Sunday, May 6, 2012

சித்திரை நிலவு.. இன்றைய வானிலே..

# Perigee Super Moon 2012
வழக்கத்தைவிடப் பதினான்கு சதவீதம் பெரியதாகவும், முப்பது சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் இன்றைய சித்திரை நிலவு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிற நிலவின், பூமி பார்த்த பக்கம் மற்ற பக்கத்தை விட 50 ஆயிரம் கி.மீ பூமிக்கு அருகில் இருக்குமாம். இது போன்ற நேரத்தில் வருகிற பெளர்ணமியில் அளவில் பெரிதாக நிலா தெரியும் என்றும், அதுவும் சித்திரா பெளர்ணமியில் இந்த நிகழ்வு ஏற்படுவது அபூர்வமானது என்றும் அறிவிக்கின்றன செய்திகள்.

பெங்களூரில் இன்றைய மேகமூட்டம் படம் எடுக்க முடியுமா எனும் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஏழரை மணிக்கு ஒரு முறை, ஒன்பது மணிக்கு ஒருமுறை மேல்மாடிக்குச் சென்று எல்லாம் செட் செய்து முடிக்கவும் மேக வில்லன்கள் கூட்டம் கூட்டமாக வந்து மறைத்து ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். தோன்றுகிற நேரத்தில், முன் இரவில் எடுத்தால்தான் நிலவு பெரிதாகத் தெரியும். விவரங்களும் மிகத் துல்லியமாகக் கிடைக்கும். ஹி.., அதுவுமில்லாம கழுத்து ரொம்ப வலிக்காமலும் எடுக்கலாம்:)!

# காணும் போதே மறைந்தாயே..
இப்படிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த நிலவு ஒருவாறாக இரவு பத்தரை மணியளவில் தெளிந்த வானில் பாலாகப் பொழிந்தாள்! அப்போது பத்திரப் படுத்தியதே முதல் படம். அதிபிரகாசமாக இருந்தாலும் பார்க்க என்னவோ வழக்கமான அளவில்தான் தெரிந்தாள். விஞ்ஞானிகள் சொல்கிற விவரங்களை எனக்கு அதில் வாசிக்கத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்றைக்கும் அழகு மகள் அவள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாதுதானே:)?
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. (10 Dec 2011)

2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்.. (10 April 2011)

3. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON (20 March 2011)

25 comments:

 1. அதிலென்ன ஐயம்? அழகே அழகு!!!!!

  எங்களுக்கு ஒன்னும் தெரியலை. இன்னிக்குத் தெரியுதான்னு பார்க்கணும்.

  பிக் மூனாம்!!!!

  ReplyDelete
 2. செம அழகு.. துல்லியமா இருக்கு.

  நேத்து நானும் மிஸ் பண்ணிட்டேன்.. இன்னிக்காவது பிடிக்க முடியுதான்னு பார்க்கணும்..

  ReplyDelete
 3. பெண்ணிடம் கூடச் சொல்லி வைத்திருந்தேன். அங்கயும் மழையாம்.

  தம்பி மகளிடமும் சொல்லி வைத்திருக்கிறேன்.பார்க்கலாம்.:)
  நான் எடுத்த படம் சின்னதாகத் தான் வந்தது.
  உங்கள் படம் தூள்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. இங்கயும் மேக மூட்டம் மறைக்குது. போட்டோவில்தான் ரசிக்கனும்போல.

  ReplyDelete
 5. நம்ம இருக்குற ஏரியாவில (நாட்டில) நிலாவை ரொம்ப நேரமா வானத்தில காணவில்லை ..!

  ReplyDelete
 6. இங்கும் பெரிய வித்தியாசமாகத் தெரியவில்லை. நான் ஊனக் கண்களால்தான் பார்த்தேன். ஞானக் கண் கிடைக்கவில்லை! எப்போதும் இல்லாத மேகங்கள் இது மாதிரி சமயங்களில் மட்டும் ஓடி வந்து மறைப்பது நம் நேரம்தான்! அதென்ன, சந்திரனை பெண் பாலாக்கி விட்டீர்கள்...! நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ....! உங்கள் கைவண்ணத்தில் முதல் பட முழு நிலவு அற்புதம்..

  ReplyDelete
 7. பார்த்துட்டேன். பைனோவில் படு துல்லியம்! ஆனால்..... என் கேமெராவில் சுமார்( அப்படித்தான் இருக்கும். இருக்கணும்!)

  பாட்டி வடை சுடுவது தெரியுதான்னு கோபாலிடம் கேட்டேன். நல்லாத் தெரியுதுன்னார். 'அதென்ன இடைக்கிடையே கருப்பா என்னமோ தடம்'? என்றவரிடம்.... அது ஆம்ஸ்ட்ராங்கின் காலடின்னு சொல்லி வச்சேன்:-))))

  ReplyDelete
 8. எப்படி உலா வந்தாலும் நிலா நிலா தான்!

  ReplyDelete
 9. மேகம் சற்று அனுமதித்த நேரத்தில் நானும் டிஜிடலில் படம் எடுத்து வைத்திருக்கிறோம் ரசிக்க..

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. துளசி கோபால் said...
  /பிக் மூனாம்!!!!/

  பெரிய நிலாவை பெரிதாக உரிய நேரத்தில் எடுக்கிற வாய்ப்பு அமைய மாட்டேன்கிறது. சிக்க வைத்திடுவேன் ஓர் நாள்:)! பெங்களூர் அல்சூர் ஏரியில் பிரதிபலிப்பை நிலவை எடுக்க வேண்டுமென்கிற எண்ணமும் இருக்கிறது.

  /பார்த்துட்டேன். பைனோவில் படு துல்லியம்! /

  அட டெலஸ்கோப் இல்லாவிட்டால் பைனோவில் பார்க்கலாம் எனும் யோசனை தோன்றாமப் போச்சே. முயன்று பார்க்கிறேன்:)! நன்றி மேடம்.

  ஆர்ம்ஸ்ட்ராங்கின் காலடித் தடம் என் படத்தில் தெரிகிறதா:)?

  ReplyDelete
 11. அமைதிச்சாரல் said...
  //செம அழகு.. துல்லியமா இருக்கு.

  நேத்து நானும் மிஸ் பண்ணிட்டேன்.. இன்னிக்காவது பிடிக்க முடியுதான்னு பார்க்கணும்..//

  காத்திருக்கிறேன், உங்க நிலாவைப் பார்க்க:)! நன்றி சாந்தி.

  ReplyDelete
 12. வல்லிசிம்ஹன் said...
  //பெண்ணிடம் கூடச் சொல்லி வைத்திருந்தேன். அங்கயும் மழையாம்.

  தம்பி மகளிடமும் சொல்லி வைத்திருக்கிறேன்.பார்க்கலாம்.:)
  நான் எடுத்த படம் சின்னதாகத் தான் வந்தது.உங்கள் படம் தூள்.வாழ்த்துகள்.//

  நன்றி வல்லிம்மா. பல இடங்களில் நேற்று மேகமூட்டம்தான் போலிருக்கு. மரங்களின் பின்னணியோடு நீங்கள் எடுக்கிற படங்கள் அழகு.

  ReplyDelete
 13. Lakshmi said...
  /இங்கயும் மேக மூட்டம் மறைக்குது. போட்டோவில்தான் ரசிக்கனும்போல./

  இரவு பத்து மணிக்கு மேல் சற்று பரவாயில்லை. ஆனால் இன்றும் வானம் மூடியே உள்ளது. பார்க்கத் தவறியவர்களுக்காகதான் இங்கே படமாக:)! நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 14. வரலாற்று சுவடுகள் said...
  /நம்ம இருக்குற ஏரியாவில (நாட்டில) நிலாவை ரொம்ப நேரமா வானத்தில காணவில்லை ..!/

  இரண்டாவது படத்தைப் பாருங்க. அப்படிதான் இருந்தது ரொம்ப நேரமா இங்கும்:)!

  ReplyDelete
 15. ஸ்ரீராம். said...
  /இங்கும் பெரிய வித்தியாசமாகத் தெரியவில்லை. நான் ஊனக் கண்களால்தான் பார்த்தேன். ஞானக் கண் கிடைக்கவில்லை! எப்போதும் இல்லாத மேகங்கள் இது மாதிரி சமயங்களில் மட்டும் ஓடி வந்து மறைப்பது நம் நேரம்தான்! /

  ஞானக் கண்ணுக்கு டெலஸ்கோப், பைனாகுலர்கள் தேவை போல:)!

  /அதென்ன, சந்திரனை பெண் பாலாக்கி விட்டீர்கள்...! /

  நிலவு, நிலா என்றாலே பெண்தான். நீங்களே பாடி விட்டீர்களே. நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 16. கே. பி. ஜனா... said...
  //எப்படி உலா வந்தாலும் நிலா நிலா தான்!//

  ஆம், மிக்க நன்றி:)!

  ReplyDelete
 17. இராஜராஜேஸ்வரி said...
  /மேகம் சற்று அனுமதித்த நேரத்தில் நானும் டிஜிடலில் படம் எடுத்து வைத்திருக்கிறோம் ரசிக்க..

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்../

  மகிழ்ச்சி. நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 18. அருமையான பகிர்வு :)
  //வழக்கத்தைவிடப் பதினான்கு சதவீதம் பெரியதாகவும், முப்பது சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் இன்றைய சித்திரை நிலவு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்//.

  ஆம் நானும் இங்கு செய்தியில் கேட்டேன்....பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே இருக்கும் தூரம் சுமார் 384000 கிமீ.ஆனால் இந்த சித்தரை நிலவிற்கும் பூமிக்கும் இடையே இருக்கும் தூரம் 357000 கிமீ இதன் விளைவால் தான் இந்த 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் இந்த சித்திரை நிலா நமக்கு தெரிகிறது. பிரெஞ்சு மொழியில் இந்நிலவை " pleine lune de périgée" என அழைக்கிறார்கள்

  ReplyDelete
 19. நிலவைப் பாடா கவிஞர்கள் உண்டா ?ஆனால் மெனக்கெட்டு புகைப்படம் எடுப்பவர்கள் உங்களை போல ஒரு சிலரே. வரலாற்று சிறப்புமிக்க ஒரு படத்தை எடுத்துள்ளீர்கள் பாராட்டுகள்.

  ReplyDelete
 20. இதுவும் அழகுதான்.... கருப்பு வண்ணத்தை நிலவு இரைத்து மகிழ்கிறாள்!

  ReplyDelete
 21. கண்கொள்ளாக் காட்சிக்கு நன்றி ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 22. Nithi Clicks said...

  /அருமையான பகிர்வு :)

  .... பிரெஞ்சு மொழியில் இந்நிலவை " pleine lune de périgée" என அழைக்கிறார்கள்/

  கருத்துக்கும் பகிர்ந்து கொண்ட தகவல்களுக்கும் நன்றி நித்தி:)!

  ReplyDelete
 23. kalakumaran said...

  /நிலவைப் பாடா கவிஞர்கள் உண்டா ?ஆனால் மெனக்கெட்டு புகைப்படம் எடுப்பவர்கள் உங்களை போல ஒரு சிலரே. வரலாற்று சிறப்புமிக்க ஒரு படத்தை எடுத்துள்ளீர்கள் பாராட்டுகள்./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 24. சி.கருணாகரசு said...

  /இதுவும் அழகுதான்.... கருப்பு வண்ணத்தை நிலவு இரைத்து மகிழ்கிறாள்!/

  நன்றி கருணாகரசு:)!

  ReplyDelete
 25. பாச மலர் / Paasa Malar said...

  /கண்கொள்ளாக் காட்சிக்கு நன்றி ராமலக்ஷ்மி../

  நன்றி மலர்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin