கர்நாடக உயர் நீதி மன்றம்:
#1
கர்நாடகாவின் சட்ட சபை இயங்கி வரும் விதான செளதாவுக்கு நேர் எதிரே உள்ளது கர்நாடக உயர் நீதி மன்றம். ஒரு காலத்தில் மைசூர் உயர் நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. இக் கட்டிடத்திற்கு ‘அட்டர கச்சேரி’ (பதினெட்டு அலுவலகங்கள்) என்ற பெயரும் உண்டு. கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டு, முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது. ராவ் பகதூர் ஆர்காட் நாராயணசாமி முதலியார் என்பவரின் மேற்பார்வையில் கிரேக்க மற்றும் ரோம கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி 1868_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘பழைய பொது அலுவலகங்கள்’ என அழைக்கப்பட்டது.
#2
திப்பு சுல்தானின் கோடைக் கால அரண்மனையிலிருந்து இடமின்மையால் மைசூர் அரசாங்கம் 18 பொதுத்துறை அலுவலகங்களை இந்தக் கட்டிடத்திற்கு மாற்றிய போது ‘அட்டர கச்சேரி’ என்ற பெயர் வந்திருக்கிறது.
கோடைக் கால அரண்மனை (சம்மர் பேலஸ்) தற்காலிக இடமாகவே பயன்பட்டு வந்து வேளையில் கப்பன் பிரபுவுக்குப் பிறகு பெளரிங் கமிஷனராக பொறுப்பேற்ற வேளையில் நகரின் மையத்தில் சட்ட அலுவலகங்கள் செயல்பட்டால் நன்றாக இருக்குமென நினைத்து 1864_ஆம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகள் கட்டிட விரிவாக்கம் நடந்திருக்கிறது.
#3
1982_ஆம் ஆண்டு பழங்காலக் கட்டிடம் என இதை இடிக்கும் பரிந்துரை முன் வைக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியக் கட்டிடத்தைப் பாதுகாக்க வேண்டுமெனப் பொது நல ஆர்வலர்களால் வழக்கத் தொடரப்பட்டு அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தைப் பற்றிய வழக்கு அதே கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பும் இதற்கு உண்டு.
கர்நாடக மாநில வழக்கறிஞர்கள் கழகம் - KGID கட்டிடம்
பழைய KGID (Karnataka Government Insurance Department) கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது கர்நாடக மாநில வழக்கறிஞர்கள் கழகம் (KARNATAKA STATE BAR COUNCIL).
#4
#5
#6
பள்ளிச் சுற்றுலா விதான் செளதா உட்பட அருகருகே அமைந்த பெங்களூரின் இந்த முக்கிய இடங்களைக் காண வந்திருந்த மாணவர்களும் அவர்களை ஒருங்கிணைக்கும் ஆசிரியரும்..
#7
#8
#9

‘எல்லோருக்கும் நீதி - நேர்மையாகவும் விரைவாகவும்’ எனும் வாசகத்துடன். ஆனால் அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளில் அவ்வாறாக நடந்து கொண்டதா என்பது பதிலற்ற கேள்வி! |
1982_ஆம் ஆண்டு பழங்காலக் கட்டிடம் என இதை இடிக்கும் பரிந்துரை முன் வைக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியக் கட்டிடத்தைப் பாதுகாக்க வேண்டுமெனப் பொது நல ஆர்வலர்களால் வழக்கத் தொடரப்பட்டு அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. இடிக்கப்பட வேண்டிய கட்டிடத்தைப் பற்றிய வழக்கு அதே கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பும் இதற்கு உண்டு.
***
பழைய KGID (Karnataka Government Insurance Department) கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது கர்நாடக மாநில வழக்கறிஞர்கள் கழகம் (KARNATAKA STATE BAR COUNCIL).
#4
#5
#6
பள்ளிச் சுற்றுலா விதான் செளதா உட்பட அருகருகே அமைந்த பெங்களூரின் இந்த முக்கிய இடங்களைக் காண வந்திருந்த மாணவர்களும் அவர்களை ஒருங்கிணைக்கும் ஆசிரியரும்..
#7
#8
#9
க்ரூப் ஃபோட்டோ
***
தலைமைத் தபால் அலுவலகம் - GPO:
#10
பெங்களூரில் தலைமைத் தபால் அலுவலகம் 1800 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இம்பீரியல் தபால் அலுவலகம் என அறியப்பட்டிருக்கிறது. இக்கட்டிடம் விதான செளதாவுக்கு எதிர்வரிசையில் இருக்கிறது . ட்ரங் கால் வசதியுடனான தொலைபேசிகள் தவிர்த்து, தொலை தொடர்புச் சாதனங்களாகக் கடிதங்களும், தந்திகளுமே இருந்த காலத்தில் தபால் அலுவலகங்களுக்கு இருந்த முக்கியத்துவமே தனிதான். மும்பை வி.டியின் தலைமை தபால் அலுவலகத்திற்கு சென்று வியந்திருக்கிறேன். பெங்களூர் அலுவலகத்தின் உள்ளே சென்றதில்லை. ஒரு ஞாயிறு வளாகத்தின் உள்ளே செல்ல முடியாததால் மூடிய கதவுகளின் வழியாக எடுத்த படம்.

*இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்யப்பட்ட தகவல்கள்.
பல இடங்களில் வாசகங்கள் அருமையாகத்தான் உள்ளன. ஆனால் செயல்படுத்தப்படுவது என்பதில்தான்.....
பதிலளிநீக்குஉண்மைதான். நன்றி.
நீக்குஅட்டர கச்சேரி கண்கவரும் வண்ணத்தில் இருக்கிறது. சுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபெங்களூர் அன்றும் இன்றும் என்று எழுதி இருக்கிறேன் படித்தீர்களா உங்கள் பார்வைக்கு https://gmbat1649.blogspot.com/2016/09/blog-post.html
பதிலளிநீக்குபார்த்து கருத்தும் அளித்தேன். நன்றி GMB sir.
நீக்குஅட்டர கச்சேரி படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குவிவரங்கள் தெரிந்து கொண்டேன்.
நன்றி கோமதிம்மா.
நீக்கு