வெள்ளி, 8 மார்ச், 2013

குமுதம் பெண்கள் மலரில்.. - பெண் மொழி பேசும் புகைப்படங்கள் - எனது பேட்டியுடன்..

இந்தவாரக் குமுதம் இதழுடன் மகளிர்தினச் சிறப்பு இணைப்பாக 128 பங்கங்களுடன் வெளிவந்திருக்கும் பெண்கள் மலரில்..

# பெண் மொழி பேசும் புகைப்படங்கள்: அன்றாட வாழ்வில் சந்திக்க நேரும் ஒவ்வொரு சாதாரண பெண்ணின் முகத்திலும் ஒரு அசாதாரண உறுதியைப் பார்க்கிறேன். வாழ்க்கையை சவாலாக ஏற்றுக் கொள்ளும் போராட்டக் குணமும் அநாயசமாகக் கடந்து செல்கிற அவர்களது தைரியமும் போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. சமூகத்துக்கு நம்பிக்கை தரும் செய்தியாக, அந்த ஒளிமிகு முகங்களை புகைப்படங்களாகப் பதிவதில் விருப்பம் காட்டுகிறேன். அதே நேரம் படிப்பு வாசம் கிட்டாமல் உழைக்கும் குழந்தைகளை பார்க்கும்போது மனதில் வலி ஏற்படுகிறது. அப்படி இந்த சமூகம் சரி செய்ய வேண்டியவையவற்றையும் காட்சிப்படுத்தி வருகிறேன்...” 
 
[தேவைப்பட்டால் ctrl மற்றும் +, keys ஒருசேர அழுத்தி பக்கத்தைப் பெரிது செய்து வாசிக்கலாம். மீண்டும் பழைய அளவுக்குக் கொண்டுவர ctrl மற்றும் - keys உபயோகிக்கவும்.]

# “தில்லியைச் சேர்ந்த ‘மேப் மை இன்டியா’ (Mapmyindia) நிறுவனம், தான் தயாரித்த பெங்களூர் சுற்றுலா வழிகாட்டிப் புத்தகத்துக்காக லால்பாக் கண்காட்சியில் படமாக்கிய, (இரண்டு இலட்சம் சம்பங்கி மலர்கள், 75 ஆயிரம் வெள்ளை ரோஜாக்கள், 10 ஆயிரம் நந்தியாவட்டைகள் கொண்டு 22 அடி உயரம் 36 அடி அகலத்தில் உருவான) தில்லி தாமரைக் கோவில் மலர் அலங்காரப் படங்களை ஃப்ளிக்கர் வழியாகக் கேட்டு வாங்கியிருக்கிறது...


# “வந்தது டிஜிட்டல் புரட்சி..”  


டி.எஸ்.எல்.ஆர் கேமரா இருந்தால்தான் நல்ல படங்களை எடுக்க முடியும் என்பதில்லை. ‘‘It's not the brush, it's the Painter' என்பார்கள். அவரவர் ரசனை, கேமரா பார்வை, அமைக்கும் கோணம், எடுக்கும் திறனுமே நல்ல புகைப்படங்களாக உருமாறும்.  நான் சாதாரண கேமராவில் எடுத்த பல படங்கள் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கின்றன. மேக் மை ட்ரிப் டாட் காம் உபயோகிக்கும் எனது படம் கூட சாதாரண கேமராவில் எடுத்ததுதான். இப்போதும் சின்ன சின்ன வேலைகளுக்கு வெளியே செல்லும்போது கூடவே எடுத்தச் செல்ல எளிதாக இருக்கிற சாதாரண கேமராவைத்தான் உபயோகிக்கிறேன். எந்தக் கேமராவானாலும் அதில் இருக்கிற அனைத்துப் பயன்பாடுகளையும் சரிவரத் தெரிந்து கொள்வது மிக அவசியம்...
*
நன்றி குமுதம்! நன்றி நந்தினி!

**

மேலும் ஒருசில பெண்மொழிப் படங்களை, உரியவர் அனுமதியுடன் தனிப்பதிவாக மகளிர்தின மாதத்திலேயே பகிர்ந்து கொள்கிறேன்:)!
***

63 கருத்துகள்:

 1. சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள்.

  அன்பான மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமை.

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. பெண்மொழி பேசும் படங்கள் அருமை.
  வாழ்த்துக்கள்.

  உலக உழைக்கும் மகளிர் தினத்தில் தள்ளாத வயதிலும் கடலை விற்று வாழும் பாட்டி அழகு. காலத்தின் சுவடுகள் வறுமையின் வரிகள் எல்லாம் துல்லியமாக தெரிய எடுத்த பாட்டி படம் அருமை முன்பே பார்த்தது தான் என்றாலும் பாராட்ட தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு... வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்கள்.

  மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா.. அசத்தல் ராமலக்ஷ்மி :-))

  இன்னும் பல சிகரங்களை நீங்கள் தொட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு,வாழ்த்துக்கள் அக்கா...மகளிர் தின வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 9. முத்துச்சரம் என்ற பெயரில் இவர் எழுதி வரும் வலைப்பதிவுக்கு ரசிகர்கள் அதிகம் -இப்படி முடிச்சிருக்காங்க. நானும் அந்த ரசிகர்கள்ல ஒருத்தன்ங்கறதுல பெருமை + மகிழ்ச்சி! இன்னும் பல வெற்றிச் செய்திகளை நீங்கள் பகிர்ந்திட நாங்கள் மகிழ்ந்திட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் + உங்களுக்கு என் மகளிர்தின நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள். கேமிரா மொழியாகட்டும், கவிமொழியாகட்டும், கதைகளாகட்டும்... எல்லாவற்றிலும் கலக்கும் எங்கள் ராமலக்ஷ்மி புகழ் இன்னும் இன்னும் பரவட்டும்!

  பதிலளிநீக்கு
 11. இந்த மகளிர் தின நேரத்தில் உங்களைப் பெருமைபடுத்திய குமுதத்துக்கும் தகுதியான உங்களுக்கும் எனது மனம்கனிந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. கண்ணையும் கருத்தையும் கவரும் புகைப்படங்களைப் போட்டு எங்களைக் கவரும் உங்களின் பேட்டி குமுதம் பெண்கள் இதழில் வெளி வந்திருப்பது எங்கள் எல்லோருக்கும் பெருமையாக இருக்கிறது.
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. பாராட்டுக்கள்.

  ஆமா.. நம்மளை போட்டோ எடுத்தா மட்டும் நாம ஏன் சிரிக்க மாட்டேங்குறோம்?

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்....

  பதிலளிநீக்கு
 15. அருமை.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துகள். மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து கலக்குங்க...

  பதிலளிநீக்கு
 17. மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
 18. அன்பு ராமலக்ஷ்மி,
  இனிய வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 19. தென்றல் பத்திரிகைல சிரிச்சிட்டிருக்கீங்க.. நன்று.

  பதிலளிநீக்கு
 20. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி! [Hugs] :)

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.இத்தனை பகிர்வும் என் கண்ணில் படாமல் போய்விட்டதே!!:)..

  பதிலளிநீக்கு
 22. @அப்பாதுரை,

  கையில் கேமராவுடன் லால்பாக் மரத்தடியில் நிற்கிற லாங் ஷாட் படம். அதை க்ராப் செய்து போடுவார்கள் எனத் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிரித்திருக்கலாம்தான்:)!

  --

  தென்றல் பார்த்து விட்டீர்களா? எதிர் பாராதது! தகவல்களும் படங்களும் அவர்களாக சேகரித்து வெளியிட்டுள்ளார்கள். இங்கும் அடுத்த வாரத்தில் பகிருகிறேன்:). நன்றி.

  பதிலளிநீக்கு
 23. @மனோ சாமிநாதன்,

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin