வியாழன், 21 ஜூன், 2012

இருப்பு - நவீன விருட்சத்தில்..


ஓவியக் கண்காட்சிக் கூடத்தின்
ஒரு சுவரில்
பிள்ளையார் விதம் விதமான
கோணங்களில் அருள் பாலித்தார்.

தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப்
பசுவைக் கொண்டாடும் படங்களால்
நிரம்பியிருந்தன இன்னொரு சுவர்.

போட்டிகள் நிறைந்த உலகின்
ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின
சேவல் சண்டைக் காட்சிகள்.

கொல்கத்தா வீதிக் காட்சிகளால்
சோகம் அப்பி நின்றிருந்தது
சன்னல்கள் அற்ற இடதுசுவர்

உயிரைக் குழைத்திழைத்த
ஓவியங்களைப் பிரியும் துயர்
இலாபக் கணக்குகளால்
ஆற்றப் பட்டன

கையில் சுமந்திருந்த மோதகத்தைச்
சத்தமின்றி பிள்ளையாரின்
காலடித்தட்டில் வைத்து விட்டு
எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில்
சாலையில் உருண்டு கிடந்த
தக்காளியைச் சுவைக்கச் சென்றிருந்த
மூஞ்சுறு
சேவல்களுக்கு அஞ்சி
உத்திரத்தின் வழியே
திரும்பிக் கொண்டிருக்கையில்
வானத்துச் சூரியன்
மேற்கே சரிந்து விழ

விற்காத படங்களுடன்
வெளியேறினர் ஓவியர்.

இருண்ட காலிக் கூடத்தின்
சுவர்களெங்கும் ஓடிஓடித்
தேடிக் கொண்டேயிருந்தது
பிள்ளையாரை மூஞ்சுறு.
***

12 ஜூன் 2012, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

34 கருத்துகள்:

  1. நல்ல கவிதை.

    நாமும் பல விஷயங்கள் நிரந்தரம் என நம்பி ஏமாந்து போகிறோம்.... மூஞ்சூரைப் போலவே...

    வாழ்த்துகள்.

    த.ம. - 2

    பதிலளிநீக்கு
  2. ரெம்ப நல்ல கவிதை மேடம்

    //வானத்துச் சூரியன்
    மேற்கே சரிந்து விழ//- ரசித்தேன் அருமை

    இறுதி வரி ம்ம்ம் ...

    பதிலளிநீக்கு
  3. //இருண்ட காலிக் கூடத்தின்
    சுவர்களெங்கும் ஓடிஓடித்
    தேடிக் கொண்டேயிருந்தது
    பிள்ளையாரை மூஞ்சுறு.//

    வாகனத்தைத் தொலைச்ச பிள்ளையார் மறுநாளும் வருவார் மூஞ்சூறைக் கூட்டிப்போக :-))

    அருமை.. படமும் கவிதையும்.

    பதிலளிநீக்கு
  4. அருமை. விற்பனை ஆகாத ஓவியரின் சோகமும் மூஞ்சூரின் தேடலும் மனதில் நிற்கிறது!

    பதிலளிநீக்கு
  5. "உயிரைக் குழைத்திழைத்த
    ஓவியங்களைப் பிரியும் துயர்
    இலாபக் கணக்குகளால்
    ஆற்றப் பட்டன"

    உண்மையான வரிகள்..

    பதிலளிநீக்கு
  6. உயிரைக் குழைத்திழைத்த
    ஓவியங்களைப் பிரியும் துயர்
    இலாபக் கணக்குகளால்
    ஆற்றப் பட்டன


    கவிதை அருமை..

    பதிலளிநீக்கு
  7. வெங்கட் நாகராஜ் said...
    //நல்ல கவிதை.

    நாமும் பல விஷயங்கள் நிரந்தரம் என நம்பி ஏமாந்து போகிறோம்.... மூஞ்சூரைப் போலவே...

    வாழ்த்துகள்.//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  8. செய்தாலி said...
    //ரெம்ப நல்ல கவிதை மேடம் //

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அமைதிச்சாரல் said...
    //வாகனத்தைத் தொலைச்ச பிள்ளையார் மறுநாளும் வருவார் மூஞ்சூறைக் கூட்டிப்போக :-))

    அருமை.. படமும் கவிதையும்.//

    உங்க வாக்குப் பலிக்கட்டும்:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  10. பாச மலர் / Paasa Malar said...
    //அசத்தல் வரிகள் ராமலக்ஷ்மி...//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம். said...
    //அருமை. விற்பனை ஆகாத ஓவியரின் சோகமும் மூஞ்சூரின் தேடலும் மனதில் நிற்கிறது!//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. Lakshmi said...
    //கவிதை ரொம்ப நல்லா இருக்கு.//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  13. திண்டுக்கல் தனபாலன் said...
    //நல்ல வரிகள் ! அருமை !//

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. மதுமதி said...
    //உண்மையான வரிகள்..//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ரிஷபன் said...
    //கவிதை அருமை..//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அந்த‌ ஓவியரின் சோகம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  17. முஞ்சூறு, ஓவியர் இருவரின் நிலையும் சோகம்தான்.

    பதிலளிநீக்கு
  18. மிக அருமை ராமலக்ஷ்மி ! வாசித்து முடித்ததும் ஒரு மெல்லிய சோகத்தை உணர முடிகிறது !

    பதிலளிநீக்கு
  19. சே. குமார் said...
    /நல்ல கவிதை... அருமை./

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  20. மனோ சாமிநாதன் said...
    /அந்த‌ ஓவியரின் சோகம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அருமையான கவிதை!/

    நன்றி மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  21. மாதேவி said...
    /முஞ்சூறு, ஓவியர் இருவரின் நிலையும் சோகம்தான்./

    கருத்துக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  22. James Vasanth said...
    /மிக அருமை ராமலக்ஷ்மி ! வாசித்து முடித்ததும் ஒரு மெல்லிய சோகத்தை உணர முடிகிறது!/

    நன்றி ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  23. அருமை!!

    நீங்கள் வந்து விருதினை பெற்றுக் கொண்டதற்கும் நன்றி ராமலக்ஷ்மி! நீங்கள் வரும் முன்பே இங்கே வந்து அதைக் குறித்துப் பின்னூட்ட மிட சமயம் கிடைக்கவில்லை :( வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. @ கவிநயா,

    எப்போதும் போல் வந்த எனக்கு எதிர்பாராத ஆச்சரியம் காத்திருந்தது இனிமை அல்லவா? மீண்டும் இங்கும் என் நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  25. கவிதை சிறப்பாக இருந்தது . மிகவும் இரசித்தேன் வாழ்த்துக்கள் ------------- நந்தினி மருதம், நியூயார்க, 2012-06-26

    பதிலளிநீக்கு
  26. இருண்ட காலிக் கூடத்தின்
    சுவர்களெங்கும் ஓடிஓடித்
    தேடிக் கொண்டேயிருந்தது
    பிள்ளையாரை மூஞ்சுறு.//

    ஒவியரையும், மூஞ்சுறுரையும், பிள்ளையார் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  27. நந்தினி மருதம் said...
    //கவிதை சிறப்பாக இருந்தது . மிகவும் இரசித்தேன் வாழ்த்துக்கள்//

    தங்கள் முதல் வருகையில் மகிழ்ச்சியும் கருத்துக்கு நன்றியும், நந்தினி:)!

    பதிலளிநீக்கு
  28. கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin