திங்கள், 11 ஆகஸ்ட், 2008

காலைக் கதிரவன் - PiT மெகா போட்டி


காலைக் கதிரவனே, எம்
கண்ணின் ஒளி நீயே!
வேலையேதும் நடப்பதில்லை, நீ
வெண்கதிர் வீசி வாராயெனில்!

புத்தம்புது ஒளி வெள்ளமென
நித்தம் நீ தோன்றியே
வித்தைகள் பல புரிகின்ற
விந்தையை என் சொல்வேன்!

உறக்கம் நீங்கியதும் உலகமெலாம்
உற்ற துணைவனாம் உன்வரவை
உவகையுடன் நாடி நிற்கும்
உன் பெருமைதான் என்னே!

நீயில்லாது இயங்காது நானிலமே
நீவாராது வாழாது வையகமே!
விண்ணிலே உதிக்கின்ற பொன்னொளியே
மண்ணினை வாழவைப்பாய் உன்னொளியால்!

தங்கமென நீ மிளிர்ந்து
தாமரையை மலர வைக்கையில்
வைரமெனவும் நீ ஒளிர்ந்து
வாழ வைப்பாய் எங்களையும்
!

*** *** ***

இப்புகைப்படம் என்னவோ மிகச் சமீபத்தில் எடுத்தது. ஆனால் கவிதை...1985-ல் இளங்கலை இறுதி ஆண்டில் இருந்த போது நான் பயின்ற திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.

போட்டிக்கான இப்படத்தை என் காமிரா கவர்ந்து கொண்ட சில கணங்களுக்கு முன்னும் சில கணங்களுக்குப் பின்னும் எடுத்த புகைப் படங்களும் இதோ உங்கள் பார்வைக்கு:
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்கதிர் விசிடும் கதிரவா நில்
என் தேர்வு போட்டிக்குச் சரிதானாவென்று
சொல் சொல் சொல்!
!

*** *** ***

89 கருத்துகள்:

 1. ஆஹா, அருமை ராமலக்ஷ்மி!

  கதிரவன் ஒளிவீசிச் சிரிக்கிறான்.
  கடலலை அதில்நனைந்து சிலிர்க்கிறது.
  அத்துடன் உங்கள் கவிதையும் கரம் கோர்த்து கலக்குகிறது!

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள். அருமையான கவிதை வரிகள், படங்கள்.

  கதிரவனின் கேள்விக்கான பதில் :

  தேர்வுக்கான படம் சரி. அதைக் கொஞ்சம் கான்ட்ராஸ்ட் கூட்டி, இன்னும் கொஞ்சம் டார்க் ஆக்கியருக்கலாமோ என.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா! கோதால இறங்கிட்டீங்களா :-)

  எக்காலத்திற்கும் பொருந்தும் இக்கால கவிதைகள், வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  படங்களில் white balance செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. ராமலஷ்மி மேடம் படங்கள் அருமை..இரண்டாம் படம் அருமை..

  ஆனால் அந்த தென்னை மரங்கள் மறைக்கிறதோ?

  பதிலளிநீக்கு
 5. போட்டோவுடன் கவிதையும் எழுத வேண்டும் என்றால் பரிசு உங்களுக்குத்தான்
  சகாதேவன்

  பதிலளிநீக்கு
 6. ஃபர்ஸ்ட்டு ... ஜஸ்ட்டு மிஸ்டு ... :((

  பதிலளிநீக்கு
 7. படங்களும், கவிதைகளும் வழக்கம்போல் மிக அருமை..

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள்

  படமும்
  கவிதையும்
  அருமை

  பதிலளிநீக்கு
 9. கவிநயா said...//கதிரவன் ஒளிவீசிச் சிரிக்கிறான்.
  கடலலை அதில்நனைந்து சிலிர்க்கிறது.
  அத்துடன் உங்கள் கவிதையும் கரம் கோர்த்து கலக்குகிறது!//

  கவித்துவமான கருத்துக்கும் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிநயா.

  பதிலளிநீக்கு
 10. சதங்கா (Sathanga) said...
  //வாழ்த்துக்கள். அருமையான கவிதை வரிகள், படங்கள்.//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சதங்கா.

  //அதைக் கொஞ்சம் கான்ட்ராஸ்ட் கூட்டி, இன்னும் கொஞ்சம் டார்க் ஆக்கியருக்கலாமோ //

  இன்னும் PiT தளத்தில் சமர்ப்பிக்கவில்லை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. சதங்கா (Sathanga) said...
  //கண்டிப்பா மீ த ஃபர்ஸ்டு .... :)//

  இரண்டு நிமிடத் தாமதத்தில் நீங்கள்
  இரண்டாவது:)!

  பதிலளிநீக்கு
 12. கிரி said...
  //ஆஹா! கோதால இறங்கிட்டீங்களா:-)//

  ஆமாம். படம் மெகா ஸ்டார் அந்தஸ்து பெறா விட்டாலும் மெகா போட்டியல்லவா? அதனால்தான் கோதாவில் இறங்கியாகி விட்டது:)! நீங்கள் கோதாவில் குதிக்கப் போவது எப்போது?

  //படங்களில் white balance செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//

  சதங்கா கான்ட்ராஸ்ட் கூட்டிப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். வொயிட் பாலன்ஸ் என்றால் அதையும் சொல்லி விட்டுப் போங்கள். எல்லோருக்கும் பயனாகக் கூடும்.

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. Ramya Ramani said...//ராமலஷ்மி மேடம் படங்கள் அருமை..//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ரம்யா.

  //இரண்டாம் படம் அருமை..ஆனால் அந்த தென்னை மரங்கள் மறைக்கிறதோ? //

  அதுதான் முதலில் எடுத்த படம். பிறகு காமிராவை திருப்பி விட்டேன் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 14. கடலும் வானும். வானில் மேவும்
  சுள்ளெனும் சூரியனும்
  நின்று தளரா வளர் தெங்கு
  தாளுண்ட நீரைத தலையாலே தரும்
  தென்னையும் கலந்த கலவையும்
  அதோடு இணைந்த கவிதையும்
  அருமையான கூட்டணி!!
  கலையாத..விலகாத கூட்டணியும் கூட!!! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 15. கதிரவனைக் கேமராவில் பிடித்தவிதம் அருமை...தென்னையும் ,கதிரவனின் பிம்பமும் அருமையாக அமைந்திருக்கிறது.காலைக் கதிரவன் எல்லோர்மனதையும் தட்டி எழுப்பி விட்டது அதுவே வெற்றிக்கு முதல் படி.

  பதிலளிநீக்கு
 16. சதங்கா (Sathanga) said...
  //ஃபர்ஸ்ட்டு ... ஜஸ்ட்டு மிஸ்டு ...:((//

  இதெற்கெல்லாம் ஏன் ஃபீல் பண்ணிக் கொண்டு..அதுதான் அந்த கதிரவனே வந்து சொன்னாற் போல திருத்தங்கள் சொன்ன அக்கறை ஒன்று போதுமே. அது மீ த ஃபஸ்ட் மிஸ் ஆனதை விட ஆயிரம் மடங்கு அர்த்தமுள்ளது:)!

  பதிலளிநீக்கு
 17. //சகாதேவன் said...
  போட்டோவுடன் கவிதையும் எழுத வேண்டும் என்றால் பரிசு உங்களுக்குத்தான்//

  நன்றி சகாதேவன். நீங்கள் இப்படிச் சொல்வதே பரிசு பெற்ற சந்தோஷத்தைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் படத்திற்கு 'பிற்சேர்க்கை' செய்கிறேனோ இல்லையோ, படத்திற்கு 'கீழ்சேர்க்கை'யாக என்ன வரிகள் சேர்க்கலாம் என்றுதான் மனம் யோசிக்கிறது, புத்தி இது புகைப்படப் போட்டி என தலையில் குட்டினாலும்:)! ஏதேச்சையாக இப்படத்துக்கு 23 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை பொருத்தமாக அமைந்து விட்டது. அதை அப்படியே வரி மாற்றாமல் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்து மாறாமல் என்று சொல்ல முடியவில்லை. கல்லூரி ஆண்டு மலரில் பழைய வடிவத்தில் "லை, ளை, ணை" போன்றவை வளைந்த கொம்புடன் அச்சாகியிருந்தன. அதை எப்படி எழுதினோம் என இப்ப யூனிகோடில் காட்டக் கூட முடியவில்லை பாருங்களேன்:).

  பதிலளிநீக்கு
 18. இந்தமுறை தலைப்பு தராமல் நாட்டாமைகள் இஷ்டத்துக்கு அடிச்சு ஆடச்சொல்லியும் தலைக்குள்ள ஒண்ணும் தேறல.உங்க படத்தோட தென்னை மரங்களைப் பார்த்ததும் ஞானம் உதயமாயிடுச்சு.ஆனால் சூரியனும்,கடலும்,பேரிச்சை மரமும் ஒண்ணு சேருவாங்களான்னு தெரியலை.பார்க்கிறேன்.இல்லையின்னா வேற ஏதாவதுதான்.

  பதிலளிநீக்கு
 19. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சூரியா.

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திகழ்மிளிர்.

  பதிலளிநீக்கு
 21. SurveySan said...
  //நல்லா வந்திருக்கு!//

  வல்லுநர் நீங்க வந்து சொன்ன இந்த ரெண்டு வார்த்தை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம். மனதை கவரும் புகைப்படங்கள். வெகு நாட்களுக்கு முன் எழுதிய கவிதையும் சமீபத்தில் எடுத்த புகைப்படமும் கச்சிதமாகப் பொருந்துவது எவ்வளவு அழகு மற்றும் அதிசயம். வாழ்த்துக்கள்.

  அங்கு வந்ததற்கும் நன்றி. நீங்கள் கொடுத்த சுட்டியில் எழுதிவிட்டேன். உங்கள் வரிகள் நன்றாக இருந்தன. மேலும் எழுதுங்கள்.

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 23. அக்கா படங்களும், கவிதையும் அழகா இருக்கு... நல்ல முயற்சி... :)

  பதிலளிநீக்கு
 24. நானானி said...
  //கடலும் வானும். வானில் மேவும்
  சுள்ளெனும் சூரியனும்
  நின்று தளரா வளர் தெங்கு
  தாளுண்ட நீரைத தலையாலே தரும்
  தென்னையும் கலந்த கலவையும்
  அதோடு இணைந்த கவிதையும்
  அருமையான கூட்டணி!!
  கலையாத..விலகாத கூட்டணியும் கூட!!! வாழ்த்துக்கள்!!! //

  பாராட்டு வாழ்த்து இவற்றுடன் இயற்கையின் எழிலில் லயித்துக் கவி புனைந்து என்னைப் பெருமைப் படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி நானானி.

  பதிலளிநீக்கு
 25. goma said...
  //கதிரவனைக் கேமராவில் பிடித்தவிதம் அருமை...தென்னையும் ,கதிரவனின் பிம்பமும் அருமையாக அமைந்திருக்கிறது.காலைக் கதிரவன் எல்லோர்மனதையும் தட்டி எழுப்பி விட்டது அதுவே வெற்றிக்கு முதல் படி.//

  கோமா, எல்லோர் மனதையும் தொட்டால் போதுமென நினைத்தேன் தட்டி எழுப்பியே விட்டதாக கூறி விட்டீர்கள். நன்றி வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்.

  பதிலளிநீக்கு
 26. புதுகைத் தென்றல் said...
  //kavithayum padamum super.
  valthukkal //

  நன்றி புதுகைத் தென்றல்.

  பதிலளிநீக்கு
 27. ராஜ நடராஜன் said...
  //இந்தமுறை தலைப்பு தராமல் நாட்டாமைகள் இஷ்டத்துக்கு அடிச்சு ஆடச்சொல்லியும் தலைக்குள்ள ஒண்ணும் தேறல.//

  அதுதான் தயங்கிக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாதென தைரியமா இறங்கி விட்டேன், கிரி சொன்ன மாதிரி கோதாவில் :)!

  //உங்க படத்தோட தென்னை மரங்களைப் பார்த்ததும் ஞானம் உதயமாயிடுச்சு.//

  நல்லது அசத்துங்கள் வழக்கமாக ஒவ்வொரு போட்டியிலும் அசத்துகிற மாதிரி:)!

  //ஆனால் சூரியனும்,கடலும்,பேரிச்சை மரமும் ஒண்ணு சேருவாங்களான்னு தெரியலை.பார்க்கிறேன்.//

  அது பேரிச்சை இல்லைங்க, தென்னை:)!

  //இல்லையின்னா வேற ஏதாவதுதான்.//

  சீக்கிரம் நடக்கட்டும். எனது நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 28. தங்கசூரியன் அன்புக்கரங்களால்
  தண்ணீரையும் பொன்னீராக்கிட
  தங்குதடையின்றி அலைவீசும்

  தங்கத்தமிழ் கவிதை படைத்து
  தமிழ்மணத்தில் மீண்டும்மீண்டும்
  தமிழமுதம் படைக்கும் ராமலஷ்மி..

  படத்துக்கும்,படைப்புக்கும்..
  வாழ்த்துக்கள்!!

  நேரம் கிடைக்கும் போது..
  நம்ம குடிசைக்கும் விஜயம் பண்ணுங்க :))

  http://bala-win-paarvai.blogspot.com/2008/08/1-2.html

  பதிலளிநீக்கு
 29. படம் நல்லா இருக்குங்க. நம்ம PIT ஒரு போஸ்ட் போட்டிருந்தாங்க.http://photography-in-tamil.blogspot.com/2008/03/blog-post_11.html

  இத ட்ரை பண்ணி பாருங்க இந்த படத்துக்கு.

  முதல் படத்தை நான் ட்ரை பண்ணிப்பாத்தேன். கொஞ்சம் நல்லாத்தான் வர்ர மாதிரி தெரியுது. உங்களுக்கு அனுப்ப நினைத்தேன். மெயில் ஐடி தெரியல.

  பதிலளிநீக்கு
 30. ஆஹா, அருமை ராமலட்சுமி அக்கா

  பதிலளிநீக்கு
 31. ராமலக்ஷ்மி,

  நலமா? :)

  வாழ்த்துகள் மெகாப் போட்டிக்கு.:)

  முதல் கவிதை, நீங்கள் முன்பு எழுதியதாய் இருக்குமோ என்று படிக்கும் போழ்தே நினைத்தேன்.

  இப்பொழுதைய (தங்களின் எழுத்தின்), நடை, சொற்களின் கோர்ப்பு - இதில் மாறுபடுகிறதே என நினைத்தேன்.:)))

  இரண்டாவது நில், சொல், ராமலக்ஷ்மி 'டச்' :))))

  இரண்டுமே ...ஸ்ஸ்ஸ்ஸ்...மூன்றுமே அருமை (படம்+கவிதை+கவிதை)

  சதங்கா சொல்வது போல், முடிந்தால் பிற்சேர்க்கை செய்றீங்களா?. இன்னும் மெருகு கூடும். நமக்கு அதிகம் தெரியாது, ஆனால் படம் இன்னும் 'பளிச்' ஆகுமோன்னு ஒரு கற்பனை தான்.சேரியா? :)))

  வாழ்த்துகள்

  பி.கு.:என் பதிவில், என் விடுப்பு விண்ணப்பம் பார்த்தீர்கள்தானே? :))

  பதிலளிநீக்கு
 32. //வொயிட் பாலன்ஸ் என்றால் அதையும் சொல்லி விட்டுப் போங்கள். எல்லோருக்கும் பயனாகக் கூடும்//

  உங்களில் படங்களில் வெள்ளை shade அதிகம் இருப்பது அதன் தரத்தை குறைக்கும் எனவே அதை குறைக்க அல்லது அளவோடு இருக்க நீங்கள் "GIMP" என்ற மென்பொருளை நிறுவி இதை சரி செய்யலாம். இலவசம் தான், கூகிள் ல் தேடினால் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 33. படமும் சூப்பர்... உங்க கவிதையும் சூப்பர்... :-)

  பதிலளிநீக்கு
 34. கண்களுக்கும் மனதுக்கும் விருந்தளித்து விட்டீர்கள். அருமை.
  திருநெல்வேலிக்கு இப்பவும் போவதுண்டா? நான் தூத்துக்குடிகாரன்!!

  பதிலளிநீக்கு
 35. நல்லா இருக்கு, கொஞ்சம் முன்னாடி எடுத்து இருக்கலாமோ? எழு ஞாயிறு அருமையா இருக்குமே!

  சரி, கொஞ்சம் தூங்கிட்டீங்க என்பதால் மறப்போம், மன்னிப்போம். :))

  பதிலளிநீக்கு
 36. போட்டோவுக்கு கவிதையா..இல்லை கவிதைக்கு போட்டோவா?? ஒரு நல்ல பொங்கல் வாழ்த்து அட்டை போல் சூப்பர்!!

  பதிலளிநீக்கு
 37. படமும் கவிதையும் நல்லா இருக்குங்க ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 38. தங்கம் போல் மின்னும் கடலும், தென்னை மரங்களும்...அழகாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 39. அனுஜன்யா said...

  //வணக்கம். மனதை கவரும் புகைப்படங்கள். வெகு நாட்களுக்கு முன் எழுதிய கவிதையும் சமீபத்தில் எடுத்த புகைப்படமும் கச்சிதமாகப் பொருந்துவது எவ்வளவு அழகு மற்றும் அதிசயம். வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அனுஜன்யா.

  //அங்கு வந்ததற்கும் நன்றி. நீங்கள் கொடுத்த சுட்டியில் எழுதிவிட்டேன். //

  பார்த்தேன். அதில் குறிப்பாக இன்றைக்கு இந்தியா வென்ற தங்கப் பதக்கம் தங்களுக்குத் தோற்றுவித்த தங்க வரிகளை மிகவும் ரசித்தேன்.

  //உங்கள் வரிகள் நன்றாக இருந்தன.மேலும் எழுதுங்கள்.//

  "எழுதுகிறேன்" அல்ல "எழுதுவோம்" அனுஜன்யா! மேலும் படம் பார்த்து கவி புனைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அச்சுட்டிகளை இங்கேயும் கொடுத்து விடலாமா? இதோ,
  http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_05.html -அறிவிப்பு
  http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_07.html -முடிவுகள்

  http://manam-anandrey.blogspot.com/2008/08/blog-post_03.html -அழைப்பு

  பதிலளிநீக்கு
 40. தமாம் பாலா (dammam bala) said...
  தங்கசூரியன் அன்புக்கரங்களால்
  தண்ணீரையும் பொன்னீராக்கிட
  தங்குதடையின்றி அலைவீசும்

  தங்கத்தமிழ் கவிதை படைத்து
  தமிழ்மணத்தில் மீண்டும்மீண்டும்
  தமிழமுதம் படைக்கும் ராமலஷ்மி..

  படத்துக்கும்,படைப்புக்கும்..
  வாழ்த்துக்கள்!! //

  நானானி போல கவி படைத்து வாழ்த்தி என்னை பெருமை படுத்தி விட்டீர்கள் பாலா.

  //நேரம் கிடைக்கும் போது..
  நம்ம குடிசைக்கும் விஜயம் பண்ணுங்க :))//

  சரிதான்:) என் வலைப்பூ மட்டும் மாளிகையா என்ன? கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு போல நாமெல்லாம் எழுதியது எள்ளளவு எழுதாதவை ஈரேழுலகளவு இல்லையா பாலா? வந்து கொண்டேயிருக்கிறேன் தங்கள் வலைப்பூவுக்கு:)!

  பதிலளிநீக்கு
 41. தமிழ் பிரியன்
  //அக்கா படங்களும், கவிதையும் அழகா இருக்கு... நல்ல முயற்சி... :) //
  பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தமிழ் பிரியன்.

  பதிலளிநீக்கு
 42. நந்து f/o நிலா said...

  //படம் நல்லா இருக்குங்க. நம்ம PIT ஒரு போஸ்ட் போட்டிருந்தாங்க.http://photography-in-tamil.blogspot.com/2008/03/blog-post_11.html//

  பார்த்தேன்.

  //இத ட்ரை பண்ணி பாருங்க இந்த படத்துக்கு.//

  கண்டிப்பாக. வொயிட் பாலன்ஸ் என கிரியும் இதைத்தான் சஜஸ்ட் பண்ணியிருக்கிறார்.

  //முதல் படத்தை நான் ட்ரை பண்ணிப்பாத்தேன். கொஞ்சம் நல்லாத்தான் வர்ர மாதிரி தெரியுது. உங்களுக்கு அனுப்ப நினைத்தேன். மெயில் ஐடி தெரியல. //

  போட்டியில் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ இதையெல்லாம் செய்து பார்க்க வேண்டுமென்கிற ஆர்வம் நிறையவே இருக்கிறது. நீங்கள், சதங்கா, கிரி ஆகியோரின் அக்கறையும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காகவே இதோ கிம்ப் டவுன் லோட் செய்து விடுகிறேன். )!

  பதிலளிநீக்கு
 43. கடையம் ஆனந்த் said...
  //ஆஹா, அருமை ராமலட்சுமி அக்கா //

  நன்றி ஆனந்த்!

  பதிலளிநீக்கு
 44. NewBee said..
  //வாழ்த்துகள் மெகாப் போட்டிக்கு.:)//

  விடுமுறையில் இருந்தாலும் பறந்துவந்து வாழ்த்தியதற்கு நன்றி வண்டு.

  //முதல் கவிதை, நீங்கள் முன்பு எழுதியதாய் இருக்குமோ என்று படிக்கும் போழ்தே நினைத்தேன்.

  இப்பொழுதைய (தங்களின் எழுத்தின்), நடை, சொற்களின் கோர்ப்பு - இதில் மாறுபடுகிறதே என நினைத்தேன்.:)))//

  நல்ல அப்சர்வேஷன் உங்களுக்கு. உண்மைதான் வெகுகாலத்துக்கு முன் எழுதியவை எனக்கே வாசிக்கையில் வித்தியாசமாய் தோன்றுகிறது. இன்னும் இருக்கிறது பாருங்க, 15 வயதில் பள்ளி ஆண்டு மலரில் வெளியான முதல் கவிதை, முதல் கதை எல்லாம் வலையேற்றலாம் என இருக்கிறேன். அப்போது என்ன சொல்வீர்களோ:)!

  //இரண்டாவது நில், சொல், ராமலக்ஷ்மி 'டச்' :))))//

  ஹி.ஹி. :)!

  //இரண்டுமே ...ஸ்ஸ்ஸ்ஸ்...மூன்றுமே அருமை (படம்+கவிதை+கவிதை)//

  நன்றி நன்றி நன்றி!

  //சதங்கா சொல்வது போல், முடிந்தால் பிற்சேர்க்கை செய்றீங்களா?. இன்னும் மெருகு கூடும். நமக்கு அதிகம் தெரியாது, ஆனால் படம் இன்னும் 'பளிச்' ஆகுமோன்னு ஒரு கற்பனை தான்.சேரியா? :)))//

  செய்திடறேன். எனக்கும் அதிகம் தெரியாதுதான். ஆனால் நந்து, கிரி என சதங்காவைத் தொடர்ந்து வழி காட்ட நண்பர்கள் இருக்கிறார்களே!

  //பி.கு.:என் பதிவில், என் விடுப்பு விண்ணப்பம் பார்த்தீர்கள்தானே? :)) //

  பார்த்தேன் பயப்படாதீர்கள் எங்கே உங்க படம் என நானோ நந்துவோ இந்த முறை விரட்ட மாட்டோம். விடுமுறையை நல்லா என்ஜாய் பண்ணுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 45. கிரி said...//உங்களில் படங்களில் வெள்ளை shade அதிகம் இருப்பது அதன் தரத்தை குறைக்கும் எனவே அதை குறைக்க அல்லது அளவோடு இருக்க நீங்கள் "GIMP" என்ற மென்பொருளை நிறுவி இதை சரி செய்யலாம். இலவசம் தான், கூகிள் ல் தேடினால் கிடைக்கும்.//

  நன்றி கிரி. இதே மென்பொருளைத்தான் நந்துவும் கூறியிருக்கிறார். முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 46. சரவணகுமரன் said...
  //படமும் சூப்பர்... உங்க கவிதையும் சூப்பர்... :-) //

  பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி சரவணகுமரன். எந்த படம் போட்டிக்கு என முடிவு செய்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 47. இசக்கிமுத்து said...
  //கண்களுக்கும் மனதுக்கும் விருந்தளித்து விட்டீர்கள். அருமை. //

  நன்றி இசக்கிமுத்து.

  //திருநெல்வேலிக்கு இப்பவும் போவதுண்டா? நான் தூத்துக்குடிகாரன்!! //

  போகாமல் எப்படி..பிறந்தவீடு புகுந்த வீடு இரண்டும் அங்கேயாயிற்றே:)! தூத்துக்குடி அடிக்கடி வந்திருக்கிறேன் சின்ன வயதில் எனது அத்தையும் சித்தியும் அங்கிருந்த போது.

  பதிலளிநீக்கு
 48. ambi said...//நல்லா இருக்கு, கொஞ்சம் முன்னாடி எடுத்து இருக்கலாமோ? எழு ஞாயிறு அருமையா இருக்குமே! //

  ஆமா எழு ஞாயிறு எழுந்து வருவதற்குள் மிஸ் ஆகி விட்டது.

  //சரி, கொஞ்சம் தூங்கிட்டீங்க என்பதால் மறப்போம், மன்னிப்போம். :)) //

  சரியா சொல்லிட்டீங்க. மறந்து மன்னிச்சிடுங்க:)!

  பதிலளிநீக்கு
 49. சந்தனமுல்லை said...
  //போட்டோவுக்கு கவிதையா..இல்லை கவிதைக்கு போட்டோவா?? //

  இரண்டும்தாங்க..:)!

  //ஒரு நல்ல பொங்கல் வாழ்த்து அட்டை போல் சூப்பர்!! //

  நன்றி நன்றி!

  பதிலளிநீக்கு
 50. கையேடு said...
  //படமும் கவிதையும் நல்லா இருக்குங்க ராமலக்ஷ்மி. //

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கையேடு. ஒவ்வொரு பிட் போட்டியிலும் கலக்குபவராயிற்றே நீங்கள். இம்மாத போட்டிப் படங்கள் ரெடியா?

  பதிலளிநீக்கு
 51. ஓவியா said...
  //தங்கம் போல் மின்னும் கடலும், தென்னை மரங்களும்...அழகாய் இருக்கிறது. //

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஓவியா!

  பதிலளிநீக்கு
 52. ராமலக்ஷ்மி

  சூரியன் இல்லை எனில் சுழற்சி ஏது ?
  சுற்றிடும் தென்றல் காற்றும் தான் ஏது ?
  கரும்பாய் அசையும் தென்னங்கீற்றுகள்
  சிலிர்ப்பதெல்லாம் சிரிக்கும் சூரியனாலே ! இயற்கை என்றால் அது என்றைக்கும் இனிக்கும். நல்ல படம் - நல்ல்ல கவிதை - நல்வாழ்த்துகள் வெற்றி பெற !

  பதிலளிநீக்கு
 53. எல்லா படமும் ஓகே .இன்னமும் உங்கள் படம் போட்டியாளர் வரிசைக்கு வரவில்லையே.எந்த படம் அனுப்பலாம் என்ற யோசனையில் இருக்கிறீர்களா?கணமும் தாமதியாமல் சில கணங்கள் முன்னும் பின்னுமாக எடுத்த படத்தை, இக்கணமே அனுப்பி வையுங்கள்

  பதிலளிநீக்கு
 54. சதங்கா, கிரி , நந்து நீங்கள் மூவரும் சொன்ன மாதிரி GIMP மூலமாகப் படங்களுக்கு பிற்சேர்க்கை செய்துள்ளேன். இப்போது எப்படி இருக்கிறது என்றும் நீங்கள்தான் கூற வேண்டும். பிற்சேர்க்கைக்குப் பிறகு மூன்றாவது முந்துவது போலத் தோன்றினாலும் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முதலாவதை 'PIT' ல் சேர்ப்பித்து விடலாமா?

  பதிலளிநீக்கு
 55. சிவாஜியில் விவேக் ,சாலமன்பாப்பையாவிடம் ,சொல்வது போல், முக பாவம் வைத்துக் கொள்ளுங்கள்,"ராமலஷ்மி!GIMPபோய் ரொம்ப பொங்க வச்சுட்டீங்க...போலிருக்கே...சதங்கா,கிரி ,நந்து ,அந்த முதல் படம் உங்களுக்கு ஓகேவா?!!!!

  பதிலளிநீக்கு
 56. செல்விஷங்கர் said
  //சூரியன் இல்லை எனில் சுழற்சி ஏது ?
  சுற்றிடும் தென்றல் காற்றும் தான் ஏது ?
  கரும்பாய் அசையும் தென்னங்கீற்றுகள்
  சிலிர்ப்பதெல்லாம் சிரிக்கும் சூரியனாலே ! //

  எல்லாம் சூரியனாலே என்பதால்தானே அவனைத் தொழுது நாளினைத் தொடங்குகின்றோம். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மேடம்.

  //இயற்கை என்றால் அது என்றைக்கும் இனிக்கும்.//

  இனிமையாகப் பாராட்டியமைக்கும் வாழ்த்தியமைக்கும் வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 57. goma said...
  //எல்லா படமும் ஓகே .இன்னமும் உங்கள் படம் போட்டியாளர் வரிசைக்கு வரவில்லையே.//

  அக்கறையுடன் தேடிவந்து கேட்டமைக்கு நன்றி. நமது நண்பர்கள் சொன்ன திருத்தங்களைச் செய்து பார்த்து படங்களை மறுபடி வலையேற்றியுள்ளேன். என்னதான் பிற்சேர்க்கைப் படங்கள் பிரமாதமாகத் தெரிந்தாலும் இயற்கையாய் முதலில் இருந்தவற்றின் இயல்பான அழகு தனிதான் என நீங்கள் சொல்வது கேட்கிறது. சரி நாமும் எப்போதுதான் இதையெல்லாம் கற்றுக் கொள்வது என சோதனை முயற்சியில் இறங்கி விட்டேன்:)!

  //எந்த படம் அனுப்பலாம் என்ற யோசனையில் இருக்கிறீர்களா?//

  ம்ம். பிற்சேர்க்கைக்குப் பிறகுதான் அந்த யோசனை லேசாகத் தலைகாட்டுகிறது:)!

  //கணமும் தாமதியாமல் சில கணங்கள் முன்னும் பின்னுமாக எடுத்த படத்தை, இக்கணமே அனுப்பி வையுங்கள்//
  இன்னும் ஒரு நாள் இருக்கிறதே. சொல்லிச் செல்லுங்கள்.ஆனாலும் கடைசி நேரத்தில் என் மனதிலும் ஒரு மணி அடிக்குமில்லையா அதற்கே என் வோட்டு, சரிதானா:)?

  பதிலளிநீக்கு
 58. goma said...//GIMPபோய் ரொம்ப பொங்க வச்சுட்டீங்க...போலிருக்கே...//

  பாருங்க உங்களுக்குத்தான் பதில் எழுதிட்டு இருந்தேன், அதற்குள் அடுத்த கமென்ட் வந்து விட்டது. எப்படிச் சரியாக உங்கள் கருத்து என்னவாயிருகும் என எனக்கு முன் கூட்டியே கேட்டு விட்டது பார்த்தீர்களா:))?

  சந்தனமுல்லை //ஒரு நல்ல பொங்கல் வாழ்த்து அட்டை போல் சூப்பர்// என சொன்னாலும் சொன்னார்கள் சூப்பரா பொங்க வச்சுட்டனா:(?

  //சதங்கா,கிரி ,நந்து ,அந்த முதல் படம் உங்களுக்கு ஓகேவா?!!!!//

  சரி அவர்கள் வந்து என்ன சொல்கிறார்கள் என்றும்தான் பார்ப்போமே. சதங்கா ஊரில் இன்னும் காலைக் கதிரவன் உதித்திருக்காது. உதித்ததும் இந்தக் காலைக் கதிரவனைப் பார்க்க வருவார்:)!

  பதிலளிநீக்கு
 59. க்கா..

  எனக்கு 2வது ஃபோட்டோ கன்னாபின்னான்னு பிடிச்சதுக்கா!

  கலக்கறீங்க!

  பதிலளிநீக்கு
 60. அடர்த்தி கூட்டுகிற விதத்தைத் தான் கிரி 'ஒயிட் பாலன்ஸ்' என்கிறாரா எனத் தெரியவில்லை. அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுமில்லாம ஆரஞ்சு வண்ணம், மாலைக் கதிரவனை தான் சட்டென முன்னிருத்துகிறதோ ?

  பதிலளிநீக்கு
 61. சாரிங்க வெளியூர்ல சுத்தறதால உடனே ரிப்ளை பண்ண முடியல

  எல்லாமே நல்லாதாங்க வந்திருக்கு. இன்னும் கொஞ்சம் ப்ரைட்னெஸ் குறைக்கலாம். மத்தபடி பிபி எப்படி செஞ்சாலும் இன்னும் கொஞ்சம் நல்லா செய்யலாமோன்னு நினைப்பு வரது இயற்கை.

  வேணும்னா இன்னொருதபா ட்ரைபண்ணுங்க முதல் படத்தை. சாம்பிள் கலரைஸ் பண்ணும் போது அப்ளை பண்றதுக்கு முன்னாடி ரெண்டு படமும் ஒண்ணா தெரியும் விண்டோல லெப்ட் அண்ட் ரைட் கலர்ஸ கூட்ட குறைக்க நகர்த்துவது மாதிரி ஒரு ஆப்சன் இருக்கும். முடிஞ்சா அதை ஒருதடவை ட்ரை பண்ணுங்க.

  இல்லாட்டி அதே படத்தை பிக்காசோல ஷேடோ சேர்த்தி பாருங்க.கொஞ்சம் ப்ரைட்னஸ் குறையலாம்.

  அம்புட்டுதாங்க. இதெல்லாம் செஞ்சு உங்க கண்ணுக்கு பிபி செஞ்ச படம் நல்லா வந்த மாதிரி இருந்தா ஓகே. இல்லைன்னா பழைய படத்த கொடுத்திருங்க.எப்பவும் நடுவர்களுக்கே கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வியூ இருக்கும்.சிலருக்கு பிபியே பண்ணாத படம் புடிக்கும். இங்க உங்களுக்கு உங்க படம் புடிக்குதாங்கறதுதாங்க முக்கியம்.போட்டில முதல்ல வரதுங்கறதெல்லாம் அப்புறம்தான்.

  வாழ்த்துக்கள்ங்க.

  பதிலளிநீக்கு
 62. ஓ அட்டகாசம் ராமலக்ஷ்மி.. நானெல்லாம் இதுக்கு பயந்தே படத்தை அனுப்ப தாமதப்படுத்திக்கிட்டே இருக்கேன்..

  பதிலளிநீக்கு
 63. பரிசல்காரன் said...
  //எனக்கு 2வது ஃபோட்டோ கன்னாபின்னான்னு பிடிச்சதுக்கா!//

  ரம்யா ரமணிக்கு பிடித்ததும் அதுதானாம்.

  //கலக்கறீங்க!//

  கலந்துக்கறேன் அதுதானே முக்கியம்:)! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பரிசல்காரரே!

  பதிலளிநீக்கு
 64. நீங்க மாத்தின பிற்பாடு நல்லா இருக்கு..

  ஆனா இப்போ 3 போட்டோ நல்லா இருக்கறா மாதிரி இருக்கே...

  என்ன கேட்டா இதுக்கு முன்னாடி இருந்த 2வது போட்டோவும், இப்போதைய 3வது போட்டோவும் போட்டிக்கு சரியான தேர்வாயிருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 65. ஃபோட்டோக்களை எடிட் பண்ணி ரொம்ப எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன், ராமலக்ஷ்மி :))

  என்னுடைய பதிவின் 'நினைவுகள்' கவிதைக்கு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி.

  என் பதில் மரியாதையை பாக்கறதுக்கும், அல்கெமிஸ்ட் தொடர்கதை படிக்கறத்துக்கும், அப்பபோ வந்து போங்க! இந்த வெல்கம் இங்கே இருக்கிற எல்லா நண்பர்களுக்கும் சேத்து தான் :-))

  பதிலளிநீக்கு
 66. சதங்கா (Sathanga)
  //அடர்த்தி கூட்டுகிற விதத்தைத் தான் கிரி 'ஒயிட் பாலன்ஸ்' என்கிறாரா எனத் தெரியவில்லை. அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன். //
  GIMP-ல் படத்தை திறந்து கொண்டு கலர்---ஆட்டோ---வொயிட் பாலன்ஸ் என செய்தால் படம் மெருகேறுகிறது. ஆனால் அது ஏறத்தாழ நீங்கள் சொல்வது brightness, contrast adjust ஆவது போலத்தான். முதலில் நந்து சொன்ன மாதிரி http://photography-in-tamil.blogspot.com/2008/03/blog-post_11.html// பிட் தளத்தில் கூறியிருந்த வழியைப் பின்பற்றி படங்களை மாற்றியிருந்தேன். பொங்கி விட்ட படங்களைக் கண்டு பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு அன்புடன் வந்து சொன்ன கோமாவின் கமென்ட்டுக்குப் பிறகு நந்து மேலும் சில திருத்தங்கள் சொல்ல அதன்படி இப்போது ஓரளவு சரி செய்து விட்டேன்:)!

  படங்களின் இயல்பான அழகு இல்லையென நினைப்பவர்களுக்கு: நாம் டெக்னிகலாய் இதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதானே பிட் மெனக்கிடுகிறது. ஆகையால் அவர்களிடம் கற்றதைக் காட்ட போட்டிகள் பயன்பட வேண்டுமென்பதும் ஒரு ஆவல். பரிசு முக்கியமில்லை. முன்னர் எடுத்ததை எடுத்தபடி அப்படியே கொடுத்த படங்கள் அவ்வளவாக எடுபடவில்லையே:)). உதாரணத்துக்கும் எனது மே பிட் http://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html பாருங்கள். GIMP மூலமாக வானையும் கடலையும் இன்னும் அதற்குரிய அழுத்தமான வண்ணங்களுடன் அடர்த்தியாகக் காட்டி நேற்று மறுபடி வலையேற்றியிருக்கிறேன்.

  //அதுமில்லாம ஆரஞ்சு வண்ணம், மாலைக் கதிரவனை தான் சட்டென முன்னிருத்துகிறதோ ? //

  இதுவும் நல்ல கேள்வியே. இங்கே என் கவிதையோடு பார்க்கையிலேதான் அந்த எண்ணம் வரும். ஆனால் பிட் போகையில் அது கதிரவன் மட்டும்தான். காலை மாலை கணக்கில் வராதல்லவா:)?

  பதிலளிநீக்கு
 67. நந்து f/o நிலா
  //சாரிங்க வெளியூர்ல சுத்தறதால உடனே ரிப்ளை பண்ண முடியல//

  வெளியீரிலிருந்தும் இத்தனை விவரமாகச் சொல்லியிருக்கும் உங்கள் அக்கறைக்கு நன்றி நந்து. நீங்கள் சொன்ன மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி எனக்கு திருப்திகரமாகக் கொண்டு வந்தாயிற்று.

  //இதெல்லாம் செஞ்சு உங்க கண்ணுக்கு பிபி செஞ்ச படம் நல்லா வந்த மாதிரி இருந்தா ஓகே. இல்லைன்னா பழைய படத்த கொடுத்திருங்க.//

  "எண்ணித் துணிக.."ன்னு சொல்வாங்க. துணிந்தாச்சு:)!

  //எப்பவும் நடுவர்களுக்கே கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வியூ இருக்கும்.//

  ஏன் நமக்கும் கூடத்தான் இல்லையா..அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே சாட்சி.

  // இங்க உங்களுக்கு உங்க படம் புடிக்குதாங்கறதுதாங்க முக்கியம்.போட்டில முதல்ல வரதுங்கறதெல்லாம் அப்புறம்தான்.//

  நூற்றில் ஒரு வார்த்தை.

  //வாழ்த்துக்கள்ங்க.//

  எல்லாவற்றிற்கும் நன்றி நந்து.

  பதிலளிநீக்கு
 68. முத்துலெட்சுமி-கயல்விழி said...
  //ஓ அட்டகாசம் ராமலக்ஷ்மி..//

  திருத்தத்துக்குப் பின் வந்த உங்களுக்கும் பரிசல்காரருக்கும் படங்கள் பிடித்துத்தான் இருக்கிறது. அதுவே எனக்குத் திருப்தி.

  //நானெல்லாம் இதுக்கு பயந்தே படத்தை அனுப்ப தாமதப்படுத்திக்கிட்டே இருக்கேன்..//

  என்னங்க பயம். நாமெல்லாம் இப்படி பயப்பட வேண்டாம்னுதான் பிட் போட்டி வைக்கிறாங்க. பரிசா முக்கியம். உங்க இயற்கையின் வண்ணங்கள் பதிவிலிருந்து கொடுத்திடலாமே. இப்போதே வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 69. தமாம் பாலா (dammam bala) said...
  //ஃபோட்டோக்களை எடிட் பண்ணி ரொம்ப எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன், ராமலக்ஷ்மி :))//

  எக்ஸ்பெர்ட் எல்லாம் இல்லை. ஒரு ஆர்வத்தில் செய்து பார்க்கிறதுதான்:)!
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 70. Ramya Ramani said...
  //நீங்க மாத்தின பிற்பாடு நல்லா இருக்கு..//

  நன்றி ரம்யா.

  //ஆனா இப்போ 3 போட்டோ நல்லா இருக்கறா மாதிரி இருக்கே...//

  அப்படித்தான் எனக்கும் இருக்கிறது:))!

  //என்ன கேட்டா இதுக்கு முன்னாடி இருந்த 2வது போட்டோவும், இப்போதைய 3வது போட்டோவும் போட்டிக்கு சரியான தேர்வாயிருக்கலாம்..//

  கோமாவும்
  //கணமும் தாமதியாமல் சில கணங்கள் முன்னும் பின்னுமாக எடுத்த படத்தை, இக்கணமே அனுப்பி வையுங்கள்// என கருத்தைக் கூறியிருந்தார்கள்.

  நந்து
  //ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வியூ இருக்கும்// என எத்தனை சரியாச் சொல்லியிருக்கிறார்.

  முன் வைத்த காலைப் பின் வைக்க வேண்டாமே என்பதாலும்... கதிரவன் முழுமையாகத் தெரிவதாலும்... எண்ணித் துணிந்த விட்ட படியாலும்...இனி "எண்ணுவம் என்பது ____ " :) என்பதினாலும் முதலாவதை அனுப்பிட முடிவு செய்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 71. Goma said...
  //சதங்கா,கிரி ,நந்து ,
  அந்த முதல் படம் உங்களுக்கு ஓகேவா?!!!!//

  நான் சதங்கா, நந்து, ரம்யாவுக்கு அளித்த அத்தனை பதில்களும் உங்கள் அன்புக் கருத்துக்குச் சமர்ப்பணம்.

  பதிலளிநீக்கு
 72. கருத்தும் திருத்தங்களும்
  சொன்ன அனைவருக்கும்
  நன்றியும் வணக்கங்களும்!

  பதிலளிநீக்கு
 73. அந்தி மஞ்சள் மாலை.
  அழகான படம்.
  வாழ்த்துக்கள் சகோதரி..!

  பதிலளிநீக்கு
 74. படங்கள் மற்றும் கவிதை ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு அசத்துகிறது. சூப்பர்க்கா.. :)

  //ஆனால் கவிதை...1985-ல் இளங்கலை இறுதி ஆண்டில் இருந்த போது நான் பயின்ற திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.//

  ஹிஹி... நான் குழந்தையாக இருக்கும் போது எழுதி இருக்கிங்க.. :)

  பதிலளிநீக்கு
 75. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //அந்தி மஞ்சள் மாலை.
  அழகான படம்.
  வாழ்த்துக்கள் சகோதரி..!//

  படம் விடிந்து விடியாத காலையில் எடுத்ததுதான் ரிஷான். பிற்தயாரிப்பில்
  மாலைத் தோற்றம் வந்து விட்டது:)!
  ஆனால் அழகாய் இருக்கிறது என்று சொல்லி விட்டீர்களே அது போதும்:)!
  வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரிஷான்.

  பதிலளிநீக்கு
 76. தமிழ்நெஞ்சம் said...

  //இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//

  நன்றி தமிழ்நெஞ்சம். உங்களுக்கு மட்டுமின்றி அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் இந்திய உள்ளங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 77. முதல் படம் அருமை. பார்டரில் கொஞ்சம் வெள்ளை சேர்த்தது, அருமையாக தனியே பிரித்து காட்டுகிறது படத்தை.

  //பிட் போகையில் அது கதிரவன் மட்டும்தான். காலை மாலை கணக்கில் வராதல்லவா:)?//

  அதானே !!! :))

  பதிலளிநீக்கு
 78. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 79. கண் முன்னே தோன்றிய கதிரவன்''
  அப்படின்னு சொல்லல்லலாமா. கண் கூசும் வெளிச்சம்.அப்படியே கடற்கரையில் நிற்பது போல இருக்கிறது. ராம்லக்ஷ்மி அருமையிலும் அருமை. கவிதையைப் பற்றிச் சொல்லவும் வேணுமா. :)
  வெற்றிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 80. SanJai said...
  //படங்கள் மற்றும் கவிதை ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு அசத்துகிறது. //

  ஹிஹி...போட்டி படத்துக்கா கவிதைக்கா என்று பலரும் கேட்டாயிற்று:)!. நன்றி சஞ்சய்.

  //ஹிஹி... நான் குழந்தையாக இருக்கும் போது எழுதி இருக்கிங்க.. :)//

  ஆமாம். நீங்கள் குழந்தையாக இருந்த காலத்தில் எழுதப் பட்டது இன்னும் இருக்கிறது நிறைய. ஒன்றொன்றாக வலையேற்றும் எண்ணமிருக்கிறது:)!

  பதிலளிநீக்கு
 81. ரம்யா, மறுபடி வந்து வாழ்த்தியிருப்பது உங்கள் புரிதலைக் காட்டுகிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 82. வல்லிம்மா, பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. என் பதிவில் பொன் எழில் பூத்ததெனில் உங்கள் பதிவில் வானவில் வளைந்ததும் அருமையோ அருமை:)!

  பதிலளிநீக்கு
 83. அக்கா! படமும் அருமை, கவிதையும் வெகு அருமை.!!!!
  வெற்றிக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 84. புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  //அக்கா! படமும் அருமை, கவிதையும் வெகு அருமை.!!!!
  வெற்றிக்கு வாழ்த்துகள்//

  படத்துடன் கவிதையையும் ரசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி அப்துல்லா.

  பதிலளிநீக்கு
 85. இன்று PiT மெகா போட்டி முதல் சுற்று முடிவு வெளியாகி.. தேர்வான முதல் பதினொன்றில் ஒன்றாக எனது படமும் வந்த மகிழ்ச்சியை என்னை வந்து வாழ்த்திய அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பாக நானானி மறுபடி இவ்வாறாக வாழ்த்தியிருக்கிறார், எனது லேட்டஸ்ட் பதிவில் வந்து..

  நானானி said...
  //பிட்டில் முதல் சுற்றில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்! ராமலஷ்மி!!!
  இறுதிச் சுற்றிலும் 'முதலாக வர' வாழ்த்துகிறேன். சேரியா?//

  எல்லாம் உங்கள் போன்றோரின் ஆசிர்வாதம்தான், நன்றி நானானி!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin