ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா - இன்று சென்னையில்..நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியா படிக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் சென்னையில் ஒன்றுகூட இருக்கிறார்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமாக மனித அறிவு முழுமையடைய எந்த இலாப நோக்கமுமின்றி கூட்டு முயற்சியில் இயங்கி வரும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பத்தாண்டு நிறைவுவிழா இன்று காலை 09.00 மணி முதல் 05.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், டாக் (TAG) அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிறைவுவிழாஅறிக்கையிலிருந்து மேலும் சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு:


 • இன்று 935 பங்களிப்பாளர்களை எட்டியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களைக் கொண்ட 55,745 கட்டுரைகள் உள்ளன. ஒப்பீட்டளவில் தமிழ் இணைய உலகில் மிகப்பெரிய கூட்டாக்கத் திட்டமாகவும் பல தர அளவீடுகளில் இந்திய விக்கிப்பீடியாக்களில் முதல் இரண்டு இடங்களிலும் வந்து ஒரு முன்மாதிரித் திட்டமாக திகழ்கிறது.
 • பல நாடுகளையும் துறைகளையும் சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள்.
 • பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவை மேற்கோளாகச் சுட்டுகின்றனர். சில பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் உலவி தாங்கள் கற்கும் பாடங்களைச் சார்ந்து இன்னும் கூடுதல் தகவல்களைப் பெறவும், பொது அறிவினைப் பெருக்கிக் கொள்ளவும் மாணவர்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இத்தகைய வளர்ச்சியும் தாக்கமும் பெற்றிருந்தாலும் குறைவான மக்கள்தொகை கொண்ட வேறு சில மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும் சில ஆயிரம் பங்களிப்பாளர்களாவது தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தால் ஆங்கில விக்கிப்பீடியாவைப் போல் பெரும் பயன் விளைவிக்க முடியும். தமிழ் விக்கிப்பீடியாவைச் செறிவாக்குவதற்கு, கட்டுரை ஆக்குநர்கள் தவிர வரைகலையாளர்கள், நிரலாளர்கள், ஒளிப்படக்காரர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று பல்வேறு பின்னணி உள்ளவர்களின் பங்களிப்புகள் தேவை.
 • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தமிழ் விக்கிச் சமூகம் இவ்விழாவிற்கு வரவேற்கிறது.  இலவசப் பயிற்சிகளும் தமிழ் விக்கித்திட்டங்களின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடல்களும் நிகழ உள்ளது.
 • கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரூ 30,000/- பரிசுத்தொகையுடன் கூடிய கட்டுரைப் போட்டி ஒன்றும் நடைபெறுகிறது.
 • நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தமது நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்துச் செல்லலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
 • கட்டாயமில்லை என்றாலும் மடிக்கணினி, Data card, கேமரா ஆகியவற்றைக் கொண்டு செல்வது பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்

காலை 09.00 மணி முதல் 12:30 மணி
 •     09.00 - 10.30 - புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் - தமிழ்த் தட்டச்சு, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம், விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
 •     10.30 - 11.15 - ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது என்ன? - இதழாளரும் ஆழி பதிப்பக நிறுவனரும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளருமான செ. ச. செந்தில்நாதன் உரையாடுகிறார்.
 •     11. 15 - 12.00 - சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி? - ஹரி பிரசாத் பயிற்சி அளிக்கிறார். ஹரி பிரசாத் ஒரு ஒளிப்படக்கலை விரும்பி. அவரது படங்களை என்ற http://www.500px.com/HariNair முகவரியில் காணலாம்.
 •     12.00 - 12.30 - சிறப்பாக பரப்புரைகள் செய்வது எப்படி? - தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அமைப்பினருடன் ஒரு கலந்துரையாடல்

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை

   
 •     வரவேற்புரை (2 நிமிடங்கள்)
 •     தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
 •     தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
 •     முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
 •     தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
 •     தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
 •     தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல், நித்யா சீனிவாசன் எழுதிய லினக்சு மின்னூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
 •     பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
 •     நன்றியுரை (3 நிமிடங்கள்)
***

ஆர்வமுள்ள சென்னை மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். நிகழ்வு குறித்தத் தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

22 கருத்துகள்:

 1. தமிழ் விக்கிப்பீடியாவின் பாத்தாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

 2. நல்ல தகவல். வளர்க தமிழ் விக்கிபீடியா. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. பலருக்கும் உதவும் விரிவான தகவல்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள அறியாத பல அருமையான
  தகவல்களுடன் கூடிய விரிவான பகிர்வுக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. தகவல் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. தகவலுக்கு நன்றி.

  சென்னை வாசிகள் கலந்து கொண்டிருந்தால் நிகழ்வு பற்றி எழுதலாமே....

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. விக்கிப்பீடியா குறித்த தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. @goma,

  பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி:)!

  பதிலளிநீக்கு
 10. @sury Siva,

  சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நேரமிருக்கையில். நன்றி Sury sir.

  பதிலளிநீக்கு
 11. @வெங்கட் நாகராஜ்,

  நானும் அறியக் காத்திருக்கிறேன். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin