செவ்வாய், 19 மார்ச், 2013

ஓய்வு பெற்ற என் நண்பனுக்கு.. - டு ஃபு சீனக் கவிதை

friendship.jpg.w300h301

காலை மாலை நட்சத்திரங்கள் சந்தித்துக் கொள்ள இயலா
சிரமத்தைப் போன்றதாகி விட்டது
நண்பர்கள் சந்தித்துக் கொள்வதும்.
இந்த இரவின் சந்திப்பு ஒரு அபூர்வ நிகழ்வு,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சேர்ந்து அமர்ந்திருக்கும்
இரண்டு ஆண்களும்
இளமையாக இருந்தவர்கள்தாம் சிலகாலம் முன்வரை.
இப்போதோ நரைக்கத் தொடங்கி விட்டது உச்சிச் சிகை.

நம் நண்பர்களில் பாதிப்பேர்
இப்போது உயிரோடு இல்லை என்பது அதிர்ச்சியாகவும்,
இதயத்தைக் கனக்க வைப்பதாகவும் இருக்கிறது.
இதற்கு முன் நாம் சந்தித்தது உத்தேசமாக
இருபது வருடங்களுக்கு முன் இருக்கலாம் என ஊகித்தோம்.
நாம் பிரிந்த அச்சமயத்தில் உனக்கு மணமாகியிருக்கவில்லை.
ஆனால் இப்போது இந்தப் பையன்களும் பெண்பிள்ளைகளும்
வரிசையில் நிற்கிறார்கள்
தங்கள் அப்பாவின் நண்பருக்குப் பணிவிடை செய்ய.

எங்கே இருக்கிறேன் என் பயணத்தில் என
அக்கறையுடன் விசாரிக்கிறார்கள்;
சிறிது நேரம் அளவளாவிய பிறகு,
திராட்சை ரசமும், விதவிதமான உணவும் கொண்டு தருகிறார்கள்.
மழை இரவில் வெட்டி வந்த வெங்காயத்தழையுடன்
விசேஷமாகச் சம்பா அரிசியில் சமைத்த சாதத்தைப் பரிமாறுகிறார்கள்.

எனக்கான விருந்தை விழா என அறிவிக்கிறாய்
பத்து கோப்பை திராட்சை ரசம் அருந்த வற்புறுத்துகிறாய்
உன் அன்பால் நெஞ்சம் நிறைந்திருக்கையில்
பத்து கோப்பை ரசமா என்னை மகிழ்விக்கப் போகிறது?

நாளை மலைகள் நம்மைப் பிரித்து விடும்;
நாளை மறுநாள் - யாருக்குத் தெரியும்?

***

17 மார்ச் 2013 அதீதம் மின்னிதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.

"TO MY RETIRED FRIEND WEI"
மூலம்: சீன மொழி
எழுதியவர்: Du Fu

ஆங்கிலத்தில்: Burton Watson
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

படங்கள் நன்றி: இணையம்

DU FU

 du-fu

34 கருத்துகள்:

 1. தமிழாக்கம் அருமை... பாராட்டுக்கள்...

  நாளை மறுநாள்...யாருக்குத் தெரியும்...?

  பதிலளிநீக்கு
 2. Naanum izhandavaikalai ninaithth siruthu neram manam kalanginen manam thotta kavithai pakirvukku vaazhththukkal

  பதிலளிநீக்கு
 3. மனதை உருக்கிய கவிதை...ஒவ்வொரு வரிகளும் நம்மோடு ஒப்பு நோக்க வைக்கிறது.... அருமை..பகிர்தலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. நல்ல கவிதையை தமிழாக்கம் செய்து பகிர்ந்தற்கு நன்றி

  பதிலளிநீக்கு

 5. எண்ண அலைகளும், சிந்தனைகளும் ஒத்துப் போகிறபோது கவிதையின் ரசனை ஈர்க்கிறது.ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. // நாளை மலைகள் நம்மைப் பிரித்துவிடும் //

  ஜஸ்ட் ப்யூட்டிஃபுல்.
  அன்ட் ஈக்வலி பவர்ஃபுல்.

  வர்ட்ஸ் ஹார்ட்லி டை.

  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 7. நாளை மாலைகள் நம்மை பிரித்துவிடும்..

  கனக்கும் வரிகள்..!

  பதிலளிநீக்கு
 8. உருக்கமான கவிதை மனதை தொடுகின்றது.

  பதிலளிநீக்கு
 9. அருமையான மொழிபெயர்ப்பு.. பகிர்வுக்கு நன்றி அக்கா :)

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையான ஒரு கவிதையை நாங்கள் படிக்கத் தந்தீர்கள். அருமை. வாழ்க்கைப் பயணம் என்னும் நெடிய கதையின் கடைசி அத்தியாயங்கள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கவிதை. மொழிபெயர்த்து எங்களையும் ரசிக்க வைத்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. தொக்கி நிற்கும் தேடலில் கவிதையின் நிறைவு.

  பதிலளிநீக்கு
 13. ஜூப்பரு ராமலக்ஷ்மி.. அருமையான மொழியாக்கம்.

  பதிலளிநீக்கு
 14. அருமையான நட்பை பிரிய முடியாமல் தவிக்கும் நண்பனின் மனதை உணர்த்தும் கவிதை அருமை.
  பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 15. வாழ்வின் யாதார்த்தை இக் கவிதை நினைவுப் படுத்துகிறது.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ***நம் நண்பர்களில் பாதிப்பேர்
  இப்போது உயிரோடு இல்லை என்பது அதிர்ச்சியாகவும்***

  நமக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களில் உயிரோடு இல்லாதவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக ஆக, நாம் ரொம்ப நாள் வாழ்ந்துவிட்டோம் என்பதை கணக்கிடலாம்..ஒரு சிலர் நாம் போகும் காலம் வந்துவிட்டது என்பதையும் இதை வைத்து உணர்ந்து மனதுக்குள் பயப்படுவதுடன் வெளியில் சொல்வதும் உண்டு!

  ஒருவருக்கு 65 வயதுக்கு மேலே ஆகிவிட்டால், லைஃப் இண்சூரண்சே பெறமுடியாது. You lost the value of your life once you cross 65! :)

  பதிலளிநீக்கு
 17. @வருண்,

  உண்மைதான். சிலப் பயப்படுகிறார்கள். சிலர் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்.

  நன்றி வருண்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin