செவ்வாய், 27 அக்டோபர், 2015

எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலிக் கூட்டம்

அஞ்சலிகள்!
ழுத்தாளரும் கலை, இலக்கிய விமர்சகருமான திரு வெங்கட் சாமிநாதன் கடந்த புதன் கிழமை, 21 அக்டோபர் 2015 அன்று அதிகாலையில் காலமானார். அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமான ஓர் அஞ்சலி நிகழ்ச்சியை எழுத்தாளர் பாவண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.
இயன்றவரை மற்ற நண்பர்களுக்கும் இந்த நிகழ்வு குறித்த செய்தியை தெரியப் படுத்தினால், வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உதவியாக இருக்கும்.

வெங்கட் சாமிநாதன்
அஞ்சலி நிகழ்ச்சியும்
ஆவணப்படத் திரையிடலும்

நாள்:  01.11.2015 ஞாயிறு
நேரம் காலை 10.00 மணி
VenueSai Mitra Meadows, Community Hall, August Park Road,
1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar, Bnagalore-560093


பங்கேற்போர்
விட்டல்ராவ்  ஜி.கே.ராமசாமி  ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்
.கிருஷ்ணசாமி மகாலிங்கம் முகம்மது அலி 
பாவண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் நண்பர்கள்
ஆவணப்படம் திரையிடல்
இயக்குநர் அருண்மொழிசென்னை






[நிகழ்வு நடைபெற இருக்கும் சாய் மித்ரா மெடோஸ், 'CV ராமன் நகர்' பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் தகவல்களுக்கு திரு. சம்பந்தம் அவர்களை 9448584648 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.]

சென்ற வருடம் திரு. வெ. சா அவர்களை பெங்களூர் நண்பர்கள் சந்தித்த நிகழ்வு குறித்து இங்கே பகிர்ந்திருந்தேன்: http://tamilamudam.blogspot.in/2014/12/blog-post_15.html . மீண்டும் ஒரு சந்திப்புக்காக நண்பர்கள் திட்டமிட்டு வந்த வேளையில் நுரையீரல் பாதிப்பால் அவர் ICU-வில் அனுமதிக்கப்பட்ட செய்தியும், தொடர்ந்து மறுநாள் காலையில் தொடர் மாரடைப்பால் காலமான வருத்தமான செய்தியும் வந்தன. இறுதி வரையிலும் மின்னிதழ்களிலும் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி படைப்புகளை வழங்கி வந்தவர். தமிழ் இலக்கிய உலகின் ‘விமர்சனப் பிதாமகர்’ என அறியப்பட்டவர்.
**

8 கருத்துகள்:

  1. அவர் காலமான செய்தி படித்தபோது உங்கள் தளத்தில் படித்த சந்திப்பின் விவரம்தான் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது.

    அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  2. அவர் இறந்த செய்தி நண்பர் ஏகாந்தன் மூலம் தெரிய வந்தது. அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  4. நல்ல மனிதரை, சிறந்த கலை-இலக்கிய விமரிசகரை நாம் இழந்துவிட்டோம். உங்களின் பெங்களூர் சந்திப்பு பற்றிய பதிவைப் படித்தேன். அவர் மறைந்த அடுத்த நாள் நானும் ஒரு பதிவிட்டேன். இரங்கற்கூட்டத்துக்கு வர விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அரைநூற்றாண்டுக்காலமாக ஒலித்த தனிக்குரல் விமரிசனக்குரல் மறைந்துவிட்டது. 22-10-15-ல் வெ.சா பற்றிய பதிவு எழுதியுள்ளேன் என் வலைத்தளத்தில். இரங்கற்கூட்டத்துக்கு வர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆழ்ந்த இரங்கல்கள்! தகவல் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin