வெள்ளி, 16 செப்டம்பர், 2011

வண்ணக் குடைகள் விற்பனைக்கு.. - கீற்றினில்..

பால் வெள்ளையில்
சின்னச்சின்ன மஞ்சள் பூக்கள்

நீல ஆகாயத்தில்
நீந்தும் வண்ணப் பலூன்கள்

துள்ளியோடும் ஜெர்ரிகளைத்
துரத்தும் டாம்கள்

பசுஞ்சோலையில் மரவிழுதைப்
பற்றியாடும் டோராக்கள்.

கைக்கு இரண்டாகச் சுழற்றியபடி
சிக்னல் நிறுத்தத்தில்
வண்டிகளுக்கு நடுவே
புகுந்து புறப்பட்டுக்
கவனம் ஈர்த்துக் கொண்டிருந்த
குடை வியாபாரி

சடசடவென மழை பூக்கவும்
அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
ஒதுங்க இடம் தேடுகிறான்.
***

15 செப்டம்பர் 2011, நேற்றைய கீற்றினில்.., நன்றி கீற்று!

41 கருத்துகள்:

  1. உழுபவனுக்கு உணவில்லை
    நெய்பவனுக்கு துணியில்லை
    இதெல்லாம் இருக்கட்டும்
    .....................................................
    முலைப்பால் தந்த அன்னைக்கு
    வீட்டின் முகப்பில் அல்ல ஒரு
    மூலையில் இருக்கக் கூட
    அனுமதியில்லை?!

    அதைப் போல வண்ணக் குடை சுமந்து
    ஊரையே நனையாமல் காக்கும்
    குடை வியாபாரிக்கு மழைக்கு ஒரு
    குடையில்லை....

    அருமையான சிந்தனை...

    பதிலளிநீக்கு
  2. கவிதை வாசித்ததும் ,”கீற்றினிலே வரும் கீதம் ”என்று ஹம் பண்ணினேன்

    பதிலளிநீக்கு
  3. //சடசடவென மழை பூக்கவும்
    அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
    பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
    ஒதுங்க இடம் தேடுகிறான்.
    ***//

    சபாஷ்..

    பதிலளிநீக்கு
  4. வியாபார வாழ்க்கையா, வாழ்க்கை வியாபாரமா...அருமை. கீற்று...மின்னல் கீற்று!

    பதிலளிநீக்கு
  5. வியாபாரியைப் பொருத்தவரை
    குடையென்பது பயன்படுத்த அல்ல
    விற்பனைக்கு மட்டுமே
    வித்தியாசமான சிந்தனை
    அருமையான பதிவு
    த.ம 3

    பதிலளிநீக்கு
  6. ஏழையின் வாழ்வை அழகா சொல்லி இருக்கீங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  7. கவிதை ஜூப்பரு.. வியாபாரப் பொருளென்ற கண்ணோட்டம்தான் வியாபாரிக்கு இருக்குமே தவிர, அதைத் தானும் உபயோகப் படுத்தலாம்ன்னு தோண்றதே இல்லை..

    பதிலளிநீக்கு
  8. கொள் முதல் ஆயிற்றே.. வித்தால் காசு.. இல்லாவிட்டால் நஷ்டம் .. யதார்த்தம்தான். பகிர்ந்த விதம் அருமை..:)

    பதிலளிநீக்கு
  9. "சடசடவென மழை பூக்கவும்
    அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
    பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
    ஒதுங்க இடம் தேடுகிறான்."


    அருமையான, யதார்த்தமான கவிதை!

    பதிலளிநீக்கு
  10. வண்ணக் குடைக்குள் படைப்பாளியின் வாழ்க்கைச் சுமை... அழகுடன் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. மழைப் பூவிற்கு மறையும் குடை வாழ்க்கை.அருமை, ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  12. தமிழ் விரும்பி said...
    //குடை வியாபாரிக்கு மழைக்கு ஒரு
    குடையில்லை....

    அருமையான சிந்தனை...//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. goma said...
    //கவிதை வாசித்ததும் ,”கீற்றினிலே வரும் கீதம் ”என்று ஹம் பண்ணினேன்//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  14. ஸாதிகா said...
    ***//சடசடவென மழை பூக்கவும்
    அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
    பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
    ஒதுங்க இடம் தேடுகிறான்.
    ***//

    சபாஷ்..//***

    நன்றி ஸாதிகா. எதார்த்தம் இதுவே.

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம். said...
    //வியாபார வாழ்க்கையா, வாழ்க்கை வியாபாரமா...அருமை. கீற்று...மின்னல் கீற்று!//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  16. Ramani said...
    //வியாபாரியைப் பொருத்தவரை
    குடையென்பது பயன்படுத்த அல்ல
    விற்பனைக்கு மட்டுமே
    வித்தியாசமான சிந்தனை
    அருமையான பதிவு//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சுசி said...
    //ஏழையின் வாழ்வை அழகா சொல்லி இருக்கீங்க அக்கா.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  18. MANO நாஞ்சில் மனோ said...
    //கவிதை மழை அழகு...!!!//

    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  19. அன்புடன் அருணா said...
    //அட!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  20. குமரி எஸ். நீலகண்டன் said...
    //நல்ல கவிதை....//

    நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  21. அமைதிச்சாரல் said...
    //கவிதை ஜூப்பரு.. வியாபாரப் பொருளென்ற கண்ணோட்டம்தான் வியாபாரிக்கு இருக்குமே தவிர, அதைத் தானும் உபயோகப் படுத்தலாம்ன்னு தோண்றதே இல்லை..//

    உண்மைதான் சாந்தி. நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அமைதி அப்பா said...
    //கவிதை நன்று!//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  23. "உழவன்" "Uzhavan" said...
    //அழகு :-)//

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  24. S.Menaga said...
    //மிக அருமையான கவிதை...//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  25. Kanchana Radhakrishnan said...
    //கவிதை அழகு.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //கொள் முதல் ஆயிற்றே.. வித்தால் காசு.. இல்லாவிட்டால் நஷ்டம் .. யதார்த்தம்தான். பகிர்ந்த விதம் அருமை..:)//

    மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  27. மனோ சாமிநாதன் said...
    //"சடசடவென மழை பூக்கவும்
    அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
    பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
    ஒதுங்க இடம் தேடுகிறான்."


    அருமையான, யதார்த்தமான கவிதை!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. மாதேவி said...
    //வண்ணக் குடைக்குள் படைப்பாளியின் வாழ்க்கைச் சுமை... அழகுடன் கனக்கிறது.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  29. raji said...
    //மழைப் பூவிற்கு மறையும் குடை வாழ்க்கை.அருமை, ராமலக்ஷ்மி//

    நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  30. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin