Tuesday, May 1, 2012

மே தினம் - உழைக்கும் கரங்கள்

வசிக்கும் வீட்டிலிருந்து புசிக்கும் உணவு வரையிலும் நாம் அனுபவிக்கும் அத்தனையிலும் ஒளிந்து கிடைக்கிறது ஓராயிரம் பேரின் உழைப்பு.
# 1

# 2

# 3

# 4


# 5


# 6

# 7

# 8

# 9

# 10

# 11


# 12

# 13

# 14

# 15

# 16

மாற வேண்டும் இந்நிலை உலகிலே..

முதுமையில் இல்லை ஓய்வு
# 17

இளமையில் இல்லை கல்வி
# 18
எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உழைப்பாளிகள்தான். ஆனால் ஒரு சாராருக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் மரியாதையும் மறுக்கப்படும் வேதனை பன்னெடுங்காலமாகத் தொடர்கிறது. இன்றைய சர்வதேச மேதின விடுமுறை ஆசியாவின் ஃபிலிப்பைன்ஸ், தாய்வான், மலேசியா போன்ற பல பாகங்களில் சர்வதேச எதிர்ப்பு தினமாகப் பேரணிகளுடன் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எகிறும் விலைவாசியை எதிரொலிக்காத வருமானத்துடன் ஒவ்வொரு நாளுமே போராட்டமாக அமைந்தவர்கள் ஒன்று கூடி இன்றைய தினத்தில் தங்கள் குறைகளைத் தீர்க்கக்கோரி குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகள் பல மடங்காகவே நம் நாட்டிலும்.

உழைக்கும் கரங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், உரிமைகள் காக்கப்படவும், அவர்தம் வாழ்வு சிறக்கவும் வாழ்த்துவோம்!

***

46 comments:

 1. படங்கள் யாவும் பேசுகிறது, மே தினத்தை சொன்னவிதம் அருமை பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 2. முதுமையில் இல்லை ஓய்வு,இளமையில் இல்லை கல்வி, எத்தனை ஏக்கமான படங்கள்.
  தேன் எடுப்பது எத்தனை ஆபத்தானது,இன்னும் பகிர்ந்த அத்தனை படமும் அருமை.உழைப்பாளிகளை வாழ்த்துவோம் ராமலஷ்மி.

  ReplyDelete
 3. வார்த்தைகள் எதுவும் தேவைப்படாமல் உங்கள் படங்களே விஷயத்தை உணர்த்துகின்றன. எத்தனை எத்தனை உழைப்பாளிகளை அன்றாட வாழ்வில் எதிர்கொள்கிறோம் நாம்! இன்றைய தினத்தை உழைப்பைப் போற்றுவோம்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  படங்கள் பேசுகின்றன. ஓராயிரம் பக்கங்கள் சொல்வதை ஒரு படம் சொல்லி விடுகிறது.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 5. உழைக்கும் கரங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், உரிமைகள் காக்கப்படவும், அவர்தம் வாழ்வு சிறக்கவும் வாழ்த்துவோம்!

  மே தின வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. அந்த 15-வது படத்துக்கு விளக்கவுரை தேவை. அத்தனையும் தேன்கூடுகளா? அதுவும் கட்டிடத்தின் கூரையிலா? அவர் தேனீயிடமிருந்து காத்துக்கொள்ள கவசம் எதுவும் போடாமல் இருக்கிறாரே? அது எப்படி?

  ReplyDelete
 7. அருமையான படங்கள், அந்த ஏழாவது படம் ரொம்ப பிடிச்சிருக்கு
  கடைசியில் உள்ள இருபடங்களும் சிந்திக்க வைக்கின்றன

  ReplyDelete
 8. அழகான புகைப்படங்கள்...கடைசி 2 படங்கள் மனம் கனக்கிறது.மே தின வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. உழைக்கும் கரங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், உரிமைகள் காக்கப்படவும், அவர்தம் வாழ்வு சிறக்கவும் வாழ்த்துவோம்!//
  உங்களுடன் சேர்ந்து வாழுத்துகிறேன்.

  உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் எல்லா நலங்களும், வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

  உழைப்பின் மேன்மையை சொல்லும் படங்கள் எல்லாம் அழகு.

  எப்படியாவது தன் குடும்பத்தை காக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் எல்லோர் மனதிலும் இருப்பதைக் காட்டும் அவர்களின் படங்கள் அருமை.

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 10. உழைப்பு எத்தனை விதமோ அத்தனை வகைகளிலும் உழைத்துப் படம் எடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.
  கடைசியில் நிற்கும் பெண்ணின் கண்ணில் தான் எத்தனை ஏக்கம்.

  மே தினம்.சில பேருக்குத்தான் கொண்டாட்டம்.

  ReplyDelete
 11. @ ஹுஸைனம்மா,
  / அத்தனையும் தேன்கூடுகளா? அதுவும் கட்டிடத்தின் கூரையிலா? அவர் தேனீயிடமிருந்து காத்துக்கொள்ள கவசம் எதுவும் போடாமல் இருக்கிறாரே? அது எப்படி?/


  ஆறேழு வருடம் முன் 6_வது தளத்திலிருந்து 9_வது தளத்தை
  P&S கேமராவினால் zoom செய்து எடுத்த படம். ஜூன் 2008, A Day at Work எனும் PiT போட்டிக்கும் கொடுத்திருந்தேன்.

  இடுப்பில் தெரியும் கயிறை மொட்டை மாடியில் ஒருவர் பிடித்திருக்க உடம்பில் தேனீ கொட்டாமல் இருக்க மருந்து பூசிக் கொள்கிறார். போகவும் புகைமூட்டமும் இடுகிறார்கள். அந்தப் புகையினால் அவர் உருவம் தெளிவாக இல்லை படத்தில். சுமார் நூறடி உயரத்தில் ‘கரணம் தப்பினால்’ அபாயம்தான் இவை:(!

  ReplyDelete
 12. Superb photos... Keep it up...

  I am also from Tirunelveli...

  ReplyDelete
 13. அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 14. பல்வேறு உழைப்புகளையும் படங்களிலிருந்து திரட்டி அளித்து அசத்தி விட்டீர்கள். தேன் கூடு அருகே கால்கள் மட்டும் தெரியும் படம் திடுக்கிடலுடன் கூடிய அழகு.

  ReplyDelete
 15. சொல்ல வரும் விஷயத்தினை மிக அழகாய்ச் சொல்லும் படங்கள். வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
 16. படங்கள் யாவும் பேசுகிறது, மே தினத்தை சொன்னவிதம் அருமை

  ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 17. வணக்கம்!
  // வசிக்கும் வீட்டிலிருந்து புசிக்கும் உணவு வரையிலும் நாம் அனுபவிக்கும் அத்தனையிலும் ஒளிந்து கிடைக்கிறது ஓராயிரம் பேரின் உழைப்பு. //
  // முதுமையில் இல்லை ஓய்வு!
  இளமையில் இல்லை கல்வி! //
  உங்கள் பதிவில் பேசும் வரிகள்! பேசும் படங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பலரின் வியர்வையால் விளைந்தவை என்பதை இதைவிட எளிமையாக புரிய வைக்க முடியாது.

  பாராட்டுகள். தொடரட்டும்...!

  ReplyDelete
 19. ஓயாது உழைக்கும் உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

  தங்களின் படங்கள் யாவும் உழைப்பவர்களை உற்றுநோக்கும்படியாக செய்தது மிக அருமை..

  ReplyDelete
 20. //மாற வேண்டும் இந்நிலை உலகிலே..
  முதுமையில் இல்லை ஓய்வு//

  எல்லா படங்களும் பேசும் படங்கள்.
  அதிலும் குறிப்பாக அந்த பாட்டியின்
  புகைப்படம் முதுமையில் ஓர் பேரழகு
  அருமையோ அருமை.

  ReplyDelete
 21. அருமையான படங்களுடன் நல்ல பதிவு!

  ReplyDelete
 22. உங்கள் உழைக்கும் கேமராவுக்கு என் பாராட்டுக்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 23. மனசாட்சி™ said...
  /படங்கள் யாவும் பேசுகிறது, மே தினத்தை சொன்னவிதம் அருமை பிடிச்சிருக்கு./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 24. asiyao said...
  /,இன்னும் பகிர்ந்த அத்தனை படமும் அருமை.உழைப்பாளிகளை வாழ்த்துவோம் ராமலஷ்மி./

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 25. கணேஷ் said...
  /எத்தனை எத்தனை உழைப்பாளிகளை அன்றாட வாழ்வில் எதிர்கொள்கிறோம் நாம்! இன்றைய தினத்தை உழைப்பைப் போற்றுவோம்./

  ஆம், நன்றி கணேஷ்.

  ReplyDelete
 26. Rathnavel Natarajan said...
  /ஓராயிரம் பக்கங்கள் சொல்வதை ஒரு படம் சொல்லி விடுகிறது.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி அம்மா./

  மகிழ்ச்சியும் நன்றியும் சார்.

  ReplyDelete
 27. இராஜராஜேஸ்வரி said...
  /மே தின வாழ்த்துகள்../

  மிக்க நன்றி.

  ReplyDelete
 28. manazeer masoon said...
  /அருமையான படங்கள், அந்த ஏழாவது படம் ரொம்ப பிடிச்சிருக்கு
  கடைசியில் உள்ள இருபடங்களும் சிந்திக்க வைக்கின்றன/

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 29. S.Menaga said...
  /அழகான புகைப்படங்கள்...கடைசி 2 படங்கள் மனம் கனக்கிறது.மே தின வாழ்த்துக்கள்!!/

  நன்றி மேனகா.

  ReplyDelete
 30. கோமதி அரசு said...
  //எப்படியாவது தன் குடும்பத்தை காக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் எல்லோர் மனதிலும் இருப்பதைக் காட்டும் அவர்களின் படங்கள் அருமை.//

  ஆம், மன உறுதி தெரிகிறது. வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 31. வல்லிசிம்ஹன் said...
  /உழைப்பு எத்தனை விதமோ அத்தனை வகைகளிலும் உழைத்துப் படம் எடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.
  கடைசியில் நிற்கும் பெண்ணின் கண்ணில் தான் எத்தனை ஏக்கம்.

  மே தினம்.சில பேருக்குத்தான் கொண்டாட்டம்./

  சரியாகச் சொன்னீர்கள். நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 32. Com Whiz said...
  /Superb photos... Keep it up...

  I am also from Tirunelveli.../

  மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. அமைதிச்சாரல் said...
  /அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வு./

  மிக்க நன்றி சாந்தி.

  ReplyDelete
 34. அப்பாதுரை said...
  /breathtaking visuals/

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 35. ஸ்ரீராம். said...
  /பல்வேறு உழைப்புகளையும் படங்களிலிருந்து திரட்டி அளித்து அசத்தி விட்டீர்கள். தேன் கூடு அருகே கால்கள் மட்டும் தெரியும் படம் திடுக்கிடலுடன் கூடிய அழகு./

  நன்றி ஸ்ரீராம். கவனம் கலைந்து விடக் கூடாதென பால்கனிக்கு செல்லாமல் சன்னல் வழியே எடுத்த படம்.

  ReplyDelete
 36. வெங்கட் நாகராஜ் said...
  /சொல்ல வரும் விஷயத்தினை மிக அழகாய்ச் சொல்லும் படங்கள். வாழ்த்துகள் சகோ./

  நன்றி வெங்கட்.

  ReplyDelete
 37. Lakshmi said...
  /படங்கள் யாவும் பேசுகிறது, மே தினத்தை சொன்னவிதம் அருமை. ரொம்ப நல்லா இருக்கு/

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 38. தி.தமிழ் இளங்கோ said...
  /உங்கள் பதிவில் பேசும் வரிகள்! பேசும் படங்கள்! வாழ்த்துக்கள்!/

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 39. அமைதி அப்பா said...
  /நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பலரின் வியர்வையால் விளைந்தவை என்பதை இதைவிட எளிமையாக புரிய வைக்க முடியாது. பாராட்டுகள். தொடரட்டும்...!/

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 40. அன்புடன் மலிக்கா said...
  /தங்களின் படங்கள் யாவும் உழைப்பவர்களை உற்றுநோக்கும்படியாக செய்தது மிக அருமை../

  நலமா மலிக்கா? மிக்க நன்றி.

  ReplyDelete
 41. புவனேஸ்வரி ராமநாதன் said...
  /எல்லா படங்களும் பேசும் படங்கள்.
  அதிலும் குறிப்பாக அந்த பாட்டியின்
  புகைப்படம் முதுமையில் ஓர் பேரழகு
  அருமையோ அருமை./

  உண்மைதான். உழைப்பால் தன்னம்பிக்கையால் மிளிரும் அழகு. ரசித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 42. கே. பி. ஜனா... said...
  /அருமையான படங்களுடன் நல்ல பதிவு!/

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 43. சகாதேவன் said...
  /உங்கள் உழைக்கும் கேமராவுக்கு என் பாராட்டுக்கள்./

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 44. வீரத்தமிழ்மகன் said...
  /PHOTOS R NICE. FIRST PHOTO IS AMAZING. CONGRATS/

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin