திங்கள், 3 செப்டம்பர், 2012

இறக்கைகள்


நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக
அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்.

பறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிக் கொண்டே வரப்படுகின்றன
மாதங்களாகவும் வருடங்களாகவும்.

அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு
சோபையிழந்து சிரிக்கின்றன
அர்த்தமற்றப் பெருமிதங்களும்
கொண்டாடிய சம்பவங்களும்
உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.

எதையோ தேடப்போனபோது
அகப்பட்டன
அனுபவப் பாடங்களும்
தொடர்பறுந்த நட்புகளும்
தவறவிட்டப் பல
அற்புதத் தருணங்களும்.

இறக்கைகளைக் கழற்றி விட்டு
நடக்கத் தொடங்கிய என் கைகளை
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
பற்றிக் கொண்டு
தளிர்நடை போடுகிறது காலம்.
***

படம் நன்றி: இணையம்

18 ஆகஸ்ட் 2012, மலைகள்.காமின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்!

53 கருத்துகள்:

  1. இதுவும் கடந்து போகும் என்று சொல்வார்களே.... கால வெள்ளத்தில் எதெதை மறந்து விடுகிறோம்... நாம் பெரிதென நினைக்கும் எத்தனை விஷயங்களை காலம் மறக்கடிக்கவே வைத்து விடுகிறது? அருமை.

    பதிலளிநீக்கு
  2. /*நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக
    அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்*/

    unmai

    இறக்கைகளைக் கழற்றி விட்டு
    நடக்கத் தொடங்கிய என் கைகளை
    ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
    பற்றிக் கொண்டு
    தளிர்நடை போடுகிறது காலம்

    arumaiyaana aarambam and mudivu

    பதிலளிநீக்கு
  3. // ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
    பற்றிக் கொண்டு
    தளிர்நடை போடுகிறது காலம்.//

    உண்மைதான் கா :-)

    பதிலளிநீக்கு
  4. காலத்தைப் பற்றிய கவிதை நன்று. ‘நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்‘ என்ற வரிகளை மனதில் அசை போட்டு விட்டு அடுத்த வரிகளைப் படிக்கவே சற்று நேரமாயிற்று. க்ளாஸிக்.

    பதிலளிநீக்கு
  5. கால வெள்ளத்தில் மறந்தவையாக நினைப்பவையெல்லாம் திடீரென்று உருவெடுத்து வந்து திகைக்க வைக்கும். அந்த அனுபவமே தனிதான்..

    அசத்தலான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்.... உண்மை
    காலம் பற்றிய வரிகள் அருமை மேடம்

    பதிலளிநீக்கு
  7. மறக்க வேண்டிய நினைவுகளை மறக்காமல் இனிய இறகுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
    கற்றபாடங்களை மறக்க வேண்டாம்.தினம் தினம் வரும் நல்லசெய்திகளும் நம் பெட்டகத்தில் சேரும். மறவாமை நன்று.மீண்டும் தவறிழைக்காமல் இருக்க.
    எனக்கும் குழந்தையின் கைகளைப் பிடிக்க வெகு ஆசை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. நிஜம்தான் ராமலெக்ஷ்மி. எதற்கும் நேரமில்லை என்று கூறிக்கொண்டிருக்கும் எனக்கு இந்தக் கவிதை ரொம்பப் பிடித்தது..:)

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப நல்லா இருக்கு காலத்தின் அருமையை சொன்ன கவிதை

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதைபடைப்பு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கடைசி வரி, எதார்த்தம்! சிந்தித்தால் பயனுண்டு!

    பதிலளிநீக்கு
  12. வாவ்.. மிகவும் அருமையான கவிதை. கடந்து போன காலத்தில் கிடைத்தவற்றை மறந்து போகிறோம்!

    பதிலளிநீக்கு
  13. எதார்த்தத்தை பறைசாற்றும் இயல்பான கவிதை, வார்த்தைகள் உபயோகம் அருமை.. தேனக்கா அவர்களை போலவே! :)

    பதிலளிநீக்கு
  14. ஒரு பத்து முறையாவது இது வரை படித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் புது புது அர்த்தங்களாக ஒவ்வொரு வரிகளும் உணர்த்துகிறது. தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில் என் எண்ணங்களை இலகுவாக சொல்ல முடிவதால், கீழே என்னுடைய எண்ணங்கள் இந்த கவிதை பற்றி :

    I always wonder at your ability to use words so easily to express very thought provoking facts Ramalakshmi .. This one particularly is one of your best and it would stay so close to my heart. The way you have told, the words that you have chosen and the thought process is simply amazing. As I said, I have read it nearly 10 times and everytime it gives me so many different meanings. Particularly, I was so touched by the below sentences :

    அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு
    சோபையிழந்து சிரிக்கின்றன
    அர்த்தமற்றப் பெருமிதங்களும்
    கொண்டாடிய சம்பவங்களும்
    உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.
    How wonderfully you have conveyed a message that is relevant to each and every human being in this world. Superb use of words and wonderful thoughts Ramalakshmi.

    பதிலளிநீக்கு
  15. வாழும் நினைவுகள்... நல்ல சிந்தனை சகோதரி..

    பதிலளிநீக்கு
  16. @வல்லிசிம்ஹன்,

    /மீண்டும் தவறிழைக்காமல் இருக்க./

    சரிதான்.

    மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin