புதன், 29 அக்டோபர், 2025

அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2

 

புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த தகவல்கள் மற்றும் 18 படங்களுடன்  பகிர்ந்த பாகம் 1 இங்கே

#2

இக்கோயில் ஹொய்சாளப் பேரரசு மன்னர்களால், அவர்களது ஆட்சியின் கீழிருந்த பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1500 கோயில்களில் ஒன்று. அவர்களது கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வளர்ச்சியாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல வழிகளில் தனித்துவமாக விளங்குகிறது.

இஸ்லாமியர்களின் படையெடுப்புகளின் போது பலமுறைகள் சிலைகள் உடைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதால், இந்த கோயில் வழிபாட்டுத் தலமாகத் தற்போது பயன்படுத்தப்படவில்லை. ஆயினும் கேசவனின் ஆசிகளைப் பெறவும், நுட்பமான சிற்பக் கலையைப் போற்றவும் இந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

கிருஷ்ணரின் வலிமை மற்றும் அழகுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டதாலேயே இத்தலம் ’அழகிய கேசவா’ எனப் பொருள்படும்படி ’சென்ன கேசவா’ என அழைக்கப்பட்டது என்பதைச் சென்ற பதிவில் பார்த்தோம். அதற்கேற்ப கோயிலின் உள்ளே இருக்கும் மூன்று சன்னதிகளில் விஷ்ணுவின் வடிவமாகிய கிருஷ்ணர், பகவத் கீதையில் காணப்படும் வெவ்வேறு பெயர்களாகிய கேசவன், ஜனார்த்தனன் மற்றும் வேணுகோபாலனாக பேரழகுடன் எழுந்து அருள் புரிகிறார்.

பிரதான சன்னதியில் கேசவருக்கானது. இக்கருவறையிலிருந்து சிலை காணாமல் போனதாக வரலாற்றுக் குறிப்பு இருப்பினும் தற்போது அங்கு இந்த அழகிய சிலை உள்ளது. 

#3 கேசவன்

தரையிலிருந்து உட்கூரையின் உயரம் அதிகமாக இருப்பதோடு ஒவ்வொரு சதுர அடியும் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டு பிரமிப்பை அளிக்கிறது. அமைதியான தெய்வீக சூழல் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கிறது. 

மற்ற இரு சன்னதிகளில் ஜனார்த்தனன் மற்றும் வேணுகோபாலனாக கிருஷ்ணரின் சிலைகள் உள்ளன:

#4 வேணுகோபால்

#5 ஜனார்த்தன்

துவார பாலகர் சிலைகளும் அற்புதமாக உள்ளன:

#6

#7

#8

சன்னதிகள் ஒவ்வொன்றும், சுகநாசி எனப்படும் சிறிய மண்டபங்களினூடாகப் பெரிய மண்டபம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளி உள்ளே பிரதிபலிக்கும் வகையில் சிறு சதுர வடிவிலான சன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

#9

#10


ஒவ்வொரு சன்னதிக்கு முன்னரும் கூரை வேலைப்பாடு நம் கவனத்தைக் கவர்ந்திழுக்கிறது. முதல் பார்வையில் ஒரே மாதிரி தோன்றினாலும் உற்று நோக்கின் ஒவ்வொன்றும் வித்தியாசமாக செதுக்கப்பட்டிருப்பது தெரியும்.

#11


#12

#13

#14

கோயிலின் சுற்றுச் சுவரில் அமைந்த மேலும் சில சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு:

#15 பிரம்மா

#16 யோக நாராயணா, தியானத்தில் விஷ்ணு:

#17 நின்ற நிலையில் அருள்பாலிக்கும் விஷ்ணு:

#18  சங்கு, சக்கிரம், கதை மற்றும் பத்மம் ஏந்தி கிருஷ்ணர்:

#19 குழலூதும் கிருஷ்ணர் 

கீழ் வரும் சிற்பங்களில் காணப்படும் சமச்சீர் தன்மை வியக்க வைக்கின்றன:

#20


#21

#22

#23


#24

தல வரலாறு, சிற்பங்கள் மற்றும் செதுக்கிய சிற்பிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய உயரமான கல்வெட்டு:

#25

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட மூன்று கோயில்களில் இதுவும் ஒன்று என்பது இதன் அற்புதமான கலை மற்றும் பொறியியல் சாதனைகளின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது. 

#26


***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin