழ்வாக....!!!//

  பூத்த கவிதையாலே வந்திருக்கும் பாராட்டில் என் மனமும் பூரித்தது. நன்றிகள் ராமமூர்த்தி!

  பதிலளிநீக்கு
 49. செ.சரவணக்குமார் said...

  //நல்ல‌ பகிர்வு. படங்கள் அனைத்தும் அருமை.//

  நன்றிகள் சரவணக்குமார்!

  பதிலளிநீக்கு
 50. அக்பர் said...

  //படங்கள் அருமை மேடம்.

  நல்ல கூட்டம்.

  பகிர்வுக்கு நன்றி.//

  கூட்டம் அதிகம்தான் அக்பர். ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 51. அமுதா said...

  //அழகு...அழகு... அழகு... கொள்ளை அழகு. தெரிந்திருந்தால் வந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கின்றன தங்கள் புகைப்படங்கள். படங்களிலாவது காணக் கிடைத்ததே என்று நன்றி சொல்லத் தோன்றுகிறது. நன்றி//

  ஏக்கத்தை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் படங்கள் அமைந்து போனதில் மகிழ்ச்சி. ரசித்தமைக்கு நன்றிகள் அமுதா!

  பதிலளிநீக்கு
 52. பலா பட்டறை said...

  //நெருக்கமா அதிக வண்ணங்கள் பார்க்கும்போது எனக்கு படம் எடுக்கவே ஒரு மாதிரி இருக்கும் மேடம்:))

  ஆனா உங்க படம் எல்லாம் அற்புதம். ரொம்ப தெளிவு, வண்ணங்கள் மாறாம அசத்திட்டீங்க...::))//

  உண்மைதான். எங்கும் ஒரே வண்ணமயம். படங்கள் நன்றாக வந்திருப்பதாக சொன்னதில் மகிழ்ச்சி:)!

  //அட உங்க பக்கம் வந்த பின்னாடிதான் தெரிந்தது என் கவிதையும் பிரசுரமாயிருக்கு..:))//

  கவிதையை படித்தேன். நன்று. தொடருங்கள் ஷங்கர். வாழ்த்துக்கள்:)!

  //குட் ப்ளாக் - you deserve it..:))//

  நன்றி:)!

  பதிலளிநீக்கு
 53. இராம்/Raam said...

  // Missing my bangaluru.... :( //

  திகழ் போலவே உங்களுக்கு ஊர் நினைவு! படங்களில் திருப்தி பட்டுக் கொள்ளுங்கள் இராம் இப்போதைக்கு!

  பதிலளிநீக்கு
 54. ஸ்ரீராம். said...

  //படம் ஒவ்வொன்னும் கண்ணில் வந்து ஒட்டிக் கொள்ற மாதிரி.. தெளிவும், நிறமான நிறமுமாய்...
  நேரில் பார்த்தல் கூட இந்த அழகு உரைத்திருக்காது..//

  அப்படியா சொல்கிறீர்கள்? நன்றி நன்றி:)!

  பதிலளிநீக்கு
 55. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //நல்லா அருமையான படங்கள்

  கூட்டம் நிறையவா ..

  நேரில் பார்த்தது போன்றே உள்ளது.//

  வார நாட்களை விட குடியரசு மற்றும் வார இறுதியில் அதிகமாயிருக்கும் கூட்டம் எப்போதுமே. ஒருவாரத்தில் 8 லட்சம் பார்வையாளர்கள்!!!

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்டார்ஜன்!

  பதிலளிநீக்கு
 56. G VARADHARAJAN said...

  //wonderful joyful enjoyful good

  g v R PUDUKKOTTAI//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் G V R!

  பதிலளிநீக்கு
 57. Nundhaa said...

  //அருமையான ஒளிப்பதிவுகள் ... போக வேண்டும் என நினைத்துப் போக முடியாமல் போனது ...//

  நன்றி நந்தா. அதனால் என்ன? அடுத்து வரும் சுதந்திர தின மலர் காட்சிக்கு செல்ல முயற்சியுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 58. மடல் வழியாக:

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th January 2010 02:35:01 PM GMT  Here is the link to the story: http://www.tamilish.com/story/175750

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  நன்றி தமிழிஷ்! தமிழ்மணம், த்மிழிஷ் இரண்டிலும் வாக்களித்த அனைவருக்கு என் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 59. வருண் said...

  //நீங்க என்ன இவ்ளோ நல்லா படம்லாம் எடுக்குறீங்க!!!!

  நான்லாம் இனிமேல் கேமராவை தொடுறாப்பிலே இல்லை- உங்க படத்தின் தரத்தைப் பார்த்த பிறகு!
  :)))//

  நன்றி:)! பாராட்டிய கையோடு நன்றாக மாட்டி விட்டு விட்டீர்களே!

  //சரிங்க, அந்த பூப்பூவா பூத்திருக்கு ஃபோட்டோல ஒரு பச்சைக்லர் போர்ட்ல கன்னடத்தில் ஏதோ எழுதி இருக்கே, அது என்னனு நீங்களா வாசிச்சு சொல்லுங்க!//

  ரொம்ப ஷார்ப்தான் நீங்க:))! அது தெரிஞ்சா நான் ஏன் ‘மெத்து மெத்து, எண்ணம் நிறைக்கும், கண்ணைப் பறிக்கும்’ என்றெல்லாம் நழுவப் போகிறேன்:))?

  பொறுமையாய் ஒவ்வொரு போர்டையும் படம் எடுத்து வந்தாவது கேட்டு அறிந்து பெயர்கள் சேர்த்திருக்கலாம்தான்.
  இனி கவனத்தில் கொள்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 60. சின்ன அம்மிணி said...

  //கண்கொள்ளாக்காட்சியா இருக்கு. குளிர்ச்சி.//

  உங்கள் பாராட்டு தருகிறது மனதுக்கு மகிழ்ச்சி. நன்றி அம்மிணி.

  பதிலளிநீக்கு
 61. புலவன் புலிகேசி said...

  //பகிர்வுக்கு நன்றிங்க..அருமையா இருக்கு படங்கள்//

  நன்றிகள் புலிகேசி.

  பதிலளிநீக்கு
 62. மோகன் குமார் said...

  //அருமையான படங்கள் நன்றிங்கோ..(உடம்பு இப்போ தேவலையா மேடம்? )//

  நன்றிகள் மோகன் குமார்! இப்போது பரவாயில்லை. பூக்களைப் பார்த்ததில் தனி உறசாகம் கிடைத்து விட்டதாக்கும்:)!

  பதிலளிநீக்கு
 63. பாத்திமா ஜொஹ்ரா said...

  //அசத்தல்//

  நன்றிகள் பாத்திமா ஜொஹரா!

  பதிலளிநீக்கு
 64. SurveySan said...

  //நல்ல படங்கள்.//

  நன்றிகள் சர்வேசன்!

  ***/ ///இசைவேறானாலும்..
  ஆழிசேர் ஆறுகள் முகிலாய்///

  இசைவேறானாலும் = திசைவேறானாலும்? /***

  கேள்விக்குறியே வேண்டாம்! ‘திசை’யே சரி. கவனக்குறைவு. உடனே திருத்தம் செய்து விட்டேன். சுட்டியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 65. ஆ.ஞானசேகரன் said...

  //ஆகா.... படங்களும் பகிர்வும் மிக அருமை... நன்றிங்க

  பாராட்டுகளும் வாழ்த்துகளும்//

  நன்றிகள் ஞானசேகரன்!

  பதிலளிநீக்கு
 66. குடந்தை அன்புமணி said...

  //எல்லா படங்களும் அருமையாக இருக்கு. எங்கள் பார்வைக்கு வைத்த உங்களுக்கு மிக்க நன்றி.//

  பகிரும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி அன்புமணி!

  பதிலளிநீக்கு
 67. கோமதி அரசு said...

  //மலர் கண்காட்சியை நேரில் நாங்களும்
  ரசித்த உணர்வை தந்த உங்களுக்கு நன்றி.//

  சந்தோஷம். நன்றிம்மா.

  //படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.//

  பூக்களின் அழகால் அவையும் அழகானது.

  பதிலளிநீக்கு
 68. ஹுஸைனம்மா said...

  // ரொம்ப அழகாருக்கு; நேரில் பார்த்த திருப்தி.//

  அதுவே என் நோக்கமும். மிக்க நன்றி ஹுஸைனம்மா!

  பதிலளிநீக்கு
 69. $$$$$ராமலக்ஷ்மி said...
  வருண் said...

  //நீங்க என்ன இவ்ளோ நல்லா படம்லாம் எடுக்குறீங்க!!!!

  நான்லாம் இனிமேல் கேமராவை தொடுறாப்பிலே இல்லை- உங்க படத்தின் தரத்தைப் பார்த்த பிறகு!
  :)))//

  நன்றி:)! பாராட்டிய கையோடு நன்றாக மாட்டி விட்டு விட்டீர்களே!$$$$

  இல்லங்க, ராமலக்ஷ்மி, நல்லாயிருக்குங்க, அருமையாக இருக்குங்க, வாழ்த்துக்கள்" னு எல்லாரும் சொல்லிட்டாங்க. அதே வாழ்த்தை வேற வார்த்தைகள் போட்டு சொல்லலாமேனுதான் முயன்றேன் :)

  $$$$//சரிங்க, அந்த பூப்பூவா பூத்திருக்கு ஃபோட்டோல ஒரு பச்சைக்லர் போர்ட்ல கன்னடத்தில் ஏதோ எழுதி இருக்கே, அது என்னனு நீங்களா வாசிச்சு சொல்லுங்க!//

  ரொம்ப ஷார்ப்தான் நீங்க:))! அது தெரிஞ்சா நான் ஏன் ‘மெத்து மெத்து, எண்ணம் நிறைக்கும், கண்ணைப் பறிக்கும்’ என்றெல்லாம் நழுவப் போகிறேன்:))?

  பொறுமையாய் ஒவ்வொரு போர்டையும் படம் எடுத்து வந்தாவது கேட்டு அறிந்து பெயர்கள் சேர்த்திருக்கலாம்தான்.
  இனி கவனத்தில் கொள்கிறேன்:)!

  January 28, 2010 7:19 PM$$$

  உங்களுக்கு கன்னடம் வாசிக்கத்தெரியுமானு பார்த்தேன். அஷ்டே! எனக்கும் வாசிக்கதெரியாதுரி!
  அர்த்தா ஆயித்தா?:)))

  பதிலளிநீக்கு
 70. படங்கள் அருமை. என்ன கேமரா உபயோகிக்கிறீங்க?

  பதிலளிநீக்கு
 71. அனைத்து படங்களும் அருமையா இருக்கு.

  படங்கள பார்த்த என் இணைய நண்பர் அடித்த கமெண்ட்...
  ’இவ்வளவு கூட்டத்திலேயே இப்படி அருமையா எடுத்திருக்காங்களே...அதெல்லாம் இல்லாம இருந்தா இன்னும் ப்ரம்மாதாமாக எடுத்திருப்பாங்க’னு சொன்னாருங்க.

  பதிலளிநீக்கு
 72. @ வருண்,

  //அதே வாழ்த்தை வேற வார்த்தைகள் போட்டு சொல்லலாமேனுதான் முயன்றேன் :)//

  இல்லையில்லை. அது பாராட்டெனப் புரிந்தேதான் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டேன். நான் மாட்டி விட்டதாகக் குறிப்பிட்டிருந்தது நீங்கள் வைத்த கன்னட பரீட்சையைத்தான்! ஆனால் உங்களுக்கும் தெரியாதென்பதில் ஒரு அற்ப சந்தோஷம்:)! நன்றி வருண்!

  பதிலளிநீக்கு
 73. கோகுல் said...

  //படங்கள் அருமை. என்ன கேமரா உபயோகிக்கிறீங்க?//

  Sony Cyber-shot W80, Nikon Coolpix 3700 இரண்டுமிருக்கும் கையோடு பையோடு. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 74. அட, DSLR கேமரா இல்லாமலே இவ்ளோ நல்லா எடுக்கிறீங்களே, சீக்கிரம் ஒரு கேனான் EOS45OD வாங்குங்க, இனிய நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 75. யவனராணி said...

  //அனைத்து படங்களும் அருமையா இருக்கு.//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி யவனராணி.

  // படங்கள பார்த்த என் இணைய நண்பர் அடித்த கமெண்ட்...
  ’இவ்வளவு கூட்டத்திலேயே இப்படி அருமையா எடுத்திருக்காங்களே...அதெல்லாம் இல்லாம இருந்தா இன்னும் ப்ரம்மாதாமாக எடுத்திருப்பாங்க’னு சொன்னாருங்க.//

  எனக்கும் பண்டிகை காட்சிகளை நிதானமாய் கவர் செய்ய முடியாததில் வருத்தமே. இருந்தாலும் எடுத்தவரையில் பரவாயில்லை என பகிர்ந்து கொண்டாயிற்று. உங்கள் நண்பருக்கும் என் நன்றிகளைச் சொல்லுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 76. கோகுல் said...

  //அட, DSLR கேமரா இல்லாமலே இவ்ளோ நல்லா எடுக்கிறீங்களே, சீக்கிரம் ஒரு கேனான் EOS45OD வாங்குங்க, இனிய நல்வாழ்த்துகள்!//

  என் ஆர்வத்தைப் பார்த்து வீட்டில் வாங்கிக் கொள்ளச் சொல்லியபடியே:)! ஆனால் DSLR இது போல கைக்கு அடக்கமாய் இருக்காதென்பதாலும், 'எனக்கு' அத்தனை user friendly ஆக இருக்குமா என்கிற சந்தேகத்திலும் தள்ளிப் போட்டு வருகிறேன். கையாள பொறுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது சோனிதான் என் ஃபேவரைட். சில விஷயங்களுக்கு நைகான் சுலபமாக ஒத்துழைக்கிறது. பார்க்கலாம். உங்க ஆலோசனையை மனதில் கொள்கிறேன். நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 77. நசரேயன் said...

  //அழகான படங்கள்//

  நன்றிகள் நசரேயன்!

  பதிலளிநீக்கு
 78. பேனாமுனை said...

  //SUPER//

  நன்றிகள் பேனாமுனை!

  பதிலளிநீக்கு
 79. புளியங்குடி said...

  //சிறப்பான பகிர்வு.//

  மிக்க நன்றி புளியங்குடி!

  பதிலளிநீக்கு
 80. புகைப்படம் எடுப்பது எப்படி? னு ஒரு துறைசார்ந்த பதிவு ஒன்னு போடுங்கோ... :-)

  பதிலளிநீக்கு
 81. " உழவன் " " Uzhavan " said...

  //புகைப்படம் எடுப்பது எப்படி? னு ஒரு துறைசார்ந்த பதிவு ஒன்னு போடுங்கோ... :-)//

  நானா??? நல்லா சொன்னீங்க:)!!!

  பதிலளிநீக்கு
 82. ////புகைப்படம் எடுப்பது எப்படி? னு ஒரு துறைசார்ந்த பதிவு ஒன்னு போடுங்கோ... :-)//

  நானா??? நல்லா சொன்னீங்க:)!!!//

  நீங்களே தான் :))

  மக்களின் நெரிசல்
  மலர்களின் குளுமை
  படங்களில் நேர்த்தி
  பகிர்ந்திட்ட மகிழ்ச்சி
  ....
  மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 83. சதங்கா (Sathanga) said...

  //நீங்களே தான் :))

  மக்களின் நெரிசல்
  மலர்களின் குளுமை
  படங்களில் நேர்த்தி
  பகிர்ந்திட்ட மகிழ்ச்சி
  ....
  மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.//

  கவிதையாய் வாழ்த்தியிருப்பதும்
  உழவனை வழிமொழிந்திருப்பதும்
  தருகிறது உவகை:)!

  நன்றிகள் சதங்கா!

  பதிலளிநீக்கு
 84. லால்பாக்கில் பலமுறை இந்த பூக்கண்காட்சியைப் பார்த்திருக்கிறேன் ராமலஷ்மி ஆனாலும் உங்க காமிரால கண்ட மாதிரி நேரில் கண்ட நினைவில்லை! அவ்வளவு தத்ரூபம்!
  கவிதை எழுத கைதுறுதுறுக்கிறது, எழுதியே விடுகிறேனே!

  ’பூ’லோகம் ஒன்றினை வலைப்
  பூவிற்குக்கொணர்ந்த
  பூவையே நீ வாழி!

  பதிலளிநீக்கு
 85. ஷைலஜா said...

  //லால்பாக்கில் பலமுறை இந்த பூக்கண்காட்சியைப் பார்த்திருக்கிறேன் ராமலஷ்மி ஆனாலும் உங்க காமிரால கண்ட மாதிரி நேரில் கண்ட நினைவில்லை! அவ்வளவு தத்ரூபம்!
  கவிதை எழுத கைதுறுதுறுக்கிறது, எழுதியே விடுகிறேனே!

  ’பூ’லோகம் ஒன்றினை வலைப்
  பூவிற்குக்கொணர்ந்த
  பூவையே நீ வாழி!//

  வாழ்த்துக் கவிதையிலும் பாராட்டிலும் மலர்ந்தது மனம் பூக்க்ளைப் போலவே:)! நன்றிகள் ஷைலஜா!

  பதிலளிநீக்கு
 86. இதுவரை யாரும் சொல்லாத பாராட்டு.


  2010 தமிழ்மணம் புகைப்பட வரிசையில் முதல் பரிசு பெற இருக்கும் ராமலஷ்மிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 87. @ கோமா,

  ஹை, கேட்கவே நல்லாயிருக்கிறதே:)!
  இன்னும் காலமிருப்பதால் இதை விடவும் நன்கு எடுக்க முயற்சிக்கிறேன். நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 88. மறு கூட்டல் சிறுகதை இப்போது திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் மேடம். வாரம் ஒரு படைப்பு வந்துகிட்டு இருக்கே. மொத்தமா எல்லாத்தையும் அனுப்பிட்டீங்கன்னுநினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 89. கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.
  நேரில் ரசித்த உணர்வு.
  நன்றி, ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 90. மிகவும் ரம்மியமான காட்சிகள் அழகிய பூக்களின் வர்ண ஜாலங்கள்
  போட்டோக்கள் மிக்க துல்லியம் பாராட்டுக்கள் மேடம்..

  நேரம்கிடைக்கும்போது வாங்க..

  பதிலளிநீக்கு
 91. எங்களூரில் கடையில்தான் பூ பார்க்க முடியும். உங்களூருக்கு ஒருநாள் வர ஆசை

  பதிலளிநீக்கு
 92. வாவ் என்ன அழகு :-) படங்கள் அனைத்தும் கலக்கல்.

  பதிலளிநீக்கு
 93. ஆமாம் ராம லெக்ஷ்மி உண்மையிலேயே

  " மிலே சுர் மேரா தும்ஹாரா"

  நன்றிம்மா படங்கள் பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
 94. சரண் said...

  //மறு கூட்டல் சிறுகதை இப்போது திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் மேடம்.//

  நன்றி சரண். படைப்புகளை மொத்தமாக யாருமே அனுப்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஒன்று வந்த பிறகே அடுத்ததை அனுப்புவது என் வழக்கம்.

  பதிலளிநீக்கு
 95. அம்பிகா said...

  //கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.
  நேரில் ரசித்த உணர்வு.
  நன்றி, ராமலக்ஷ்மி//

  நேரில் ரசித்த உணர்வைத் தர முடிந்ததில் மகிழ்ச்சி அம்பிகா. வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 96. அன்புடன் மலிக்கா said...

  //மிகவும் ரம்மியமான காட்சிகள் அழகிய பூக்களின் வர்ண ஜாலங்கள்
  போட்டோக்கள் மிக்க துல்லியம் பாராட்டுக்கள் மேடம்..//

  ரசித்துப் பாராட்டியிருப்பதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு
 97. சகாதேவன் said...

  //எங்களூரில் கடையில்தான் பூ பார்க்க முடியும். உங்களூருக்கு ஒருநாள் வர ஆசை//

  பெங்களூரு காத்திருக்கிறது:)!

  பதிலளிநீக்கு
 98. சிங்கக்குட்டி said...

  //வாவ் என்ன அழகு :-) படங்கள் அனைத்தும் கலக்கல்.//

  மிக்க நன்றி சிங்கக்குட்டி:)!

  பதிலளிநீக்கு
 99. thenammailakshmanan said...

  //ஆமாம் ராம லெக்ஷ்மி உண்மையிலேயே

  " மிலே சுர் மேரா தும்ஹாரா"

  நன்றிம்மா படங்கள் பகிர்வுக்கு//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தேனம்மை!

  பதிலளிநீக்கு
 100. பூக்கள் மனசைப் பறிக்கின்றன, உங்கள் படங்கள் மூலமாக. கொள்ளை அழகு. விருதுகளுக்கும் தாமதமான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 101. @ கவிநயா,

  ரசித்ததில் மகிழ்ச்சி கவிந்யா! விருது முடிவு வெளியானதும் மின்னலென அனுப்பிய மின்மடல் வாழ்த்துக்கும் மறுபடி வந்திருக்கும் வாழ்த்துக்களுக்கும் சேர்த்து என் நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 102. // கோணம் பார்த்து வாகாய் பிடித்து க்ளிக்கிடப் போகையில் கையைத் தட்டி விடும் நெரிசல், காட்சிக்கு குறுக்கே வரும் நபர்கள் //

  எல்லாப்படங்களும் ரொம்ப அழகா வந்திருக்குக்கா :-))

  பதிலளிநீக்கு
 103. @ கார்த்திக்,

  ரைட் கார்த்திக்:))! ரொம்ப நன்றி! உங்களுக்குப் பிடித்தாலே போதும்!

  பதிலளிநீக்கு
 104. ஏங்க ராமலக்ஷ்மி உங்க நாயனத்திலே மட்டும் எப்படி இப்படி ? (தில்லானா மோகனாம்பாள் டயலாக்)

  அழகோ அழகு படங்கள். பதினைந்து வருடம் பெங்களூரில் இருந்தும் நான் ஒரு முறை லால்பாக் போனதில்லை. போகாத குறையை நீங்கள் போக்கி விட்டீர்கள். நன்றி !

  நானும் பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெங்களூர்காரன் ! ஆனால் படித்தது எல்லாம் சிங்கார சென்னை !

  என் பெரியப்பா பெண்கள், அத்தை பெண்கள் எல்லாம் நீங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் தான் !!

  - சாய், நியூஜெர்சி, அமெரிக்கா

  பதிலளிநீக்கு
 105. சாய்ராம் கோபாலன் said...

  //ஏங்க ராமலக்ஷ்மி உங்க நாயனத்திலே மட்டும் எப்படி இப்படி ? (தில்லானா மோகனாம்பாள் டயலாக்)//

  :))!

  //அழகோ அழகு படங்கள். பதினைந்து வருடம் பெங்களூரில் இருந்தும் நான் ஒரு முறை லால்பாக் போனதில்லை. போகாத குறையை நீங்கள் போக்கி விட்டீர்கள். நன்றி !//

  கூட ஒரு நான்கு வருடங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்:)! நான்கூட இதற்கு முன்னர் ஓரிரு முறையேதான் சென்றுள்ளேன் கூட்டத்துக்கு பயந்தே. TOI-ல் இவ்வருட சிறப்புகள் பற்றி வாசித்ததும் கண்டு களித்து உங்கள் எல்லோருடனும் பகிர்ந்திடவும் செய்யலாமே என்றே சென்றேன். எல்லோருக்கும் பிடித்துப் போனதில் திருப்தியே:)!

  // நானும் பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெங்களூர்காரன் ! ஆனால் படித்தது எல்லாம் சிங்கார சென்னை !

  என் பெரியப்பா பெண்கள், அத்தை பெண்கள் எல்லாம் நீங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் தான் !!//

  அட அப்படியா? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. இங்கு நம் பதிவர்களில் பலபேரும் கூட நான் படித்த பள்ளி, கல்லூரியிலே படித்தவர்கள் தெரியுமா?

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாய்ராம்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin