நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து
அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்
மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை
சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை
நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக
காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது
கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.
***
18 ஆகஸ்ட் 2012 மலைகளின் எட்டாவது இதழில்.., நன்றி மலைகள்.காம்!
எல்லோருக்குள்ளும் இருக்கும் குற்ற உணர்வை
பதிலளிநீக்குமிக மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மனம் நோகச் செய்யும் பொழுது தெரியாத குற்ற உணர்வு பின்னாட்களில் மன்னிப்பு யாசிக்கையில் பூதாகரமாய் பயமுறுத்தத்தான் செய்கின்றன. அருமையான கவிதையின் மூலம் ‘அவளை’ பிரம்மாண்டப்படுத்தி மனதில் பதியச் செய்து விட்டீர்கள். அருமை.
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் அற்புதம்!
பதிலளிநீக்குகாலம் கடந்து விட்டது
பதிலளிநீக்குஎதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது//அருமையான வரிகள்
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசிலபேர் கேட்கிறார்கள்... சிலர் உணர்வதேயில்லை!
பதிலளிநீக்குமிக அருமை,சிந்திக்க வைத்தது..ராமலஷ்மி..
பதிலளிநீக்குகையில் அள்ளி வீசும் நீராக//
பதிலளிநீக்குஅருமை..ராமலக்ஷ்மி .
இயலாமையின் உருவகப்படுத்தல்..
மனதை நெருடும் சில குற்ற உணர்வுகள்....எல்லோருடைய உணர்வும் உங்கள் கவிதையில்.வாழ்த்துகள் அக்கா !
பதிலளிநீக்கு"கசிந்துருகி நிற்கும் எனக்குக்
பதிலளிநீக்குகாட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது"
அன்பு தெரிவதால் கருணையும் கூடவருவதால் மன்னிப்பு தேவைப்படுவதில்லை!
சிறு வயதில் (சட்டை செய்யாத )மனைவியை கவனிக்காத கணவன் வயதான பின் காலம் கடந்து மன்னிப்பு கேட்பதும் எல்லோர் இடத்தில் காட்டும் ஒரே அனபு மட்டும் கிடைப்பதும், தனியாக சிறப்பு மன்னிப்பு எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடையும் கணவனின் பரிதவிப்பு கவிதையில் அழகாய் சொல்லப்பட்டு இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
arumai sago
பதிலளிநீக்கு@Ramani,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
@Sriakila,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீஅகிலா.
@ஸாதிகா,
பதிலளிநீக்குநன்றி ஸாதிகா.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஉணராது போவோர் அதிகமும் கூட. நன்றி ஸ்ரீராம்.
@Asiya Omar,
பதிலளிநீக்குநன்றி ஆசியா.
@முத்துலெட்சுமி/muthuletchumi,
பதிலளிநீக்குநன்றி முத்துலெட்சுமி.
@ஹேமா,
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
@சந்திர வம்சம்,
பதிலளிநீக்குஅப்படி எடுத்துக் கொள்வது ஒரு வகை செளகரியம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@சந்திர வம்சம்,
பதிலளிநீக்குஅப்படி எடுத்துக் கொள்வது ஒரு வகை செளகரியம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குகருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.
@Mohan P,
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Too good...can't find any other words to say
பதிலளிநீக்குஅருமையான வரிகள் ராமலக்ஷ்மி..வாழ்த்துகள்
பதிலளிநீக்கு