வியாழன், 19 மார்ச், 2009

இளமை வெகு இனிதுஇது ஒரு வயது
இளமை அது இனிது

கடந்தவை பற்றிய
கவனம் இன்றி
வரவிருப்பவை பற்றிய
வருத்தமோ வாட்டமோ
இன்றி
இன்றைய பொழுது
இனிப்பாய் கழிந்தால்
இதுதான் வாழ்க்கை
இதுதான் சொர்க்கம்
என்றே நினைக்கும்-
இது ஒரு வயது
இங்கு
இளமை வெகு இனிது.


காதல் தவறென்றால்
ஏற்காது மனசு.
களிப்புகள் தவறென்றால்
இசையாத இளசு.
கலாச்சாரம் கலைப்பது
இல்லைதான் நோக்கம்.
காண்பவர் பார்வை
வேறுபடுவதும் சோகம்.
விளிம்புகள் எதுவரை
என்பதில் விவரம்
இருக்குமாயின்
வீழாது வாழலாம்.
உமை
நோக்கி நீளுகின்ற
விரல்களை வெகு
எளிதாக மடக்கலாம்.

நாளையை உமதாக்கிட
ஒருமுறை உமைச்சுற்றி-
ஒரேயொரு முறை
உமைச் சுற்றி-
உற்று நீவிர் நோக்கலாம்.
நோகாமல் நுங்கு உண்ணும்
குருட்டு அதிர்ஷ்டக் குதிரையிலே
பயணிக்க விரும்பாது
போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில்
போராடி ஜெயித்திடத்தான்
ஓடுகிறார் ஓட்டமாய் உம்
வயதொத்த வாலிபர் பலரும்
கூட்டம் கூட்டமாய்.
'மாரத்தான்' ஓட்டமதில்
சேர்ந்திடத்தான் வேண்டுமெனில்
மாறத்தான் வேண்டும் சற்று.

உம்மோடு வளர்ந்தவரும்
உம்மோடு படித்தவரும்
ஆடிப் பாடியவரும்
நட்போடு நடந்தவரும்
நகைத்து மகிழ்ந்திருந்தவரும்-
நாளை ஒரு நாளில்
விண்ணினையே வளைத்து
வெண்ணிலவைப் பிடித்து
வெற்றிக் கோப்பையாகக்
கையில் ஏந்தி நிற்க-
நட்சத்திரங்களைப் பறித்து
நெஞ்சருகே பதக்கங்களாய்
பதித்திருக்க-
நீங்கள்
அண்ணாந்து மட்டுமே
பார்த்திருக்கப் பிறந்தவராய்
ஆகிடலாமா?
அவர் அருகே போயிடவே
அஞ்சும் நிலைக்கு
ஆளாகிடலாமா?

விழித்திடலாம் இப்போதே
பயணிக்க வேண்டிய
பாதை நெடுக
முட்களாய் இருந்தாலும்
முயற்சி கை கொடுக்கும்.
எடுத்திடலாம் இப்போதே
இதுதான் என் இலக்கென
இதயத்தில் ஒரு உறுதி-
எந்த ஒரு
இருளிலும் வழி மட்டும்
தெரிந்திடும்
தெள்ளத் தெளிவாக-
இதுவே வயது
இளமை வலியது!

*** ***


படம் நன்றி: ஜீவ்ஸ்

[இக்கவிதை மார்ச் 19, 2009 இளமை விகடன்

இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.]

80 கருத்துகள்:

 1. இப்போது தான் நினைத்தேன். அடுத்த பதிவு எப்போது என்று கேட்க. அதற்குள்ளே பதிவு. அருமையாக இருக்கிறது அக்கா. விகடனில் தொடர்ந்து இடம் பெறுவதற்கு வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 2. கவிதை நல்லா இருக்கு.. ஆனா பாவம் காதலை தப்புன்னு சொல்லிட்டீங்களே.. :))

  பதிலளிநீக்கு
 3. ம்ம்ம்ம்ம்ம்...
  //கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி//

  மாத்தி இருக்கணும் போல இருக்கே!
  சாதாரணமா நடந்து போனதைப்பத்திதான் வருத்தமோ வாட்டமோ இருக்கும். வர இருக்கறதைப்பத்தி கவனம் இல்லாம இருக்கும்!

  பதிலளிநீக்கு
 4. கடையம் ஆனந்த் said...

  //me the first//

  வாங்க ஆனந்த். நீங்கதான் முதலில்:)!

  பதிலளிநீக்கு
 5. கடையம் ஆனந்த் said...

  // இப்போது தான் நினைத்தேன். அடுத்த பதிவு எப்போது என்று கேட்க.
  அதற்குள்ளே பதிவு.//

  டெலிபதி. நீங்கள் நினைத்தது எனக்குத் தெரிந்து விட்டது:)!

  //அருமையாக இருக்கிறது அக்கா. விகடனில் தொடர்ந்து இடம் பெறுவதற்கு வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 6. இளமை இனியது மட்டுமில்லை, வலியதும்தான் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள். இளமையை தவற விட்டால் வாழ்க்கையே தவறி விடும்தான்.

  //விகடனில் தொடர்ந்து இடம் பெறுவதற்கு வாழ்த்துக்கள் //

  ரிப்பீட்டேய்...!

  பதிலளிநீக்கு
 7. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  //கவிதை நல்லா இருக்கு.. ஆனா பாவம் காதலை தப்புன்னு சொல்லிட்டீங்களே.. :))//

  அடடே, நான் சொல்லலீங்க முத்து. இது நம்ம கலாச்சார காவலர்கள் சொல்வதைக் குறிப்பிட்டிருக்கிறேன். அடுத்தாப்ல பாருங்க. “களிப்புகள் தவறென்றால்...” ! ஏன் இவங்ககிட்ட பேச்சு கேட்கணும் கண்ணுங்களா, விளிம்புகளிலே விவரமா இருந்துக்கோங்க. உங்களை நோக்கி விரல்கள் நீளாமப் பாத்துக்கலாம்னு.. கனிவாச் சொல்றேங்க:)!

  பதிலளிநீக்கு
 8. //இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்//

  //காதல் தவறென்றால்
  ஏற்காது மனசு.
  களிப்புகள் தவறென்றால்
  இசையாத இளசு.
  கலாச்சாரம் கலைப்பது
  இல்லைதான் நோக்கம்.
  காண்பவர் பார்வை
  வேறுபடுவதும் சோகம்.//

  ;-)

  தொடர்ந்து எழுதுங்கள் ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 9. கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி
  இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்//

  இளமைக் காலத்தின் மன வரிகள் சிறிதும் மாறாமல்...அழகாகவும்..
  தெளிவாகவும்..சொல்லிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 10. திவா said...

  \\ ம்ம்ம்ம்ம்ம்...
  //கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி//

  மாத்தி இருக்கணும் போல இருக்கே!
  சாதாரணமா நடந்து போனதைப்பத்திதான் வருத்தமோ வாட்டமோ இருக்கும். வர இருக்கறதைப்பத்தி கவனம் இல்லாம இருக்கும்! \\

  நீங்க சொல்றதும் சரியாத்தான் தோணுது. வரிகளை மாத்த முடியுமா பார்க்கிறேன்.

  ஆனால் நான் சொல்ல நினைத்தது கடந்தகாலம் எந்தப் பாடம் கற்பித்திருந்தாலும் கஷ்டங்கள் தந்திருந்தால் அது எவையுமே கவனத்தில் கொள்ளாத பருவம்.

  இன்றைய நாளை வீணாக்கினால் நாளை என்னாவோம் என்கிற பதைப்போ வருத்தமோ எட்டிப் பார்க்கிற வாய்ப்பே இல்லாத பருவம்.

  பதிலளிநீக்கு
 11. //ஆனால் நான் சொல்ல நினைத்தது கடந்தகாலம் எந்தப் பாடம் கற்பித்திருந்தாலும் கஷ்டங்கள் தந்திருந்தால் அது எவையுமே கவனத்தில் கொள்ளாத பருவம்.

  இன்றைய நாளை வீணாக்கினால் நாளை என்னாவோம் என்கிற பதைப்போ வருத்தமோ எட்டிப் பார்க்கிற வாய்ப்பே இல்லாத பருவம்.//
  புரியுது.
  கடந்த காலத்தைப்பத்தி நினைக்க ஒரு நியாயம் இருக்குன்னா அது அதிலேந்து கத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள் தான்.
  எதிர் காலத்தைப்பத்தி ரொம்ப யோசிக்காம இருக்கிறதும் நல்லதுதான்.

  சாதரணமா நிகழ் காலத்திலே நாம யாரும் இருக்கிறதில்லையே! கடந்த கால வருத்தம் இல்லாட்டா எதிர்காலத்தைபத்தி anxiety fear...

  பதிலளிநீக்கு
 12. ///ராமலக்ஷ்மி said...

  முத்துலெட்சுமி-கயல்விழி said...

  //கவிதை நல்லா இருக்கு.. ஆனா பாவம் காதலை தப்புன்னு சொல்லிட்டீங்களே.. :))//

  அடடே, நான் சொல்லலீங்க முத்து. இது நம்ம கலாச்சார காவலர்கள் சொல்வதைக் குறிப்பிட்டிருக்கிறேன். அடுத்தாப்ல பாருங்க. “களிப்புகள் தவறென்றால்...” ! ஏன் இவங்ககிட்ட பேச்சு கேட்கணும் கண்ணுங்களா, விளிம்புகளிலே விவரமா இருந்துக்கோங்க. உங்களை நோக்கி விரல்கள் நீளாமப் பாத்துக்கலாம்னு.. கனிவாச் சொல்றேங்க:)!///

  இல்லை... நான் ஒத்துக்க மாட்டேன்... நீங்க எதையும் கவனிக்காம வெற்றி என்ற எல்லையை மட்டும் நோக்கிப் போகச் சொல்கின்றீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. ***காதல் தவறென்றால்
  ஏற்காது மனசு.
  களிப்புகள் தவறென்றால்
  இசையாத இளசு.***

  **நீங்கள்
  அண்ணாந்து மட்டுமே
  பார்த்திருக்கப் பிறந்தவராய்
  ஆகிடலாமா?
  அவர் அருகே போயிடவே
  அஞ்சும் நிலைக்கு
  ஆளாகிடலாமா?***

  இள வயதில், காதல் தவறில்லை, களிப்பும் தவறில்லை என்று மனம்போன போக்கில் போனால், அண்ணாந்து பார்க்க வேண்டியதுதான் மற்றவர்கள் வளர்ச்சியைப்பார்த்து என்பது உண்மைதான்.

  ***விழித்திடலாம் இப்போதே
  பயணிக்க வேண்டிய
  பாதை நெடுக
  முட்களாய் இருந்தாலும்
  முயற்சி கை கொடுக்கும்.
  எடுத்திடலாம் இப்போதே
  இதுதான் என் இலக்கென
  இதயத்தில் ஒரு உறுதி-
  எந்த ஒரு
  இருளிலும் வழி மட்டும்
  தெரிந்திடும்
  தெள்ளத் தெளிவாக-
  இதுவே வயது
  இளமை வலியது!***

  என்று வலியுறுத்த வேண்டியது
  நிச்சயம் பெற்றோரின் கடமைதான் :-)

  தொடர்ந்து இளமை விகடன் உங்கள் கவிதையை பிரசுரித்து அவர்கள் தரத்தை உயர்த்துகிறார்கள் என்பேன் நான் :-)

  வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி :-)

  பதிலளிநீக்கு
 14. /*இது ஒரு வயது
  இங்கு
  இளமை வெகு இனிது*/
  ...

  /*இதுவே வயது
  இளமை வலியது!*/

  உண்மை... அருமை...

  பதிலளிநீக்கு
 15. இளமை இத்தனை இனிதானது என பலருக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.

  அருமையான வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
 16. //நாளையை உமதாக்கிட
  ஒருமுறை உமைச்சுற்றி-
  ஒரேயொரு முறை
  உமைச் சுற்றி-
  உற்று நீவிர் நோக்கலாம்.
  //

  முழுதாய் ரொம்ப புடிச்சிருக்கு அதில் இனிதாய் இந்த வரிகள் :)

  பதிலளிநீக்கு
 17. கவிநயா said...

  // இளமை இனியது மட்டுமில்லை, வலியதும்தான் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள். இளமையை தவற விட்டால் வாழ்க்கையே தவறி விடும்தான்.//

  ஆமாம் கவிநயா. அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

  \\ //விகடனில் தொடர்ந்து இடம் பெறுவதற்கு வாழ்த்துக்கள் //

  ரிப்பீட்டேய்...!\\

  நன்றி:)!

  பதிலளிநீக்கு
 18. கிரி said...

  \\ //இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்//

  //காதல் தவறென்றால்
  ஏற்காது மனசு.
  களிப்புகள் தவறென்றால்
  இசையாத இளசு.
  கலாச்சாரம் கலைப்பது
  இல்லைதான் நோக்கம்.
  காண்பவர் பார்வை
  வேறுபடுவதும் சோகம்.//

  ;-)

  தொடர்ந்து எழுதுங்கள் ராமலக்ஷ்மி\\

  வழக்கம் போல பிடித்த ரசித்த வரிகளுடன் வந்திருக்கும் ஊக்கம். நன்றி கிரி:)!

  பதிலளிநீக்கு
 19. Poornima Saravana kumar said...

  // //கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி
  இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்//

  இளமைக் காலத்தின் மன வரிகள் சிறிதும் மாறாமல்...அழகாகவும்..
  தெளிவாகவும்..சொல்லிட்டீங்க!//

  நன்றி பூர்ணிமா. நேற்று நாளை மறந்து இன்றில் வாழ்ந்து வாழ்க்கையை ரசிப்பதுதானே இளமையின் விசேஷம்:)!

  பதிலளிநீக்கு
 20. திவா said...
  //புரியுது.
  கடந்த காலத்தைப்பத்தி நினைக்க ஒரு நியாயம் இருக்குன்னா அது அதிலேந்து கத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள் தான்.
  எதிர் காலத்தைப்பத்தி ரொம்ப யோசிக்காம இருக்கிறதும் நல்லதுதான்.

  சாதரணமா நிகழ் காலத்திலே நாம யாரும் இருக்கிறதில்லையே! கடந்த கால வருத்தம் இல்லாட்டா எதிர்காலத்தைபத்தி anxiety fear...//

  இது நிஜம். நிகழ்காலத்தில் வாழ நமக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று கூட கொள்ளலாம். ஆனால் அது கொடுத்து வைத்த பருவத்தினருக்கு அது சரியில்லை என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று:( :
  //போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில்//

  கருத்துக்கு நன்றி திவா!

  பதிலளிநீக்கு
 21. தமிழ் பிரியன் said...
  //இல்லை... நான் ஒத்துக்க மாட்டேன்... நீங்க எதையும் கவனிக்காம வெற்றி என்ற எல்லையை மட்டும் நோக்கிப் போகச் சொல்கின்றீர்கள்.//

  நிச்சயமா இல்லை தமிழ் பிரியன்.
  //விளிம்புகள் எதுவரை
  என்பதில் விவரம்
  இருக்குமாயின்
  வீழாது வாழலாம்.// என்றுதான் சொல்கிறேன். காதல் தப்பென்றும் நான் சொல்லவில்லை. களிப்புகள் கூடாதென்றும் சொல்லவில்லை. ஆனால் இதிலேயே மூழ்கி விட்டால் எல்லோரும் முந்திக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்களே.

  அப்போ போல இல்லை காலம்.
  //போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில்//
  எல்லாவற்றிலும் போட்டி. ஏன் காதலிலும் கூடத்தான். ஆணோ பெண்ணோ வருகிற துணை நல்லவர்களாக மட்டுமல்ல வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறார்கள்? அங்கும் தோற்று வாழ்க்கையையும் கோட்டை விட்டு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஆக இளமையின் இனிமையை ரசியுங்கள் அனுபவியுங்கள் அதே சமயம் இளமை வலியது என்பதையும் மறந்து விடாதீர்கள் என்பதுதான் என் வேண்டுதல்.

  பதிலளிநீக்கு
 22. //நாளை ஒரு நாளில்
  விண்ணினையே வளைத்து
  வெண்ணிலவைப் பிடித்து//

  கில்லில கூட விஜய் கபடி ஆடிட்டாரே...

  இப்பவும் ஒரு கபடிக்குழு

  பதிலளிநீக்கு
 23. வருண் said...

  //இள வயதில், காதல் தவறில்லை, களிப்பும் தவறில்லை என்று மனம்போன போக்கில் போனால், அண்ணாந்து பார்க்க வேண்டியதுதான் மற்றவர்கள் வளர்ச்சியைப்பார்த்து என்பது உண்மைதான்.//

  'மனம் போன போக்கில்'.. சரியாகச் சொன்னீர்கள். எல்லாம் அளவோடு இருந்தால் வாழ்க்கையை நழுவ விடாதிருக்கலாம். புரிதலுக்கு நன்றி வருண்.

  //
  ***விழித்திடலாம் இப்போதே
  பயணிக்க வேண்டிய
  பாதை நெடுக
  முட்களாய் இருந்தாலும்
  முயற்சி கை கொடுக்கும்.
  எடுத்திடலாம் இப்போதே
  இதுதான் என் இலக்கென
  இதயத்தில் ஒரு உறுதி-
  எந்த ஒரு
  இருளிலும் வழி மட்டும்
  தெரிந்திடும்
  தெள்ளத் தெளிவாக-
  இதுவே வயது
  இளமை வலியது!***

  என்று வலியுறுத்த வேண்டியது
  நிச்சயம் பெற்றோரின் கடமைதான் :-)//

  பெற்றோரின் கடமை மட்டுமல்ல சமூகத்தின் கடமையும் கூட. கலாச்சாரம் கலைக்கிறார்கள் என்று தடியடி செய்யாமல் கனிவாய் அவர்களுக்கு புரியும் வகையில் சொன்னால் புரியவில்லை என்று அடமா செய்யப் போகிறார்கள்:)?
  வாழ்த்துக்களுக்கும் நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 24. அமுதா said...

  // /*இது ஒரு வயது
  இங்கு
  இளமை வெகு இனிது*/
  ...

  /*இதுவே வயது
  இளமை வலியது!*/

  உண்மை... அருமை... //

  இரண்டுமே உண்மைதான்:)!

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 25. புதுகைத் தென்றல் said...

  //இளமை இத்தனை இனிதானது என பலருக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.

  அருமையான வார்த்தைகள்.//

  எல்லோரும் கடந்த வந்த பருவம்தானே அது:)? ரசிப்புக்கு நன்றி தென்றல்.

  பதிலளிநீக்கு
 26. ஆயில்யன் said...

  \\ //நாளையை உமதாக்கிட
  ஒருமுறை உமைச்சுற்றி-
  ஒரேயொரு முறை
  உமைச் சுற்றி-
  உற்று நீவிர் நோக்கலாம்.
  //

  முழுதாய் ரொம்ப புடிச்சிருக்கு அதில் இனிதாய் இந்த வரிகள் :)\\

  நன்றி ஆயில்யன். முழுதாய் கவிதை பிடித்துப் போனதற்கும், குறிப்பாய் இந்த வரிகள் இனித்ததற்கும்.

  “சுற்றி ஒருமுறை ஒரே ஒரு முறை உற்றுப் பார்த்தாலே” புரிந்திடும் இக்கவிதையின் நோக்கம், சரிதானே? கேட்டுக் கொள்ளுங்கள் தமிழ் பிரியன்:)!

  பதிலளிநீக்கு
 27. SUREஷ் said...

  \\ //நாளை ஒரு நாளில்
  விண்ணினையே வளைத்து
  வெண்ணிலவைப் பிடித்து//

  கில்லில கூட விஜய் கபடி ஆடிட்டாரே...

  இப்பவும் ஒரு கபடிக்குழு\\

  அட ஆமால்ல. ம்ம் கில்லி பார்த்திருக்கிறேன். வெண்ணிலா கபடிக் குழு கதை என்னன்னு இனிதான் தெரிஞ்சுக்கணும்:)! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி Sureஷ்!

  பதிலளிநீக்கு
 28. \\விளிம்புகள் எதுவரை
  என்பதில் விவரம்
  இருக்குமாயின்
  வீழாது வாழலாம்\\

  இது இது இது பாயிண்ட்! சூப்பர் பிரண்ட்!உங்க கவிதைகளில் எனக்கு பிடிச்சது இதுதான் ரேங் 1!!!!!!

  பதிலளிநீக்கு
 29. இளமை வெகு இனிது, அதை சரியான பாதையில் செலுத்தினால் என அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்.

  அடுத்தவரின் வெற்றியைப் பார்த்து அஞ்சாமல், புறப்படுங்கள் இளைஞ்சர்களே என்ற விதம் அருமை.

  //குறுகிய காலத்தில் விகடன தளத்தில் வெளியாகும் எனது 11-ஆவது படைப்பு. நன்றி விகடன்!//

  ஆயிரம் ஆயிரமாகப் பெருக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. இளமை பருவம்

  அனுபவம் இல்லாதது
  அனுபவம் பெறுவது
  நிரந்தரம் இல்லாதது
  நிச்சயம் வருவது
  கனவுகள் நிறைந்தது
  கனவாகிப்போவது
  ஆக்கமுமானது, அழிவுமானது,
  இனியது அது
  இன்னாததும் அதுவே
  இளைஞனே
  கனியிருக்க காய் எதற்கு!

  இளமை வெகு இனிதுதான்.இளமையிலேயே அதைத்தெரிந்துக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 31. //விழித்திடலாம் இப்போதே
  பயணிக்க வேண்டிய
  பாதை நெடுக
  முட்களாய் இருந்தாலும்
  முயற்சி கை கொடுக்கும்.
  எடுத்திடலாம் இப்போதே
  இதுதான் என் இலக்கென
  இதயத்தில் ஒரு உறுதி-
  எந்த ஒரு
  இருளிலும் வழி மட்டும்
  தெரிந்திடும்
  தெள்ளத் தெளிவாக-
  இதுவே வயது
  இளமை வலியது!//

  விழி...எழு... போராடு...மாதிரி சொல்லிட்டீங்க...உடனே செய்துட வேண்டியது தான். கவிதை நல்லா இருக்கு .

  பதிலளிநீக்கு
 32. //ஏன் இவங்ககிட்ட பேச்சு கேட்கணும் கண்ணுங்களா, விளிம்புகளிலே விவரமா இருந்துக்கோங்க. உங்களை நோக்கி விரல்கள் நீளாமப் பாத்துக்கலாம்னு.. கனிவாச் சொல்றேங்க//

  அடடா! அடடா! இது ரொம்ப அருமையா இருக்கே!

  முழு கவிதையையும் ரெண்டாம் தரம் வாசிக்க வெச்சுட்டீங்க. இது தான் டாப்னு நானும் சொல்லிட்டு அபி அப்பா பக்கத்துல போயி உக்காந்துக்கறேன். அவர் தூங்க ஆரம்பிச்சா ஓடி வந்ருவேன். :))

  பதிலளிநீக்கு
 33. விகடனைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துகள்! காதல் தவறில்லை. காதலிக்கக்கூடிய வயது எது என்பதுதான் முக்கியம்.

  பதிலளிநீக்கு
 34. கவிதை நல்லா இருக்கு வழக்கம் போலவே, ராமலஷ்மி! ஆனா, இப்போல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க...முன்பை விட..! வேலை விசா-ல்லாம் வாங்கிட்டு ஒண்ணாப் பறந்துடறாங்க! :-)

  பதிலளிநீக்கு
 35. //அபி அப்பா said...

  // \\விளிம்புகள் எதுவரை
  என்பதில் விவரம்
  இருக்குமாயின்
  வீழாது வாழலாம்\\

  இது இது இது பாயிண்ட்! சூப்பர் பிரண்ட்!உங்க கவிதைகளில் எனக்கு பிடிச்சது இதுதான் ரேங் 1!!!!!! //

  சரியான பாயின்டைப் பிடித்துப் பாராட்டியதோடு ரேங்கும் கொடுத்திருப்பதற்கு நன்றி:)!

  பதிலளிநீக்கு
 36. சதங்கா (Sathanga) said...

  // இளமை வெகு இனிது, அதை சரியான பாதையில் செலுத்தினால் என அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்.//

  அதே அதே:)!

  //அடுத்தவரின் வெற்றியைப் பார்த்து அஞ்சாமல், புறப்படுங்கள் இளைஞ்சர்களே என்ற விதம் அருமை.//

  நன்றி.

  \\ //குறுகிய காலத்தில் விகடன தளத்தில் வெளியாகும் எனது 11-ஆவது படைப்பு. நன்றி விகடன்!//

  ஆயிரம் ஆயிரமாகப் பெருக வாழ்த்துக்கள்.\\

  நன்றி சதங்கா. இந்த எண்ணிக்கையில் ஏற்கனவே நான் முன்னர் இங்கு பதிவிட்டவைகளும் அடங்கும்:)! ஆகையால்தான் இந்த வேகம். மற்றபடி வலைப்பூவில் எப்போதும் போல நிதானமாகவேதான் இருக்கும் என் பயணம்.. வாரம் ஒன்று என்கிற கணக்கில். உங்கள் 'ஆயிரமாயிரம்’ வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 37. உமா said...

  // இளமை பருவம்

  அனுபவம் இல்லாதது
  அனுபவம் பெறுவது
  நிரந்தரம் இல்லாதது
  நிச்சயம் வருவது
  கனவுகள் நிறைந்தது
  கனவாகிப்போவது
  ஆக்கமுமானது, அழிவுமானது,
  இனியது அது
  இன்னாததும் அதுவே
  இளைஞனே
  கனியிருக்க காய் எதற்கு!//

  அற்புதம் உமா.

  // இளமை வெகு இனிதுதான்.இளமையிலேயே அதைத்தெரிந்துக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.//

  சரியாகச் சொன்னீர்கள். கருத்துக்கு நன்றி உமா.

  பதிலளிநீக்கு
 38. மிஸஸ்.டவுட் said...

  // //விழித்திடலாம் இப்போதே
  பயணிக்க வேண்டிய
  பாதை நெடுக
  முட்களாய் இருந்தாலும்
  முயற்சி கை கொடுக்கும்.
  எடுத்திடலாம் இப்போதே
  இதுதான் என் இலக்கென
  இதயத்தில் ஒரு உறுதி-
  எந்த ஒரு
  இருளிலும் வழி மட்டும்
  தெரிந்திடும்
  தெள்ளத் தெளிவாக-
  இதுவே வயது
  இளமை வலியது!//

  விழி...எழு... போராடு...மாதிரி சொல்லிட்டீங்க...உடனே செய்துட வேண்டியது தான். கவிதை நல்லா இருக்கு //

  செஞ்சுடுங்க:)! நன்றி மிஸஸ்.டவுட்.

  பதிலளிநீக்கு
 39. ambi said...

  // //ஏன் இவங்ககிட்ட பேச்சு கேட்கணும் கண்ணுங்களா, விளிம்புகளிலே விவரமா இருந்துக்கோங்க. உங்களை நோக்கி விரல்கள் நீளாமப் பாத்துக்கலாம்னு.. கனிவாச் சொல்றேங்க//

  அடடா! அடடா! இது ரொம்ப அருமையா இருக்கே! //

  நன்றி அம்பி. தம்பி தமிழ் பிரியன், கேட்டுக் கொள்ளுங்கள்:)!

  //முழு கவிதையையும் ரெண்டாம் தரம் வாசிக்க வெச்சுட்டீங்க. இது தான் டாப்னு நானும் சொல்லிட்டு அபி அப்பா பக்கத்துல போயி உக்காந்துக்கறேன். அவர் தூங்க ஆரம்பிச்சா ஓடி வந்ருவேன். :))//

  ஆமாமா, உங்க விஷயத்தில் “ என் முகம் அவனுக்கு நியாபகம் வரக்கூடாது ஆண்டவா”-ன்னு அவரு வேண்டவும் முடியாது:))!

  பதிலளிநீக்கு
 40. குடந்தைஅன்புமணி said...

  //விகடனைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துகள்! //


  என்னங்க குத்தகைக்கெல்லாம் எடுக்கவில்லை:). பதிவர்கள் யாவரையுமே விகடன் ஆதரித்து வருவது மகிழ்வுக்குரிய விஷயம்.

  //காதல் தவறில்லை. காதலிக்கக்கூடிய வயது எது என்பதுதான் முக்கியம்.//

  உண்மைதான். கருத்துக்கு நன்றி அன்புமணி.

  பதிலளிநீக்கு
 41. சந்தனமுல்லை said...

  //கவிதை நல்லா இருக்கு வழக்கம் போலவே, ராமலஷ்மி! ஆனா, இப்போல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க...முன்பை விட..! வேலை விசா-ல்லாம் வாங்கிட்டு ஒண்ணாப் பறந்துடறாங்க! :-)//

  அப்படி எல்லாரும் தெளிவா இருந்தால்தான் தேவலையே முல்லை. இது தெளிவில்லாத விவரமில்லாத இளசுகளுக்கு. இப்ப சமீப காலமாய் கர்நாடகாவில் கலாச்சார காவலர்களிடம் மாட்டி முழிக்கின்ற இளசுகள் ஒருபுறமிருக்க, சில தினம் முன்னர் காவலர்களிடமும் மாட்டி சிறையில் இருந்தார்கள் பல இளைஞர்[ஞி]களும் அனுமதியின்றி பார்ட்டி நடத்தியதற்காக.

  பதிலளிநீக்கு
 42. பதிவர் என்.சுரேஷ் யூத்ஃபுல் விகடன்.காமில்:

  // /'மாரத்தான்' ஓட்டமதில் சேர்ந்திடத்தான் வேண்டுமெனில் மாறத்தான் வேண்டும் சற்று./

  நான் மிகவும் ரசித்த வரிகள் இவை, நல்வாழ்த்துக்கள். //

  நன்றி சுரேஷ்.

  பதிலளிநீக்கு
 43. // படம் நன்றி: ஜீவ்ஸ் //

  அட்டகாசமானா சாட் ஆனா மாடல்தான்.....

  // குறுகிய காலத்தில் விகடன தளத்தில் வெளியாகும் எனது 11-ஆவது படைப்பு. நன்றி விகடன்!]//

  வாழ்துக்கள்கா.

  பதிலளிநீக்கு
 44. கார்த்திக் said...

  // // படம் நன்றி: ஜீவ்ஸ் //

  அட்டகாசமானா சாட் ஆனா மாடல்தான்.....//

  மாடலுக்கு என்ன கார்த்திக்:)? ஷாட்டை மட்டுமல்ல கஷ்டப்பட்டுக் குதித்துப் போஸ் கொடுத்தவரையும் பாராட்டணுமில்ல நீங்க:)?

  // வாழ்துக்கள்கா.//

  நன்றி கார்த்திக்:)!

  பதிலளிநீக்கு
 45. " உழவன் " " Uzhavan " said...

  //Rebirth is uncertain, enjoy each moment of this Life.//

  ...என நினைத்து விளிம்புகளில் [limits] விவரமின்றி வரவிருக்கும் நாட்களை வசந்தமாக்கிடத் தவறிடக் கூடாதில்லையா உழவன்:)?

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 46. கவிதை நெம்ப சூப்பருங்கோ...!!!!! போட்டோவுல இருக்குற மாடல் நெம்ப சூப்பரா இருக்குறாரு... நெம்ப கஷ்டப்பட்டு குதுச்சிருக்காரு.......!! அவருக்கு எம்பட மொத பாராட்ட வேண்டும் .

  பதிலளிநீக்கு
 47. லவ்டேல் மேடி said...

  //கவிதை நெம்ப சூப்பருங்கோ...!!!!! //

  நெம்ப நன்றி:)!

  //போட்டோவுல இருக்குற மாடல் நெம்ப சூப்பரா இருக்குறாரு... நெம்ப கஷ்டப்பட்டு குதுச்சிருக்காரு.......!! அவருக்கு எம்பட மொத பாராட்ட வேண்டும்//

  நிச்சயமா அவருக்குதான் முதல் பாராட்டு. ஃபிளிக்கரில் இப்படத்தைப் பார்த்ததும் ‘எத்தனை முறை மாடலை இதற்காகக் குதிக்க விட்டீர்கள்’ எனக் கேட்டிருந்தேன். அவசரமான பதில் உடன் கிடைத்தது, நந்தி ஹில்ஸில் ‘ஒரே ஒரு முறைதாங்க’ என்று. உண்மைதானா என யாரிடமாவது விசாரித்துச் சொல்ல முடியுமா லவ்டேல் மேடி:)?

  பதிலளிநீக்கு
 48. அருமையாக இளமையைப் படம் பிடித்த ஜீவ்ஸுக்கும்,
  காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் என்பது போலத் தாவிக் குதிக்கப் போகும் அந்த இளமைக்கும் பல்லாண்டு.

  என்ன சொல்ல ராமலக்ஷ்மி. அசத்திவிட்டீர்கள். வெற்றி உங்களுக்கே.

  பதிலளிநீக்கு
 49. //கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி
  இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்//

  unmaiyai sollum varigal.

  பதிலளிநீக்கு
 50. வல்லிசிம்ஹன் said...

  //அருமையாக இளமையைப் படம் பிடித்த ஜீவ்ஸுக்கும்,
  காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் என்பது போலத் தாவிக் குதிக்கப் போகும் அந்த இளமைக்கும் பல்லாண்டு.//

  சேர்ப்பித்து விடுகிறேன் உங்கள் வாழ்த்துக்களை அவர்களிடம்:)!

  //என்ன சொல்ல ராமலக்ஷ்மி. அசத்திவிட்டீர்கள். வெற்றி உங்களுக்கே.//

  சங்கமம் நடத்தும் ‘கல்லூரி’ போட்டியில் ‘பங்களிப்பே சிறப்பு’ எனும் எனது வழக்கமான உற்சாகத்துடனேதான் கலந்து கொண்டுள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 51. இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

  \\ //கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி
  இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்//

  unmaiyai sollum varigal.\\

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இராஜலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 52. திகழ்மிளிர் said...

  //அருமை//

  நன்றி திகழ்மிளிர்.

  பதிலளிநீக்கு
 53. வழமை போல, 'இன்றே கடைசி' போர்டு தொங்கும் நிலையில் பின்னூட்டம். ரொம்ப நல்லா வந்திருக்கு. "இளமை வலியது". இது போல் யாரும் சொல்லிக் கேட்டதில்லை. அவசியமான அறிவுரைதான் இளைஞர்களுக்கு. ('என் போன்ற' என்றால் அடிக்க வருவீர்கள்). ஆமாம், விகடன் குத்தகைக்கு எப்போது விளம்பரம் வந்தது? வாழ்த்துகள். கலக்குங்க.

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 54. அனுஜன்யா said...

  //வழமை போல, 'இன்றே கடைசி' போர்டு தொங்கும் நிலையில் பின்னூட்டம்.//

  'இன்றே கடைசி’ போர்டே என்னிடம் கிடையாதாக்கும். எப்பவும் ‘தங்கள் வரவு நல்வரவாகுக’ போர்டுதான்:)!

  //ரொம்ப நல்லா வந்திருக்கு. "இளமை வலியது". இது போல் யாரும் சொல்லிக் கேட்டதில்லை.//

  நன்றி அனுஜன்யா.

  // அவசியமான அறிவுரைதான் இளைஞர்களுக்கு. ('என் போன்ற' என்றால் அடிக்க வருவீர்கள்).//

  அதெல்லாம் இல்லை, இன்று பதிவர்களின் யூத் சிம்பல் நீங்கள்தான் என பார்க்கிற வலைப்பூக்கள் எல்லாம் பறைசாற்றியபடியே இருக்கின்றனவே:)!

  //ஆமாம், விகடன் குத்தகைக்கு எப்போது விளம்பரம் வந்தது?//

  அப்படியெல்லாம் ஏதுமில்லை:))! வலைப் பதிவர்கள் எல்லோரையுமே விகடன் ஆதரித்து வருகிறதே. வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 55. கருத்துள்ள கவிதை.
  வாழ்த்துக்கள் சகோதரி.
  தொடர்ந்து எழுதுங்கள் !

  பதிலளிநீக்கு
 56. //
  இளமை வெகு இனிது
  //

  லேட் ரொம்ப லேட் மன்னிக்க மேடம்!!

  கொஞ்சம் வேலை அதிகம் அதான்.

  அடுத்து உங்க கவிதை ஆரம்பமே வெகு அருமை!!

  ஆமாம் வெகு இனிது.

  அந்த இனிது மட்டும் அறியும் வயது.

  பதிலளிநீக்கு
 57. //
  கடந்தவை பற்றிய
  கவனம் இன்றி
  வரவிருப்பவை பற்றிய
  வருத்தமோ வாட்டமோ
  இன்றி
  இன்றைய பொழுது
  இனிப்பாய் கழிந்தால்
  இதுதான் வாழ்க்கை
  இதுதான் சொர்க்கம்
  என்றே நினைக்கும்-
  //

  சொர்க்கமா இருந்திட்டால் பரவா இல்லையே?

  அதுவே தவறான முடிவா இருந்தால்??

  அந்த பருவத்தின் சிந்தனை தான் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 58. //
  காதல் தவறென்றால்
  ஏற்காது மனசு.
  களிப்புகள் தவறென்றால்
  இசையாத இளசு.
  கலாச்சாரம் கலைப்பது
  இல்லைதான் நோக்கம்.
  காண்பவர் பார்வை
  வேறுபடுவதும் சோகம்.
  விளிம்புகள் எதுவரை
  என்பதில் விவரம்
  இருக்குமாயின்
  வீழாது வாழலாம்.
  உமை
  நோக்கி நீளுகின்ற
  விரல்களை வெகு
  எளிதாக மடக்கலாம்.
  //

  அருமை அருமை,

  //
  கலாச்சாரம் கலைப்பது
  இல்லைதான் நோக்கம்.
  காண்பவர் பார்வை
  வேறுபடுவதும் சோகம்.
  //

  இந்த வரிகளுக்காகவே உங்களுக்கு எவ்வளவு விருதகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

  உண்மையான உண்மைகள் அப்பட்டமாக அலங்கரிக்கப் பட்டுள்ளன.

  எடுத்துரைத்த நிதர்சனங்கள் அப்படியே மனதில் அசைபோட தயாராகின்ற!!

  பதிலளிநீக்கு
 59. //
  விழித்திடலாம் இப்போதே
  பயணிக்க வேண்டிய
  பாதை நெடுக
  முட்களாய் இருந்தாலும்
  முயற்சி கை கொடுக்கும்.
  //

  தன்னம்பிக்கை மிக்க வார்த்தைகள்
  அருமை அருமை!!

  பதிலளிநீக்கு
 60. தொடர்ச்சியாக விகடனில் கலக்கல்!!

  வாழ்த்துக்கள் அம்மா!!

  பதிலளிநீக்கு
 61. எம்.ரிஷான் ஷெரீப் said...

  // கருத்துள்ள கவிதை.
  வாழ்த்துக்கள் சகோதரி.
  தொடர்ந்து எழுதுங்கள் !//

  தொடரும் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ரிஷான்.

  பதிலளிநீக்கு
 62. RAMYA said...
  // //இளமை வெகு இனிது//
  அடுத்து உங்க கவிதை ஆரம்பமே வெகு அருமை!!
  ஆமாம் வெகு இனிது.
  அந்த இனிது மட்டும் அறியும் வயது.////

  ஆமாம் ரம்யா, இனிது மட்டுமே அறியும் வயதென்பதாலேதான் "இளமை வலியது"ம் கூட என நினைவுறுத்தி முடித்திருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 63. RAMYA said...
  //சொர்க்கமா இருந்திட்டால் பரவா இல்லையே?

  அதுவே தவறான முடிவா இருந்தால்??//

  இருக்கவும் வாய்ப்பிருக்கிறதே ரம்யா.

  //அந்த பருவத்தின் சிந்தனை தான் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.//

  தவிர்க்க முடியாது. தவறான முடிவுகளில் மாட்டிக் கொள்ளாமல் தடுக்கவும் சிந்தனையைத் தூண்டவுமே இம்முயற்சி.

  பதிலளிநீக்கு
 64. RAMYA said...
  \\ //கலாச்சாரம் கலைப்பது
  இல்லைதான் நோக்கம்.
  காண்பவர் பார்வை
  வேறுபடுவதும் சோகம்.//

  இந்த வரிகளுக்காகவே உங்களுக்கு எவ்வளவு விருதகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். \\

  விருது இருக்கட்டும்:). அவ்வரிகளில் உண்மையும் இருக்கிறதுதானே?

  பதிலளிநீக்கு
 65. RAMYA said...

  \\ //விழித்திடலாம் இப்போதே
  பயணிக்க வேண்டிய
  பாதை நெடுக
  முட்களாய் இருந்தாலும்
  முயற்சி கை கொடுக்கும்.//

  தன்னம்பிக்கை மிக்க வார்த்தைகள்
  அருமை அருமை!!\\

  நன்றி ரம்யா. கவிதையில் நான் உணர்ந்த முயன்றதை வரிக்கு வரி எடுத்துக்காட்டியிருப்பதற்கு.

  பதிலளிநீக்கு
 66. ஜீவன் said...

  // தொடர்ச்சியாக விகடனில் கலக்கல்!!

  வாழ்த்துக்கள் அம்மா!!//

  நன்றி ஜீவன்.

  பதிலளிநீக்கு
 67. தமிழ்நெஞ்சம் said...

  //good post//

  நன்றி தமிழ்நெஞ்சம்.

  பதிலளிநீக்கு
 68. புத்தம் புது கவிதை .இதுநாள் வரை என் கண்ணில் படாத ஒன்று. இளைஞர் சமுதாயம் வரி விடாமல் வாசித்து உள் இறக்கினால், உருவாகும் காமராசர் கண்ட கனவு பாரதம், கலாம் காணத்துடிக்கும் இனிய இந்தியா.
  --------------
  இளமைவிகடனிலிருந்து அப்படியே எடுத்து ஒட்டிவிட்டேன்

  பதிலளிநீக்கு
 69. கடையம் ஆனந்த் said...

  //me the 75?//

  yes you are:)! இப்படிக் கேட்டு அடுத்த பதிவு எப்போது என நினைவுறுத்துகிறீர்கள் எனப் புரியாமல் இல்லை ஆனந்த்:)! சற்று காத்திருங்கள்!

  பதிலளிநீக்கு
 70. goma said...
  // புத்தம் புது கவிதை .இதுநாள் வரை என் கண்ணில் படாத ஒன்று.//

  //இளமைவிகடனிலிருந்து அப்படியே எடுத்து ஒட்டிவிட்டேன்//

  மிக்க நன்றி, அங்கும் கண்டேன் கோமா.

  // இளைஞர் சமுதாயம் வரி விடாமல் வாசித்து உள் இறக்கினால், உருவாகும் காமராசர் கண்ட கனவு பாரதம், கலாம் காணத்துடிக்கும் இனிய இந்தியா.//

  அருமையாகச் சொன்னீர்கள், அப்படி ஆக வேண்டும் என்கிற ஆசையில்தான் சங்கமம் நடத்தும் "கல்லூரி" போட்டியில் இப்பதிவினை சங்கமித்து விட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 71. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதயுடன்)
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவன்
  உலவு.காம்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin