ஆசியாவின் மிக உயரமான மற்றும் பெரிய தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மைசூரிலுள்ள புனித ஃபிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral). 1936-ல், ஜெர்மனியில் உள்ள 'கொலோன்' தேவாலயத்தின் 'நியோ கோதிக்' எனும் கட்டிடக்கலை பாணியைத் தழுவிக் கட்டப்பட்டது.
இதன் முழுப் பெயர், புனித ஜோசப் மற்றும் புனித ஃபிலோமினா தேவாலயம். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அறியப்படுகிறது.
புனித ஃபிலோமினா 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க இளவரசி.
கிறிஸ்துவ மதத்திற்காகத் தியாகம் செய்த இவரின் கல்லறை, 1802-ல் ரோமில் கண்டறியப்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, 14 வயதிற்கு மேற்பட்ட ஒரு இளம் வயதுப் பெண்ணின் எச்சங்கள் மற்றும் ரத்தக் கலசம் மூலம், இவர் ஒரு தியாகி என்பது உறுதி செய்யப்பட்டது. புதைகுழியில் ‘லுமெனா பாக்ஸ்டே கம் எப்ஐ’ என்று அர்த்தம் இல்லாத சொற்களைக் கொண்ட, துண்டு துண்டான கல்வெட்டாக ஓடுகளின் தொகுப்பு கிடைத்திருக்கிறது. எழுத்துக்கள் வரிசைப் படுத்தப்பட்டு ‘பாக்ஸ் தீகம் பிலுமினா’ என்று படிக்கப்பட்டன. இது லத்தீன் மொழியில் ’ ‘அமைதி உங்களுடன், பிலுமெனா’ என்று அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது.#5
முதலில் 1843_ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரால் மைசூரில் வாழ்ந்த ஐரோப்பிய கிறிஸ்தவ சமுதாயத்திற்காக ஒரு சிறு தேவாலயமாகக் கட்டப்பட்டது. பின்னர், புனித பிலோமினாவின் புனிதப்பொருட்கள் (Relic) மைசூர் அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலப்போக்கில் கிறிஸ்தவ சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்ததால், புதிய பெரிய தேவாலயம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதன் அடிக்கல் 1933_ல் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் நாட்டப்பட்டது. தற்போதைய கட்டிடம் 1941_ல், பிஷப் ரெனே புகாவின் தலைமையில் கட்டி முடிக்கப்பட்டது.
#6
#7#8நியோ-கோத்திக் (Victorian Gothic) கட்டிடக்கலையில் அமைந்த இந்த தேவாலயத்தை பிரெஞ்சு கட்டிடக்கலைஞர் டேலி (Daly) வடிவமைத்தார். தேவாலயத்தின் தேவாலயத்தின் தரைத்தள வடிவமைப்பு சிலுவை வடிவில் உள்ளது. தேவாலயத்தின் மையப் பகுதி அழைக்கப்படும் சபை மண்டபம் சிலுவையின் நீண்ட பகுதி போலவும், குறுக்குவெட்டுகள் சிலுவையின் இரண்டு கைகள் போலவும், தேவாலயத்தின் பலிபீடம் மற்றும் பாடகர் குழு இருக்குமிடம் சிலுவையின் நான்கு கரங்களின் சந்திப்பு போலவும் அமைந்துள்ளது.
#9
தேவாலயத்தின் இரட்டை கோபுரங்கள் சுமார் 175 அடி (சுமார் 52 மீட்டர்) உயரம் கொண்டவை. தொலைவில் இருந்தே தெளிவாகக் காணக் கிடைப்பவை. இக்கோபுரங்கள் ஜெர்மனியிலுள்ள கொலோன் தேவாலயத்தின் கோபுரங்களையும், நியூயார்க் நகரத்தில் உள்ள புனித பேட்ரிக் தேவாலயத்தின் கோபுரங்களையும் ஒத்திருக்கின்றன.
#10
பிரதான மண்டபத்தில் 800 பேர் அமர முடியும். மேலும் கிறிஸ்துவின் பிறப்பு, இறுதி இரவு விருந்து உணவு (Last Supper), சிலுவையில் அறையப்படுதல் (Crucifixion), உயிர்த்தெழுதல் (Resurrection) மற்றும் கிறிஸ்துவின் விண்ணேற்றம் (Ascension) போன்ற காட்சிகளை சித்தரிக்கும் வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் இத்தேவாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
#11
#12#13
#14#15
.jpg)
.jpg)



.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)






.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக