Friday, May 14, 2010

நட்சத்திரங்கள்
உய்உய் உய்உய்..
பின்னிரவில்
உயர் குடியிருப்பு வளாகத்தில்
வாகனம் எழுப்பிய தொடர்சப்தத்தில்
விழித்துச் சுதாகரித்து
துழாவிச் சாவியெடுத்து
'உன்னிதா என்னிதா'
அறிய ஓடிவந்தவர்கள்

தம்மிதில்லையெனத் தெரிந்த நிம்மதியில்
போர்வைக்குள் பொதிந்து போயினர்
பொழுது புலர்ந்ததும்
புலம்பிக் கொள்ளலாமென
கலைந்த தூக்கத்தைத் துரத்திப் பிடிக்க

உரியவர் அடக்கியதும்
ஓய்ந்தது உய் உய்

காத்திருந்து
அணைந்து போயின அலுப்புடனே
ஆங்காங்கே ஒளிர்ந்த
சன்னல் வெளிச்சங்கள்

பதில்சொல்லிக் களைத்த
இரவுக் காவலாளியின்
இருண்ட வானக் கூரையில்
மிளிர்ந்து கொண்டிருந்தன
நட்சத்திரங்கள்

ஊர் அசந்தபின்னும் தாம் அசராது
கண்சிமிட்டிக் காவலிருந்த
விண்மீன்களை ரசித்தவாறே
விழி பிசைந்த உறக்கந்தனை
விரட்டியடிக்க
உதடு குவித்து இசைக்கலானான்

சூழ்ந்திருந்த நிசப்தத்தில்
சுரம் பிசகாமல்

அண்டம் அனுபவிக்கும்
அத்தனைக்கும் அடிநாதமாய்..
அறியப்படாமலே
காற்றோடு கரைந்து போகும்
உழைக்கும் வர்க்க கீதமாய்..
உய்... உய்...!

***


90 comments:

 1. நச்சத்திரமாய்.... மின்னுகிறது கவிதை.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. விகடனில் வாசித்தேன்..

  நல்ல கவிதை

  ReplyDelete
 3. //அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..
  உய்... உய்...!//

  நல்ல வரிகள்.

  ReplyDelete
 4. முன்பு ஒரு முறை கூர்க்காக்களின் கதை படித்த ஞாபகம் மீண்டும் எட்டிப்பார்த்தது !

  ReplyDelete
 5. ஆமா ஆயில்ஸ் சொல்வது போல அந்த கூர்க்காவும் எட்டி பார்த்தாலுல் இந்த காவல்காரன் அதை விட கொஞ்சம் ஸ்ட்ராங்கா மனதுல ஒட்டுகிட்டாரே பிரண்ட்! நல்லா இருக்கு!!

  ReplyDelete
 6. நல்லா இருக்கு!!
  வாழ்த்துகள். விகடனில் வாசித்தேன்..

  ReplyDelete
 7. உய் உய் (விசில்)

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 8. உழைப்பின் அலுப்புத் தீர ஒரு கவிதை.அருமை அக்கா.

  ReplyDelete
 9. தனியா வேற சொல்லணுமா? ஜனரஞ்சக கவிதை, கதை எழுத்தாளர் மற்றும் புகைப்படக்காரராக மிளிர்கிறீர்கள்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் அக்கா..
  ரொம்ப நல்லா மின்னுது நட்சத்திரங்கள்..

  டெம்ப்ளேட் பின்னூட்டம்னு நினைக்காதிங்க..
  வேற வழி இல்லை எனக்கு.. உங்கள பாராட்டி பாராட்டி.. வாழ்த்தி வாழ்த்தியே.. அது இப்டி ஆகிடிச்சு :))

  ReplyDelete
 11. /*அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..
  உய்... உய்...!*/
  அருமை. முத்தான கவிதை

  ReplyDelete
 12. கவிதை ஜொலிக்கிறது.வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. நல்லாயிருக்குங்க ,
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 14. உய்.. உய்.. சூப்பர் ராமலஷ்மி.

  ReplyDelete
 15. வானத்தையும் நட்சத்திரத்தையும் ரசிச்சு
  எழுதி இருக்கீங்க...நல்லாயிருக்கு.

  ReplyDelete
 16. விசிலடித்துப் பாராட்டுகிறேன்...

  ReplyDelete
 17. மனதில் ஒட்டிக்கொண்ட இரவுக்காவலன்..... கவிதை அருமை....

  ReplyDelete
 18. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 19. நடச்சத்திர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அருமை. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. இளமை விகடனிலேயே வாசித்தேன் அருமை.. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி

  ReplyDelete
 22. அருமைங்க சகா!

  //ஜனரஞ்சக கவிதை, கதை எழுத்தாளர் மற்றும் புகைப்படக்காரராக மிளிர்கிறீர்கள்.//

  இதேதான்.

  ReplyDelete
 23. நல்ல கவிதை..வாழ்த்துகள்

  ReplyDelete
 24. வழக்கம் போல சூப்பர் கவிதை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. Stars twingle beautifully like You!

  Nanaani from TVL

  ReplyDelete
 26. நட்சத்திரக் கவிதை மின்னுது அக்கா.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. காவலாளியின் விசில் கார்க்காரர்களை எழுப்பியது.
  உங்கள் நட்சத்திரங்கள் உறங்காமல் ரசிக்கின்றன.
  வெகு அழகு ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 28. //அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்
  உய்..உய்!//

  உழைக்கும் வர்க்கத்தை நினைத்துப் பார்த்து நன்றி சொல்ல வைக்ககும் வரிகள் அருமை.

  ReplyDelete
 29. /அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..
  உய்... உய்...!/

  அருமை

  ReplyDelete
 30. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
  அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
  Feel பண்ணக்கூடாது..

  ReplyDelete
 31. கவிதையின் முதல் வரியைப் பின்னூட்டமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 32. அழகான கவிதை :) வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் :)

  ReplyDelete
 33. ரொம்ப சந்தோசம். வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. நல்ல கவிதை

  ReplyDelete
 35. விகடனில் வாசித்தேன் மிகவும் அருமையாக இருந்தது...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 36. சி. கருணாகரசு said...

  //நச்சத்திரமாய்.... மின்னுகிறது கவிதை.
  பாராட்டுக்கள்.//

  நன்றிகள் கருணாகரசு.

  ReplyDelete
 37. T.V.ராதாகிருஷ்ணன் said...

  //வாழ்த்துகள்//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 38. ஈரோடு கதிர் said...

  //விகடனில் வாசித்தேன்..

  நல்ல கவிதை//

  விகடனிலும் உங்கள் கருத்தைக் கண்டேன். மிகவும் நன்றி கதிர்.

  ReplyDelete
 39. aambalsamkannan said...

  ***/ //அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..
  உய்... உய்...!//

  நல்ல வரிகள்./***

  நன்றி ஆம்பல்சாம்கண்ணன்.

  ReplyDelete
 40. ஆயில்யன் said...

  //முன்பு ஒரு முறை கூர்க்காக்களின் கதை படித்த ஞாபகம் மீண்டும் எட்டிப்பார்த்தது !//

  நல்லது ஆயில்யன். கூர்க்காக்கள் மட்டுமென்றில்லை. இப்படி நாம் அனுபவிக்கும் பல வசதிகளின் பின்னே எத்தனையோ பேரின் உழைப்பு. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 41. அபி அப்பா said...

  //ஆமா ஆயில்ஸ் சொல்வது போல அந்த கூர்க்காவும் எட்டி பார்த்தாலுல் இந்த காவல்காரன் அதை விட கொஞ்சம் ஸ்ட்ராங்கா மனதுல ஒட்டுகிட்டாரே பிரண்ட்! நல்லா இருக்கு!!//

  நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 42. ஜெஸ்வந்தி said...

  //நல்லா இருக்கு!!
  வாழ்த்துகள். விகடனில் வாசித்தேன்..//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 43. விஜய் said...

  // உய் உய் (விசில்)

  வாழ்த்துக்கள்//

  நன்றிகள் விஜய்:)!

  ReplyDelete
 44. ஹேமா said...

  //உழைப்பின் அலுப்புத் தீர ஒரு கவிதை.அருமை அக்கா.//

  நன்றிங்க ஹேமா.

  ReplyDelete
 45. சின்ன அம்மிணி said...

  //கடைசி வரிகள் அழகு//

  பாராட்டுக்கு ரொம்ப நன்றி அம்மிணி.

  ReplyDelete
 46. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //தனியா வேற சொல்லணுமா? ஜனரஞ்சக கவிதை, கதை எழுத்தாளர் மற்றும் புகைப்படக்காரராக மிளிர்கிறீர்கள்.//

  நன்றி ஆதி:)!

  ReplyDelete
 47. சுசி said...

  //வாழ்த்துக்கள் அக்கா..
  ரொம்ப நல்லா மின்னுது நட்சத்திரங்கள்..//

  நன்றி சுசி.

  //டெம்ப்ளேட் பின்னூட்டம்னு நினைக்காதிங்க..
  வேற வழி இல்லை எனக்கு.. உங்கள பாராட்டி பாராட்டி.. வாழ்த்தி வாழ்த்தியே.. அது இப்டி ஆகிடிச்சு :))//

  :)!

  ReplyDelete
 48. அமுதா said...

  ***/ /*அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..
  உய்... உய்...!*/

  அருமை. முத்தான கவிதை/***

  கருத்துக்கு நன்றி அமுதா.

  ReplyDelete
 49. மாதேவி said...

  //கவிதை ஜொலிக்கிறது.வாழ்த்துகள்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 50. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

  // நல்லாயிருக்குங்க ,
  வாழ்த்துக்கள் .//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...

  //உய்.. உய்.. சூப்பர் ராமலஷ்மி.//

  நன்றி சாரல் :) !

  ReplyDelete
 52. தமிழ் வெங்கட் said...

  //வானத்தையும் நட்சத்திரத்தையும் ரசிச்சு
  எழுதி இருக்கீங்க...நல்லாயிருக்கு.//

  மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 53. ஸ்ரீராம். said...

  //விசிலடித்துப் பாராட்டுகிறேன்...//

  விசிலடிக்கும் மூன்றாவது நபர்:)! நன்றிகள் ஸ்ரீராம்.

  ReplyDelete
 54. க.பாலாசி said...

  //மனதில் ஒட்டிக்கொண்ட இரவுக்காவலன்..... கவிதை அருமை....//

  கருத்துக்கு நன்றி பாலாசி.

  ReplyDelete
 55. கண்ணகி said...

  //நல்ல கவிதை. வாழ்த்துக்கள்...//

  நன்றி கண்ணகி.

  ReplyDelete
 56. நசரேயன் said...

  //நட்ச்சத்திர வாழ்த்துக்கள்//

  இது கேட்க நல்லாயிருக்கே:)! நன்றி நசரேயன்.

  ReplyDelete
 57. இராமசாமி கண்ணண் said...

  //அருமை. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//

  நன்றிங்க இராமசாமி கண்ணன்.

  ReplyDelete
 58. thenammailakshmanan said...

  //இளமை விகடனிலேயே வாசித்தேன் அருமை.. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி//

  அங்கேயும் உங்கள் கருத்தைக் கண்டேன்:)! நன்றிகள் தேனம்மை.

  ReplyDelete
 59. பா.ராஜாராம் said...

  //அருமைங்க சகா!

  //ஜனரஞ்சக கவிதை, கதை எழுத்தாளர் மற்றும் புகைப்படக்காரராக மிளிர்கிறீர்கள்.//

  இதேதான்.//

  ரொம்ப நன்றி பா ரா:)!

  ReplyDelete
 60. அஹமது இர்ஷாத் said...

  //நல்ல கவிதை..வாழ்த்துகள்//

  மிக்க நன்றி இர்ஷாத்.

  ReplyDelete
 61. அன்புடன் அருணா said...

  //அட!//

  அடடா! மறந்து பூங்கொத்தைக் கையோடு கொண்டு போய்விட்டீர்களே:)!

  நன்றிகள் அருணா.

  ReplyDelete
 62. சசிகுமார் said...

  //வழக்கம் போல சூப்பர் கவிதை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் சசிகுமார்.

  ReplyDelete
 63. நானானி said...

  //Stars twingle beautifully like You!

  Nanaani from TVL//

  நன்றி நானானி. சென்னை திரும்பி விட்டீர்களா:)?

  ReplyDelete
 64. சுந்தரா said...

  //நட்சத்திரக் கவிதை மின்னுது அக்கா.

  வாழ்த்துக்கள்!//

  நன்றிகள் சுந்தரா.

  ReplyDelete
 65. வல்லிசிம்ஹன் said...

  //காவலாளியின் விசில் கார்க்காரர்களை எழுப்பியது.//

  ஒரு காரின் டோர்லாக் எழுப்பிய விசில் எல்லோரையும் எழுப்பியது வல்லிம்மா. உறங்காத நட்சத்திரமாய் காவலாளி.

  //உங்கள் நட்சத்திரங்கள் உறங்காமல் ரசிக்கின்றன.
  வெகு அழகு ராமலக்ஷ்மி.//

  ஆகா நட்சத்திரங்களும் ரசிக்கின்றனவா? நன்றிகள் வல்லிம்மா.

  ReplyDelete
 66. கோமதி அரசு said...

  ***/ //அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்
  உய்..உய்!//

  உழைக்கும் வர்க்கத்தை நினைத்துப் பார்த்து நன்றி சொல்ல வைக்ககும் வரிகள் அருமை./***

  உண்மைதான் கோமதிம்மா. நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 67. அக்பர் said...

  //மிக அருமை//

  நன்றி அக்பர்.

  ReplyDelete
 68. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  //வரி வரியாக ரசித்தேன்.//

  மிக்க சந்தோஷம். நன்றிகள் டாக்டர்.

  ReplyDelete
 69. திகழ் said...

  ***/ /அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..
  அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..
  உய்... உய்...!/

  அருமை//***

  வாங்க திகழ்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 70. Minmini said...

  // MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
  அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
  Feel பண்ணக்கூடாது..//

  சீட் வாங்கி விட்டேன். நன்றிகள் மின்மினி:)!

  ReplyDelete
 71. சதங்கா (Sathanga) said...

  //கவிதையின் முதல் வரியைப் பின்னூட்டமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்.//

  உய்..உய்..:)!

  நன்றிகள் சதங்கா.

  ReplyDelete
 72. ராதை said...

  //அழகான கவிதை :) வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் :)//

  நன்றி ராதை. வாழ்த்துங்க போதும்:)!

  ReplyDelete
 73. "உழவன்" "Uzhavan" said...

  //ரொம்ப சந்தோசம். வாழ்த்துகள் :-)//

  நன்றிகள் உழவன்:)!

  ReplyDelete
 74. அப்பாவி தங்கமணி said...

  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. நல்ல கவிதை//

  நன்றிகள் புவனா.

  ReplyDelete
 75. கமலேஷ் said...

  //விகடனில் வாசித்தேன் மிகவும் அருமையாக இருந்தது...வாழ்த்துக்கள்..//

  மகிழ்ச்சி கமலேஷ். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 76. மின்னஞ்சலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'நட்சத்திரங்கள் [உயிரோசை/ யூத் விகடன்]' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th May 2010 02:14:03 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/249753

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷில் வாக்களித்த 25 பேர்களுக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த 13 பேர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 77. சரி.. உங்களை வாழ்த்துகிறேன்; உங்கள் கவிதையை வணங்குகிறேன்!

  ReplyDelete
 78. @ ராதை,

  இது ஓகே:)! நன்றி ராதை.

  ReplyDelete
 79. ***புலம்பிக் கொள்ளலாமென
  கலைந்த தூக்கத்தைத் துரத்திப் பிடிக்க***

  இந்த வரி ரொம்ப நல்லாயிருக்குங்க.

  ***ஊர் அசந்தபின்னும் தாம் அசராது
  கண்சிமிட்டிக் காவலிருந்த
  விண்மீன்களை ரசித்தவாறே
  விழி பிசைந்த உறக்கந்தனை
  விரட்டியடிக்க
  உதடு குவித்து இசைக்கலானான்

  சூழ்ந்திருந்த நிசப்தத்தில்
  சுரம் பிசகாமல்

  அண்டம் அனுபவிக்கும்
  அத்தனைக்கும் அடிநாதமாய்..***

  இதுவும் புரிகிறது.

  ***அறியப்படாமலே
  காற்றோடு கரைந்து போகும்
  உழைக்கும் வர்க்க கீதமாய்..***

  உழைக்கும் வர்க்க கீதம் அறியப்படாமலே மறைந்துவிடுகிறதுனு சொல்ல வர்றீங்களா (conclusion). ராமலக்‌ஷ்மி?

  இல்லைனா, எனக்கு மட்டும் இதை விளக்குங்கள். என்னுடைய இயலாமையைப் பொறுத்தருங்கள் தயவு செய்து :)

  புரிந்த மாதிரி நடிக்கப்பிடிக்கவில்லைங்க! அதான்...

  நன்றி

  ReplyDelete
 80. @ வருண்,

  //உழைக்கும் வர்க்க கீதம் அறியப்படாமலே மறைந்துவிடுகிறதுனு//

  அதேதான் சொல்ல வந்தது. பெரும்பாலும் அப்படித்தானே? ஒரு பொழுது தூக்கம் கலைந்ததற்கே அலுத்துக் கொள்பவர் ஒரு கணமேனும் நினைப்பதில்லை அவர்கள் கவலையின்றித் தூங்க, தமது முழுத்தூக்கத்தையும் தொலைத்து விட்டு காவல் இருப்பவரை. அது அவர் வேலை. கடமை. மறுநாள் காலை தூங்க வேண்டியதுதானே என்கிற அளவிலேதான் இருக்கிறது பார்வை. இது ஒரு உதாரணமே.

  //எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள
  சோத்தில் நாம கையை வைக்க
  சேத்தில் வைப்பான் கால....

  சாக்கடைக்குள் போய்
  சுத்தம் செய்யும் பேரு
  நாலு நாளைக்கு லீவு போட்டா
  நாறிப்போகும் ஊரு...

  எந்த தொழில் செய்தாலென்ன
  செய்யும் தொழில் தெய்வமென்று
  பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே//

  இந்தத் திரைப்பாடல் வரிகள் உங்களுக்குத் தெரியாமலிருக்க சான்ஸே இல்லைன்னு நினைக்கிறேன்:)! செய்யும் தொழிலை தெய்வமாகவே நினைத்து நட்சத்திரங்களாய் மிளிர்ந்தாலும், அவர்கள் தரும் உடல் உழைப்புக்கான அங்கீகாரம் நம் நாட்டில் உரியபடி இல்லையென்பதே வருந்தத்தகு உண்மை. அவர்களின் சிரமங்கள் உணரப் படாமலேதான் போகின்றன.

  நன்றி வருண்:)!

  ReplyDelete
 81. //உழைக்கும் வர்க்க கீதமாய்..//

  இன்னும் பல கீதங்கள் நினைவுக்கு வருகின்றன!!

  ReplyDelete
 82. ****ஒரு பொழுது தூக்கம் கலைந்ததற்கே அலுத்துக் கொள்பவர் ஒரு கணமேனும் நினைப்பதில்லை அவர்கள் கவலையின்றித் தூங்க, தமது முழுத்தூக்கத்தையும் தொலைத்து விட்டு காவல் இருப்பவரை. அது அவர் வேலை. கடமை. மறுநாள் காலை தூங்க வேண்டியதுதானே என்கிற அளவிலேதான் இருக்கிறது பார்வை***

  விளக்கத்திற்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி!

  ஆமாம், வாலி இந்த "தேவுடா" பாட்டில் உழைக்கும் வர்க்கங்களை நல்லாவே கவனித்து, பாராட்டியிருப்பார் :-)

  ReplyDelete
 83. மகிழ்ச்சியும் பாராட்டுகளும்..

  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 84. @ வருண்,

  நினைத்தது போலவே சரியாகப் பாட்டைச் சொல்லிவிட்டீர்கள்:)! மீள் வருகைக்கு நன்றி வருண்.

  ReplyDelete
 85. @ ஞானசேகரன்,

  மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin