வலைப்பூவை தொடங்கிய இந்நாளில் ஆனந்த விகடன் வலையோசையில் முத்துச்சரம்!
பிறந்த ஊர் நெல்லையை முன் நிறுத்தி மதுரை என் விகடனில் என்பது கூடுதல் சந்தோஷம்.
நடுப்பக்கத்தில்...


**


கீழ்வரும் நான்கு பதிவுகளிலிருந்து தேர்வு செய்திருக்கிறார்கள்:
1.
தலைக்கு வந்தது 2.
செல்வக் களஞ்சியங்கள் 3.
மன்னாதி மன்னர்கள் 4.
ஜப்பானியக் கவித்துளிகள்
நன்றி ஆனந்த விகடன்!
***
முதல் முத்துக்களைக் கோர்த்தபோது நினைத்திருக்கவில்லை நான்காண்டுகள் தொடருவேன் என்றோ ஆனந்த விகடனில் வந்து நிற்கும் முத்துச்சரம் என்றோ.
“எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகக் கோர்த்தபடி”த் தொடருகிற பயணத்தில் ஊக்கம் தரும் அங்கீகாரங்கள் பல கிடைத்திருப்பினும் இந்த வாரம் விசேஷம்தான்:)!
ஒளிப்படங்களுக்கான அங்கீகாரமாக இந்த ஞாயிறு
தினமலர் பொக்கிஷம் பாராட்டு.
எழுத்துக்கான அங்கீகாரமாக இப்போது விகடன் பாராட்டு.
வல்லமை இணைய இதழின்
முதல் வல்லமையாளர்! அந்தந்த வாரத்தில் சிறப்பாக செயலாற்றிய ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிற திட்டத்தில் கெளரவித்திருக்கிறார்கள் என்னை ‘
புவியின் பொக்கிஷங்கள் - மரங்கள்’ பதிவினைப் பாராட்டி. நன்றி வல்லமை!
படைப்புகளை அங்கீகரித்து வெளியிட்ட இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளுக்கும் இந்நேரத்தில் என் நன்றி!
நேற்றுவரை 499-லிருந்த தொடருபவர் எண்ணிக்கை சரியாக 500-யைத் தொட்டதும் இன்றுதான்! மற்றும் ரீடரில் தொடரும் 595 பேர் உட்பட திரட்டிகள், குழுமங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வருகை தந்து வாசிப்பவருக்கும் கருத்தளித்து உற்சாகப்படுத்தி ஐந்தாம் ஆண்டில் முத்துச்சரம் அடியெடுத்து வைக்கக் காரணமாக அமைந்த
நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி! இங்கு கிடைக்கிற ஊக்கமே இதை சாத்தியமாக்கியுள்ளது!
***