Monday, January 9, 2012

கூட்டல் கழித்தல் - நவீன விருட்சத்தில்..பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும்
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும்
விடைகளையே
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.

சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***

26 டிசம்பர் 2011, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

* ஆறுவருடங்களுக்கு முந்தைய சுனாமியின் நினைவுகள் தந்த கவிதை.

* படம்: இணையத்திலிருந்து..

61 comments:

 1. கூட்டிக் கழித்துப் பார்த்தேன்.கவிதை கணக்கு சூப்பர்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஆச்சரியமா நிறைய ஆங்கில வார்த்தைகள் ஆனா கவிதை சுவாரஸ்யம்

  ReplyDelete
 3. சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
  தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து
  வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.

  கவிதை வாழ்க்கைக்கணக்கை வாய்ப்பாடாக அளித்தது.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. கூட்டலும், கழித்தலும் - காலத்திற்கேற்ப்ப மாறத் தானே செய்யும். நல்ல கவிதை.

  ReplyDelete
 5. இதயத்தை தொட்ட கவிதை....
  வரிக்கு வரி....
  அணுஅணுவாக ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
 6. கூட்டல் கணக்கு நல்லாவே இருக்கு...!!!

  ReplyDelete
 7. அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள் மேடம்...!!!

  ReplyDelete
 8. நல்ல கற்பனை. பாவத்தைப் பற்றி மாறிய பார்வையும், பூலோகத்தில் சொர்க்க வாழ்வு பேரமும் ஒரே விடை தரும் கேள்விகளும் எல்லாமே அருமை. புதுமையான சிந்தனை. மறந்து போன விஷயங்களை சொல்லி விளைவையும் சொல்வது இந்த வருடத்துக்குப் பொருத்தமே...!!
  :))

  ReplyDelete
 9. எதார்த்தத்தைச் சொல்லும் இனிய கணக்கு. மனதை ஏதோ செய்கிறது.

  ReplyDelete
 10. கூட்டலும்,கழித்தலுமாக கவிதை மிக நன்றாக இருக்கு!!

  ReplyDelete
 11. மனம் கவர்ந்த அருமையான பதிவு
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம6

  ReplyDelete
 12. அருமை அக்கா :)

  ReplyDelete
 13. கணக்கையும், கம்ப்யூட்டரையும் கலந்து ஒரு கவிதையா? பகிர்வுக்கு நன்றிங்க

  ReplyDelete
 14. சிறப்பான கவிதை.
  படித்தவுடன் ஒரு நிமிடம் சிந்தைனையைத் தூண்டுகிறது.

  ReplyDelete
 15. கணக்குகள் மிகச்சரி...வார்த்தைக்கு வார்த்தை ரசித்தேன் ராமலக்ஷ்மி...வாழ்த்துகள்..

  ReplyDelete
 16. அருமையா இருக்கு. வரி வரியா ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன்.

  //பாவத்தைப் பற்றிய பார்வை
  மாறியிருந்தது//

  ம்ம்... ஹூம்... :-((((

  ReplyDelete
 17. கரு சுனாமியாலும் வித்தியாசமான கவிதை நடை !

  ReplyDelete
 18. கூடலும் ஊடலும் இல்லறத்தின் அங்கமெனின்
  கூட்டலும் கழித்தலும் வாழ்வியலில் சங்கமமாம்.

  பெருக்கலும் வகுத்தலும் கூட‌
  பேரறிவாளன் காணா நியதி அல்ல.

  சுவர்க்கத்தின் கதவுகளைக் காட்டுபவனே
  சுனாமிகளையும் அனுப்புகிறான்

  அன்பும் அறனையும் உணர்த்துபவனே
  அழித்தலையும் செய்கின்றான்.

  அதர்மம் பெருக்கையிலே
  அவனே அவதரித்து
  வையத்து எண்களிலே ஒரு
  வகுத்தலையும் செய்கின்றான்.


  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 19. அன்பும் பாசமும் மிக்க அக்கா, பதிவுலகத்தையும் உங்கள் அன்பையும் என்றும் மறக்கவில்லை. புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. சிநேகிதி said...
  //நன்று//

  நன்றி சிநேகிதி.

  ReplyDelete
 21. asiya omar said...
  //கூட்டிக் கழித்துப் பார்த்தேன்.கவிதை கணக்கு சூப்பர்.வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 22. மோகன் குமார் said...
  //ஆச்சரியமா நிறைய ஆங்கில வார்த்தைகள் ஆனா கவிதை சுவாரஸ்யம்//

  நன்றி மோகன் குமார். நல்ல அவதானிப்பு. கவிதையில் ஆங்கில வார்த்தைகளை எப்போதும் தவிர்ப்பதுதான் வழக்கம். கணினி சார்ந்தவற்றுக்குத் தமிழ்படுத்தியது சரிவரப் பொருந்தவில்லை. பொறுத்தருள்க:)!

  ReplyDelete
 23. இராஜராஜேஸ்வரி said...
  //கவிதை வாழ்க்கைக்கணக்கை வாய்ப்பாடாக அளித்தது.. பாராட்டுக்கள்..//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 24. தமிழ் உதயம் said...
  //கூட்டலும், கழித்தலும் - காலத்திற்கேற்ப்ப மாறத் தானே செய்யும். நல்ல கவிதை.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 25. Shakthiprabha said...
  //இதயத்தை தொட்ட கவிதை....
  வரிக்கு வரி....
  அணுஅணுவாக ரசித்தேன். நன்றி.//

  மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete
 26. MANO நாஞ்சில் மனோ said...
  //கூட்டல் கணக்கு நல்லாவே இருக்கு...!!!

  அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள் மேடம்...!!!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 27. ஸ்ரீராம். said...
  //நல்ல கற்பனை. பாவத்தைப் பற்றி மாறிய பார்வையும், பூலோகத்தில் சொர்க்க வாழ்வு பேரமும் ஒரே விடை தரும் கேள்விகளும் எல்லாமே அருமை. புதுமையான சிந்தனை. மறந்து போன விஷயங்களை சொல்லி விளைவையும் சொல்வது இந்த வருடத்துக்குப் பொருத்தமே...!!
  :))//

  ஒருபக்கம் வருத்தமாகவும் இருந்தது ‘தானே’ புயலை நினைத்து. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 28. சசிகுமார் said...
  //மிக அருமை...//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 29. குமரி எஸ். நீலகண்டன் said...
  //எதார்த்தத்தைச் சொல்லும் இனிய கணக்கு. மனதை ஏதோ செய்கிறது.//

  மிக்க நன்றி நீலகண்டன். வேறு விடைகளை உலகம் தேட ஆரம்பிக்கும் வரை வருத்தங்களும் தவிர்க்க இயலாதவை.

  ReplyDelete
 30. S.Menaga said...
  //கூட்டலும்,கழித்தலுமாக கவிதை மிக நன்றாக இருக்கு!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 31. Ramani said...
  //மனம் கவர்ந்த அருமையான பதிவு
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. சுசி said...
  //அருமை அக்கா :)//

  நன்றி சுசி.

  ReplyDelete
 33. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //அருமையான பதிவு.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 34. ராஜி said...
  //கணக்கையும், கம்ப்யூட்டரையும் கலந்து ஒரு கவிதையா? பகிர்வுக்கு நன்றிங்க//

  நன்றி ராஜி:)!

  ReplyDelete
 35. அமைதி அப்பா said...
  //சிறப்பான கவிதை.
  படித்தவுடன் ஒரு நிமிடம் சிந்தைனையைத் தூண்டுகிறது.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 36. பாச மலர் / Paasa Malar said...
  //கணக்குகள் மிகச்சரி...வார்த்தைக்கு வார்த்தை ரசித்தேன் ராமலக்ஷ்மி...வாழ்த்துகள்..//

  நன்றி மலர்.

  ReplyDelete
 37. ஹுஸைனம்மா said...
  /அருமையா இருக்கு. வரி வரியா ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன்.//

  நன்றி ஹுஸைனம்மா. பார்வைகள் மாறிதானே விட்டன:(?

  ReplyDelete
 38. ஹேமா said...
  //கரு சுனாமியாலும் வித்தியாசமான கவிதை நடை !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 39. கவிநயா said...
  //சரிதான் :)//

  நன்றி கவிநயா!

  ReplyDelete
 40. sury said...
  //கூடலும் ஊடலும் இல்லறத்தின் அங்கமெனின்
  கூட்டலும் கழித்தலும் வாழ்வியலில் சங்கமமாம்.

  பெருக்கலும் வகுத்தலும் கூட‌
  பேரறிவாளன் காணா நியதி அல்ல.

  சுவர்க்கத்தின் கதவுகளைக் காட்டுபவனே
  சுனாமிகளையும் அனுப்புகிறான்

  அன்பும் அறனையும் உணர்த்துபவனே
  அழித்தலையும் செய்கின்றான்.

  அதர்மம் பெருக்கையிலே
  அவனே அவதரித்து
  வையத்து எண்களிலே ஒரு
  வகுத்தலையும் செய்கின்றான்.//

  அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 41. podigaiherbs@blogspot.com said...
  //miga nandru.//

  முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 42. Chitra said...
  //அன்பும் பாசமும் மிக்க அக்கா, பதிவுலகத்தையும் உங்கள் அன்பையும் என்றும் மறக்கவில்லை. புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

  நன்றி சித்ரா. பதிவுலகம் காத்திருக்கிறது. விரைவில் வாருங்கள்:)!

  ReplyDelete
 43. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

  ReplyDelete
 44. கடவுச்சொல் ஒருநாள் காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்... சுவாரசியம். இதை வைத்துக் கொண்டு ஒரு கதை எழுதலாம் போலிருக்கே?

  ReplyDelete
 45. MangaiMano said...
  //nice:)//

  நன்றி மங்கை.

  ReplyDelete
 46. அப்பாதுரை said...
  //கடவுச்சொல் ஒருநாள் காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்... சுவாரசியம். இதை வைத்துக் கொண்டு ஒரு கதை எழுதலாம் போலிருக்கே?//

  வாசிக்கக் காத்திருக்கிறேன்:)! வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 47. திரு சூரி சொன்னதையே வேறுவிதமாக எழுத எண்ணினேன். என்னோட கருத்தும் கிட்டத்தட்ட அதுவே.'

  அப்பாதுரைக்குக் கதைக்கான கருக் கிடைத்திருக்கிறது. கதையை விரைவில் எதிர்பார்க்கலாம்.

  ஆனால் கடவுச்சொல் காக்கும் சக்திக்கு மறக்காது என்று நிச்சயமாய்ச் சொல்வேன்.

  ஹிஹிஹி, எழுதினால் பெரிசாய் ஆயிடும். பின்னர் பார்க்கலாம். இயன்றால்!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 48. அண்டவெளியில் பூமி
  அதிவேகத்தில் சுழலாம்.
  இரண்டு மணிகளுக்கொருமுறை
  இரவு பகல் நேரலாம்.
  அந்நாள்வரையிலும்
  கூட்டலாம் கழிக்கலாம்
  வகுக்கலாம் பெருக்கலாம்.//

  விடையை நீங்களே சொல்லி இருக்கீங்களே? இதைச்சரியாய்க் கவனிக்கலை முதல்லே. ஆம், நீங்க சொல்லி இருப்பவை நடக்கும்; ஆனால் எப்போவோ! :))))))

  என்றாலும் இன்றைய உண்மை இது. சுடும் உண்மை.

  ReplyDelete
 49. பாவத்தைப் பற்றிய பார்வை நிச்சயமா மாறித்தான் இருக்குது.எல்லாமே டேக் இட் ஈஸின்னு ஆகிட்ட இந்தக் காலத்துல மனசாட்சிக்கு பயப்படறது குறைஞ்சு போயிட்டதால இருக்குமோ???

  ReplyDelete
 50. geethasmbsvm6 said...
  //விடையை நீங்களே சொல்லி இருக்கீங்களே? இதைச்சரியாய்க் கவனிக்கலை முதல்லே. ஆம், நீங்க சொல்லி இருப்பவை நடக்கும்; ஆனால் எப்போவோ! :))))))

  என்றாலும் இன்றைய உண்மை இது. சுடும் உண்மை.//

  நன்றி மேடம்:)!

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...
  //பாவத்தைப் பற்றிய பார்வை நிச்சயமா மாறித்தான் இருக்குது.எல்லாமே டேக் இட் ஈஸின்னு ஆகிட்ட இந்தக் காலத்துல மனசாட்சிக்கு பயப்படறது குறைஞ்சு போயிட்டதால இருக்குமோ???//

  சரியாய் சொன்னீர்கள் சாந்தி. வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 52. கவிதை மிக அருமை இப்போதான் வாசித்தேன்
  கடவுச்சொல் ஒருநாள்
  காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்
  என்கிற வரி புதுமை....

  ReplyDelete
 53. @ ஷைலஜா,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷைலஜா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin