சனி, 31 அக்டோபர், 2026

மகாபாரதம்: மௌனத்தின் விலை | நவராத்திரி கொலு தரிசனம் 2026 | பாகம் 2

 அஸ்தினாபுர அரசவையில் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தின்போது அறம் அறிந்த சான்றோர் காத்த மௌனமே குருக்ஷேத்திரப் பெரும்போருக்கு முழுமுதல் காரணமானது. அந்த ஒரு கணத்திலிருந்து வனவாசம்; பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் வீழ்ச்சி; நிறைவேறிய பாஞ்சாலியின் சபதம்; இறுதியில் யுதிஷ்டிரரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை இங்கே காட்சிகளாக விரிகிறது. ஒவ்வொரு காட்சியின் அருகிலும் தங்கை வைத்திருந்த வாசகங்களும், கீதையின் ஸ்லோகங்களும், கதை சார்ந்த அறச்செய்திகளை நினைவூட்டிக் காட்சிகளுக்குச் சிறப்புச் சேர்த்தன.

#1
சகுனியின் பகடையில் பாண்டவர் வாழ்வு

#2 
பாஞ்சாலியின் துயர்... மௌனம் காத்த சான்றோர்...

#3 
சரணாகதி


#4 
முடிவில்லா அருள், முடிவில்லா ஆடை


#5 
வனவாசம் - கலங்காத மனங்கள்

“புலன்கள் அவற்றின் பொருள்களோடு தொடர்புகொள்வதால் குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம் ஆகிய உணர்வுகள் தோன்றுகின்றன. அவை தோன்றி மறையக்கூடியவை, நிலையற்றவை. அவற்றால் கலங்காமல், பொறுமையுடன் தாங்கிக்கொள்.”
— பகவத் கீதை 2.14


#6 
காட்டில் தன்னிறைவு
அரசையும் செல்வத்தையும் இழந்து காட்டுக்குச் சென்ற பாண்டவர்கள், அங்கும் தன்னிறைவோடும் மனஅமைதியோடும் வாழ்ந்ததைக் குறிக்கும் விதமாக, இந்தக் கீதை வாசகம் மேற்கோளாக வைக்கப்பட்டிருந்தது.

#7 
அம்பையின் தவம்... சிகண்டியின் வடிவில்...


#8 
கவசமாக சிகண்டி


#9 
பீஷ்மரின் வீழ்ச்சி... சாபத்தின் நிழல்...


#10 
அம்புப்படுக்கையில் பிதாமகரும், 
அனந்தன் அருளிய விஸ்வரூப தரிசனமும்

#11 
மௌனத்தின் விலை
பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்தை சபையில் தட்டிக் கேட்காமல் போன பீஷ்மரைச் சாடும் விதமாக இந்தக் காட்சிகளுக்கு விதுரரின் வாசகம் மேற்கோளாக வைக்கப்பட்டிருந்தது:                     
“மௌனமாக இருத்தல் என்பது உடந்தை.
உடந்தை என்பது துரோகம்.
துரோகம் என்பது பாவம்.
பாவம் தண்டனைக்குரிய குற்றம்.”
— விதுரர்
#12 
சக்கரவியூகத்தில் சிக்கிய இளந்தளிர் 
அபிமன்யு
“கோழை நினைவுகூரப்படுவதில்லை. கடமையுணர்வோடு, அச்சமின்றித் துணிவுடன் செயல்படும் வீரனே என்றென்றும் நினைவில் வாழ்கிறான்.”
— பகவத் கீதை 2.33

#13 
பீமனின் முழக்கம்… "அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்!"

 

#14 
துரோணருக்கு யுதிஷ்டிரரின் பதில்:
"அஸ்வத்தாமா ஹத: இதி, நரோ வா குஞ்சரோ வா"
(அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்; மனிதனோ, யானையோ)

#15 
அரை உண்மையும்… அறத்தின் வீழ்ச்சியும்…
 

#16 
மண்ணில் சிக்கிய சக்கரம்… 
கர்ணன் வினவிய அறம்…  
கண்ணனின் பதில்:
“பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தின்போதும், அபிமன்யுவை சூழ்ந்து கொன்றபோதும் எங்கே சென்றது அந்த அறம்?”

#17
காட்சிக்குப் பொருத்தமாக தங்கை தெரிவு செய்து வைத்திருந்த வாசகம்:
“வாழ்க்கை யாருக்கும் நியாயமாக இருப்பதில்லை. 
வாழ்க்கையின் அநீதி, தவறான பாதையில் செல்வதற்கான 
உரிமையைத் தந்துவிடாது.”
— ஸ்ரீ கிருஷ்ணர்

#18 
கதாயுதங்களின் கர்ஜனை… பீமனும் துரியோதனனும்…
“போலித்தனம், ஆணவம், செருக்கு, கோபம், கடுமை, அறியாமை ஆகியவை அசுர இயல்புடன் பிறந்த ஒருவனின் குணங்களாகும்.”— பகவத் கீதை 16.4

#19 
நிறைவேறிய பாஞ்சாலியின் சபதம்… 
துச்சாதனனின் குருதியுடன் பீமன்…
"காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் 
ஆன்மாவை அழிக்கும் நரகத்தின் மூன்று வாயில்கள். 
எனவே, இம்மூன்றையும் ஒருவர் விட்டொழிக்க வேண்டும்."
— பகவத் கீதை 16.21

#20 
யுதிஷ்டிரரின் பட்டாபிஷேகம்
 
#21 
அஸ்தினாபுரியின் புதிய விடியல்
**
முழுக் கொலுவையும் நான் எடுத்தக் காணொளி... 
சௌந்தர்யலஹரி ஒலிக்க...  
இங்கே:

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin